Sisupala Charitham -2
சாந்திப்பிரியா பாகம்- 2 முன்னொரு காலத்தில் பூ உலகில் பாரத கண்டம் என்றொரு பூமி இருந்தது. அங்கு வாசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக நாராயண பகவானான கிருஷ்ணர் பிறந்தார். அதன் பிறகு சில காலம் பொறுத்து வாசுதேவரின் சகோதரியான சாத்துவதி என்பவருக்கும் தமகோஷன் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார் சிசுபாலன் என்பவர். முந்தைய ஜென்மத்தில் ராவணனாக பிறந்து இருந்து ராமரால் வதம் செய்யப்பட்டவர் சிசுபாலன். அவருக்கு பூர்வ ஜென்மத்தில் மறுபிறப்பிலும் ராமரின் ஒரு அவதாரத்தினால் மரணம் கிட்டும் என்ற விதி இருந்தது. பிறந்த குழந்தை பெரியவனாகி சிசுபாலன் எனப் பெயர் கொண்டு சேதி எனும் ஒரு நாட்டின் மன்னரானார். அப்போது ஒரு முறை நாரதரை தேவலோகத்துக்கு அழைத்த இந்திரன் அவரிடம் கூறினார் ' ஸ்வாமி, வர வர சேதி நாட்டை ஆண்டு வரும் சிசுபாலனின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. தேவர்களை துன்புறுத்துகிறான். பிறரையும் துன்புறுத்துகிறான். அவனுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஆகவே அவரை அடக்க வேண்டும், அல்லது அவரை கொல்ல வேண்டும் என்றால் அது கிருஷ்ணரால் மட்டுமே முடியும் என்று ராஜ பண...

கருத்துகள்
கருத்துரையிடுக