Sri Lanka - Sivan Temple
ஸ்ரீ லங்கா ஆலயம் -வன்னி 
தான் தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு
சாந்திப்பிரியா
தான் தோன்றீஸ்வரர் ஆலய வரலாறு
சாந்திப்பிரியா
ஆவுடையார் இல்லாத சிவலிங்கம் 
ஸ்ரீ லங்காவின் வன்னி பிரதேசத்தில் அமைந்து உள்ள ஆயிரக் கணக்கான 
வருடங்களுக்கு முந்தைய 'தான் தோன்றி ஈஸ்வரர்' ஆலயம் எனும் சிவபெருமான் 
ஆலயம் பெரும் புகழ் பெற்றதாகும். ஸ்ரீ லங்காவில் ஆயிரக்கணக்கான 
ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ளதாகக்  கூறப்படும்  சில ஆலயங்கள் 
வரலாற்றுப் புகழ் பெற்றவை. ஆனால் அந்த ஆலயங்களைப் பற்றிய செய்திகள் அதிகம் 
தமிழ் நாட்டில் அறியப்படவில்லை. அந்த ஆலயங்கள் சில மகிமை வாய்ந்தவை என்பது 
மட்டும் அல்ல, அற்புதங்களைக் கொண்ட கதைகளை உள்ளடக்கியவை.  ஆகவே முன்னர் 
மலேஷியாவில்  இருந்த ஆலயங்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது போல 
தற்போது  ஸ்ரீ லங்காவின் சில புகழ் மிக்க, புராதானமான ஆலயங்களைக் குறித்து 
எழுத முடிவு செய்தேன்.  
அந்த நிலையில்தான் எதேற்சையாக நான் சமீபத்தில் வன்னி பிரதேசத்தின் 'தான் தோன்றி ஈஸ்வரர்' ஆலய கும்பாபிஷேக மலரை படிக்க நேரிட்டது. ஆனால் அதில் கும்பாபிஷேகக் காலம் குறிப்பிடப்படவில்லை. அதில் காணப்படும் ஆலய வரலாற்று அடிப்படையிலும், பிற செய்திகளின் அடிப்படையிலும் அந்த ஆலயத்தைக் குறித்தக் கட்டுரையை கீழே தந்து உள்ளேன். ஸ்ரீ லங்காவில் நடைபெற்ற யுத்தத்தினால் சேதம் அடைந்த இந்த ஆலயம் பழுது பார்க்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு உள்ளது. ஆலயம் தற்போது நடந்த யுத்தத்தின் போது சேதம் அடையவில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த யுத்தத்தின் போது இது சேதம் அடைந்து 1996 ஆம் ஆண்டு வாக்கில் புனருத்தாரணம் செய்யப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே இந்த கும்பாபிஷேக மலரும் அந்த ஆண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.

சிவ லிங்கங்கள்
சிவலிங்கங்களில் ஸ்வயம்பு லிங்கம், தைவிக  லிங்கம், ஆரிஷா லிங்கம், மனுஷ்ய 
லிங்கம், காணபத்திய லிங்கம் மற்றும் பாண லிங்கம் என்ற வகை லிங்கங்கள் 
உள்ளன. அவற்றில் சுயம்பு லிங்கம் என்பது  தானே உருவானது. தைவிக  எனும் 
தெய்வீக லிங்கம் தெய்வங்களினால் படைக்கப்பட்டது.  காணபத்திய லிங்கம் தேவ 
கணங்களினால்  படைக்கப்பட்டது.  பாண லிங்கம் கங்கை நதியில் உற்பத்தி ஆனது 
என்பார்கள்.  ஆனால் சுயம்பு லிங்கம் மட்டுமே தானாகத் தோன்றியது, அதாவது 
ஸ்வயம்புவாக எழுந்தவை என்றால் யாருமே சிலைகளை செதுக்காமல்,  தாமாகவே, 
அதாவது அந்த தெய்வமே அங்கு ஒரு சிலை உருவில் வந்து சில காலம்  தான் குடி 
இருப்பதற்காக தானே அமைத்துக் கொண்ட இடம்  என்பார்கள். அப்படியாக 
சிவபெருமான் எனும்  ஈஸ்வரர் அங்கு தங்கிக் கொள்ள தனக்கு ஒரு இடத்தை 
அமைத்துக் கொண்டதினால் அதை 'தான் தோன்றி ஈஸ்வரர்' ஆலயம் என்கிறார்கள்.
