Sri Uchi Vinayagar Aalayam, Kajang (Selangor)

வினோத வெளிநாட்டு ஆலயங்கள் - 5 சித்தி விநாயகர் ஆலயம் முக்கிய அறிவிப்பு :- நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது . ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன் , அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று தமிழில் அவற்றை பிரசுரித்து உள்ளேன் . அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது - சாந்திப்பிரியா மலேஷியா கஜாங் உச்சி விநாயகர் ஆலயம் மலேஷியாவில் கஜாங் எனும் இடத்தில் 1937 ஆம் ஆண்டு ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அது முனீஸ்வரர் ஆலயம். ஆனால் அந்த ஆலயத்தில் முருகன் மற்றும் விநாயகரின் சிலைகளும் பூஜிக்கப்பட்டு வந்தன. ஆலயத்தின் நிர்வாகம் புதிய குழுவிடம் சென்றதும் அவர்கள் அந்...