Himachal Pradesh - Champa Temples

ஹிமாச்சலப் பிரதேசத்து ஆலயங்கள்
சாந்திப்பிரியா

ஹிமாசலப் பிரதேசத்தில் பல ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சம்பா எனும் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் அற்புதமானவை. ஆச்சர்யப்பட வைக்கும் கதைகளை உள்ளடக்கியவை. அவற்றைப் படித்து மகிழவும்:

சுஹி மாதா ஆலயம்


இந்த ஆலயத்தைக் கட்டியவர் ராஜா சாஹில் வர்மன் என்ற ராஜ்புத் மன்னன். அவரே சாஹூ எனும் நகரையும் நிர்மாணித்தவர்.  சாஹூ நகரை அவர் அமைத்தபோது அங்கு குடிநீர் கிடைக்கவில்லை. ஆகவே அவர் ஒரு கட்டுக் கால்வாயைக் கட்டினார். ஆனாலும் அதில் தண்ணீர் வரவில்லை. ஆகவே அதன் அருகில் அவர் ஒரு ஆலயத்தை அமைத்தார். அப்போதும் அங்கு தண்ணீர் வரவில்லை என்பதினால் அவர் கடவுட்கள் தன மீது கோபமாக இருப்பதாக நினைத்தார். ஆகவே அவர் பண்டிதர்களைக் கலந்து  ஆலோசனை செய்ய அவர்கள் கோபமாக உள்ள அந்த நீர்  நிலையின் தேவதையை சாந்தப்படுத்தினால் மட்டுமே அங்கு நீர் வரும் என்று ஆரூடம் கூறினார்கள். அதற்கு  மேலும் அவர்கள் அவனுடைய மனைவி அல்லது மகனை பலி கொடுத்தால் மட்டுமே அந்த தேவதை சாந்தி அடையும் என்று கூற மன்னனும் தனது மகனை பலி கொடுக்க ஏற்பாடு செய்தான். ஆனால் அவன் மனைவியோ அதை தடுத்துவிட்டு தன்னை அதற்க்கு பலி கொடுக்குமாறு மன்னனிடம் வேண்டிக் கொள்ள அவனும் மக்களின் நன்மைக்காக அதை ஏற்றுக் கொண்டான். அதற்கேற்ப அந்த ஆலய வளாகத்துக்குள் ஒரு பெரிய குழி தோண்டி அந்த மன்னனின் மனைவியையும் அவளுடைய கன்னிப் பெண்களையும் சேர்த்து உயிருடன் புதைத்தார்கள். அவர்களை அப்படி புதைத்து மரணத்தை தந்த உடனேயே அங்கு நீர் பொங்கி எழுந்து வந்தது. தண்ணீர் பஞ்சமே அகன்றது.
அது முதல் தமது கிராமத்துக்கு தண்ணீர் வருவதற்காக தன் உயிரை தியாகம் செய்து கொண்ட அந்த ராணிக்கு சுஹி மாதா எனப் பெயரிட்டு அவளுக்கு ஒரு ஆலயத்தை அமைத்து அந்த  ஆலயத்தில் அவளை வணங்கித் துதிக்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் அவள் நினைவாக பெரிய விழாவைக் கொண்டாடுகிறார்கள். அந்த ராணியின் ஆலயம் ஷா மாதார் மலை மீது அமைக்கப்பட்டு உள்ளது.

அதன் பின்னர் அந்த அணைக்கட்டுக்கு சரோடா அருவியில் இருந்து தண்ணீர் செல்ல 1794-1808 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஜிட்சிங் என்ற மன்னனின் மனைவி படிக்கட்டுக்களைக் கட்டினாள்.
ஒவ்வொரு வருடமும் சுஹி மாதாவின்  நினைவாக பெரிய விழாவைக் கொண்டாடுகிறார்கள். அப்போது பெண்களும் குழந்தைகளும் அங்கு வந்து நடனம் ஆடி பாடல்களைப் பாடுகிறார்கள். . ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும் அந்த விழா ஒரு வார காலத்துக்கு நடைபெறும்.
(Acknowledgement with Thanks:- இந்த செய்தியை வெளியிட்டுக் கொள்ளவும் படங்களை பயன்படுத்திக் கொள்ளவும்  அனுமதி தந்த http://chambacity.webs.com/temples.htm  இணையதளத்திற்கு நன்றி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Goddess Samayapuram Mariamman (E)