Two different Temples in Bangalore

சாந்திப்பிரியா சமீபத்தில் பெங்களூரில் இரண்டு வித்தியாசமான ஆலயங்களைப் பார்த்தேன். முதலாவது ஆலயத்தில் 108 வினாயகர் சிலைகள் பிரமிட் போல நிறுவப்பட்டு உள்ள படியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அவற்றை ஆகம முறைப்படி 108 வினாயக உருவங்களுக்கு உண்டான மந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அவை 108 பிள்ளையார் தத்துவத்தை பிரதிபலிக்கிறதாம். அதை 108 பிள்ளையார் ஆலயம் என்று கூறுகிறார்கள். அந்த ஆலயம் எழுந்ததின் பின்னணியும், வரலாறும் கிடைக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னால் குமாரசாமி லேஅவுட் எனும் இடத்தில் கட்டிடங்கள் எழும்ப அங்கு சாலைகள் போடப்பட்டதாம். அப்போது சாலை அமைக்கும் ஒரு ஒப்பந்தக்காரரின் கனவில் வினாயகர் தோன்றி அங்கு தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறியதாகவும், அவரும் அவர் கனவில் வந்தது போலவே அங்கு ஆலயம் அமைத்ததாகவும் சிலர் கூறினார்கள். ஆனால் அந்த ஆலயம் எழுந்ததற்கான வேறு எந்த வரலாறும் கிடைக்கவில்லை. அந்த ஆலயத்தின் பண்டிதரை அந்த ஆலயத்தின் மகிமையைக் குறித்துக் கேட்டபோது அவரால் விஷேசமாக எதையும் கூற முடியவில்லை என்றாலும், கர்னாடகத்தில் 108 வினாயகர் சிலைகளை கருவறை சன...