Village Deities - 31

கிராம தேவதைகள் - 31 சமண மலை ஐயனார் ஆலய முகப்பு கீழகுயில்குடி சமணமலை ஐயனாரும் கருப்பசாமியும் [ Original Article in English by : P.R. Ramachandar Translated into Tamil by : Santhipriya ] மதுரை தேனீ சாலையில் மதுரையில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளதே கீழ்குயில்குடி கிராமம். சமண மலையின் அடிவாரத்தில் உள்ளது இந்த ஊர். அங்கு ஒரு காலத்தில் ஜைன மதம் தலை தூக்கி நின்றது . அவர்கள் சித்திரங்களை கொண்ட பல குகைகளை செய்து உள்ளனர். அதன் அருகில் உள்ளதே வடிவேல்கரை என்ற கிராமம். ஒரு காலத்தில் அந்த மலை அடிவாரத்தில் ஐயனார் ஆலயமும், மலைக்கு மேல் கருப்பண்ணசாமி ஆலயமும் இருந்தது. அந்த காலத்தில் மதுரையில் முகாமிட்டு இருந்த ஆங்கிலேயர்கள் தினமும் குதிரையில் ஏறிக் கொண்டு செல்லும்போது அந்த ஆலயத்தை பற்றி அநாகரீகமாக எதையாவது உரக்கக் கூவிக் கொண்டு ரவுடிகளைப் போலச் செல்வார்கள். அதைக் கண்ட கருப்பண்ணசாமிக்கு கோபம் வந்தது. ஆகவே ஒருநாள் அவர்கள் குதிரையில் செல்லும்போது மலை பக்கத்தில் அவர்களை வழுக்கி விழ வைத்து அடிபட வைத்தார் . முதலில் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஆங்கிலேயர்...