Danvanthari- Deity for Ayurvetha --17
ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -17 தன்வந்தரி - ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபதி சாந்திப்பிரியா தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். படங்கள் நன்றி : http://en.wikipedia.org/wiki/Dhanvanta அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியா...