தத்தாத்திரேயர் சரித்திரம்
 தத்தாத்திரேயர் சரித்திரம்: பின்னணி 
பாகம்-1
என்னுடைய  வாழ்கையில் வினோதமான பல சம்பவங்கள் நடந்து உள்ளன. ஏன் அவை நடந்தது அல்லது  எப்படி நடந்தது என்பதை கூற இயலாத நிலைமை . ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியின்   பின்னணியிலும்  ஒவ்வொரு காரணங்கள் இருந்தன. அந்தப் பின்னணியில் ஒரு முறை  எழுந்ததுதான் இந்தப் புத்தகமும்.  என் வாழ்கையில் நீருபூத்த நெருப்பாக  தத்தாத்திரேயேர் இருந்துள்ளார் என்பதற்கு அடையாளம் அவர் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீ  கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் அருளைப் பெற்று இந்த புத்தகத்தை எழுத  வைத்து உள்ளது. என் வாழ்கையில் நடந்த அனைத்துமே ஒரு விபத்து போலவே நடந்தது.  
ஒரு முறை உஜ்ஜயினிக்கு சென்று கொண்டு இருந்தபோது வழியில் பாமான்கேடா என்ற சிறிய கிராமம் என நினைக்கின்றேன், அங்கு ஒரு தத்தர் ஆலயம் இருந்தது. நாங்கள் சென்று வாகனம் ஏதோ காரணத்தினால் சிறிது நேரம் அந்த ஊரில் சிறிது நேரம் நிற்க நேரத்தைக் கழிக்க நாங்கள் ஏதேற்சையாக தத்தர் ஆலயத்துக்கு சென்றோம். அப்போது அங்கு தத்தர் ஆலயம் இருந்தது எங்களுக்குத் தெரியாது. அற்புதமான ஆலயம். பெரிய ஆமையின் உருவச் சிலை அவர் முன் நிற்க தத்தர் அற்புதமாக காட்சி அளித்துக் கொண்டு இருந்தார். என் மனதில் தத்தாத்திரேயர் சிலையாக அமர்ந்தது அதுவே முதன் முறை. மனதும் அமைதியாக இருந்தது.
அதன் பின் பல முறை அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளேன். ஆண்டுகள் கடந்தன. நான் அலுவலகத்தில் இருந்து ஒய்வு பெற்றேன். நேரத்தைக் கழிக்க எழுதத் துவங்கினேன். அப்போதுதான் மீண்டும் ஏதேற்சையாக மைசூரில் இருந்த அவதூத பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் ஆசிரமத்திற்கு சென்று இருந்தேன். அவரே நேரிலே சந்தித்தோம் . அவர் விரும்பியபடி ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் ஆசிரமத்திற்கு குரு போதனைகள் என்ற பெயரில் தத்தாத்திரேயரின் முதல் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ஸ்ரீ வல்லபாதாவின் வரலாற்றை எழுதிக் கொடுத்தேன். தனது சிஷ்யரான ஸ்ரீ நமக்ஹரா என்பவருக்கு ஸ்ரீ ஸ்ரீ வல்லபாதா பல கதைகளைக் கூறி உபதேசம் செய்ததை குரு சரித்திரம் என்றும் கூறுகிறார்கள். அப்போது ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளை நேரிலே சந்தித்து ஆசி பெற்றபோது தத்தாத்திரேயர் பற்றி புத்தகம் எழுதுமாறு கூறியதும் அல்லாமல் தத்தாத்திரேயரைப் பற்றி அவர் எழுதி இருந்த சில புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தார்.
என்னிடம் இருந்த பல செய்திகள் மற்றும் அவர் கொடுத்த புத்தகத்தில் இருந்து சில செய்திகள் என அனைத்தையும் ஒன்றிணைத்து அதைக் கொண்டு நான் எழுதிய புத்தகமே இந்த தத்தாத்திரேயர் சரித்திரம். இதை சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடா நாட்டில் உள்ள ஒரு ஆலயத்தினர் தமது இணையதளத்தில் புத்தகமாக வெளியிட்டுக் கொண்டார்கள். அதையே மீண்டும் சிறிது மாற்றங்களுடன் சற்று சுருக்கி எழுதி உள்ளேன்.
நமக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் முடிவு காண வேண்டும் எனில் இந்த புத்தகத்தை (தத்தாத்திரேயரின் சரித்திரத்தை) ஒவ்வொரு பாகமாக ஒரே வாரத்தில் தொடர்ச்சியாக படித்து முடித்தால் போதும் நம் பிரச்னைக்கு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை தத்தர் பக்தர்களிடம் உள்ளது. இப்படித்தான் தத்தரின் இன்னொரு அவதாரமாக கருதப்படும் சாயிபாபாவின் சாயி சரித்திரம் பற்றியும் கூறுகிறார்கள். இனி தத்தாத்திரேயரின் சரித்திரத்தைப் படித்து மன ஆனந்தம் பெறுங்கள். - சாந்திப்பிரியா
ஒரு முறை உஜ்ஜயினிக்கு சென்று கொண்டு இருந்தபோது வழியில் பாமான்கேடா என்ற சிறிய கிராமம் என நினைக்கின்றேன், அங்கு ஒரு தத்தர் ஆலயம் இருந்தது. நாங்கள் சென்று வாகனம் ஏதோ காரணத்தினால் சிறிது நேரம் அந்த ஊரில் சிறிது நேரம் நிற்க நேரத்தைக் கழிக்க நாங்கள் ஏதேற்சையாக தத்தர் ஆலயத்துக்கு சென்றோம். அப்போது அங்கு தத்தர் ஆலயம் இருந்தது எங்களுக்குத் தெரியாது. அற்புதமான ஆலயம். பெரிய ஆமையின் உருவச் சிலை அவர் முன் நிற்க தத்தர் அற்புதமாக காட்சி அளித்துக் கொண்டு இருந்தார். என் மனதில் தத்தாத்திரேயர் சிலையாக அமர்ந்தது அதுவே முதன் முறை. மனதும் அமைதியாக இருந்தது.
அதன் பின் பல முறை அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளேன். ஆண்டுகள் கடந்தன. நான் அலுவலகத்தில் இருந்து ஒய்வு பெற்றேன். நேரத்தைக் கழிக்க எழுதத் துவங்கினேன். அப்போதுதான் மீண்டும் ஏதேற்சையாக மைசூரில் இருந்த அவதூத பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் ஆசிரமத்திற்கு சென்று இருந்தேன். அவரே நேரிலே சந்தித்தோம் . அவர் விரும்பியபடி ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் ஆசிரமத்திற்கு குரு போதனைகள் என்ற பெயரில் தத்தாத்திரேயரின் முதல் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ஸ்ரீ வல்லபாதாவின் வரலாற்றை எழுதிக் கொடுத்தேன். தனது சிஷ்யரான ஸ்ரீ நமக்ஹரா என்பவருக்கு ஸ்ரீ ஸ்ரீ வல்லபாதா பல கதைகளைக் கூறி உபதேசம் செய்ததை குரு சரித்திரம் என்றும் கூறுகிறார்கள். அப்போது ஸ்ரீ ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளை நேரிலே சந்தித்து ஆசி பெற்றபோது தத்தாத்திரேயர் பற்றி புத்தகம் எழுதுமாறு கூறியதும் அல்லாமல் தத்தாத்திரேயரைப் பற்றி அவர் எழுதி இருந்த சில புத்தகங்களையும் எனக்குக் கொடுத்தார்.
என்னிடம் இருந்த பல செய்திகள் மற்றும் அவர் கொடுத்த புத்தகத்தில் இருந்து சில செய்திகள் என அனைத்தையும் ஒன்றிணைத்து அதைக் கொண்டு நான் எழுதிய புத்தகமே இந்த தத்தாத்திரேயர் சரித்திரம். இதை சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடா நாட்டில் உள்ள ஒரு ஆலயத்தினர் தமது இணையதளத்தில் புத்தகமாக வெளியிட்டுக் கொண்டார்கள். அதையே மீண்டும் சிறிது மாற்றங்களுடன் சற்று சுருக்கி எழுதி உள்ளேன்.
நமக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் முடிவு காண வேண்டும் எனில் இந்த புத்தகத்தை (தத்தாத்திரேயரின் சரித்திரத்தை) ஒவ்வொரு பாகமாக ஒரே வாரத்தில் தொடர்ச்சியாக படித்து முடித்தால் போதும் நம் பிரச்னைக்கு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை தத்தர் பக்தர்களிடம் உள்ளது. இப்படித்தான் தத்தரின் இன்னொரு அவதாரமாக கருதப்படும் சாயிபாபாவின் சாயி சரித்திரம் பற்றியும் கூறுகிறார்கள். இனி தத்தாத்திரேயரின் சரித்திரத்தைப் படித்து மன ஆனந்தம் பெறுங்கள். - சாந்திப்பிரியா
பாகம்-1
பிரும்மாவின் படைப்பு 
ஜென்ம  ஜென்மாந்திரங்களுக்கு முந்தையக் காலம் அது. பிரபஞ்சத்தின் துவக்கமே இல்லாத  காலம். புராணங்களின்படி பரமாத்மன் என்ற ஒரு சக்தி மட்டுமே இயங்கி வந்தக்  காலம். பரந்தாமன் என்கின்ற சக்தியே பராசக்தி எனப்படுபவள் என்று  சௌந்தர்யலஹரி, சக்தி புராணங்கள் மூலம் அறிகின்றோம். மூன்று தெய்வங்களான  பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்ற மூவரையும் ஒன்றடக்கி இருந்தவளே அந்த  பராசக்தி. 
ஒரு முறை உருவமற்ற பராசக்தி பதினான்கு உலகத்தையும் படைக்க  எண்ணி பிரும்மா, விஷ்ணு மற்றும் மகேஷ்வர் என்ற மூவரையும் படைத்தாள்.  பிரபஞ்சத்தின் முதல் பகுதி துவங்கியது. படைக்கப்பட்ட அந்த மூவரில்  படைக்கும் ஆற்றலைப் பெற்ற பிரும்மாவோ சற்றும் தாமதிக்காமல் தான்  தோற்றுவிக்கப்பட்ட உடனேயே பன்னிரண்டு உலகத்தையும் அற்புதமான எண்ணற்ற ஜீவ  ராசிகளையும் படைக்கத் துவங்கினார். மனித குலம் உயிர் பெற்று எழுந்தது.  
அதன்  ஆரம்பமாக ஏழு தேவ ரிஷி முனிவர்களான அங்கீரச, அத்ரி, வசிஷ்டர், புலசா,  புலத்தியா, மார்கசி மற்றும் க்ராது என்பவர்களை படைத்தார்.  அப்படி  படைக்கப்பட்ட பிரும்மாவின் மானசீக புதல்வர்களில் அத்ரி முனிவர் இரண்டாமவர்  ஆவர்.  அதைத் தொடர்ந்து பிரும்மாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும்  பல்வேறு குணங்களைக் கொண்ட படைப்புக்கள் மெல்ல மெல்ல வெளி வரத் துவங்க  முனிவர்களில் மேலான முனிவரான கார்தப்ரஜாபதியும் பிரும்மாவின் ஒரு  பக்கத்தில் இருந்து வெளிப்பட்டார்.  
இப்படியாக உலகம் தோன்றி  யுகங்களாக  உழன்றது. பிரும்மாவினால்  படைக்கப்பட்ட பிறவிகள் தங்கள்  இஷ்டப்பட்டபடி கட்டுக் கோப்பு இல்லாமல் வாழத் துவங்கினார்கள். அதனால் பல  காலத்துக்குப் பின்னால் ஏற்பட உள்ள பின் விளைவுகளை பிரும்மா எண்ணிப்  பார்க்கத் துவங்கி  கவலையுற்றார். வாழ்க்கையில் ஒழுக்கம் இன்றி, உன்னதமான  ஆன்மீக வாழ்கையை உருக் குலைத்தவண்ணம் தான்தோன்றித் தனமாக  பூலோகப் பிறவிகள்  வாழ்வதைக் கட்டுப்படுத்தி அவர்களை நல்ல நிலைக்கு வழி காட்டிச் செல்லும்  மார்கத்துக்கு எவரையாவது படைக்க வேண்டும் என்ற அவசியம் எழுந்து விட்டதை  உணர்ந்தார். மனதில் பல்வேறு நிலைமைகளையும் தீர ஆராய்ந்து பார்த்தார்.  பிரகதியைப் படித்தபோது அவர்களுடன் வெளிவந்த நியதிகளும் வேத மறைகளும் ஒரு  உண்மையை வெளிப்படுத்தி இருந்தன.  
பூவுலகப்  பிறவிகள் ஒழுங்கின்றி  தான் தோன்றித்தனமாக வாழ்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனில், அவர்களை நல்  வழியில் கொண்டு செல்ல வேண்டும் எனில், அவர் ஆரம்பத்தில் படைத்து இருந்த  ஏழு முனிவர்களில் ஒருவரான அத்ரி முனிவரால் பிறக்க உள்ள பிள்ளையினால்  மட்டுமே முடியும் என்ற விதி இருந்ததும் புரிந்தது. என்ன செய்யலாம் என  மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தார்.  
அத்ரி முனிவரோ  திருமணம் ஆகாதவர். நியதியின்படி அத்ரி முனிவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரு  பிள்ளை பிறக்க வேண்டும். அப்படி பிறக்க உள்ள பிள்ளையினால் மட்டுமே   தாம்  எண்ணிய  நல்ல காரியத்தை  நிறைவேற்ற முடியும். ஆகவே என்ன செய்து அத்ரி  முனிவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது? அத்ரி முனிவரோ திருமணம் செய்து  கொள்வதை விரும்பாதவர். ஆனால் அவருக்கு ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்  என்ற காரணத்தை எடுத்துச் சொல்லி அவரை வழிக்கு கொண்டு வர வேண்டும். அடுத்து  அவருக்கு ஏற்ற மனைவியாக யாரை தேர்ந்து எடுப்பது என்ற பிரச்சனை வரும்.  அப்போது அவரிடம் யாரைக் குறிப்பிடுவது? பல பக்கங்களிலும் சிந்தனை செய்து  பார்த்தவருக்கு ஒரு நல்ல வழி தெரிந்தது. 
முனிவர்களை படித்தபோது  அவரால் படைக்கப்பட்டவர்களில் ஒருவரே கார்தப்ரஜாபதி. அவர் பிரும்மாவின்  பேத்தியையே  மணந்து கொண்டு ஒன்பது பெண்களை பெற்று எடுத்து இருந்தார். அந்த  ஒன்பது பெண்களிலும் அதி உத்தமியும், அழகுள்ளவளும், அதி புத்திசாலியானவளே  அனுசூயா என்பவள்.  அவளை எப்படியாவது அத்ரி முனிவரை மணக்க சம்மதித்து வைத்து  விட்டால் அவர்கள் மூலம் ஒரு பிள்ளையை பிறக்க வைத்து அந்தப் பிள்ளை மூலம்  உருக் குலைந்தவண்ணம் சென்று கொண்டு இருக்கும் மனித வாழ்வைக்  கட்டுப்படுத்தி அவர்களை நல் வழிக்கு கொண்டு செல்லலாம் என எண்ணியவர்  அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டார்.
அத்ரி முனிவர் திருமணம் 
அத்ரி  முனிவர் திருமணம் ஆகாதவர். ஆகவே அவரை திருமணம் செய்து கொள்ள வைக்க பல  வழிகளை பிரும்மா  கையாள நடந்த சம்பவங்களுக்கு ஏற்ப அத்ரி முனிவரும்  கர்தபிரஜாபதியின் மகளான அனுசூயாவை மணந்து கொண்டார். ஆனால் திருமணம் ஆகி பல  வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை. தான் போட்ட  திட்டம் நடக்கவில்லையே என்ற கவலை மீண்டும்  பிரும்மாவுக்கு ஏற்பட்டது. அதே  நேரத்தில் அத்ரி முனிவருக்கும் தனக்கு ஒரு மழலை செல்வம் இல்லையே என்ற  துயரம் தோன்றியது. பிரும்மாவுக்கு தோன்றியது அடுத்த வழி. சிவன்,  விஷ்ணுவுடன் தானும் சேர்ந்து அத்ரி முனிவருக்கு ஒரு குழந்தையாக  பிறந்தால்  மட்டுமே இதற்கான விடை கிடைக்கும்.  அதற்கேற்ப அடுத்தடுத்து பிரும்மா போட்ட  திட்டங்கள் அடுத்தடுத்து நிறைவேறின .  அத்ரி முனிவரின் துயரை தீர்க்க  தாங்களே  மூவரின் அவதாரமாக ஒரு பிள்ளையாக அவருக்கு பிறப்போம்  என  மும்மூர்த்திகளாகத் தோன்றி அவருக்கு ஆசீர்வதிக்க  அத்ரி முனிவர் தம்பதிகள்  பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். 
அத்ரி முனிவரும் அனுசூயாவும்
அத்ரி முனிவர் விஸ்வாமித்திரர்  மற்றும் வசிஷ்டர் என்ற இரண்டு முனிவர்களுக்கும் இடையே இருந்த பகையை  விலக்கியவர். இன்னொரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்து கொண்டு  இருந்த போரில் இருபுறமும் தொடுத்த அம்பு மற்றும் ஆயுதங்கள் மழைப் போல  சந்திர சூரியனையே மறைக்க உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் அந்த இருட்டில்  சண்டை போட முடியாமல் தவிக்க அத்ரி முனிவர் தனது தவ வலிமையினால் தானே  சந்திர சூரியனைப் போன்ற ஒளியை ஏற்படுத்திக் கொடுக்க தேவர்கள் யுத்தத்தில்   வெற்றி பெற்றார்கள். 
அத்ரி முனிவரின் சக்தி அப்படிப்பட்டது என்றால்  அனுசூயா சளைத்தவளா என்ன? முன் ஒரு காலத்தில் ஷீலாவதி என்ற கற்புக்கரசி  வாழ்ந்து வந்தாள். அவளும் அனுசூயாவுக்கு இணையான கர்புக்கரசியே. அவளுடைய  கணவன் ஒரு விலை மாதுடன் தொடர்புக் கொண்டு தனது சொத்து அனைத்தையும் இழந்தது  மட்டும் அல்லாமல் உடலும் நலிவுற்றான். ஆனாலும் ஷீலாவதி தன்  கணவனின்  மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என எண்ணியவளாக அவனைக் கை விடாமல் அவனுக்கு  பணிவிடை செய்து வந்தாள். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நோயுற்ற கணவன் ஒரு  நாள் தனது ஆசை நாயகியை காண விருப்பம் தெரிவித்தான்.  ஆகவே அவன் மனைவி  தன்னுடைய கணவனை தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு அந்த விலை மாதுவின்  வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். போகும் வழியில் மாண்டவ முனிவர் தவம் செய்த  வழியாக அவள் சென்று கொண்டு இருந்தபோது இருட்டில் தெரியாமல் அவளது கணவனின்  கால்கள் மாண்டவ முனிவரின் தலை மீது பட்டு விட அவர் நடந்ததை கேட்காமல் அவன்  விடிந்ததும் மரணம் அடைய வேண்டும் என சாபம் தந்தார். முனிவர்களின் சாபாம்  பலிக்காமல் போகாது அல்லவா. ஆகவே பயந்து போன ஷீலாவதி மறுநாள் காலை  சூரியனே  உதிக்கக் கூடாது என சாபமிட அந்த கற்புக்கரசியின் சாபமும் வீண் போகவில்லை.  உலகில் அனைத்து ஜீவன்களும் சூரிய ஒளி இல்லாமல் அவதிப்பட ஒரு  கற்புக்கரசியின் சாபத்தை இன்னொரு கற்புக்கரசியே போக்க முடியும் எனக் கருதிய  அனைத்து தேவர்களும்  அனுசூயாவிடம் சென்று அவளை வேண்டிக் கேட்க அவளும்  ஷீலாவதியிடம் பேசி அவள் சாபத்தை விலக்கிக்  கொள்ள வைத்தாள். சூரியன்  உதித்ததும் இறந்து போன அவள் கணவனை தனது தப வலிமையினால் மீண்டும் உயிர்  பிழைக்க வைத்தாள்.
