Manik Prabhu-3
அத்தியாயம்-3
மண்ணிலே நடந்திடும் லீலைகளைக் கூறி
தான் கொண்ட பிறப்பில் உள்ள
தனித்தன்மையை எடுத்துச் சொல்லி
தன்னிடம் வந்த மனிதர்களுக்கெல்லாம்
உள்ளமே நான்தான் என
வான் நிறக் கண்ணன் சொல்ல
வலியத் தோள் விஜயன் கேட்டான்
பகவத் கீதை
தான் கொண்ட பிறப்பில் உள்ள
தனித்தன்மையை எடுத்துச் சொல்லி
தன்னிடம் வந்த மனிதர்களுக்கெல்லாம்
உள்ளமே நான்தான் என
வான் நிறக் கண்ணன் சொல்ல
வலியத் தோள் விஜயன் கேட்டான்
பகவத் கீதை
மானிக் பிரபுவின் பால காண்டமும் உபனயனமும்
ஸ்ரீ மானிக்கின் நிலை குறித்து மற்ற உறவினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்தப் பின் அவனுடைய பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். பையனுக்கு பூணல் கல்யாணம் செய்துவிட்டால் திருந்தி விடுவான். ஸ்ரீ மானிக்கின் வயது ஏழு ஆகியது. அப்போது அவனுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். உபநயன சடங்குகளில் பையனின் காதுகளில் காயத்ரி மந்திரத்தை ஓதுவார்கள். அதற்கேற்ப உபனயன நிகழ்ச்சியில் பையனின் காதுகளில் காயத்ரி மந்திரத்தை பண்டிதர்கள் ஓதத் துவங்கினார்கள். ஸ்ரீ மானிக்கோ அவர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் முன்னரே கடகடவென அனைத்து மந்திரங்களையும் பொங்கி வழியும் நீர் ஊற்று போல கூறத் துவங்கினார். அனைவரும் வாய் அடைத்து நின்றார்கள். எங்கிருந்து அவர் அத்தனை மந்திரங்களையும் கற்று அறிந்து உள்ளார்? காண்பது கனவா அல்லது நனவா? ஒன்றும் புரியாமல் விழித்தவர்களுக்கு அந்த சிறுவனிடம் எதோ அபூர்வ சக்தி உள்ளது என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் அவர்கள் அவரிடம் உள்ளது தெய்வ சக்தியே என்பதை புரிந்து கொள்ளவில்லை.
உபனயனம் முடிந்ததும் ஸ்ரீ மானிகை மீண்டும் பள்ளிக்கு அனுப்பினார்கள் . ஆனால் மீண்டும் சுதந்திரப் பறவையாக திரிந்து அலைவதையே அவர் விரும்பினார். மெல்லிய பூங்காற்றும், பறந்து விரிந்த ஆகாயமும், சலசலக்கும் நீரோடைகளும், பறவைகளின் இனிய கீதங்களும், மரக் கிளைகள் எழுப்பிய இனிய ஓசைகளுமே அவர் மனதை ஆக்கிரமித்தன. படிப்பை விட அவையே தனது மனதை கவர்ந்ததை உணர்ந்தார். கல்விகளுக்கும் பாடங்களுக்கும் அப்பாற்பட்ட அவதார புருஷர் என்பதினால் நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடந்து படிப்பதை விட ஏகாந்தமாக இருப்பதே பிடித்து இருந்தது. பாடசாலை ஒரு சிறைச்சாலை என்றே நினைத்தார். இப்படி எல்லாம் எண்ணியதினால்தான் பள்ளிக்குச் செல்வதை குறைத்துக் கொண்டு இயற்கை தந்த பாடங்களை கற்று அறிந்தார்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் யதுகுல மன்னனுக்கு தத்தாத்திரேயர் தனக்கு இயற்கை தந்திருந்த ஆசான்களின் விவரம் குறித்து இப்படியாகக் கூறினாராம் :-''எனக்கு இருபத்தி நான்கு குருமார்கள் உள்ளனர். என் குருமார்கள் பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, சிலந்தி , பிங்களை என்ற வேசி, சந்திரன், சூரியன், ஆகாயம், கடல், நுரை, மலைப்பாம்பு, புறா, மீன், மான், யானை, குழந்தை, தேனி, விட்டில் பூச்சி, தேன் சேகரிப்பவன், சிறு பறவை, அம்பு செய்பவன், பாம்பு, புழு, சிறுமி போன்றவர்களே.