பண்டைய கால ஆலய தோற்றம் 
படம் நன்றி : - photos: http://vehavanam.wordpress.com 
வன்னிய பகுதியை  சேர்ந்த பல கிராமத்தினரும் புண்ணிய பூமியாகக் கருதும் இந்த
 ஆலயம் தோன்றியக் காலம் குறித்த சரியான விவரம் இல்லை என்றாலும், 
கிடைத்துள்ள ஆதாரங்களின்படி இது 1500 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 
ஆலயம்  என்பது தெரிகின்றது. குளக்கோட்டான்   என்ற மன்னன் காலத்தில் இந்த 
ஆலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஸ்வயம்புவாகத் தோன்றிய   
இந்த ஆலயத்து இறைவன் வேகாவனேஸ்வர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் 
அழைக்கப்படுகிறார்.  இங்குள்ள  சிவலிங்க  ஈஸ்வரர் ஆவுடையார் இல்லாமல் 
காட்சி தருகிறார்.
யாழ்பாணத்து இடைக்காடு என்ற பகுதியை சேர்ந்த தீரபுத்திரர் என்பவர் சைவ 
வெள்ளாளர் பிரிவை சேர்ந்தவர். அவர் தனது இரண்டு மகன்களுடன் வன்னிக்கு வந்து
 குடியேறினார்.  அவரும் அவரது சந்ததியினரும் வாழ்ந்திருந்த இடம் அப்போது  
ஓட்டு சுட்டான் என்றக் காட்டுப்  பகுதியாகும். அந்த இடம் இன்று  இடைக்காடு 
என்று  அழைக்கப்படுகின்றது. அவர் அந்த இடத்தில் இருந்த காட்டை அழித்து 
பயிர் நிலமாக மாற்றி விவசாயம் செய்தார். ஆனால் சித்தர் தவமிருந்த இடத்தில் 
இருந்த கொன்றை மரம் அழிக்கப்படவில்லை. 
தமது நிலத்தில் குரக்கன் என்ற கதிர்களை பயிரிட்டார். அந்தக் கதிர்கள் பக்குவமானதும் அவற்றைக் கொய்து அடுத்தப் பயிரைப் பயிரிட அந்த நிலத்தில் இருந்த காய்ந்து போன கதிர்களை (அதை ஓட்டு என்கிறார்கள்) தீயிட்டு எரித்தார். அப்பொழுது அங்கிருந்த கொன்றை மரத்தின் கீழ் பகுதியில் இருந்த பகுதி கதிர்கள் எரியவில்லை. ஆகவே அங்கு எரியாமல் இருந்த பகுதியை அவர் மண்வெட்டியால் வெட்டிய போது அவர் மண் வெட்டியில் ரத்தம் கசிவதைக் கண்டார். பயந்து போய் வெட்டுவதை நிறுத்தினார். இந்த நிகழ்ச்சியை 'ஈஸ்வரர் பாமாலை' என்ற நூலில் இப்படியாகப் கூறி உள்ளார்கள்:

''எரித்தவிடம் அனைத்தும் எரிந்து போக
எஞ்சியது கொன்றை மரத்தின் நிழலில் உள்ள
பெருத்தோட்டு எரியாமல் இருந்த ஈதை
எப்படியும் தீ மூட்டி எரித்திட்டாலும்
கரு தெரியாதிருந்ததினால் கோபம் கொண்டு
கடிதான மண்வெட்டியதனால் வெட்ட
தெரித்துதிரம் பெருகுவதைக் கண்டு பீதி
அடைந்த மன்னன் வன்னியனுக்கு எடுத்துரைத்தார்''

மண்வெட்டியில் தோன்றி இருந்த ரத்தத்தைக்   கண்டு பயந்து போன 
தீரபுத்திரன் ஓடோடிச் சென்று அந்தப் பகுதியை நிர்வாகித்து வந்த வன்னியனிடம்
 அதை எடுத்துரைத்தார். உடனே அங்கு வந்த அந்த சிற்றரசன் அந்த இடத்தை  நன்கு 