மும்மூர்த்திகளின் திருவிளையாடல் 
இப்படிப்பட்ட  சக்தி வாய்ந்த அனுசூயா மீது மும்மூர்த்திகளின் மனைவிகளும் பொறாமை  கொண்டார்கள். அவர் கற்பை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக தமது  கணவன்மார்களை கட்டாயப்படுத்தி  மாறு வேடத்தில் முனிவர்கள்  உருவில் சென்று  அவளிடம் பசிக்கு உணவு போடுமாறு கேட்க வைத்தார்கள். அவளும் வந்துள்ள  முனிவர்களுக்கு உணவு சமைத்தாள். உணவை பரிமாற்ற வந்தவளிடம்   அவர்கள்  அவளிடம் ஒரு வினோத கோரிக்கையை வைத்தார்கள். அவள் உடலில் துளிக் கூட ஆடை  இல்லாமல்    உணவு  பறிமாறினால் மட்டுமே சாப்பிடுவோம் எனக் கூறினார்கள்.  வந்துள்ளவர்களோ முனிவர்கள்.  அவர்களை பசியோடு அனுப்புவது பாவம்.  பசியோடு  சென்றால்,  அதனால்  அவர்கள் சாபம் தந்துவிட்டால் என்ன செய்வது? ஆனால்  அனுசூயா கவலையேபடவில்லை. தனது கற்பை நம்பினாள். தான் தனது கணவனுக்கு  துரோகம் செய்ய விரும்பவில்லை. ஆகவே அவர்தான் இதற்கு ஒரு வழிகாட்ட வேண்டும்  என நினைத்தாள். தனது கணவனை மனதில் நினைத்து வேண்டினாள். அடுத்த நிமிடமே  முமூர்த்திகளும் பிறந்த குழந்தைகளாகி விட்டார்கள்.   அந்தக் குழந்தைகளை  வாரி எடுத்து தனது மார்பில்  இருந்து பாலூட்டினாள்.  அவள் கணவர் திரும்பி  வந்தார். நடந்ததைக் கேட்டு அறிந்தார். தனது ஞான திருஷ்டியினால் நடக்கபோவதை  அறிந்து கொண்டார். குழந்தைகள் அவளிடம் கொஞ்சி  விளையாடின. 
அனுசூயாவை  சோதிக்கச் சென்ற தமது  கணவன்மார்கள் திரும்பி வராததைக் கண்டு பயந்து போன  மும்மூர்த்திகளின் மனைவிகள் நாரதர் மூலம் நடந்ததை அறிந்து கொண்டு  அனுசூயாவிடம் சென்று மன்னிப்புக் கோரி தமது கணவர்களை திருப்பித் தருமாறு  கேட்டார்கள். அவளும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு  அவள் கணவர்களை  மீண்டும் பழைய நிலைக்கு ஆளாக்க தன் கணவனை வேண்டினாள். குழந்தைகள் மறைந்தன.  மும்மூர்த்திகளும்  தமது உண்மையான ரூபத்தை அனுசூயா- அத்ரி முனிவர்  தம்பதிகளுக்குக் காட்டி இன்னும் சில நாட்களிலேயே விஷ்ணுவானவர் அவர்களுக்கு  மகனாகப் பிறப்பார் எனவும், பிறக்க உள்ள  குழந்தை மும்மூர்த்திகளின்  அவதாரமாக, அவர்கள் சக்தியை உள்ளடக்கி  தத்தாத்திரேயர் என்ற அவதூதராக  பிறந்து பூமியில் உள்ள அவல நிலையை ஒழிப்பார் என  உறுதி தந்துவிட்டு அவர்களை  ஆசிர்வத்தப் பின்னர்  திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கூறியபடியே அனுசூயா  சில காலத்தில் கர்பமுற்று ஒரு குழந்தைக்கு தாயானாள். அவளுக்குப் பிறந்தக்  குழந்தையே மனித உருவில் மும்மூர்த்திகளின் அவதாரமாக பூமிக்கு  தத்தாத்திரேயராக வந்த விஷ்ணு பகவான் ஆவார்.
விஷ்ணு ஏன் தத்தாத்திரேயராக அவதரித்தார்?
விஷ்ணு  பகவான் அப்படி பிறந்ததற்கும்  ஒரு காரணம் உண்டு. அது என்ன?  கால   காலத்துக்கு முன்னர் கஷ்யபு என்ற அசுரர்களின் மன்னன் ஒருவன் இருந்தான்.  அவன் மரணம் அடைந்ததும் அவனுடைய மகன்  அரசன் ஆனான். அப்போது அந்த  அசுரர்களுக்கும்  தேவர்களுக்கும்  போர் நடந்தது.  பல ஆண்டுகள் நடந்த அந்தப்  போரில் கஷ்யபுவின் மகன் இறந்து விட்டான். அந்தப் போரில் இந்திரனும்  தேவர்கள் சார்பில் கலந்து கொண்டு இருந்தார்.  அதே நேரத்தில்  சுக்ரா எனும்  முனிவர் அசுரர்களுக்கு உதவி வந்தார். அசுரர்கள் தோற்று  ஓடிக் கொண்டு  இருந்ததைக் கண்ட சுக்ரா முனிவர்  அசுரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  இமயமலைக்குச் சென்று சிவபெருமானை துதித்து வேண்டியவாறு தவம் இருந்தார்.  ஆகவே சுக்ரா முனிவரின் தவத்தைக் கலைக்க முடியாமல் போன  தேவர்களின் சார்பில்  மகாவிஷ்ணு சுக்ரா முனிவரின் தவத்தைக் கலைக்க வேறு வழி இன்றி அவருடைய  தாயாரைக் கொன்று விட்டார். அவள் போட்ட கதறலில் இன்னொரு இடத்தில் தவத்தில்  இருந்த பிருகு முனிவர் கண் விழித்தார். கண் விழித்த முனிவரினால் ஒரு  வலிமையற்ற பெண்ணை விஷ்ணுவானவர்  கொன்றதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.  என்ன  இருந்தாலும் மற்றொரு முனிவரின் தாயாரை கொள்வதை அவரால் எப்படி ஏற்றுக்  கொள்ள முடியும்? ஆகவே ஒரு முனிவரின் தவத்தைக் கலைக்க  அவர் தாயாரைக் கொன்ற  பாவத்திற்காக விஷ்ணு பல ஜென்மங்களில் தமது தெய்வீகத்தை இழந்து பூமியில் ஒரு  ஆண்  மகனாகப் பிறந்து தனது தோஷத்தைக் களைந்து கொள்ள வேண்டும் என  சாபமிட்டார். அதனால்தான் இந்த ஜென்மத்தில் அவர் தத்தாத்திரேயராக பிறக்க  வேண்டி இருந்தது.   மும்மூர்த்திகளின் அவதாரமே தத்தாத்திரேயேர் என்றாலும்  அவதூதப் பிறவியான மானிட ரூபத்தில்தான் அவர் வரவேண்டி இருந்தது.
தத்தாத்திரேயரின் குணாதிசயங்கள் 
பிறந்தக்  குழந்தையான தத்தாத்திரேயர் சாதாரணக் குழந்தையாக வளரவில்லை.  அவர் போக்கே  விசித்திரமாக இருந்தது. யாருடனும் அதிகம் பேசமாட்டார். வயது ஆக ஆக அவர்  போக்கே முற்றிலும் மாறியது. ஆனால் அவை எதுவுமே உண்மை அல்ல. அவர் வெளித்  தோற்றம் வேறு. உள்ளே ஆத்மா வேறாக இருந்தது. அவர் மனித உருவில் தோன்றி  இருந்த தெய்வம் அல்லவா.  காலம் ஓடியது. தத்தாத்திரேயர் மாபெரும் யோகா  புருஷராக இருந்தார். வீட்டை விட்டு  வெளியேறி  சுதந்திரமாக சுற்றித்  திரிவார். மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் சென்று அமர்ந்து கண்களை  மூடியபடி இருப்பார். அவரை சுற்றி எப்போதுமே பெரும் ஒளிவெள்ளம் இருந்தது.  அவரைக் கண்ட ரிஷி முனிவர்கள் அவர் சாதாரண பிறவி அல்ல என்பதை புரிந்து  கொண்டார்கள்.  மாபெரும் யோகி, ஞானி, அவதூதர் என அவரை பலரும் பலவிதமாக  போற்றித் துதிக்கலாயினர்.  காரணம் வேதங்கள் அவருக்கு அத்துப்படி. அவர் உலக  நன்மையை கருத்தில் கொண்டே அவதூதராக அவதரித்து இருந்தார் என்பது  மும்மூர்த்திகளைத்  தவிர வேறு யாருக்கும் தெரியாது.  ஆனால் அவர்  நடத்தைகளைக் கண்டு அவர்  மிகப் பெரிய யோக புருஷர் என்பதை உணர்ந்து கொண்ட  ரிஷியும் முனிவர்களும் அவரிடம் சிஷ்யர்களாகத் துடித்தார்கள். 
