Thanks Mr Pattabiraman

நன்றி

இதுவரை எனக்கு அறிமுகம் இல்லாதவரான திரு பட்டாபிராமன் ( Pattabi Raman <vijayakoti33@gmail.com) என்பவர் மரகதம் அம்மையாரைப் பற்றி நான் எழுதி இருந்த கட்டுரைக்கு பதிலாக கீழ் உள்ள கவிதையை அவர்  எனக்கு அனுப்பி உள்ளார்.  அதை அனுப்பி உள்ள அதே படத்துடன் அப்படியே வெளியிடுகிறேன். அவருக்கு என் நன்றி.  - சாந்திப்பிரியா 
 
 
 
மரகதவல்லி மீனாட்சி
மாங்காட்டில் உறையும் காமாட்சி
காசியில் வதியும் விசாலாட்சி

தந்தைக்கு உபதேசம் செய்தான்
முருகன் சுவாமிநாதனாக

தாயோ வல்லியாய் உருவெடுத்து வந்தாள்
தணிகை நாதனிடம் வந்தமர்ந்து
தத்துவ உபதேசம் பெற்றாள் போலும்

பாட்டினிலே வருவான் முருகன்
பல்லவியாய் வந்தமர்ந்தான்
என்று பாட்டினிலே வந்தான்
முருகன் மரகத வள்ளிக்கு

அவளின் உள்ளம் முருகனை
குறித்து உருகியதைப்போல்
உள்ளம் உருகுதையா என்ற
பாடலை பலமுறை கேட்டதுண்டு
நானும் முருகனின் நினைவில்
திளைத்து இன்புற்றதுண்டு.

பக்தி பரவசம் அடைந்தேன்
முருகனின் அடியாளின்
சரிதை படித்து
TR Pattabiraman

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Kudai Swamigal -E

Vasanthapura Temple ( E)