இடுகைகள்

Two different Temples in Bangalore

படம்
சாந்திப்பிரியா சமீபத்தில் பெங்களூரில் இரண்டு வித்தியாசமான ஆலயங்களைப் பார்த்தேன். முதலாவது ஆலயத்தில் 108 வினாயகர் சிலைகள் பிரமிட் போல நிறுவப்பட்டு உள்ள படியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அவற்றை ஆகம முறைப்படி 108 வினாயக உருவங்களுக்கு உண்டான மந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அவை 108 பிள்ளையார் தத்துவத்தை பிரதிபலிக்கிறதாம். அதை 108 பிள்ளையார் ஆலயம் என்று கூறுகிறார்கள். அந்த ஆலயம் எழுந்ததின் பின்னணியும், வரலாறும் கிடைக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னால் குமாரசாமி லேஅவுட் எனும் இடத்தில் கட்டிடங்கள் எழும்ப அங்கு சாலைகள் போடப்பட்டதாம். அப்போது சாலை அமைக்கும் ஒரு ஒப்பந்தக்காரரின் கனவில் வினாயகர் தோன்றி அங்கு தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறியதாகவும், அவரும் அவர் கனவில் வந்தது போலவே அங்கு ஆலயம் அமைத்ததாகவும் சிலர் கூறினார்கள். ஆனால் அந்த ஆலயம் எழுந்ததற்கான வேறு எந்த வரலாறும் கிடைக்கவில்லை. அந்த ஆலயத்தின் பண்டிதரை அந்த ஆலயத்தின் மகிமையைக் குறித்துக் கேட்டபோது அவரால் விஷேசமாக எதையும் கூற முடியவில்லை என்றாலும், கர்னாடகத்தில் 108 வினாயகர் சிலைகளை கருவறை சன...

Siva Kavasam - 2

படம்
  அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித், துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம் தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க (பிரபஞ்சத்தின் மூல நாயகர், ஞான வடிவம், ஆனந்த ஸ்வரூபிணி, பூமி முதல் விண்ணுலகம் வரை பறந்து கிடக்கும் உயிர் அணுக்களின் ஜீவன், மரணம் அடைந்தப் பின் எம்மை உம்முள் அட்கொள்பவரான சிவபெருமானே, இந்த பூமியில் எந்த தீமையும் என்னை சூழாமல் காத்து அருள வேண்டும் ) குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித் தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன் நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க. (ஓஹ் என்ற ஒலியை எழுப்பி ஓடிவரும் நீரைப் போலல்லாது, மௌன நீரோடையாக பயிர்களில் பாய்ந்து, உணவைத் தந்து உயிர்களைக் காப்பவரே, அலையலையாக வரும் மேகக் கூட்டத்தின் வழியே மழையாக வந்து மலை மீது பொழி ய , பாய்ந்து வரும் அந்த நீரின் வெள்ளத்தில் விழுந்து இறந்து விடாமல் எம்மை நீங்களே  காத்து அருள வேண்டும். ) கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீ...

Siva Kavacham -1

படம்
முன்னுரை பொதுவாகப் பலரும் ஷண்முக கவசம், லலிதா சஹாஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் கந்தர் சஸ்டி கவசம் போன்றவற்றைத்தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றைப் போலவே சிவகவசம் என்பதும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது. சிவகவசம் என்பது பாண்டிய மன்னன்னான வராமதுங்கர் என்பவர் காலத்தில் அவரால் இயற்றப்பட்ட செய்யுளாகும். இதை விடபமுனி எனும் முனிவர் பத்ராயு எனும் ஒரு அரசகுமாரனுக்கு அருளுபதேசம் செய்ய அதை வராமதுங்கர் என்ற பாண்டிய மன்னன் தாம் எழுதிய சிவபெருமானின் புண்ணியக் கதைகளை எடுத்துரைக்கும் பிரம்மோத்ர காண்டம் எனும் நூலின் ஒரு பகுதியாக செய்யுள் வடிவில் இயற்றினார் என்பதும் செய்தியாகும். தென் காசிப் பாண்டியர் எனப்படும் பாண்டிய மன்னர்களில் ஒருவரான வராமதுங்கர் அபிராம சுந்தரேசன் மற்றும் வீர பாண்டியன் என்ற பெயர்களையும் பெற்று இருந்தவர். ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகளுடன் ஒன்றாக சேர்ந்தே இருந்த இலங்கையில் இருந்த நல்லூரை ஆட்சி செய்து வந்தவர். விஜயநகர் நாயக்கர்கள் ஆட்சியில்  இருந்தபோது இந்த பாண்டிய மன்னர்கள் அவர்கள் வசம் இருந்த ராஜ்யங்களில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். தம...

Kathaayi Amman / கருணைமிகு காத்தாயி

படம்
கருணைமிகு காத்தாயி சாந்திப்பிரியா  சித்தாடி காத்தாயி அம்மன் எங்கள் குல தெய்வம். தஞ்சாவூரில்   கோவிலூரில் உள்ள காத்தாயி அம்மனின் இன்னொரு கோவிலைப் பற்றி எனக்கு ஒருவர் அனுப்பி இருந்த தகவலை காத்தாயி அம்மனை வழிபடும் பக்தர்களின் பார்வைக்காக மட்டும் அல்ல வள்ளி தேவியை வணங்கித் துதிக்கும் பிற பக்தர்களுக்காகவும் இங்கு பிரசுரம் செய்துள்ளேன்.  இந்த ஆலயத்தைக் கட்டும்போது  சித்தாடி ஆலயத்தில் இருந்து  வரப்பட்ட மண்ணை சிறிது கொண்டு வந்து அதை சேர்த்தே  உள்ளார்கள். காத்தாயி அம்மன் என்பவர் முருகப் பெருமானின் இரண்டாவது மனைவியும், தேவேந்திரனின் மகளாகப் பிறந்த, அதற்கு முன்னர் மகாவிஷ்ணுவின் இரண்டு பெண்களில் ஒருவராக இருந்தவருமானவர்.  ஒரு சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ளவே வள்ளி தேவியானவள் பூமியில் வந்து வேடர் குலத்தில்  பிறந்து முருகனுக்கு மனைவி ஆனவர்.  அநேக கிராமங்களில்  அம்மன் வழிபாடு என்பது  மிகவும் பரவலானது. அம்மனை காளி தேவி, மாரிஅம்மன், பிடாரி, பச்சை, காத்தாயி, பேச்சிச்சாயி, ரேணுகா தேவி போன்ற பல்வேறு பெயர்களில் வழிபடுகிறார்கள்....

Siththar Gurusaami ammaiyaar

படம்
புதுவையில் உள்ள சித்தர் சமாதிகளில் குருசாமி அம்மையார் எனும் பெண் சித்தரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் யார், எங்கிருந்து வந்தார் மற்றும் அவருடைய வாழ்கைக் காலம் போன்றவை எதுவுமே யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு குருசாமி அம்மையார் என்று பெயர் வந்ததின் காரணமும் தெரியவில்லை. அவர் எழுதி உள்ளதாக  கூறப்படும் ஒரு உயிலில் அவர் குருசாமி அம்மையார் என்று கையெழுத்து போட்டு உள்ளதினால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். அவர் காலம் 1800 ஆம் ஆண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என்கிறார்கள். அவர் புதுவைக்கு வந்த காலத்தில் அந்த மானிலம் பிரான்ஸ் நாட்டவர் ஆட்சியில் இருந்தது. அவர் புதுவையில் வந்து தங்கி இருந்து அற்புதங்களை நிகழ்த்தி சமாதியும் அடைந்துள்ளார் என்ற அளவில் மட்டுமே அவரைக் குறித்து அனைவரும் அறிந்துள்ளார்கள். இந்த பெண் சித்தரின் சமாதி ஆலயம் கண்டமங்கலம் மாவட்டத்தில் விழுப்புரம் செல்லும் நெடும்சாலையில் அரியூர் எனும் சிற்றூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் உள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மிளகாயை அரைத்து அதை தண்ணீருடன் கலந்து அந்த தண்ணீரை அந்த ...