தத்தாத்திரேயரோ  வந்தவர் அனைவரையுமே சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டது  இல்லை. பால்ய லீலைகளாக  அவர் செய்து காட்டியவை ஏராளம், ஏராளம் உண்டு. அவர் செய்த யோகா சாதனைகள்   ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த முனிவர்களினாளும் கூட நினைத்தும்  பார்க்க முடியாதவை. வெளிப் பார்வைக்கு ஒழுங்கற்ற வாழ்கையைக் கொண்டவர் போலத்  தோற்றம் தருவார். வேண்டும் என்றே இறைச்சிகளை வாயில் கடித்து உண்டவாறு  அலங்கோலமாக இருப்பார், அரைகுறை ஆடைகளுடன்  காட்சியளிப்பார், மது  மற்றும்  கள்ளை குடித்தபடியும், விலை மாதர்களுடன் சல்லாபித்தபடியும் தோற்றம்  தருவார். ஆனால் அவற்றை எல்லாம் பார்த்த ரிஷி முனிவர்கள் அவை நிஜமல்ல, கானல்  நீர்தான். தத்தாத்திரேயர் வேண்டும் என்றே நம் மனத்தைக் கலைக்க அப்படி ஒரு  கபட நாடகம் ஆடுகின்றார் என்று எண்ணிக் கொண்டு அவர் எத்தனை விரச காட்சியில்  தோன்றினாலும் அவரை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவருடன்  இருந்தார்கள். அடச் சீ...என்ன  ஈனத்தனமான  மனிதர் இவர் என வெறுத்து ஓடி  விட்ட ரிஷி முனிவர்களும் உண்டு. பாவம் அவர்கள். ரிஷி முனிவர்களாக இருந்து  என்ன பயன்....உண்மையை புரிந்து கொள்ளவில்லையே. பரப்பிரும்மமான  தத்தாத்திரேயருக்கு மற்றவர்களை அப்படியெல்லாம் சோதனை செய்வதில் அலாதியான  ஆனந்தம் உண்டு. 
''ஓ....தத்தாத்திரேயா, அவதார புருஷா, உலகைப்  படைத்துக் காத்து தீய சக்திகளை அழிக்க வந்த முமூர்த்திகளின் அவதாரமானவரே,  பரப்பிரும்மமே, உனக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. வேறு எந்த தடையும்  இல்லை. வெவ்வேறு ரூபங்களில் உன் ஜோதியைக் கலந்து ரூபங்களை எடுக்கிறாய்.  இந்த உலகத்தை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு எடுத்துச் செல்ல அத்ரி  முனிவர் - அனுசூயா தம்பதியினரின் அவதார புருஷனாகப் பிறந்தவரே, உன் பெயரை  உச்சரித்தால் மட்டுமே போதும். பாபங்கள் விலகும், தீமைகள் அழியும். நீயே  மூவுலகத்துக்கும் அதிபதி...தூயவனும் நீயே...உன்னை நாங்கள் அனுதினமும் மனம்  வற்றும்வரை துதித்துக் கொண்டே இருக்க எங்களுக்கு சக்தி கொடு'' என அவரை  வேண்டித் துதித்தார்கள்.
தத்தாத்திரேயர் எதிலும் பற்றில்லாமல்  திரிவார். அதனால் அவர் மனது எந்த விதத்திலும் களங்கம் அடைந்தது இல்லை. ஜடத்  தன்மையுடன் வெளியில் தெரியும் உடலுக்கும் உள்ளிருக்கும் புனித  ஆத்மாவிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பார். அவர் எந்த நேரத்தில்  எங்கு இருப்பார், எங்கு போவார் என எவருக்கும் புரியாத, தெரியாத புதிர்  அவர். ஒருமுறைப் பார்த்தால் பிச்சைக்காரனைப் போல துணி உடுத்தி அரைகுறை  ஆடைகள் அணிந்துகொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிவார். நான்கு நாய்கள்  பின் தொடர, பசு மாடு பின்னால் நின்று கொண்டு இருக்க அப்படியும் காட்சி  தருவார். இன்னொரு சமயத்திலோ ஏரிகளிலும், குளங்களிலும் முழ்கி நின்றும்,  சுடுகாடுகளில் உருண்டு புரண்டு கிடந்தும் நாட்கணக்கில் ஏகாந்தத்தை  அனுபவித்தபடி இருப்பார். ஏரிகளில் முழ்கி பலமணி நேரம் அப்படியே கிடப்பது  அவரது வாழ்கையில் சர்வ சாதாரணம். இப்படியாக அவரது வாழ்கை பல நூற்றாண்டு  காலம் தொடர்ந்தது. 
அவர் உலகிலேயே மிகப் பெரிய அவதாரம் என்றாலும்  மனித உருவில் அவதாரம் எடுத்து இருந்ததினால் ஒரு துறவி போலவே அவதூதராகவே  வாழ்ந்து கொண்டு இருந்தார் மும் மூர்த்திகளை ஒன்றடக்கி இருந்த அந்த  அவதூதர். பல்வேறு இடங்களுக்கும் சென்று அலைந்து கொண்டு இருந்தாலும்  அவருக்கு பிடித்த இடம் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதே. உடல்  முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும், புலித்தோலை உடைப் போல உடுத்திக்  கொண்டும் இருப்பார். அமைதியான ஆனால் ஜொலிக்கும் முகத்தையும் கொண்டவர் அவர்.  
தத்தாத்திரேய  காட்சியின் தத்துவம் 
தத்தாத்திரேயர் தன்னுடன் வைத்துக் கொண்டு உள்ள சில பொருட்களின் சிறப்பை எப்படி எனக் கூறுவது? 
- கேட்ட அனைத்தையும் தந்தபடி உலகையும் தர்மத்தையும் காப்பதை குறிக்கும் விதத்தில் காமதேனுப் பசு.
 - ஆன்மீகத்தின் மூல நூல்களான நான்கு வேதங்களும் என் காலடில்தான் என்பதைக் குறிக்கும் விதத்தில் நான்கு நாய்கள்.
 - தான் என்ற அகந்தையை அழிப்பதைக் குறிக்கும் திரிசூலம்.
 - அறியாமையை அழித்து ஒருவனுடைய மனசாட்சியை தட்டி எழுப்புவதைக் குறிக்க கையில் குடுகுடுப்பை.
 - முக்காலத்தையும் கடந்து நிற்பவர். அனைத்து காலத்தையும் இயக்குபவர் மற்றும் ஆரம்பமும் முடிவும் அட்ட்றவர் என்பதைக் காட்டும் சுதர்சன சக்கரம்.
 - ஆத்மாவை, மனசாட்சியை தட்டி எழுப்ப சங்கு.
 - வைராக்யத்தையும் , பிறந்த எதற்கும் அழிவு நிச்சயம் என்பதைக் காட்டும் வீபுதி.
 - நமக்கு உள்ளத்தில் எதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் பிட்ஷைப் பாத்திரம்.
 -  எப்போதுமே பகவானின் நாமத்தையே ஜெபித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க ஜெபமாலை.  
 
இப்படிப்பட்ட ரூபங்களைக் கொண்டவர் யுகயுகமாக பல்வேறு ரூபங்களை எடுத்துக்  கொண்டு அனைவரையும் ரட்சித்து வருகிறார். பூமியிலே என்றெல்லாம் அதர்மம்  தோன்றுகிறதோ, தர்மம் உருக் குலைந்து போகத் துவங்குகிறதோ அப்போதெல்லாம்  தெய்வீக அவதாரங்கள் தோன்றி உலகை காப்பாற்றுகின்றன. இதைதான் கண்ணபிரான்  அர்ஜுனனுக்கு உபதேசித்து இப்படியாகக் கூறினார்:-''யதாயதாஹி தர்மஸ்ய  கிலானிர்பவதி பர்தா, அப்யுத்தானம் தர்மஸ்ய ததாத்மான் சுருஜான்மயஹம்  பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனாத்யாய சம்பவாமி  யுகே யுகே''. அதனால்தான் பூமியிலே துயரங்களை துடைத்து மனித மேம்பாடு நிலவ  தத்தாத்ரேயர்  என்ற உருவிலே மும்மூர்த்திகள் அவதரித்தனர். 
தத்தாத்திரேயர் யார்?  யதுகுல  மன்னனின் சந்தேகம் 
இப்படிப்பட்ட  சின்னங்களைக் கொண்ட தத்தாத்திரேயர் தான் யார் என்பது குறித்து யதுகுல  மன்னன் ஒருவனுக்கு தத்தாத்திரேயரே விளக்கியதாக கூறப்படும் கதை இது:
குழந்தைப்  பருவத்தைக் கடந்து வாலிப வயதை எட்டிய தத்தாத்திரேயர் வீட்டை விட்டு  வெளியேறி சுதந்திரமாக காடுகள், மலைகள், என அங்கும் இங்கும் சென்றவாறு  இருந்தார்.  பார்பதற்கே விசித்திரமாகவும் அருவருப்பாகவும், ஒழுக்கமற்றவர்  போலவும் இருந்த அவர் பல நேரங்களில் நிர்வாணமாகவும் காட்சி தந்தார். தன்னை  நாடி வருபவர்கள்  இந்த உலகமே மாயை என்பதை புரிந்து கொண்டுள்ளார்களா என்பதை  நன்கு சோதித்துப் பார்த்தப் பின்னரே தன்னிடம் அவர்களை ஆண்ட விட்டார்.   இப்படியாக அவர் வாழ்ந்து கொண்டு இருந்த இடம் யதுகுல மன்னன் ஒருவன்  ஆட்சியில் இருந்தது.  அந்த மன்னன் பல நேரங்களில் மாறுவேடம் அணிந்து கொண்டு  நகரில் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து நாட்டின் நிலைமையை கண்காணித்துக்  கொண்டு வந்தான். அப்படிப்பட்ட நிலையில்தான் ஒரு நாள் பிச்சைக்காரனைப் போல  வேடமணிந்து திரிந்து கொண்டு இருந்த தத்தாத்திரேயரைப் பார்த்தான். அவனுக்கு  அப்போது தத்தாத்திரேயர் யார் என்பது தெரியாது. 
