Sree Kaliga Durga Parameswari Temple
ஸ்ரீ காளிக துர்கா பரமேஸ்வரி ஆலயம்
சாந்திப்பிரியா
ஸ்வேதா ஷேத்திரம் எனப்படும் BEL லேயவுட்டின் உள்ளே உள்ள ஆலயமே ஸ்ரீ காளிக
துர்கா பரமேஸ்வரி ஆலயம். அந்த ஆலயத்தில் ஸ்ரீ காளிக துர்கா பரமேஸ்வரியைத்
தவிர மகா கணபதி விஜய துர்க்கை, நர்தக கிருஷ்ணர், ஆஞ்சநேயர், நரசிம்மர்,
சனீஸ்வரர், சுப்பிரமணியர், நவக்கிரகம் மற்றும் பைரவிக்கும் சன்னதிகள் தனித்
தனியே உள்ளன. பைரவியின் சன்னதிக்கு அடுத்து உள்ள சன்னதியில் தங்கப் பல்லி,
வெள்ளிப் பல்லி இரண்டும் சுவற்றில் காட்சி தர, நடுவில் சிறிய மேரு மீது
லஷ்மி வீற்று இருக்க சுற்றிலும் அஷ்ட லஷ்மிகளும் உள்ளனர்.
பைரவி
இந்த ஆலயத்துக்கு சதாசிவ நகர்
போலிஸ் நிலைய சாலையில் சென்றவண்ணம் ராமையா மருத்துவமனையை தாண்டிச் சென்று
மின் ரோடு வந்ததும் இடதுபுறம் சென்றால் அந்தப் பாதை வித்யாரன்யபுரத்துக்கு
நம்மை அழைத்துச் செல்கிறது. ஆலயத்துக்கு முன்னாள் சுமார் ஒரு கிலோ மீட்டர்
தூரம் பாதை வேலைகள் நடப்பதினால் சீராக இல்லை என்றாலும் அந்த ஆலயத்துக்குச்
செல்ல நல்ல சாலை உள்ளது.
ஆலய விலாசம்
Sri Durga Parameshwari Temple
Durgadevi Layout, Thindlu,
Vidyaranyapura,
Bangalore - 560097.
Karanataka
Phone : +91-80-23640048
Email:
info@parameshwaritemple.org
Sri Durga Parameshwari Temple
Durgadevi Layout, Thindlu,
Vidyaranyapura,
Bangalore - 560097.
Karanataka
Phone : +91-80-23640048
Email:
info@parameshwaritemple.org
கருத்துகள்
கருத்துரையிடுக