பொறுமை என்பது என்ன என்பதை பூமித் தாயே எனக்குக் காட்டினாள். தன் மீது ஏறி நின்றபடி, தன் உடலை சிதைத்தாலும், தன் மீது ஏறி நின்று காறித் துப்பினாலும் இன்னமும் என்னதான் செய்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு மனம் தளராமல் தன் மீதே வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த மக்களை பூமித் தாய் பொறுமையைக் கடைப்பிடித்து காத்து வருவது எத்தனை பெரிய தியாகம்.

இயற்கையான தண்ணீர் இனிமையானது மட்டும் அல்ல, மிகவும் தூய்மையானதும்தான். அழுக்குகளை நீரில் போட்டால் சற்று நேரத்திலேயே அவற்றை தள்ளி வைத்துவிட்டு அல்லது தனது காலடியில் தள்ளி வைத்து விட்டு மீண்டும் அது தூய்மையாகி விடுகின்றது. அது போலத்தான் நாமும் அசுத்தமான மனதுடையவர் நம்மிடம் வந்தால் நம் மனதை தூய்மையாகவே வைத்துக் கொண்டு அவர்களை தூய்மைப்படுத்த முயல வேண்டும்.
எந்தப் பொருளையும் நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பு அவற்றை முழுங்கி விடுவதைப் போல போட்டவை அனைத்தையும் அழித்து விடும். தூய்மைபடுத்தி விடும். பஸ்மம் கூட பசுவின் சாணத்தை எரித்தே செய்கிறார்கள். ஆனால் தன்னுள் போடப்பட்ட சாணத்தினால் அந்த நெருப்பு மாசுப்படுவது இல்லை. நெருப்பில் போடப்படும் பொருளின் தன்மையைக் கொண்டே அதன் ஜுவாலை பெரியதாகவும், சிறியதாகவும் இருக்கும். அது போலத்தான் ஒரு யோகியும் தன்னிடம் வருபவர்களின் பாவத்தைக் களைந்து அதே நேரத்தில் தன்னையும் மாசுப்படுத்திக் கொள்ளாமல் நெருப்பை போல இருக்க வேண்டும்.

அனைவரும் உயிர் வாழத் தேவையான பிராண வாயுவை தந்தபடியும் அதே நேரத்தில் தன்னையும் மாசுப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே காற்று. காற்றை இங்கு போ, அங்கு போ என்று கூற முடியாது. மலர்கள் தரும் மணத்தையும் , வேறு பல மணங்களையும் தன் மீது சுமந்து கொண்டு அது சென்றாலும் சற்று நேரத்திலேயே அவற்றை விளக்கி வைத்துவிட்டு பட்டற்ற நிலைக்கு சென்றுவிடும். அது போலத்தான் ஒரு யோகியும் சுதந்திரமாக திரிந்து அலைந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதை பாடமாக அதனிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
சிலந்தி தன் வாயில் இருந்தே நூலைப் போன்ற இழைகளை வெளியே மெல்ல மெல்லத் தள்ளி, பெரிய வலையைப் பின்னி அதற்குள் தானும் இருந்து விளையாடிய பின் தானே அந்த இழைகளை விழுங்கி விடும். சிலந்தி எப்படி தான் படைத்த இழைகளை தான் விழுங்கிவிடுகிறதோ அப்படித்தான் தான் போதித்ததை தனக்குள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஞானம் எனக்கு சிலந்தியிடம் இருந்து கிடைத்தது.

முன் ஒரு சமயம் உடலை விற்றே வளமான வாழ்கையை நடத்திக் கொண்டு வந்த பிங்களை என்ற வேசி பெண் ஒரு நாள் இரவு வெகு நேரம் கண் விழித்து இருந்தும் எவரும் வரவில்லை என்பதைக் கண்டு மனம் சோர்ந்து போனாள். காமம் தலைக்கேற அதனால் கண் அயர்ந்து தூங்கி விட்டாள். அலுப்பினால் உறங்கி விட்டவள் உள்ளத்தில் இருந்த காமம் என்றும் அல்லாமல் அன்று முதல் மெல்ல மடியத் துவங்கியது. 'ஒன்றும் இல்லாத ஜடமான இந்த தசைகளையும், சதைகளையுமா காமக்காரர்களுக்கு இரையாக்கி என்னுடைய வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்று வந்தேன்?....சேச்சே..இது வரை சம்பாதித்தது போதும், இனி இந்த உடலை விற்பது பாவச் செயல்' என்று அலுத்துக் கொண்டாள். மறுநாள் முதல் அந்த தொழிலை முற்றிலும் விட்டுவிட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பினாள். இதயத்தில் பாரம் குறைந்து அமைதியாக இருப்பதைக் கண்டாள் . அது முதல் கடவுள் பக்தி கொண்டு வாழ்ந்து வரலானாள். இது கற்றுத் தந்த பாடம் என்ன? உள்ளமட்டும் போதும் என்ற அளவு திருப்பதிப்பட்டுக் கொண்டு அளவு கடந்து வைத்து இருக்கும் ஆசைகளை துறந்து விடு. மனதுக்கு அமைதி கிடைக்கும் என்பதே.
இயற்கையின் நியதியினால் சந்திரன் தேய்ந்து மீண்டும் வளர்கின்றது. வளர் பிறையிலும், தேய் பிறையிலும் சந்திரன் அழிவது இல்லை. அதன் தோற்றம் மட்டுமே மாறுபடுகின்றது. ஆகவே ஒரு யோகியும் உடலின் தோற்றம் எப்படி மாறுபட்டாலும் அதற்குள் உள்ள ஆத்மா மாறுதல் அடைவது இல்லை என்பதை புரிந்து கொண்டு தன்னை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பாடம்.

அனைத்து உலகிலும் தோன்றுவதும் சூரியனே. தன்னை சுற்றி ஓடிக்கொண்டு உள்ள பூமியில் இருந்து நீரை மேலை இழுத்து அதை கிரகித்துக் கொண்டு இருந்தாலும் அதை தன்னுடனேயே வைத்துக் கொண்டு விடாமல் தக்க சமயத்தில் அதை மீண்டும் நீராகவே மாற்றி மழை என்ற பெயரில் பூமிக்கே திருப்பித் தருவதைப் போல யோகியும் நல்ல விஷயங்களை பல இடங்களில் இருந்தும் கிரகித்துக் கொண்டு தன்னிடம் வந்து அடைக்கலம் ஆகும் மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவைப்பட்ட போது அவற்றை போதனை செய்த வண்ணம் இருக்க வேண்டும்.
ஆரம்பமும் முடிவும் தெரியாமல் உலகமெங்கும் படர்ந்து விரிந்துள்ள ஆகாயம் தன் மீது தவழ்ந்து செல்லும் காற்றாலோ, மழை , இடிகளினாலோ எந்த காலத்திலும் தன் உருவை மாற்றிக் கொண்டது இல்லை. அதுபோலத்தான் எந்த நிலையிலும் எதன் மீதும் பற்று கொண்டு விடாமல் நம்முடைய ஆத்மாவையும் பற்று இல்லாமல் வைத்து இருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் உணர்ந்தேன்.

