Sri Chakara Pooja and Sri Panjashari manthra

ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ சக்கர பூஜை மற்றும் ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரி மந்திர மகிமை சாந்திபிரியா இது ஒரு புராணக் கதையில் வரும் செய்தி . பராசக்தியை 'பஞ்சதசாஷரி ' என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து அவளை பூஜிப்பதின் மூலம் உண்டாகும் நன்மையைப் பற்றி எடுத்துரைக்கும் கதை. முன்னொரு காலத்தில் தேவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு இருந்த திரிபுராசுரனை சிவபெருமான் வதம் செய்த பின்னரும் அவர் கோபமாகவே இருந்தார். அந்த அசுரனை வதம் செய்ய ஏற்படுத்திக் கொண்ட கோபம் மறையவே இல்லை. அது நீடித்தால் பரசுராமர் ஷத்ரியர்களை அழிக்கக் கிளம்பியது போல தமது இனத்தையே சிவபெருமான் அழித்து விடுவார் எனக் கலங்கினார்கள் அசுரர்களிலும் இருந்த பல நல்லவர்கள். ஆகவே அந்த அசுரனின் சந்ததியினர் விஷ்ணுவிடம் சென்று சிவபெருமானின் கோபம் தணிய என்ன செய்யலாம் எனக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் வழி தெரியாமல் நாரதரையே அழைத்து அதற்கு ஒரு உபாயம் கூறுமாறு கேட்டார். நாரதர் யோசனை செய்தார். அவர் கூறினார் ' பிரபோ, இதற்கு ஏன் கவலைப் படவேண்டும், ஸ்ரீ தேவியின் மகா மந்திரத்தை உச்சரித்து ஸ்ரீ சக்கர பூஜையை செய்து விட்டால்...