ஆராய்ந்தப் பின் பெரியோர் ஆலோசனைப்படி அங்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு 
தீரபுத்திரனுக்குப் ஆணையிட்டார்.  அவரும்  அங்கு பிள்ளையாருக்கு ஒரு ஆலயம் 
அமைத்து வழிபட்டார். அதை கொற்றையடி  பிள்ளையார் என அழைத்தார்கள்.  அங்கு 
வழிபாடுகள் நடைபெற்று வந்திருந்தபோது  சில நாட்களுக்குப் பின்னர் அதே 
இடத்தில்,  அதே கொன்றை மரத்தின் கீழே, ஒரு சிவலிங்கம்  புதைந்து  
இருந்ததும் கண்ணுக்கு தென்பட்டது.  ஆகவே அதையும் வெளியில் எடுத்து  அந்த 
ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்க முன்னர் கொற்றை மர 
பிள்ளையாராக இருந்த ஆலயம், கொன்றை மர ஈஸ்வரர் ஆலயமாயிற்று. அந்த 
மரத்தடியில் கிடைத்த சிவலிங்கமே அன்று தொட்டு இன்று வரை இக்கோயிலின் 
கருவறையிலுள்ள சிவலிங்கமாக உள்ளது . ஆலயத்தில் உள்ள  ஈஸ்வரரை வேகாத 
வனேஸ்வரர் எனும் அர்த்தத்தில் 'வேகாவனேஸ்வரர்' என்றும், ஓட்டுக்களை 
சுட்டதினால்  (காய்ந்த கதிர்களை எரித்ததினால்) எழுந்த ஆலயம் உள்ள அந்த 
இடத்தின்  பெயர் ஓட்டு சுட்டான் என்றும் ஆயிற்று. 
 சித்தருக்கு  காட்சி  தந்த  சிவபெருமான் 
இந்த ஆலயத் தோற்றம் குறித்து இன்னொரு கதையும் புழக்கத்தில் உள்ளது.  சுமார்
 இரண்டாயிரம்  வருடத்துக்கு முன்னால்  அந்த இடம் முழுவதுமே வனப் 
பிரதேசமாகவே இருந்தது. சுற்றிலும் மலைகள்  சூழ்ந்திருந்த  இருந்த  அந்த 
பகுதிக்கு மூன்று சித்தர்கள் வந்தார்கள்.  அவர்கள் யார், எங்கிருந்து 
வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என்ற  எந்த விவரமும்  தெரியவில்லை. அப்படி 
வந்தவர்களில் ஒருவர் வாவெட்டி எனும் மலைப் பகுதிக்குச் சென்று தவத்தில் 
இருந்து வெகு காலத்துக்குப் பிறகு அங்கேயே சமாதி அடைந்தார்.   இன்னொரு 
சித்தர் ஓட்டு சுட்டானுக்கு இரண்டு மைல் தொலைவில் இருந்த காதலியார் 
செம்மான் குளம்  என்ற இடத்துக்கு சென்று தவம் இருந்து சமாதி அடைந்தார். 
மூன்றாவது சித்தர் ஓட்டு சுட்டானிலேயே  தங்கி  இருந்து, ஒரு கொன்றை 
மரத்தடியில் தவம் இருந்து, அங்கேயே சமாதி அடைய, அவர் முன் தோன்றி அவருக்கு 
அருள் புரிந்தப் பின்  சிவபெருமான் அங்கேயே சில காலம் பொறுத்து தானும் 
ஸ்வயம்புவாக சிவலிங்க உருவில் எழுந்தருளினார். 
பண்டைய கால ஆலய  குளத்தின் தோற்றம் 
படம் நன்றி : - photos: http://vehavanam.wordpress.com 
குளக்கோட்டான் என்ற மன்னன் சோழ 
வம்சத்தை சார்ந்தவர். கி. பீ.  436 ஆம் ஆண்டு ராஜ்ய பரிபாலனம் செய்ததாக 
கூறப்படும் மனு  நீதி சோழனின் மருமகன் என்று இவரைக் கூறுகிறார்கள்.  