கடலின் ஆழம் எத்தனை என்பதோ அதற்குள் என்ன பொருட்கள் உள்ளன என்பதோ அதில் முழுகி ஆராய்ந்து பார்த்தால் ஒழிய தெரியாது. கடலின் அடியில் பாறைகளும், ரத்தினங்கும், ஜீவன்களும் உள்ளன. எத்தனை ஆறுகளும், நதிகளும் அதனுடன் வந்து கலந்தாலும், அதனுள் எந்தப் பொருளை வீசி எறிந்தாலும் அதனால் தன்னை மாற்றிக் கொள்ளாமல் தன மீதே அந்தப் பொருட்களை மிதக்க விட்டுக் கொண்டும், தன் காலடியில் அதை தள்ளியும் வைத்து விடும். மிதப்பதை மெல்ல மெல்ல கரையில் ஒதுக்கி விடும். அப்படித்தான் ஒரு யோகியும் இருக்க வேண்டும். தன்னைப் பற்றிய உண்மையை வெளியில் காட்டிக் கொள்ளாமலும் மற்ற சுக போகங்களில் தன்னை இழந்து விடாமலும் இருந்து கொண்டு தேவையற்றவைகளை விலக்கி வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதையும் அதன் மூலம் தெரிந்து கொண்டேன்.
மலைப்பாம்பு இறை தேடி இடம் இடமாக அலைவது இல்லை. தன்னிடம் வந்து சிக்கும் பிராணிகளை விழுங்கி விட்டு பல நாட்கள் ஒன்றும் சாப்பிப்டாமல் பட்டினியோடு படுத்துக் கிடக்கும். கிடைத்த இரையை சாப்பிடும். அது போலதான் கிடைத்ததை உண்டு கொண்டு ஆத்ம திருப்தியுடன் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்பது இது தந்த பாடம்.

ஒரு காட்டில் புறா ஒன்று தான் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருந்தது. குழந்தைகள் எழுப்பும் குரலில் மனம் லயித்து இருக்கும். ஒரு நாள் அந்த புறாக் குஞ்சுகளை வேடன் ஒருவன் தன் வலையில் பிடித்து வைத்துக் கொண்டான். பெண் புறாவோ அவற்றைக் காப்பாற்ற முடியாமல் அழுது புலம்பியது. அவற்றை காப்பாற்ற முடியாவிடிலும் அவற்றுடன் சேர்ந்தே வாழலாம் என் எண்ணி தானும் சென்று அந்த வலையில் சிக்கிக் கொண்டது. இறை தேடித் போன ஆண் புறா திரும்பி வந்து தன் குடும்பத்தினர் படும் பாட்டைக் கண்டு வருந்தி தானும் அந்த வேடன் வலையில் சிக்கி மடிந்தது. பிறப்பவன் என்றாவது ஒரு நாள் மடிந்தே ஆக வேண்டும் என்றாலும் காமக்ரோதங்களுக்கும், பாசத்திற்கும் தன்னை முழுமையாக அடிமையாக்கி வைத்துக் கொண்டு அதுதான் தன் வாழ்கை என்ற குறுகிய மூடத்தனமான எண்ணத்துடன் இருந்து கொண்டு அதனால் அழிந்து விடக் கூடாது. பிறந்ததற்கான காரணத்திற்கு நியாயம் கற்பித்த வண்ணம் ஒருவனின் வாழ்கை அமைந்து இருக்க வேண்டும் என்பதே இதன் பாடம்.
நீரில் கிடைக்கும் உணவு போதும் என்ற அளவில் மனதை வைத்துக் கொள்ளாமல் தூண்டிலில் உள்ள இரையை எடுக்கப் போய் மற்றவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளும் மீனைப் போன்ற நிலையில் யோகிகள் இருக்கக் கூடாது. ஐம்புலன்களின் தடுமாற்றத்தின் முதல் காரணமே நாக்கின் ருசி. நாக்கின் ருசியை அறவே ஒடுக்கி எறிய வேண்டும் என்பதே யோகிகள் செய்ய வேண்டிய முதல் கடமை என்பதை மீன் மூலம் அறிந்து கொண்டேன்.

ஒரு வகை மான் இசைகளைக் கேட்டால் அதில் மயங்கி கண்களை மூடிக் கொண்டு நின்று விடும். அந்த சமயத்தில் வேடன்களிடம் அவை அகப்பட்டுக் கொள்ளும். யோகி எனப்பட்டவன் எந்த நிலையிலும் ஒரு கீழ்த்தரமான இசையில் மனதை பரிகொடுத்துவ்ட்டு அதில் தன்னை அடிமைப் படுத்திக் கொள்ளாமல் உறுதியான மனதுடன் இருக்க வேண்டும்.
