இடுகைகள்

Danvanthari- Deity for Ayurvetha --17

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -17 தன்வந்தரி - ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபதி சாந்திப்பிரியா தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார்.        படங்கள் நன்றி :   http://en.wikipedia.org/wiki/Dhanvanta  அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியா...

Wonderful Hindu Temples in Malasia - 2

படம்
வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -2         ஸ்ரீ ஆஞ்சநேயர்  ஆலயம் முக்கிய அறிவிப்பு:-   நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -  சாந்திப்பிரியா  அற்புதம் செய்த ஆஞ்சநேயர்  1954 ஆம் ஆண்டில் உள்ளூரில் இருந்த மலேசியப் படையினரின் வழிபாட்டுக்காக எழுப்பப்பட்ட ஒரு ஆலயத்தில் இந்து படையினர் ஹனுமாருக்கும் ஒரு சன்னதியை எழுப்பினார்கள். ஆலயம் மலைக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ளது. சூரியன் அஸ்தமித்தப் பின் எவருமே அங்கு செல்ல பயப்படுவார்கள். ஏன் எனில் அதை சுற்றிலும் அடர்ந்த காடே இருந்தது. தண்ணீர் மற...

Wonderful Hindu Temples in Malasia - 1

படம்
வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -1       சித்தி விநாயகர் ஆலயம் முக்கிய அறிவிப்பு:-   நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை  அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -   சாந்திப்பிரியா    அற்புதம் புரிந்த  சித்தி விநாயகர்  1960 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டு உள்ள இந்த ஆலயத்தின் பெயர் சித்தி விநாயகர் ஆலயம். மலேசியாவில் உள்ள சுங்கை பெதானி என்ற இடத்தில் உள்ள இந்த மகிமை வாய்ந்த ஆலயத்தின் ஒரு பக்தர் வியாபாரியான வில்லோ என்பவர். அவர் பல காலமாக அந்த ஆலயத்தில் சென்று விநாயகரை வணங்கி வந்தவர். முன்னால் அது மிகச் சிறிய ...

Tirunelveli Jayaveera Anjaneyar Temple

படம்
தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு -14 கோடையனல்லூர் ஜெயவீர ஆஞ்சநேயர் சாந்திப்பிரியா திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடையனல்லூர் என்ற இடத்தில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர்  ஆலயம் அந்தப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.  அந்த இடத்தை  தென்காசி அல்லது சங்கரன்கோவில்  வழியே சென்று அடையலாம் .  கிருஷ்ணாபுரத்து பஸ் ஸ்டாண்டில் இறங்கி சுமார் ஒரு கிலோ தொலைவில் உள்ளஆலயத்துக்கு  நடந்தே போகலாம்.  காரணம் அங்கு ஒரு முறை சென்றுவிட்டுத் திரும்பினால் வாழ்கையில் பெரும் மாற்றம் ஏற்படுகின்றது என்பது பொதுவான கருத்து. இடது கையை தொடை மீது வைத்து  , வலது கையை அபாய முத்திரை கட்டும் விதத்தில்  வைத்து தெற்கு நோக்கி  நின்றுள்ள உள்ள ஆஞ்சநேயர்  வாலில் ஒரு மணி தொங்குகின்றது. பக்தர்களுக்கு கருணைப் பொழிந்து அவர்களைக்காத்து அருளுகின்றார் அந்த ஆஞ்சநேயர். அந்த ஆலயம் அமைந்த வரலாறு என்ன?  சிதையைத் தேடி வந்த ராமபிரான் வாலியை வதம் செய்த பின் கிஷ்கிந்தையை சுக்ரீவருக்கு  மீட்டுக் கொடுத்தார். அதன் பின் சுக்ரீவர்  ராமருக்கு உதவ...