திருகோண மலையில் கிடைத்துள்ள கல்வெட்டு செய்திகளின்படி குளக்கோட்டான் என்ற 
சோழ மன்னன் திரிகோண மலையில் இருந்த சிவன் ஆலயத்தை சீரமைக்க ஸ்ரீ 
லங்காவிற்கு  வந்தான் என்பது தெரிகிறது. அந்தக் குளக்கோட்டானைக் குறித்து 
கூறப்படும் வாய்மொழிக் கதை இது.  இலங்கைக்கு வந்த குளக்கோட்டான் ஓட்டுச் 
சுட்டான் பகுதிக்கு அருகில் ஓடிக் கொண்டு இருந்த நதியின் பக்கத்தில் ஒரு 
குளத்தை நிறுவியவன். அப்போது அந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த நந்தி 
உடையார் என்பவரின்  மகளை அவன் பார்த்தான். அவளுடைய அழகில் மயங்கிய அவன் 
அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் நந்தி  உடையார் அவனது 
வேண்டுகோளை ஏற்கவில்லை.  அதனால் கோபமுற்ற குளக்கோட்டான்,அந்த ஊரில் இருந்த 
நந்தி  உடையாரின் வயல்களுக்கு தண்ணீர் தந்து  கொண்டிருந்த நதியின் வழியை 
அடைத்து  விட்டு அந்த நீரைக் கொண்டு தன் பகுதியில் ஒரு  குளத்தைக் 
கட்டினான். நந்தி உடையாரின் பாசனத்துக்கு  நதியில் இருந்து கிடைத்து வந்த  
தண்ணீர்   நின்றது.  வயல்கள் காயத் துவங்கின. ஆகவே கவலைக் கொண்ட நந்தி 
உடையார் ஈஸ்வரரை வேண்டிக்  கொள்ள,  உடையார் நிலப் பகுதிகளில் பெரும் 
மழையைப்  பொழிய வைத்து  ஈஸ்வரர் பயிர்களைக் காப்பாற்றினார்.  இதற்கு 
இடையில் அந்த ஆலயம்  இருந்த இடத்தின் அருகில்தான்  குளக்கோட்டான் ஒரு 
குளத்தை அமைத்தான் என்றும் அந்த  ஆலயத்தைக் கூட அவன்தான்  அமைத்தான் 
என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவன் ஆலயம் அமைத்ததற்கான காரணம் வலுவாக 
இல்லை.
ஆலய   சன்னதியில்   சிவலிங்கம்  
படம் நன்றி : - photos: http://vehavanam.wordpress.com 
ஆலய சிவலிங்க மகிமை
இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஆவுடையார் இல்லாத சிவலிங்கம் 
ஆகும். ஆகவே அப்படி இருப்பது தவறு என்று எண்ணிய ஆலய தருமகர்த்தா வெளியூர் 
சிற்பியை வரவழைத்து அதற்கு ஒரு ஆவுடையாரை செதுக்கச் சொல்லி, ஒரு 
கவசத்தையும் செய்து வருமாறுக் கூறினார். ஆனால் அன்று இரவே அவர் கனவில் வந்த
 ஈஸ்வரர் தனக்கு அவை எதுவுமே வேண்டாம் என்றும், தனது விருப்பத்துக்கு மாறாக
 அவற்றை செய்யக் கூடாது என்றும் கண்டிப்பாகக் கூறிவிடவே   கவசம் இன்றும் 
அதற்கு அணிவிக்கப்படாமல் ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.  ஆவுடையாரும் 
செதுக்கப்படவில்லை. அங்குள்ள சிவலிங்கம் ஆவுடையார் இல்லாத சிவலிங்கமாகவே 
உள்ளது.  இது போன்று ஆவுடையார் இல்லாத சிவலிங்கம்  இந்தியாவின் திருச்சி 
மாவட்டத்து திருவானைக்காவல்  கோவிலில் மட்டுமே உள்ளதாம்.