பெண்ணாசை மிகக் கொடியது. காட்டில் யானையைப் பிடிக்க வேடவர்கள் ஒரு பெரிய பள்ளத்தை தோண்டி, அதன் மீது இலைகளையும் தழைகளையும் போட்டு மூடி வைத்துவிட்டு அதன் மீது ஒரு பெண் யானையின் பொம்மையை வைத்து விடுவார்கள். அந்தப் பக்கமாக வரும் ஆண் யானை அது நிஜ யானை என எண்ணிக் கொண்டு அதை அடைய நினைத்து ஓடி வந்து அந்த பள்ளத்தில் விழுந்து விடும். அது மட்டும் அல்ல, தான் ஒரு பெண் யானை மீது மையல் கொண்டு அதைப் பிடிக்க துரத்தும்போது வேறு ஒரு யானையும் அந்தப் பெண் யானையை துரத்தி வந்தால் அதனுடன் போரிடத் துவங்கும். அந்தப் போரின் முடிவில் ஏதாவது ஒரு ஆண் யானை மடிந்து விடும். அழிவும் பெண்ணால் வரும் எனும்போது பெண் ஆசையை அடக்குவது அவசியம். ஆகவே ஒரு யோகி ஒரு பெண்ணைப் பார்த்து மயங்குவது தற்கொலைக்கு சமம்.
கள்ளம் கபடம் அற்றது குழந்தை. அதற்கு இன்பமோ துன்பமோ எதுவும் தெரியாது. அன்னையிடம் பால் பருகும் அதற்குத் தேவை தன்னுடன் எவராவது இருக்க வேண்டும். தன்னுடன் விளையாடிக் கொண்டு இருக்க வேண்டும் . அவ்வளவே. அதில்தான் அது இன்பத்தைக் காண்கின்றது. கவலை அற்ற வாழ்கை அது. அப்படித்தான் ஒரு யோகியும் குழந்தைப் போல கவலை இன்றி இருக்க வேண்டும். சுறுசுறுப்பிற்கு பெயர் பெற்றது தேனி. பல்வேறு இடங்களிலும் உள்ள மலர்களை சிதைக்காமல் அதனுள் உள்ள தேனை சிறிது உண்டப் பின் மீதியை எடுத்து வந்து ஒரு இடத்தில் சேமித்து வைக்கும். அத்தனை பாடுபட்டும், கஷ்டபட்டும் சேமித்து வைத்த தேனை புகை மூட்டி தேனிக்களை துரத்தியப் பின் தேனை எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர். ஆகவே ஒரு யோகி அன்றாடும் தேவைப்படும் அளவில் மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும். மறு நாளுக்கென சேர்த்து வைக்கக் கூடாது. பல இடங்களில் இருந்தும் நல்ல நல்ல விஷயங்களை கற்று அறிந்து கொண்டும் அதில் உள்ள விஷயத்தை ஒவ்வொன்றாக படித்து சிறிது சிறிதாக கிரகித்துக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேன் எடுப்பவன் தன்னை முழுமையாக போர்த்திக் கொண்டு புகைக் கிளப்பிவிட்டு தேனிக்களை துரத்தியப் பின் தேன் கூட்டை எடுத்துச் சென்று தேன் எடுக்கின்றான். அப்படி செய்யாமல் தேன் கூட்டை நெருங்கினால் வந்தவனை தேனிக்கள் கடித்துக் குதறிவிடும். ஆகவே தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் சொத்து சேர்த்து வைத்தால் இப்படித்தான் தேன் சேகரிப்பவன் போல எவனாவது வந்து அனைத்தையும் அபகரித்துக் கொண்டு போய் விடுவான் என்ற உண்மை இதனால் தெரிய வந்தது.
எங்கு ஜுவாலை தோன்றினாலும் அந்த மினுமினுக்கும் தோற்றத்தில் மோகமுற்று அதன் அழகில் மயங்கி விட்டில் பூச்சி அதன் அருகே சென்று அந்த தீ ஜுவாலையில் விழுந்து மடிகின்றது. இது கற்றுத் தரும் பாடம் என்ன என்றால் வெளி அழகில் மயங்கி மோகம் கொண்டு மடியாதே என்பதே.