கவலை இன்றி அந்த  பிச்சைக்காரன் தன்பாட்டிற்கு ஒரு பாடலைப் பாடியவாறு சுற்றி திரிந்து  கொண்டு இருந்த தத்தாத்திரேயரைக் கண்ட மன்னன்  மனதில் ஒரு சந்தேகம்  எழுந்தது. அதற்கு முன்னரும் அவன் பலமுறை தத்தாத்திரேயரை அதே தோற்றத்தில் பல  இடங்களிலும் சுற்றித் திரிந்து கொண்டு இருந்ததைக் கண்டு உள்ளான்.  ஆனால்  அத்தனை முறையும் அவர் பிச்சைக்காரராக இருந்தாலும் அவர் முகம் ஒரு  தேஜஸ்சுடன் இருப்பதைக் கண்டான். ஆகவே இன்றும் அவரைக் கண்ட மன்னன்  யோசனை  செய்யலானான்.  அந்த மன்னனும் மெத்த பாண்டித்தியம் கற்றவன். அனைத்து  சாஸ்திரங்களையும் அறிந்தவன் என்பதினால் அவனால்  நாட்டு மக்களின் நிலையை  நன்கு அடையாளம் கண்டு கொள்ள முடியும்.  அதனால்தான் அந்த மன்னனுக்கு  சந்தேகம் எழுந்தது. இத்தனை தேஜஸ்சான முகத்துடன் உள்ள இவன் பிச்சைக்காரனாக  இருக்க முடியுமா? முகத்திலோ கவலைக் கோடுகள் எதுவுமே இல்லை. எதோ தான்தான்  இந்த ராஜ்யத்தை ஆண்டு வருபவன் போல அல்லவா கவலை இன்றி கம்பீரமாக சுற்றி  அலைந்து கொண்டு இருக்கின்றான்.  இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டு வரும்  தனக்கு அடியாட்களும்,  சம்பத்துக்களும் அளவில்லாமல் நிறைந்து கிடக்கின்றன.  ஆனாலும் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தும் தனக்கே மனதில் நிம்மதி  இல்லை. ஒன்றும் அற்ற அனாதைப் பிச்சைக்காரன் இவனால் எப்படி முகத்தில் கவலைக்  கோடே இல்லாமல் சுற்றி அலைய  முடிகின்றது.?  விடை கிடைக்கவில்லை. 
ஆகவே  சில நாட்கள் அந்த பிச்சைக்காரன் சென்ற இடங்கள் அனைத்துக்கும் அவனைத்  தொடர்ந்து அந்த மன்னன் செல்லலானான். அவன் செய்து கொண்டு சென்ற சேஷ்டைகள்  அளவில்லாமலும், ஆச்சர்யம் தருவதாகவும் இருந்தது.  ஆனாலும் அந்த  பிச்சைக்காரனைப்  பற்றி அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதினாலும்   அவன்  நிச்சயமாக பிச்சைக்காரனாக இருக்க முடியாது  என்ற தீவீரமான எண்ணமும்  சேர்ந்து கொண்டது.  மனதில் ஆவல் அதிகரிக்க அந்த பிச்சைக்காரனிடமே சென்று  அவன் யார் என்று கேட்டு விடலாம் என நினைத்தபடி அவரிடம் சென்றான்.  ஒரு  தனியான இடத்தில் பிச்சைக்காரன் உருவில் நின்று கொண்டு இருந்த  தத்தாத்திரேயரிடம் சென்று அவன் கேட்டான் ' ஐயா, உங்களைப் பார்த்தால் ஒரு  பிச்சைக்காரனைப் போல தெரியவில்லை.  முகத்தில் அதி தேஜஸ் தெரியும்  நீங்கள்  நிச்சயமாக பிச்சைக்காரனாக இருக்க முடியாது. ஒரு சந்நியாசி அல்லது மாபெரும்  முனிவராகவேதான் நீங்கள் இருக்க வேண்டும் என மனம் நினைக்கின்றது. ஆகவே  உண்மையிலேயே நீங்கள் யார் என்பதைக் கூறுவீர்களா' எனப் பணிவோடு கேட்டான்.  பிச்சைக்கார உருவில் இருந்த தத்தாத்திரேயர் '' மன்னா, காடுகளிலும்,  மேடுகளிலும் மலைப்பிரதேசத்திலும், தெருவிலும் சுற்றி அலையும் பிச்சைக்கார  பரதேசி எனக்கும் மதிப்பு மிக்க சாது சந்நியாசி மற்றும் முனிவர்களுக்கும்  என்ன அப்பா சம்மந்தம் இருக்க முடியும்? இந்த சாதாரண தெருப் பிச்சைக்காரனை  அவர்களுடன் ஏன் ஒப்பிடுகிறாய்?''  
அதைக் கேட்ட மன்னனின் சந்தேகம் மேலும் வலுத்தது. பிச்சைக்காரன்  என்று கூறிக் கொள்ளும் இவர் மன்னன் என்னைக் கண்டு பயப்படவும் இல்லை, என்னை  வணங்கவும் இல்லை.  எதோ ஒரு நண்பனுடன் பேசுவது போல அல்லவா பேசுகிறார்.  ..........இவர்  நிச்சயமாக பிச்சைக்காரராக இருக்க முடியாது. ஏன் எனில் எவர்  பதில் கூறும்போதுக் கூட அலட்சியமாக அல்லவா கூறுகிறார்.  இவர்  தன்னைப்  பற்றி எதையோ மறைக்கின்றார் என எண்ணிய  மன்னன் மீண்டும் அவரிடம் கேட்டார்    '' இல்லை ஐயா, நீங்கள் உங்களைப் பற்றி எதையோ மறைக்கின்றீர்கள் என்றே என்  மனம் கூறுகின்றது. தயவு செய்து உண்மையாகவே நீங்கள் யார் என்பதை எனக்குக்  கூறுவீர்களா?. என் ஐயத்திற்கு விடை தாருங்கள் ஐயா'' எனக் கேட்டார்.    தத்தர் முகத்தில் அதைக் கேட்டு எந்த சலனமும் ஏற்படவில்லை. '' அப்பனே, உன்  ஐயத்துக்கு நான் என்ன விளக்கம் தர முடியும். நீயோ இந்த நாட்டையே ஆளுகின்ற  மன்னன். உனக்குத் தெரியாத விஷயம் என்ன அப்பனே இருக்க முடியும்?'' என்று  கூறினார். 
மன்னன் மனதில் தீர்மானமாக எண்ணினார், இவர் நிச்சயமாக  பிச்சைக்காரர் இல்லை. ஏதோ வேஷம் போடுகிறார். தான் யார் என்ன்பதைக் காட்டிக்  கொள்ள விரும்பவில்லை. ஆகவே எவர் ஒரு பெரிய யோகா புருஷராகவே இருக்க  வேண்டும். காரணம் இவர் முகத்தில் அகம்பாவம் தெரியவில்லை. ஆணவமும் இல்லை.  ஆனால் தானே உண்மை என்ற உணர்வு உள்ளது. அன்பு ஒழுக அச்சம் இன்றி, அதே  நேரத்தில் அடக்கமாக தன்னை மறைத்துக் கொள்ளும் விதத்தில் பதில் தருகிறார் என  எண்ணியவாரே மீண்டும் பவ்வியமாக கேட்டார் '' சுவாமி என்னைப் போன்ற  அரசர்களிடம் இல்லாதது எதுவும் இல்லை. அது உண்மை. இத்தனை  பெரிய தேசத்தையும்  ஆட்சி செய்கின்றேன். நான் இட்ட பணியை செய்ய ஆயிரம்பேர் காத்து  இருக்கின்றார்கள். இத்தனை சுகபோகங்கள் இருந்தும்  மனதில் அமைதி இன்றி  சாதுக்களையும், சன்யாசிகளையும் நாடிப் போய் மன அமைதிக்கு வழி கேட்கின்றோம்.  ஆனால் நீங்களோ  அச்சமும் இன்றி, ஆசைகளும் இன்றி உலகப் பற்றும் இன்றி  எப்படி ஐயா இப்படி சுற்றித் திரிகின்றீர்கள்?  தயவு செய்து என் வணக்கங்களை  ஏற்றுக் கொண்டு பிச்சைக்கார வேடத்தில் உள்ள  நீங்கள் யார் என்பதை தயவு  செய்து தெரியப்படுத்துங்கள். . எதுவே என் பிரார்த்தனை''  என மன்னன்  கேட்டான் . 
இந்த மன்னன் ஒழுக்கம் நிறைந்தவன். சாது சன்யாசிகளை  மதித்து நடப்பவன். நாணயமானவன். ஆகவே இவனை பரிட்ஷை  செய்தது போதும் என  எண்ணிய தத்தாத்திரேயர் அவனிடம் ''சரி அதோ அந்த ஒதுக்குப்புறமான இடத்தில்  சென்று அமர்ந்து கொண்டு அனைத்தையும் பேசுவோம்'' எனக் கூறியப் பின் அந்த  மன்னனை ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு  அழைத்துச் சென்று அவருடன் அமர்ந்து  கொண்டு கூறலானார்.
'' மன்னா, நான் கூறுவது அனைத்தையும் பொறுமையுடன்  கேள். அனைத்து சுக போகங்களும் உன்னை சூழ்ந்து உள்ளதாகக்  கூறினாயே , அவை  அனைத்துமே மாயைதான்.  உன்னிடம் ஜடமாக உள்ள வெளியுலகப் பொருட்களை வைத்துக்  கொண்டு என்னுடன் ஏன் சம்மந்தப்படுத்திக் கொள்கின்றாய்?. உன்னிடம் உள்ள  அந்த ஜடப் பொருட்கள் என்னிடமும் இருந்தால் என்னால் அவற்றுக்குப் பெருமையே  தவிர அதனால் எனக்குப் பெருமை கிடையாது.  அதனால்தான் மன மகிழ்ச்சியோடு  என்னால் சுற்றித் திரிய முடிகின்றது.  நான் யார் என்பதை அறிந்து கொள்ள  ஆர்வமாக இருக்கின்றாய் அல்லவா....இப்போது முழு கவனத்துடன் நான் கூறுவதைக்  கேள். அதன் பின் நான் யார் என்பதை நீயே புரிந்து கொள்வாய்'' என்று கூறிய  தத்தரை நிமிர்ந்து பார்த்தான் மன்னன்.
அடடா....எத்தனை பெரிய  தத்துவத்தை இத்தனை சாதாரணமாகக் கூறி விட்டார் இவர் என எண்ணிய மன்னனுக்கு  தன் மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.  தத்தாத்திரேயர்  அமைதியாகத் தொடர்ந்தார் '' மன்னா,  இந்த உலகைப் படைத்த பரமாத்மன் பல்வேறு  குணங்களைக் கொண்ட பல ஜீவராசிகளையும் படைத்து விட்டான். ஒற்றைக்கால் ஜீவன்  முதல்  பல கைகால்கள் கொண்ட ஜீவன் என எத்தனை உருவங்களைப் படைத்து  விட்டான்.  ஆனால் என்ன அற்புதம் பார். அத்தனை ஜீவன்களிலும் இல்லாத அந்தராத்த்மா  என்பதை மனிதர்களுள் மட்டும் அல்லவா வைத்துவிட்டான். அதனால்தான்  தியானிப்பதின் மூலம் மனிதர்களால் அவர்களுக்கு உள்ளேயே உள்ள ஆத்மாவை அறிந்து  கொள்ள முடிகின்றது. அதைப்  புரிந்து கொள்ள முடியாத உன்னைப் போன்றவர்கள்   ஞானிகள் , சன்யாசிகள் என பலரையும் தேடிப் போய் அதை புரிந்து கொள்ள வழி  கேட்கிறார்கள்''. 
உள்ளுக்குள்ளே உள்ள அந்தராத்மாவும் அதை இயக்கும்   சக்தியான எண்ணங்களைத் தவிர மற்ற அனைத்துமே ஜடப் பொருளாக, சதைப் பிண்டமாக,  தசைகளுடன் கூடிய ஒரு உடலுடன் கூடிய தோற்றத்தை அல்லவா தந்தபடி உள்ளன.  நீ  கூறியபடியே அந்த உடல் படும் வேதனையையும் இல்லாத ஒன்றை தேடி இடம் இடமாக  அலையும் மூடத்தனத்தையும் எண்ணிப் பார்.  உன்னைப் போன்றவர்கள் உடல் சாது  சஞாசிகளைப் போன்ற  பல உடல்களை தேடியல்லவா அலைகின்றது.  மனைவி, குழந்தை,  சந்ததிகள், சந்தானங்கள், சேவகர்கள் என அனைத்தும் உள்ளபோதும் போதும் அது  போதும் என்ற மனம் வரவில்லையே. அதை மீறி இன்னமும் வேண்டும் என ஏங்கி, ஏங்கி  அலைவது ஏன்? பற்று....இந்த உலகப் பொருட்களில் வைத்து விட்ட பற்று......  அளவற்ற  ஆசை.... ஒவ்வொருவனுக்கும்  ஆழ்ந்து யோசிக்கும் திறமை இருந்தும்  அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க அவன் மனம் மறுப்பது ஏன்? இந்த உடலே ஒரு  மாயை. இதற்கு அழிவு நிச்சயம் எனும்போது இருப்பதைக் கொண்டு திருப்தி  அடையாமல் இல்லாத ஒன்றை ஏன் தேடி அலைந்து நிம்மதியை இழக்க வேண்டும்?. அதை  ஒரு கணம் யாராவது நினைத்துப் பார்கின்றார்களா?'' 
தத்தர்   தொடர்ந்தார் '' சாதாரண துறவியான நான் யார் என்பதை தெரிந்து கொள்ள  முயல்வதைவிட எனக்கு போதனை செய்த குருமார்கள் யார் என்பதை முதலில் தெரிந்து  கொள். எனக்கு குருமார்கள் இருபத்தி நான்குபேர்கள்''. ...இப்படியாக விட்டு  விட்டு தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்த தத்தாத்திரேயர் சொல்வதை தன்னை  மறந்து கேட்டுக் கொண்டு இருந்த மன்னன் அவருக்கு இணையாக தான் அமர்வதா என  எண்ணியவாறு மெல்ல எழுந்து அவர் காலடியில் சென்று அமர்ந்து கொண்டு அவர்  கூறுவதை மேலும் கேட்கலானார். தன்னுடைய மனம் முழு அமைதி அடைந்து கொள்வது போல  உணர்ந்தார். 
தத்தாத்திரேயரின் குருமார்கள் 
'எனக்கு  இருபத்தி நான்கு குருமார்கள் உள்ளனர். என் குருமார்கள் பூமி, தண்ணீர்,  நெருப்பு, காற்று, சிலந்தி , பிங்களை என்ற வேசி, சந்திரன், சூரியன்,  ஆகாயம், கடல், நுரை, மலைப்பாம்பு, புறா, மீன், மான், யானை, குழந்தை, தேனி,  விட்டில் பூச்சி, தேன் சேகரிப்பவன், சிறு  பறவை, அம்பு செய்பவன், பாம்பு,  புழு, சிறுமி போன்றவர்களே. 
பொறுமை என்பது என்ன என்பதை பூமித் தாயே  எனக்குக் காட்டினாள். தன்  மீது ஏறி நின்றபடி, தன் உடலை சிதைத்தாலும், தன்  மீது ஏறி நின்று காறித் துப்பினாலும் இன்னமும் என்னதான் செய்தாலும் அவற்றை  எல்லாம் பொறுத்துக் கொண்டு மனம் தளராமல்  தன் மீதே வாழ்ந்து கொண்டு  இருக்கும் அந்த மக்களை பூமித் தாய் பொறுமையைக் கடைப்பிடித்து காத்து வருவது  எத்தனை பெரிய தியாகம்.
இயற்கையான தண்ணீர் இனிமையானது மட்டும் அல்ல,  மிகவும் தூய்மையானதும்தான். அழுக்குகளை நீரில் போட்டால் சற்று நேரத்திலேயே  அவற்றை தள்ளி வைத்துவிட்டு அல்லது தனது காலடியில் தள்ளி வைத்து விட்டு  மீண்டும் அது தூய்மையாகி விடுகின்றது. அது போலத்தான் நாமும் அசுத்தமான  மனதுடையவர் நம்மிடம் வந்தால் நம் மனதை தூய்மையாகவே வைத்துக் கொண்டு  அவர்களை தூய்மைப்படுத்த முயல வேண்டும்.
எந்தப் பொருளையும்  நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பு அவற்றை முழுங்கி விடுவதைப் போல  போட்டவை அனைத்தையும் அழித்து விடும். தூய்மைபடுத்தி விடும். பஸ்மம் கூட  பசுவின் சாணத்தை எரித்தே செய்கிறார்கள். ஆனால் தன்னுள் போடப்பட்ட  சாணத்தினால் அந்த நெருப்பு மாசுப்படுவது இல்லை. நெருப்பில் போடப்படும்  பொருளின் தன்மையைக்  கொண்டே  அதன் ஜுவாலை  பெரியதாகவும், சிறியதாகவும்  இருக்கும். அது போலத்தான் ஒரு யோகியும் தன்னிடம் வருபவர்களின் பாவத்தைக்  களைந்து அதே நேரத்தில் தன்னையும் மாசுப்படுத்திக் கொள்ளாமல் நெருப்பை போல  இருக்க வேண்டும்.
அனைவரும் உயிர் வாழத் தேவையான பிராண வாயுவை  தந்தபடியும் அதே நேரத்தில் தன்னையும் மாசுப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே  காற்று. காற்றை இங்கு போ, அங்கு போ என்று கூற முடியாது. மலர்கள் தரும்  மணத்தையும் , வேறு பல மணங்களையும்  தன் மீது சுமந்து கொண்டு அது  சென்றாலும் சற்று நேரத்திலேயே அவற்றை விளக்கி வைத்துவிட்டு பட்டற்ற  நிலைக்கு சென்றுவிடும். அது போலத்தான் ஒரு யோகியும் சுதந்திரமாக திரிந்து  அலைந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதை பாடமாக அதனிடம் இருந்து கற்றுக்  கொண்டேன். 
சிலந்தி தன் வாயில் இருந்தே நூலைப் போன்ற இழைகளை வெளியே  மெல்ல மெல்லத் தள்ளி, பெரிய வலையைப் பின்னி அதற்குள் தானும் இருந்து  விளையாடிய பின்  தானே அந்த இழைகளை விழுங்கி விடும். சிலந்தி எப்படி தான்  படைத்த இழைகளை தான் விழுங்கிவிடுகிறதோ அப்படித்தான் தான் போதித்ததை  தனக்குள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஞானம் எனக்கு சிலந்தியிடம்  இருந்து கிடைத்தது. 