ஆலய மகிமை-  பணியன் என்பவரின் அனுபவம் 
வன்னி நிலப்பகுதிகளை ஆண்டு வந்த மன்னர்களும் இந்த ஆலயத்துக்கு நிறைய 
உதவிகளை செய்துள்ளார்கள். இப்படி இருக்கையில் போர்த்துகீசியர் 
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய காலத்தில் (1501 -1658) வன்னியையும் பிடிக்க 
வந்தார்கள். அப்போது அங்கு வந்த போர்த்துகீசியர் அங்கிருந்த மன்னர்களிடம் 
ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டார்கள்.  அதன்படி வன்னி சிற்றரசர்கள்  நாட்டை 
அவர்களே ஆண்டு கொள்ள அனுமதிப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக ஆண்டுதோறும் 
அவர்கள் போர்த்துகீசியருக்கு  காட்டு யானைகளை கப்பமாக அனுப்ப வேண்டும் 
என்றும் கூறினார்கள். அதை அங்கிருந்த சிற்றரசர்களும் ஏற்றுக் கொண்டார்கள். 
 ஆகவே காட்டு யானைகளைப் பிடிக்க  பணியாட்கள்  நியமிக்கப்பட்டு 
இருந்தார்கள். அந்தப் பணியாட்களை  பணிகன் என்று கூறுவார்கள். ஒரு முறை  
அங்கிருந்த ஒரு பணிகனுக்கு காட்டில் யானைகள் கிடைக்கவில்லை. யானைகளை அனுப்ப
 வேண்டிய நாளும் நெருங்கியது. அதனால் கவலையுற்ற பணிகன் அங்கிருந்த   'தான் 
தோன்றி ஈஸ்வர' ஆலயத்துக்குச் சென்று தனக்கு யானைகள்  எதுவுமே கிடைக்கவில்லை
 என்பதினால் தனக்கு யானைகள் கிடைக்க அவர் அருள் புரிந்தால் அவருடைய  அந்த 
ஆலயத்தை புதுப்பிப்பதாக வாக்கு கொடுத்தான். அவன் கனவில் தோன்றிய ஈஸ்வரரும் 
 ஒரு குறிப்பிட்ட  இடத்தைக் கூறி அங்கு சென்றால் யானைகள் நிறைய  கிடைக்கும்
 என்றார். அவனும் அவர் கனவில் ஈஸ்வரர் கூறிய இடத்துக்குச் சென்று நிறைய 
யானைகளை பிடித்துச் சென்றான். அதன் பின் தான் கொடுத்த வாக்கைக் 
காப்பாற்றும் வகையில் ஆலயத்தையும் புதுப்பித்துத் தந்தான். இருந்தாலும்  
ஆலயம் பெரிய அளவில் கட்டப்படாமலேயே இருந்தது.
ஆலய மகிமை- சின்னதுரை என்பவரின் அனுபவம்
இந்த ஆலயத்தின் 
மகிமைக்கு எடுத்துக் காட்டாக இன்னொரு கதை உண்டு. ஸ்ரீ லங்காவின் 
சண்டிலிப்பாய் என்ற ஊரை சேர்ந்தவர் சின்னத்துரை  என்பவர். அவருடைய மனைவி 
ஒருநாள் அவரிடம் கூறினாள்  'இந்த ஆலயத்தின்  அருகில் ஒரு குளம் இருந்ததால் 
ஆலயத்துக்கு  செல்லும் பக்தர்கள் குளித்து விட்டுச் செல்ல வசதியாக 
இருக்கும் அல்லவா'. அதைக் கேட்ட சின்னதுரை நினைத்தார் 'இது ஒருவேளை ஈசனே 
அவள் வாய் மூலம் நமக்குக் கொடுத்துள்ளக் கட்டளையாக இருக்கும்'. ஆகவே அன்று 
முதல் அவர் தாம் செய்யும் வேலை நேரத்தில் கிடைத்த  ஓய்வை இந்த ஆலய 
நிர்மாணப் பணிக்கு செலவு செய்தார். தம்முடைய வேலையில்  கிடைத்த லாபத்தை 
இந்த ஆலய பணிக்கே செலவு செய்ததும் அல்லாமல் தனது கடைசி காலத்தில் தனது 
நிலபுலன்களையும் விற்று அந்தத் தொகைகளை இந்த ஆலயத்துக்கு காணிக்கையாகக் 
கொடுத்துள்ளார். 