ஒரு சிறு பறவை தனது வாயில் மாமிசத் துண்டை கௌவிக் கொண்டு பறந்து போய் கொண்டு இருந்தது. அதைக் கண்டு விட்ட பெரிய பருந்து அந்த சிறு பறவையைப் பிடிக்க துரத்தி வந்ததும், புத்திசாலித்தனமான அந்த சிறு பறவை தன் வாயில் இருந்த மாமிசத் துண்டை கீழே போட்டுவிட அந்தப் பெரிய பருந்து அந்த சிறு பறவையை விட்டு விட்டு மாமிசத் துண்டை எடுக்க ஓடியது. ஒரு பொருளை நாம் வைத்துக் கொண்டால் அதனால் நமக்கு தீமையே வரும் என்று தெரிய வந்தால் அதன் மீது ஆசை கொண்டு அலைவதை விட அதை தவிர்த்து விடுவதே நலம்.
அம்பு செய்பவனைப் பார்த்தாயானால் அவன் அதில் முழு கவனத்தையும் செலுத்தி செய்வது தெரிய வரும். அப்படிப்பட்ட நிலையான மனதுடன் இருந்து கொண்டு இறை வழிபாட்டை கொண்டு வந்தால் களங்கமற்ற மன நிலைப் பெறலாம்.
பாம்பு ஒரு இடத்திலும் தங்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இரும்புப் புற்றிலும் பள்ளத்திலும் போய் வசிக்கும். அது மிகவும் எச்சரிக்கையோடு இருக்கும். அது போலத்தான் ஒரு யோகியும் தனக்கென ஒரு இடத்தில் தங்காமல் அங்கும் இங்கும் சென்று இருந்தபடி கோவில்களிலும் குகைகளிலும் வசித்தபடி இருக்க வேண்டும்.

ஒரு வகையான வண்டு தன் புழுவை கூட்டில் வைத்தப் பின் மீண்டும் மீண்டும் அங்கு வந்து சப்தம் செய்தபடி இருக்கும். அது செய்யும் சப்தத்தினால் பயந்து போன புழு அந்தக் கூட்டை விட்டு வெளியில் வராமல் அங்கேயே தங்கி இருக்கும். மெல்ல மெல்ல அந்தப் புழு வண்டாக மாறும்வரை பெரிய வண்டு அங்கு வந்து கத்திக் கொண்டே இருக்கும். அது போலவே பக்திபூர்வமாக நிலையாக கடவுள் மீது பயம் கொண்டு பக்தி செலுத்தி வந்தால் நம் உள்ளமும் பக்தி மார்கத்தில் மாறும்.
திருமண வயதை எட்டிய ஒரு பெண் தானியம் திரட்டிக் கொண்டு இருக்கையில் அவள் போட்டு இருந்த வளையல்கள் சப்தம் போட்டன. அந்த சப்தத்தை தவிர்க்க அவள் அனைத்து வளையல்களையும் எடுத்து விட்டு இரண்டு வளையல்களை மட்டும் போட்டுக் கொண்டு வேலை செய்தாள். அந்த இரண்டு வளையலும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு சப்தம் தரத் துவங்க ஒரே ஒரு வளையல் மட்டும் போதும் என எண்ணியவண்ணம் ஒற்றை வளையலை போட்டுக் கொண்டு சப்தம் வராமல் வேலை செய்தாள். அது போலத்தான் ஒரு யோகியும் தன்னை சுற்றிலும் அதிகமானவர்கள் இருந்தால் கூச்சலும் குழப்பமும் மட்டுமே மிஞ்சும் என்ற உண்மையை தெரிந்து கொண்டு தனியாகவே தான் இருந்து கொண்டு இருப்பதை நிலையாகக் கடை பிடிக்க வேண்டும் என்ற நியதியை தெரிந்து கொண்டேன்.''
இப்படியாக இயற்கை கற்றுக் கொடுத்தப் பாடங்களை கற்றுக் கொண்டு இருந்ததினால்தான் ஸ்ரீ மானிக் படிப்பில் நாட்டம் இன்றி இருந்தார். அது வியப்பும் இல்லையே. ஆனால் அதை சுற்றி உள்ளவர்கள் ஏற்க வேண்டுமே. தங்களுடைய மகன் இப்படி மீண்டும் மீண்டும் சுற்றி அலைந்து கொண்டு இருந்தால் விடி மோட்சமே கிடையாதே என எண்ணிய அவரது பெற்றோர்கள் அவரை அவரது தாய் மாமன் வீட்டிற்கு அனுப்பினார்கள். வேறு ஊருக்குச் சென்றால் நண்பர்களின் சேர்க்கை மாறும். மகன் மனம் மாறி படிக்கத் துவங்குவான் என எண்ணினார்கள். ஆனால் அவர்களின் நினைப்பிற்கு மாறாகவே ஸ்ரீ மானிக் இருந்தார். வெட்ட வெளியில் ஆகாயத்தை பார்த்துப் படுத்தபடி ஏகாந்தமாக இருப்பார். எதோ சிந்தனை....நாள் முழுவதும் சிந்தனை. அவர் கடவுளின் அவதாரம் என்பது யாருக்கு புரியப் போகின்றது? தாய் மாமன் எண்ணினார், ஒரு வேளை ஒரு வேலையில் அவரை சேர்த்து விட்டால் கவனம் திரும்பலாம். ஆகவே அவர் எவரேவரிடமோ இருந்து சிபாரிசு பெற்று வரி வசூலிக்கும் பிரிவில் ஸ்ரீ மானிக்கிற்கு வேலை வாங்கித் தந்தார். ஆனால் வேலையிலும் ஸ்ரீ மானிக்கிற்கு நாட்டம் இல்லை. முதல் நாள் அன்றே தான் வசூலித்த வரிப் பணத்தை தன்னிடம் வந்து கஷ்டத்தைக் கூறிய நண்பர்களுக்கு பிரித்துத் தந்துவிட்டார். வரி வசூலித்த பணத்தை எடுத்து வாரிவிடா யார் அனுமதிப்பார்கள். ஆகவே அவரை வேலையில் இருந்து விலக்கி விட்டார்கள்.
பல நாட்கள் வீட்டில் ஒரு கட்டிலில் சன்யாசி போல ஸ்ரீ மானிக் படுத்துக் கிடப்பார். வேலையும் இல்லை....சாப்பாடு....தூக்கம் அவ்வளவே. அவர் தாய் மாமன் அதைப் பார்த்துக் கொண்டு எத்தனை நாள்தான் பொறுமையாக இருப்பார். ஒரு நாள் கட்டிலில் படுத்துக் கிடந்த ஸ்ரீ மானிக்கை பார்த்து கோபமாகக் கத்தினார் '' நீ என்ன ஜாமீன் பரம்பரையில் பிறந்தவன் என்ற நினைப்பில் இருக்கிறாயா? உடம்பை அசைக்காமல் இருக்கும் உனக்கு உணவும் உடைகளும் தவறாமல் கிடைபதினால்தானே இப்படி ஊதாரித்தனமாக உரை சுற்றிக் கொண்டு இருக்கின்றாய். உனக்கு வெட்கமாக இல்லையா?''
அப்படிப்பட்ட சந்தர்பத்தைதான் ஸ்ரீ மானிக் எதிர்பார்த்து காத்திருந்ததைப் போல எழுந்தார். ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. கட்டிய உடையுடன் கிளம்பிச் சென்றவர் போகும் முன் கூறினார் :-
படிப்பவரும், காப்பவரும் கருணைக் கடவுளுமான
அந்தக் கடவுளைத் தவிர
எனக்கு யாருடைய துணை வேண்டும்?
இந்த மாயையான உலகில்
அனைத்தும் நான்தான் என நினைக்கின்றான் விந்தை மனிதன்
ஒன்று தெரியவில்லை அவனுக்கு
யாருக்கு யார் வேலைக்காரன்?
உண்மையில் கடவுள் என்பவன் யார்?