முன் ஒரு சமயம் உடலை விற்றே வளமான வாழ்கையை  நடத்திக் கொண்டு வந்த பிங்களை என்ற வேசி பெண் ஒரு நாள் இரவு வெகு நேரம்  கண் விழித்து இருந்தும் எவரும் வரவில்லை என்பதைக் கண்டு மனம் சோர்ந்து  போனாள். காமம் தலைக்கேற அதனால் கண் அயர்ந்து தூங்கி விட்டாள். அலுப்பினால்  உறங்கி விட்டவள்  உள்ளத்தில் இருந்த காமம் என்றும் அல்லாமல் அன்று முதல்  மெல்ல மடியத் துவங்கியது. 'ஒன்றும் இல்லாத ஜடமான இந்த தசைகளையும்,  சதைகளையுமா காமக்காரர்களுக்கு இரையாக்கி என்னுடைய வாழ்க்கைக்குத்  தேவையானவற்றை பெற்று வந்தேன்?....சேச்சே..இது வரை சம்பாதித்தது போதும், இனி  இந்த உடலை விற்பது பாவச் செயல்' என்று அலுத்துக் கொண்டாள். மறுநாள் முதல்  அந்த தொழிலை முற்றிலும் விட்டுவிட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பினாள்.  இதயத்தில் பாரம் குறைந்து அமைதியாக இருப்பதைக் கண்டாள் . அது முதல் கடவுள்  பக்தி கொண்டு வாழ்ந்து வரலானாள். இது கற்றுத் தந்த பாடம் என்ன?  உள்ளமட்டும் போதும் என்ற அளவு திருப்பதிப்பட்டுக் கொண்டு அளவு கடந்து  வைத்து இருக்கும் ஆசைகளை துறந்து விடு. மனதுக்கு அமைதி கிடைக்கும் என்பதே.
இயற்கையின்  நியதியினால் சந்திரன் தேய்ந்து மீண்டும் வளர்கின்றது. வளர் பிறையிலும்,  தேய் பிறையிலும் சந்திரன்  அழிவது இல்லை. அதன் தோற்றம் மட்டுமே  மாறுபடுகின்றது. ஆகவே ஒரு யோகியும் உடலின் தோற்றம் எப்படி மாறுபட்டாலும்  அதற்குள் உள்ள ஆத்மா மாறுதல் அடைவது இல்லை என்பதை புரிந்து கொண்டு தன்னை  அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பாடம்.
அனைத்து உலகிலும்  தோன்றுவதும் சூரியனே. தன்னை சுற்றி ஓடிக்கொண்டு உள்ள பூமியில் இருந்து நீரை  மேலே  இழுத்து  அதை கிரகித்துக் கொண்டு இருந்தாலும் அதை தன்னுடனேயே  வைத்துக் கொண்டு விடாமல் தக்க சமயத்தில் அதை மீண்டும் நீராகவே மாற்றி மழை  என்ற பெயரில் பூமிக்கே திருப்பித் தருவதைப் போல யோகியும் நல்ல விஷயங்களை பல  இடங்களில் இருந்தும் கிரகித்துக் கொண்டு தன்னிடம் வந்து அடைக்கலம் ஆகும்  மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவைப்பட்ட போது அவற்றை போதனை செய்த வண்ணம்  இருக்க வேண்டும். 
ஆரம்பமும் முடிவும் தெரியாமல் உலகமெங்கும்  படர்ந்து விரிந்துள்ள ஆகாயம் தன் மீது தவழ்ந்து செல்லும் காற்றாலோ, மழை ,  இடிகளினாலோ எந்த காலத்திலும் தன் உருவை மாற்றிக் கொண்டது இல்லை.  அதுபோலத்தான் எந்த நிலையிலும் எதன் மீதும் பற்று கொண்டு விடாமல் நம்முடைய  ஆத்மாவையும்  பற்று இல்லாமல் வைத்து இருக்க வேண்டும் என்பதை இதன் மூலம்  உணர்ந்தேன். 
கடலின் ஆழம் எத்தனை என்பதோ அதற்குள் என்ன பொருட்கள்  உள்ளன என்பதோ அதில் முழுகி ஆராய்ந்து பார்த்தால் ஒழிய தெரியாது. கடலின்  அடியில் பாறைகளும், ரத்தினங்கும், ஜீவன்களும் உள்ளன. எத்தனை ஆறுகளும்,  நதிகளும் அதனுடன் வந்து கலந்தாலும், அதனுள் எந்தப் பொருளை வீசி எறிந்தாலும்  அதனால் தன்னை மாற்றிக் கொள்ளாமல் தன மீதே அந்தப் பொருட்களை மிதக்க  விட்டுக் கொண்டும், தன்  காலடியில் அதை தள்ளியும் வைத்து விடும். மிதப்பதை  மெல்ல மெல்ல கரையில் ஒதுக்கி விடும். அப்படித்தான் ஒரு யோகியும் இருக்க  வேண்டும். தன்னைப் பற்றிய உண்மையை வெளியில் காட்டிக் கொள்ளாமலும் மற்ற சுக  போகங்களில் தன்னை இழந்து விடாமலும் இருந்து கொண்டு தேவையற்றவைகளை விலக்கி   வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதையும் அதன் மூலம் தெரிந்து  கொண்டேன்.
மலைப்பாம்பு இறை தேடி இடம் இடமாக அலைவது இல்லை. தன்னிடம்  வந்து சிக்கும் பிராணிகளை விழுங்கி விட்டு பல நாட்கள் ஒன்றும்  சாப்பிப்டாமல் பட்டினியோடு படுத்துக் கிடக்கும். கிடைத்த இரையை சாப்பிடும்.  அது போலதான் கிடைத்ததை உண்டு கொண்டு ஆத்ம திருப்தியுடன் வாழ்ந்து கொண்டு  இருக்க வேண்டும் என்பது இது தந்த பாடம்.
ஒரு காட்டில் புறா ஒன்று  தான் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருந்தது.  குழந்தைகள் எழுப்பும் குரலில் மனம் லயித்து இருக்கும். ஒரு நாள் அந்த  புறாக் குஞ்சுகளை வேடன் ஒருவன் தன் வலையில் பிடித்து வைத்துக் கொண்டான்.  பெண்  புறாவோ அவற்றைக் காப்பாற்ற முடியாமல் அழுது புலம்பியது. அவற்றை  காப்பாற்ற முடியாவிடிலும் அவற்றுடன் சேர்ந்தே வாழலாம் என் எண்ணி தானும்  சென்று அந்த வலையில் சிக்கிக் கொண்டது. இறை தேடித் போன ஆண் புறா திரும்பி  வந்து தன் குடும்பத்தினர் படும் பாட்டைக் கண்டு வருந்தி தானும் அந்த வேடன்  வலையில் சிக்கி மடிந்தது. பிறப்பவன் என்றாவது ஒரு நாள் மடிந்தே ஆக வேண்டும்  என்றாலும் காமக்ரோதங்களுக்கும், பாசத்திற்கும் தன்னை முழுமையாக  அடிமையாக்கி வைத்துக் கொண்டு அதுதான் தன் வாழ்கை என்ற குறுகிய மூடத்தனமான  எண்ணத்துடன் இருந்து கொண்டு அதனால் அழிந்து விடக் கூடாது. பிறந்ததற்கான  காரணத்திற்கு நியாயம் கற்பித்த வண்ணம்  ஒருவனின் வாழ்கை அமைந்து இருக்க  வேண்டும் என்பதே இதன் பாடம்.
நீரில் கிடைக்கும் உணவு போதும் என்ற  அளவில் மனதை வைத்துக் கொள்ளாமல் தூண்டிலில் உள்ள இரையை எடுக்கப் போய்  மற்றவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளும் மீனைப் போன்ற நிலையில் யோகிகள்  இருக்கக் கூடாது. ஐம்புலன்களின் தடுமாற்றத்தின் முதல் காரணமே நாக்கின்  ருசி. நாக்கின் ருசியை அறவே ஒடுக்கி எறிய  வேண்டும் என்பதே யோகிகள் செய்ய  வேண்டிய முதல் கடமை என்பதை மீன் மூலம் அறிந்து கொண்டேன். 
ஒரு வகை  மான் இசைகளைக் கேட்டால் அதில் மயங்கி கண்களை மூடிக் கொண்டு நின்று விடும்.  அந்த சமயத்தில் வேடன்களிடம் அவை அகப்பட்டுக் கொள்ளும். யோகி எனப்பட்டவன்  எந்த நிலையிலும் ஒரு கீழ்த்தரமான இசையில் மனதை பரிகொடுத்துவ்ட்டு அதில்  தன்னை அடிமைப் படுத்திக் கொள்ளாமல் உறுதியான மனதுடன் இருக்க வேண்டும். 
பெண்ணாசை  மிகக் கொடியது. காட்டில் யானையைப் பிடிக்க வேடவர்கள் ஒரு பெரிய பள்ளத்தை  தோண்டி, அதன் மீது இலைகளையும் தழைகளையும் போட்டு மூடி வைத்துவிட்டு அதன்  மீது ஒரு பெண் யானையின் பொம்மையை வைத்து விடுவார்கள். அந்தப் பக்கமாக வரும்  ஆண் யானை அது நிஜ யானை என எண்ணிக் கொண்டு அதை அடைய நினைத்து ஓடி வந்து  அந்த பள்ளத்தில் விழுந்து விடும். அது மட்டும் அல்ல, தான் ஒரு பெண் யானை  மீது மையல் கொண்டு அதைப் பிடிக்க துரத்தும்போது வேறு ஒரு யானையும் அந்தப்  பெண் யானையை துரத்தி வந்தால் அதனுடன் போரிடத் துவங்கும். அந்தப் போரின்  முடிவில் ஏதாவது ஒரு ஆண் யானை மடிந்து விடும். அழிவும் பெண்ணால் வரும்  எனும்போது பெண் ஆசையை அடக்குவது அவசியம். ஆகவே ஒரு யோகி ஒரு பெண்ணைப்  பார்த்து மயங்குவது தற்கொலைக்கு சமம். 