Garudazhvaar -4

படம்
4 ஒரே புழுதி மண்டலமாக இருந்த இடத்தில் வெளியில் வந்திருந்த நாகங்கள் இரண்டும் கண்களில் புழுதி போகாமல் இருக்க ஒரு ஷணம் கண்களை மூடிக் கொள்ள அதுவே தருமணம் எனக் காத்திருந்த கருடன் வேகமாக கீழே பறந்து வந்து அந்த நாகங்களை அப்படியே தனது அழகினால் கொத்திக் கொண்டு வெளியில் வந்து அவர்களைக் கடித்துத் துப்பி விட அவை இரண்டும் மடிந்து விழுந்தன. சற்றும் தாமதிக்காத கருடன் அந்த ராட்டினத்தின் மையப் பகுதிக்குச் சென்று பாலகியா முனிவர்கள் கொடுத்திருந்த சக்தியைப் பயன்படுத்தி தன் உடம்பை மிகச் சிறியதாக்கிக் கொண்டு புழுதி மண்டலம் இருந்தபோதே  உள்ளே நுழைந்து ராட்டினத்தின் அடிப் புறத்தில் இருந்த பல் சக்கரத்தில் ( Gear ) ஒரு கட்டையை வைத்து ராட்டினத்தை நிறுத்தி விட்டு அதன் அடிப்பகுதியை உடைத்து எறிந்தது.  அதன் பின் அமிர்த கலசத்தை வெளியில் எடுத்துக் கொண்டு வந்தது. கருடனை எதிர்க்க வந்தவர்களை தன் சக்தி மிக்க இறகுகளினாலும் கால் நகங்களினாலும் கீறிக் குதறிக் கொன்றது. அதன் பராக்கிரமத்தை தாங்க முடியாமல் போன தேவ கணங்கள் அங்கிருந்து ஓடிச் சென்று இந்திரனிடம் முறையிட்டன. ஓடோடி அங்கு வந்...

Garudazhvaar - 3

படம்
3 அவர்கள் ஏற்கனவே இந்திரனை பழி தீர்ப்பதற்காக பல காலமாக காத்து இருந்தவர்கள். பாலகியா என்ற அந்த முனிவர்களுக்கு இந்திரனின் மீது ஏன் கோபம்? அதற்கு பின்னணிக் கதை உண்டு. ஒருமுறை தக்ஷப்ரஜாபதி ஒரு பெரிய யாகம் செய்தார். அப்போது காஷ்யப முனிவர் தன் சார்ப்பில் அந்த யாகத்துக்கு 60000 க்கும் மேற்பட்ட பாலகியா முனிவர்களை அனுப்பினார். அவர்கள் தோற்றத்தில் குள்ளமானவர்கள். அந்த யாகத்துக்கு தன் சார்ப்பில் இந்திரனும் பல முனிவர்களை அனுப்பி இருந்தான். தன்னுடைய பெருமையை பறை சாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இந்திரனும் அனைத்து வனங்களில் இருந்தும் யாகத்துக்குத் தேவையான விறகுகளை எடுத்துப் போய் விட்டதினால் பல வனங்களிலும் தேடி அலைந்தும் அந்த பாலகியா முனிவர்களுக்கு யாகக் கட்டைகள் கிடைக்காமல் வெறும் கையுடன் யாகசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது.  அப்படி அவர்கள் சென்றபோது யாகக் கட்டைகள் எதையும் கொண்டு செல்ல முடியாமல் வெறும் கையுடன் யாகத்தில் கலந்து கொள்ள வந்த அவர்களை கண்டு இந்திரன் எள்ளி நகையாடினான். அதனால் கோபமுற்ற அந்த முனிவர்கள் யாகத்தில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பினார்கள். அப்போது...