சோதனைக் காலத்தில் இப்படி குழப்பத்துடன் நினைப்பது
வீண் வேலை அல்லவா.
ஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு
அது இப்படி வளர்கின்றது என்று யார் சாட்சி கூற முடியும்?
என்னைப் பற்றி அறியாதவர்களிடம்
நானும் அப்படித்தான் கேட்கிறேன்.

சொந்த பந்தம் துறப்பதற்கு வேளை வரவேண்டாமா. அதனால்தான் அத்தனை நாட்களும் பொறுமையைக் கடைபிடித்துக் காத்து இருந்தார். விதிப்படி தாய் மாமன் வீட்டில் இருந்துதான் பந்தத்தை துறக்க வேண்டும் என்று இருந்தது. துறந்து விட்டார். சுதந்திரப் பறவையாக மாறினார். பார்க்கும் அனைத்திலும் தெய்வீகத்தைக் கண்டார். உலகம் முழுவதிலும் இறைவீகம் பரவி இருந்ததைக் கண்டார். காண்பது, கேட்பது, தொடுவதும் என அனைத்துமே தெய்வம் என்ற உண்மை தெரிந்தது. தான் அவதரித்தது மக்களின் துய துடைக்கவே என்ற உண்மையும் புரிந்தது.
எவருக்கு துன்பம் ஏற்பட்டாலும் ஸ்ரீ மானிக்கினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது என்பது மட்டும் அல்ல பிராணிகளுக்கு துன்பம் நேர்ந்தாலும் அதை அவரால் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. ஒரு சம்பவம். ஒரு கருத்தரித்த மாட்டின் மீது அமர்ந்தபடி அதன் எஜமானன் அதை ஓட்டிக் கொண்டு வந்தான். கருத்தரித்த மாட்டினால் எப்படி விரைவாக ஓட முடியும். ஆகவே அதை விரைவாக ஓட்ட அதன் மீது அமர்ந்து இருந்தவன் அதை அடித்துக் கொண்டே வந்தான். நிறை மாத கர்பிணி மாட்டை அடித்துக் கொண்டே வந்ததைக் கண்ட ஸ்ரீ மானிக் கோபமுற்றார். அவனை வழிமறித்து நிறை மாத கர்பிணி மாட்டை அடிப்பது பாவம் எனக் கூறியும் அந்த மூடன் அதைக் கேட்கவில்லை. '' நீ யார் இந்த மாட்டிற்கு வந்து பரிந்துரை செய்ய '' எனக் கூறிவிட்டு வேண்டும் என்றே இன்னும் அதிகமாக அந்த மாட்டை அடிக்கத் துவங்கினான். அவனுக்கு சரியான பாடம் புகட்ட ஸ்ரீ மானிக் முடிவு செய்தார். அந்த மாட்டைப் பார்த்து ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான். அந்த மாடு முரண்டு பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கியது. அதன் மீது அமர்ந்து இருந்தவனால் இறங்க முடியவில்லை. யாரோ பசை போட்டு அதன் மீது தன்னை அதன் மீது ஓட்டி வைத்து உள்ளதைப் போலவும், தன் கைகளை பின்னால் கட்டி வைத்து உள்ளதைப் போலவும் உணர்ந்தான். அங்கேயே சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்த மாட்டினால் அங்கும் இங்கும் இடித்து இடித்து அவன் உடம்பெல்லாம் நல்ல அடி. ''ஐயா...காப்பாற்றுங்கள்...ஐயா..காப்பாற்றுங்கள் ''எனக் கத்தினான். ''இனி அப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டேன்...மன்னித்து விடுங்கள்'' எனக் கதறினான். ஸ்ரீ மானிக் மனம் இறங்கி மாட்டை சமாதானப்படுத்தினார். அதன் மீது சவாரி செய்து கொண்டு வந்தவன் ஓடி வந்து அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான். இனி ஜீவ ஹிம்சையே செய்ய மாட்டேன் என உறுதிமொழி கொடுத்து சத்தியம் செய்தான்.
...4
கருத்துகள்
கருத்துரையிடுக