கள்ளம் கபடம் அற்றது குழந்தை.  அதற்கு இன்பமோ துன்பமோ எதுவும் தெரியாது. அன்னையிடம் பால் பருகும்  அதற்குத் தேவை தன்னுடன் எவராவது இருக்க வேண்டும். தன்னுடன் விளையாடிக்  கொண்டு இருக்க வேண்டும் . அவ்வளவே. அதில்தான் அது இன்பத்தைக் காண்கின்றது.  கவலை அற்ற வாழ்கை அது. அப்படித்தான் ஒரு யோகியும் குழந்தைப் போல கவலை  இன்றி இருக்க வேண்டும். 
சுறுசுறுப்பிற்கு  பெயர் பெற்றது தேனி.  பல்வேறு இடங்களிலும் உள்ள மலர்களை சிதைக்காமல் அதனுள் உள்ள தேனை சிறிது  உண்டப் பின் மீதியை எடுத்து வந்து ஒரு இடத்தில் சேமித்து வைக்கும். அத்தனை  பாடுபட்டும், கஷ்டபட்டும் சேமித்து வைத்த தேனை புகை மூட்டி தேனிக்களை   துரத்தியப் பின் தேனை எடுத்துக் கொண்டு சென்று விடுகின்றனர். ஆகவே ஒரு  யோகி அன்றாடும் தேவைப்படும் அளவில் மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும்.  மறு நாளுக்கென சேர்த்து வைக்கக்  கூடாது. பல இடங்களில் இருந்தும் நல்ல நல்ல  விஷயங்களை கற்று அறிந்து கொண்டும் அதில் உள்ள விஷயத்தை ஒவ்வொன்றாக படித்து  சிறிது சிறிதாக கிரகித்துக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  தேன் எடுப்பவன் தன்னை முழுமையாக போர்த்திக் கொண்டு புகைக் கிளப்பிவிட்டு  தேனிக்களை  துரத்தியப் பின் தேன் கூட்டை எடுத்துச் சென்று தேன்  எடுக்கின்றான். அப்படி செய்யாமல் தேன் கூட்டை நெருங்கினால் வந்தவனை  தேனிக்கள் கடித்துக் குதறிவிடும். ஆகவே தானும் அனுபவிக்காமல் பிறருக்கும்  கொடுக்காமல் சொத்து சேர்த்து வைத்தால் இப்படித்தான் தேன் சேகரிப்பவன் போல  எவனாவது வந்து அனைத்தையும் அபகரித்துக் கொண்டு போய் விடுவான் என்ற உண்மை  இதனால் தெரிய வந்தது. 
எங்கு ஜுவாலை தோன்றினாலும் அந்த  மினுமினுக்கும் தோற்றத்தில் மோகமுற்று அதன் அழகில் மயங்கி விட்டில் பூச்சி  அதன் அருகே சென்று அந்த தீ ஜுவாலையில்  விழுந்து மடிகின்றது. இது கற்றுத்  தரும் பாடம் என்ன என்றால் வெளி அழகில் மயங்கி மோகம் கொண்டு மடியாதே  என்பதே. 
ஒரு சிறு பறவை தனது வாயில் மாமிசத் துண்டை கௌவிக் கொண்டு  பறந்து போய் கொண்டு இருந்தது. அதைக் கண்டு விட்ட பெரிய பருந்து அந்த சிறு  பறவையைப் பிடிக்க துரத்தி வந்ததும், புத்திசாலித்தனமான அந்த சிறு பறவை தன்  வாயில் இருந்த மாமிசத் துண்டை கீழே போட்டுவிட அந்தப் பெரிய பருந்து அந்த  சிறு பறவையை விட்டு விட்டு மாமிசத் துண்டை எடுக்க ஓடியது. ஒரு பொருளை நாம்  வைத்துக் கொண்டால் அதனால் நமக்கு தீமையே வரும் என்று தெரிய வந்தால் அதன்  மீது ஆசை கொண்டு அலைவதை விட அதை தவிர்த்து விடுவதே நலம். 
அம்பு  செய்பவனைப் பார்த்தாயானால் அவன் அதில் முழு கவனத்தையும் செலுத்தி செய்வது  தெரிய வரும். அப்படிப்பட்ட நிலையான மனதுடன் இருந்து கொண்டு இறை வழிபாட்டை  கொண்டு வந்தால் களங்கமற்ற மன நிலைப் பெறலாம். 
பாம்பு ஒரு  இடத்திலும் தங்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இரும்புப் புற்றிலும்  பள்ளத்திலும் போய் வசிக்கும். அது மிகவும் எச்சரிக்கையோடு இருக்கும். அது  போலத்தான் ஒரு யோகியும் தனக்கென ஒரு இடத்தில் தங்காமல் அங்கும் இங்கும்  சென்று இருந்தபடி கோவில்களிலும் குகைகளிலும் வசித்தபடி இருக்க வேண்டும். 
ஒரு  வகையான வண்டு தன் புழுவை கூட்டில் வைத்தப் பின் மீண்டும் மீண்டும் அங்கு  வந்து சப்தம் செய்தபடி இருக்கும். அது செய்யும் சப்தத்தினால் பயந்து போன  புழு அந்தக் கூட்டை விட்டு வெளியில் வராமல் அங்கேயே தங்கி இருக்கும். மெல்ல  மெல்ல அந்தப் புழு வண்டாக மாறும்வரை பெரிய வண்டு அங்கு வந்து கத்திக்  கொண்டே இருக்கும். அது போலவே பக்திபூர்வமாக நிலையாக கடவுள் மீது பயம்  கொண்டு பக்தி செலுத்தி வந்தால் நம் உள்ளமும் பக்தி மார்கத்தில் மாறும். 
திருமண  வயதை எட்டிய ஒரு பெண் தானியம் திரட்டிக் கொண்டு இருக்கையில் அவள் போட்டு  இருந்த வளையல்கள் சப்தம் போட்டன. அந்த சப்தத்தை தவிர்க்க அவள் அனைத்து  வளையல்களையும் எடுத்து விட்டு இரண்டு வளையல்களை மட்டும் போட்டுக் கொண்டு  வேலை செய்தாள். அந்த இரண்டு வளையலும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு சப்தம்  தரத் துவங்க ஒரே ஒரு வளையல் மட்டும் போதும் என எண்ணியவண்ணம் ஒற்றை வளையலை  போட்டுக் கொண்டு சப்தம் வராமல் வேலை செய்தாள். அது போலத்தான் ஒரு யோகியும்  தன்னை சுற்றிலும் அதிகமானவர்கள் இருந்தால் கூச்சலும் குழப்பமும் மட்டுமே  மிஞ்சும் என்ற உண்மையை தெரிந்து கொண்டு தனியாகவே தான் இருந்து கொண்டு  இருப்பதை நிலையாகக் கடை பிடிக்க வேண்டும் என்ற நியதியை தெரிந்து  கொண்டேன்.'' தத்தாத்திரேயர் தொடர்ந்து கூறினார் '' மன்ன இந்த உடலே  மாயை....நம் உடல் முழுவதும் படர்ந்து உள்ள அங்கங்கள் போதாது என்று அளவற்ற  ஆசைகளையும் நாம் பெருக்கிக் கொள்கின்றோம். நமக்கு வாக்கையில் ஏற்படும்  துன்பங்கள் அனைத்திற்கும் இந்த உடல் கொண்டுள்ள காம குரோத உணர்ச்சிகளே.  இருக்கும் ஒரு உடல் போதாது என ஒவ்வொருவரும் நான் எனக்கு என மனைவி, மக்கள்,  சம்பத்து என ஒன்றன்பின் ஒன்றாக பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இன்று உள்ள  உடல் நாளை இருக்காது எனத் தெரிந்தும் இந்த உடலுக்கு பல்வேறு சுகங்கள்  தேவைப்படுகின்றது. மாயையான இந்த உடலை விட்டு விட்டு எல்லாமே பரப்பிரும்மன்  என்று என் மனதில் எண்ணிக் கொண்டு இருக்கின்றேன். அதனால்தான் அச்சமும்  ஆசையும் இன்றி என்னால் சுதந்திரமாக இருக்க முடிகின்றது''.
தத்தாத்திரேயர்  கூறிய அனைத்தையும் கவனத்துடன் கேட்டுக் கொண்டு இருந்த மன்னனின் கண்களில்  நீர் ஆறாகப் பெருகியது.....''ஐயா....அற்புதம்....அற்புதம் ஐயா....இனியாவது  நீங்கள் உங்கள் மாறு வேடத்தைக் களைந்துவிட்டு நீங்கள் யார் என்பதை இந்த  அபலைக்கு கூற வேண்டும்'' எனக் கதறியவாறு தடாலென அவர் காலடியில் விழுந்து  அவர் கால்களை பற்றிக் கொண்டான் யதுகுல மன்னன். ''எழுந்திரு குழந்தாய் '' என  அன்புடன் கூறி அந்த மன்னனை எழுப்பிய தத்தாத்திரேயர் அற்புதமான தனது சுய  உருவை அவனுக்குக் காட்டினார். அவருடையை அற்புதமான ரூபத்தையும், அவரை சுற்றி  இருந்த கண்களைக் கூசும் ஒளியையும் கண்டு ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார்  யதுகுல மன்னன். அவன் மனம் தெளிவடைந்தது. தத்தாத்திரேயரும் மறைந்துவிட்டார்.  மனம் தெளிவடைந்த மன்னனும் அது முதல் தத்தாத்திரேயரின் பக்தனாகவே மாறி  விட்டான். தனது வாழ்நாள் முழுவதையும் அவர் காட்டிய வழியிலேயே சென்று ஆன்மீக  மற்றும் ஆனந்த வாழ்கையை பெற்று வாழ்ந்தான்.
...................பாகம்-2

 










கருத்துகள்
கருத்துரையிடுக