இன்னொரு சம்பவம். சின்னதுரை  ஒருமுறை ஆலய வேலைகளுக்காக சிமெண்ட் மூட்டைகளை 
தருவித்து இருந்தார். அவற்றை எடுத்து வந்தபோது இரவாகி விட்டதினால் அவற்றை 
ஒரு இடத்தில் இறக்கி வைத்து விட்டு மறுநாள் பாதுகாப்பான இடத்தில் வைக்கலாம்
 என்று எண்ணிக் கொண்டு அசதியினால் அயர்ந்து தன்னை மறந்து நன்றாகத் தூங்கி 
விட்டார். மறுநாள் காலை எழுந்தபோதுதான் இரவில் நல்ல மழைப் பெய்து இருந்தது 
 தெரிந்தது. 'ஐயோ, அனைத்து சிமெண்ட் மூட்டைகளும் பாழாகி இருக்குமோ என்று 
பயந்தபடி ஓடிச் சென்று பார்த்தபோது அவை அனைத்தையும் யாரோ நல்ல பாதுகாப்பான 
இடத்தில் மழை நீர் நனையாமல் வைத்து இருந்தது தெரிந்தது. ஆகவே அதை 
செய்தவருக்கு நன்றி கூறலாம் என எண்ணியவர்  யார் அதை செய்தார்கள் என்று 
அங்கிருந்தவர்களை விசாரித்தார். ஆனால் அங்கு அக்கம்பக்கத்தில் இருந்த 
எவருமே அந்த வேலையே தாம் செய்யவில்லை என்று கூறி விட வியப்படைந்தார். அந்த 
வேலையே  செய்தவர் யாராக இருக்கும் என்பதனை அவரால் கண்டு பிடிக்கவே 
முடியவில்லை. அன்று இரவு நன்கு தூங்கியவர் கனவில் சிவபெருமான் தோன்றி முதல்
 நாள் இரவு அன்று   சிமெண்ட் மூட்டைகளை தான்தான்அவை மழையில் நனையாமல் 
இருக்க இடம் மாற்றி வைத்ததாகவும், அதனால் தனது   உடலெல்லாம் வலிக்கின்றது 
என்றும், தன்னை  வென்நீரினால்  குளிப்பாட்டி தன்  உடல் வலியைப்  
போக்குமாறும்  கூற ஆனந்தம் அடைந்த சின்னதுரை மறுநாள் சிவலிங்கத்துக்கு 
வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்தார். 
சின்னதுரைக்கு இன்னொரு அதிசய அனுபவம் கிடைத்தது. ஒரு நாள் யாழ்பாணத்துக்கு சென்றப் பின் ஓட்டு சுட்டானுக்கு வந்தார் சின்னதுரை. இரவு வெகு நேரமாகி விட்டது. கடும் பசி எடுத்தது. ஊருக்குள் நுழைந்தவர் இன்னமும் ஆலயம் இன்னமும் திறந்து இருந்ததைக் கண்டார். ஆகவே அங்கு அந்த வேலையில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆலயத்துக்குள் சென்றவரை அங்கிருந்த குருக்கள் வரவேற்றார். குருக்களை அவருக்கு நன்கு தெரியும். அவருக்காகவே தான் காத்திருந்ததாக கூறிவிட்டு ஒரு தட்டில் சக்கரைப் பொங்கல், வாழைப்பழம் போன்றவற்றைக் கொண்டு வந்து தந்தார். அதை தன் வீட்டிற்கு எடுத்துப் போய் மறுநாள் கொடுப்பதாகக் கூறி விட்டு சென்ற சின்னதுரை வீட்டில் சென்று பசி ஆற உண்டுவிட்டு தூங்கினார்.மறுநாள் தாம்பாளத்தை எடுத்துக் கொண்டுப் போய் குருக்களிடம் கொடுக்க குருக்களுக்கு ஒரே வியப்பு. ஆலயத் தட்டு எங்கிருந்து சின்னதுரைக்கு கிடைத்தது என்று கேட்டதும் முதல் நாள் இரவில் நடந்தவற்றை நினைவு கூர்ந்தார் சின்னதுரை. அதைக் கேட்ட குருக்களோ ஆச்சர்யத்துடன் எப்போதும் போல கோவிலை தான் முன்னதாகவே மூடிவிட்டுப் போய் விட்டதாகவும், சக்கரைப் பொங்கல் பிரசாதமும் அங்கு இருந்திருக்கவில்லை என்றும் கூறிவிட்டு அவற்றை சின்னதுரைக்கு கொடுத்தது அந்த ஈசனாகவே இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். அதைக் கேட்ட சின்னதுரை கண்களில்ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது.

ஆலய மகிமை- சுப்ரமணிய முதலியாரின் அனுபவம்
இன்னொரு சுவையானக் கதை அந்த ஆலயத்தைப் பற்றி உண்டு. அந்த ஊர் மணியக்காரர் 
சுப்ரமணிய முதலியார் என்பவர். அவர் அவ்வபோது ஊர் நிலையைப் பார்க்க நகர் 
வலம் போவது உண்டு. ஒருமுறை அவர் அந்த ஊரை பார்க்க தனது பல்லக்கில் நகர் 
வலம் வந்து கொண்டு இருந்தபோது மாறா இலுப்பை என்ற ஊரை சேர்ந்த ஒரு சிவ 
பக்தர் அந்த  ஆலயத்திற்கு  தன் வீட்டு தோட்டத்தில் விளைந்திருந்த ஒரு குலை 
வாழைப் பழத்தை தனது தலையில் மூட்டையாகக் கட்டி வைத்துக் கொண்டு சென்றார். 
வழியில் அவரைக் கண்ட சுப்ரமணிய முதலியார் பல்லக்கை அவன் அருகில் சென்று 
நிறுத்தச் சொல்லி விட்டு அவற்றை எங்கு கொண்டு செல்கிறாய் என்று அவனிடம் 
கேட்க அவனும் தான் அதை ஆலயத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூற, சுப்ரமணிய 
முதலியார் சற்றும் கவலைப்படாமல் அதில் இருந்து இரண்டு வாழைப் பழங்களை 
பிய்துத் தின்று விட்டு தனது ஊர்வலத்தைத் தொடர்ந்தார். அதைக்  கண்ட அந்த 
பக்தன் மனம் வருந்தினான். ஆலயத்துக்கு எடுத்துச் சென்ற வாழைப் பழத்தை 
ஆலயத்துக்கு செல்லும் முன்னரே முதலியார் எடுத்து சாப்பிட்டுவிட்டாரே என்று 
வருந்தினான். அன்று இரவு அதே வருத்தத்துடன் தூங்கியவனின் கனவில் வந்த 
ஈஸ்வரர் ' இதற்கு நீ ஏன் கவலைப்படுகிறாய், அந்த இரண்டு பழங்களையும் 
நான்தான் தின்றேன். அது சுப்ரமணிய முதலியார் வயிற்றில் செல்லவில்லை' என்று 
கூற அவன் ஆனந்தம் அடைந்தான். 
ஒட்டு சுட்டான் செல்லும் பாதையில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் கெடுரமாறு என்ற ஊரில் கிரி நிலை என்கின்ற வற்றாத நீக் குளம் ஒன்று உள்ளது. அதில் ஆடி அம்மாவாசை நாளில் மக்கள் நீராடுவார்கள். ஒரு முறை எப்போதும் போல மக்கள் அங்கு சென்று இருந்தபோது கொள்ளையர்கள் சிலர் பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்து விட்டுச் சென்றார்கள். அதை ஊர் மணியக்காரரான சுப்ரமணிய முதலியாரிடம் சென்று முறை இட்டார்கள். அவர் மிகவும் சாமர்த்தியக்காரர். தனது சாதூர்யத்தினால் வந்திருந்த கொள்ளையர்கள் யார் என்பதைக் கண்டு பிடித்து அவர்களை கைது செய்ய வைத்து தண்டனையையும் பெற்றுத் தந்தார். ஆகவே அவர்களில் முதல் எதிரியின் மருமகன் முதலியார் மீது வஞ்சம் தீர்த்தக் கொள்ள சமயம் பார்த்துக் காத்திருந்தான். யாழ்பாணத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரைக் கொல்ல அவன் திட்டம் இட்டு இருந்ததை எப்படியோ முதலியார் கண்டு பிடித்து விட்டார். ஆகவே ஊர் திரும்பும் போது ஒரு குஷ்ட ரோகியைப் போல வேடம் தரித்து வந்து அவன் திட்டத்தை முறியடித்து விட்டார் என்றாலும், அவனிடமிருந்து ஆபத்து விலகவில்லை. அவர் அம்மாவாசையில் ஊரை விட்டு எட்டு கிலோமீட்டர் தொலைவு இருந்த கெடுரமாறு கிரி நிலை தீர்த்தத்தில் சென்று குளித்து விட்டு பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு திரும்புவது வழக்கம் என்பதினால் அப்போது பார்த்துக் கொள்கிறேன் என்று அந்த அம்மாவாசைக்கு காத்திருந்தான். சாலையோ சீரானது அல்ல. காட்டுச் செடியுயம், புதர்களும் மண்டிக் கிடக்கும். அவனது எண்ணத்தையும் தெரிந்து கொண்ட முதலியாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஆகவே ஈஸ்வரரின் ஆலயத்துக்கு சென்று தன்னை காப்பாற்றுமாறு வேண்டினார். அன்று இரவு அவர் அவர் கனவில் வந்த ஈஸ்வரர், ஊருக்கு அருகிலேயே கற்சிலை என்ற இடத்தின் அருகில் கருடனால் தோற்றுவிக்கப்பட்ட நீர் நிலை ஒன்று உள்ளது என்றும், அதுவும் வற்றாத நீர் நிலை, அதில் தீர்தமாடி தர்ப்பணம் செய்தாலும் அது கிரி நிலையில் உள்ள தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்றும் கூறி விட்டு மறைந்தார். அதுவரை அந்த நீர் நிலையின் புந்தம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. அது முதல் உள்ளூர் மக்கள் அந்த கிரி நீர் நிலைக்குப் பதில் கருட தீர்த்தத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டார்கள். கருட தீர்த்தத்தின் விசேஷம் என்ன என்றால் அந்தப் பகுதியில் உள்ள பூமி எத்தனை வறண்டு போனாலும், அந்த நீர் நிலையில் உள்ள நீரும் வற்றியதும் இல்லை, குறையவும் இல்லை. காரணம் அது ஈஸ்வரரின் அருள் பெற்றத் தீர்த்தம் என்று நம்புகிறார்கள்.

ஆலய திருப்பணி
இந்த 
ஆலயத்தில்  நாள் ஒன்றுக்கு மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் ஒரு 
விசேஷம் என்ன என்றால் அந்தப் பகுதி யுத்தகளமாக  இருந்த போதும், தினமும் 
நடைபெற்றுக் கொண்டு இருந்த மூன்று கால பூஜைகள் நிறுத்தப்படவில்லை.  யுத்த 
குண்டு வீச்சுகளினால் ஆலயம் அழியவும் இல்லை.  சுவர்கள் மட்டுமே சிறிதளவு 
சேதம் அடைந்திருந்தது. அதை சீர்படுத்தவே  யுத்தம் முடிந்ததும் அதற்கு 
கும்பாபிஷேகம் நடந்துள்ளது.   மூன்று கால பூஜையும் தடை இல்லாமல்  இன்று வரை
 தொடர்ந்து கொண்டு உள்ளது . தற்போது ஆலயம் விரிவாக்கப்பட்டு திருப்பணிகள் 
நடைபெற்று வருகின்றன.  
 ஆலய தொடர்பு முகவரி
 
தான் தோன்றி ஈஸ்வரர் ஆலயம்
ஒட்டுசுட்டான், ஸ்ரீ லங்கா
அலுவலக தொலைபேசி : ஸ்ரீ லங்கா 0217915574
  
தான் தோன்றி ஈஸ்வரர் ஆலயம்
ஒட்டுசுட்டான், ஸ்ரீ லங்கா
அலுவலக தொலைபேசி : ஸ்ரீ லங்கா 0217915574

கருத்துகள்
கருத்துரையிடுக