Chinnak kadai Renuga devi Temple

படம்
தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு -- 13 சென்னை சின்னக் கடை ஸ்ரீ மாரியம்மன் அல்லது  ரேணுகா பரமேஸ்வரி ஆலயம். சாந்திப்பிரியா சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியவில்லை. முக்கியமாக அவற்றில் மாரியம்மன் சம்மந்தப்பட்ட ஆலயங்கள் அங்காங்கே உள்ளன. அதில் ஒன்றுதான் சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகா தேவி ஆலயமும். சௌகார்பேட்டை என்ற இடத்தில் மின்ட் சாலையும் என். எஸ். ஜி. போஸே சாலையும் இடிக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம்  தோன்றியது இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள். அந்த ஆலயத்தைக் கட்டியவர்கள் யார், அது அங்கு எப்படி வந்தது என்ற என்ற விவரம்  எவருக்கும் தெரியவில்லை. கூறப்படுவது அனைத்துமே வழி வழியாகக் கூறப்படும் கதையே.  அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கின்றாளாம் . அதற்குக் காரணம் ஆலயத்தின் கற்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும், ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டும் பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும்  அம்மன் காட்சி தருகிறாள். அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ ம...

Annan Swamigal -16

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்  -  16 அண்ணன் சுவாமிகள் சாந்திப்பிரியா  திருவாரூரில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ள திருநெல்லிக்காவல் என்ற ஊரின் அருகில் உள்ள இடமே புத்தூர் என்பது.  1937 ஆம் ஆண்டு அந்த ஊரில்  பிறந்தவரே அண்ணன் ஸ்வாமிகள். அவர் பிறந்த தினம் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்ட தினம்.  அவர் பிறந்தது சாதாரண நிலையில் இருந்த குடும்பத்தினருக்கே. அவர் சிறுவனாக இருந்தபோது அந்த ஊருக்கு வந்து இருந்த ஒரு வங்காள தேசத்து ஆன்மீகப்  குரு அவருடைய நாக்கில் எதோ சில மந்திரங்களை எழுதி மந்திரோபதேசம் செய்தார்.  அதன் காரணமாக அவர் சித்த புருஷராகி விட்டார் அவருக்கு நிறைய சீடர்கள் வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் நிர்வாண ஸ்வாமிகள்  , மருதூர் ஸ்வாமிகள் போன்றோர் உண்டு. அவர் நல்ல திடகர்தமான உடல்வாகு கொண்டு இருந்ததினால் அவரை மாஸ்டர் என்றே அனைவரும் அழைத்தனர்.  சிலம்பு ஆடுவதில் மன்னராக இருந்தாராம்.  வளர்ந்து கொண்டு இருந்தவர் ஒரு கட்டத்தில் முழுமையான ஆன்மீகவாதியாக மாறிவிட்டார்.  உலக பற்று  அனைத்தையும் துறந்து விட்டார். இடுப்பில் ஒரு முழ வ...

Mouna Nirvaana swamigal 15

படம்
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்   - 15 மவுன நிர்வாண ஸ்வாமி கள் சாந்திப்பிரியா திண்டுக்கல் பழனி நெடும் சாலையில்  உள்ளதே கேசவனம்பட்டி  என்ற கிராமம்.  திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள அந்த ஊர்  அமைதியானது.  ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவர்களைத் தவிர  அதிக மக்கள் அறிந்திராதது அந்த ஊர் . அங்குதான் மாபெரும் சித்தரான ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது.  அவர் எங்கிருந்து வந்தார் என்பதோ, அவருடைய பெற்றோர்கள் யார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மகிமைகள் ஏராளமாம்.  எந்த உடையுமே அணியாமல் பிறந்த  மேனியாகவே திரிந்தார். ஆகவே அவரை தத்தாத்திரேயரைப்  போல பிரும்மனின் அவதாரம் என்றே நம்புகிறார்கள். அவர் மீது எவராவது துணியைப் போர்த்தினால் அதை களைந்து எறிவாராம். பார்த்தால் ஊர் சுற்றித் தெரியும் பைத்தியக்காரனைப் போல காட்சி அளிப்பார்.  பாம்புகளுடன் விளையாடுவாராம்.  திடீரென தன்னைத் தானே அடித்துக் கொள்வாராம்.  அவர் அப்படி செய்தால்  எவரோ ஒருவர் அந்த கிராமத்தில் மரணம் அடையப...