Wonderful Hindu Temples in Malasia - 2
வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -2
ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம்
முக்கிய அறிவிப்பு:- நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது - சாந்திப்பிரியா
அற்புதம் செய்த ஆஞ்சநேயர்
1954 ஆம் ஆண்டில் உள்ளூரில் இருந்த மலேசியப் படையினரின் வழிபாட்டுக்காக எழுப்பப்பட்ட ஒரு ஆலயத்தில் இந்து படையினர் ஹனுமாருக்கும் ஒரு சன்னதியை எழுப்பினார்கள். ஆலயம் மலைக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ளது. சூரியன் அஸ்தமித்தப் பின் எவருமே அங்கு செல்ல பயப்படுவார்கள். ஏன் எனில் அதை சுற்றிலும் அடர்ந்த காடே இருந்தது. தண்ணீர் மற்றும் விளக்கு வெளிச்சம் கூட அப்போது இல்லை. அந்த ஆலயத்தில் பலிகளும் தரப்பட்டு வந்தனவாம்.
அப்போது ஒரு காலகட்டத்தில் ஹனுமாரின் சிலை முற்றிலுமாக வேறு திசையை நோக்கி தானாகவே மாறிவிட்டது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அந்த ஆலயத்தில் மிருக பலி தரப்பட்டு, சாராயம் போன்றவையும் பிரசாதமாக படைக்கப்பட்டதாம். அது பிடிக்காத ஹனுமார் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாராம். அது நடந்தது 1996 ஆம் ஆண்டில். பல முறை அந்த ஆலயத்தில் வந்து ஹனுமாரை புகைப்படம் எடுத்துள்ள ஒரு வெளிநாட்டு புகைபடம் பிடிப்பவர் அந்த நேரத்திலும் ஆலயத்தில் படமெடுக்க வந்தபோது திடுக்கிட்டாராம். காரணம் ஹனுமாரின் முகமே வேறு உருவில் இருந்ததாம். அதை அவர் செய்தி பத்திரிகைகளில் வெளியிட்டார். ஆகவே அதன் பின் ஆலயத்தில் பலிகள் தரப் படுவதும், சாராயம் படைக்கப்படுவதும் நின்றனவாம். ஹனுமார் பழைய நிலைக்கு வந்து விட்டாராம்.
இன்னொரு அற்புதம் அந்த ஆலயத்தில் நடந்ததாம். ஒருமுறை ஹனுமார் ஜெயந்திக்காக அங்கு வந்த டிக்சன் என்பவர் ஹனுமார் அந்த ஆலயத்தின் மேலே கதையை கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்ததை பார்த்து பரவசமாகி சாமியாடத் துவங்கி விட்டாராம். அந்த ஆலயத்தில் ஹனுமார் நிதர்சனமாக உள்ளார் என்பதை அதனால்தான் பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஆலய விலாசம் : Batu 5, Jln Pantai, 71050 Port Dickson, Negeri Sembilan. Tel: 0123515359 (Venkatesan Gurukal), 0123575616 (Temple Chairman)
அப்போது ஒரு காலகட்டத்தில் ஹனுமாரின் சிலை முற்றிலுமாக வேறு திசையை நோக்கி தானாகவே மாறிவிட்டது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது அந்த ஆலயத்தில் மிருக பலி தரப்பட்டு, சாராயம் போன்றவையும் பிரசாதமாக படைக்கப்பட்டதாம். அது பிடிக்காத ஹனுமார் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாராம். அது நடந்தது 1996 ஆம் ஆண்டில். பல முறை அந்த ஆலயத்தில் வந்து ஹனுமாரை புகைப்படம் எடுத்துள்ள ஒரு வெளிநாட்டு புகைபடம் பிடிப்பவர் அந்த நேரத்திலும் ஆலயத்தில் படமெடுக்க வந்தபோது திடுக்கிட்டாராம். காரணம் ஹனுமாரின் முகமே வேறு உருவில் இருந்ததாம். அதை அவர் செய்தி பத்திரிகைகளில் வெளியிட்டார். ஆகவே அதன் பின் ஆலயத்தில் பலிகள் தரப் படுவதும், சாராயம் படைக்கப்படுவதும் நின்றனவாம். ஹனுமார் பழைய நிலைக்கு வந்து விட்டாராம்.
இன்னொரு அற்புதம் அந்த ஆலயத்தில் நடந்ததாம். ஒருமுறை ஹனுமார் ஜெயந்திக்காக அங்கு வந்த டிக்சன் என்பவர் ஹனுமார் அந்த ஆலயத்தின் மேலே கதையை கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்ததை பார்த்து பரவசமாகி சாமியாடத் துவங்கி விட்டாராம். அந்த ஆலயத்தில் ஹனுமார் நிதர்சனமாக உள்ளார் என்பதை அதனால்தான் பக்தர்கள் நம்புகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக