Kārttikeya worship in Bengal
மேற்கு வங்காளத்தில் 
கார்த்திகேய வழிபாடு 
சாந்திப்பிரியா
(Read original article in English in: Kārttikeya worship in Bengal )
சாந்திப்பிரியா
(Read original article in English in: Kārttikeya worship in Bengal )
( இந்த கட்டுரை 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 
சர்வதேச மாநாட்டின் ஸ்கந்த முருகன் கருத்தரங்கில்
D .சீதாலட்சுமி விஸ்வநாதன் என்பவரால் சமர்பிக்கப்பட்டுள்ளது )
D .சீதாலட்சுமி விஸ்வநாதன் என்பவரால் சமர்பிக்கப்பட்டுள்ளது )
     மேற்கு வங்கத்தில் அறுவடைக் காலங்களில் கொண்டாடப்படும்   விழாக்களில் செழுமையான அறுவடை நடைபெற அருள் புரியும் கடவுளாகவே முருகன்   கார்த்திகேயக்  கடவுள் வணங்கப்படுகிறார்.   தேவர்களின் படைத் தலைவனாக  இருந்து தாரகாசுரனை அழித்தவர்   என்று புராணங்களில் கூறப்படும் கடவுளைப்  போன்றவரே  மேற்கு வங்கத்தின் கார்த்திகேயர். இருவரின் பெயர்களும் ஒன்றாகவே  இருப்பினும் அவர்களது வரலாறு வெவ்வேறானது.  மேற்கு வங்கத்தில் கார்த்திகை  மாதத்தில் அறுவடை துவங்கும் முன்னர் கார்த்திகேயர் கடவுளாக கருதப்பட்டு  வணங்கப்படுகிறார். 
அறுவடை முடிந்தவுடன் கொண்டாடப்படும் பண்டிகையான  'பவுஷ்' என்பதை டிசம்பர்-ஜனவரி மாதத்தில் வங்கத்தில் கொண்டாடுகிறார்கள்.   அந்த நேரத்தில் பெரிய திருவிழா மற்றும் கேளிக்கைகள் நடைபெறுகின்றன.   புதிதாக அறுவடை செய்த அரிசியை ஒரு மூலையில் கொட்டி வைத்து ஜனவரி மாதம் 15  மற்றும் 16 ஆம் தேதிகளில் 'புஷ்ப சங்கராந்தி' என்ற  பெயரில் வீட்டில் உள்ள  பெண்கள் அதற்கு பூஜை செய்து கொண்டாடுகிறார்கள். அது போலவே முதல் அறுவடையின்  போதும் அந்த தினத்தை புனித நாளாகக் கொண்டாடி  இனிப்புக்கள் மற்றும் கார  வகை  பண்டங்களை செய்து குழந்தைகளுக்கு தருகிறார்கள்.
கார்திகேயப் பெருமான் வழிபாட்டில் வயதான மற்றும் இளம் பெண்கள் பங்கேற்கின்றார்கள். அந்த வழிபாட்டில் நன்கு பயிற்சிப் பெற்ற வயதான மூதாட்டிகள் அல்லது பெண்கள் தலைமையில் கூடும் இளம் பெண்கள் சில சடங்குகளை செய்கிறார்கள். ஒருமுறை அந்த சடங்கை செய்யத் துவங்கி விட்டால் அந்த சடங்கை துவக்கிக் கொண்ட பெண்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த சடங்குகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். ஆனால் அந்த சடங்குகள் எளிமையாக அமைந்துள்ளன.

தமது வயல்களில்  அறுவடைநல்லமுறையில்  நடக்க வேண்டும், தடங்கல் இன்றி செழுமையாக நடக்க  வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டப் பின்  துவக்கப்படும் அந்த  சடங்குகள் நல்ல முறையில் நடைபெற வேண்டுமே என்ற  ஒருவித மனக் கலக்கத்துடன்  நடத்தப்படுகின்றன. வழிபாட்டு தினத்தில் சடங்கு துவங்கும் முன் அறுவடை செய்த  நெல்லை ஒரு மண் பாத்திரத்தில் நிரப்பி அந்த மண் பாத்திரத்தை ஈரமான அரிசி  மாவினால் கோலமிட்ட இடத்தின்  மீது வைத்து , மண்  பாத்திரத்தின் மீது   சோழிகள், முளை விட்ட தானியங்கள், நுனிக் கரும்பு, அந்த பருவத்தில்  கிடைக்கும் கறிகாய்கள், பழ வகைகள் மற்றும் உலர்ந்த பாக்குகள் போன்றவற்றை  கட்டி வைத்து அலங்கரித்தப் பின் பூஜைகளை துவக்குவார்கள்.
அலங்கரிக்கப்பட்ட அந்த மண் பாத்திரங்களை களிமண்ணால் செய்யப்பட்ட கார்த்திகேயர் போன்ற உருவச் சிலைக்கு முன்னால் வைத்து, இரவு முழுவதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கும் வகையில் நெய் விளக்கை அதன் முன் ஏற்றி வைப்பார்கள். அந்த மண் பொம்மைக்குப் பின் புறத்தில் ஒரு மரத் தடியை நட்டு வைத்து அதில் பழங்கள், காய்கள், பாக்குகள் மற்றும் வாழை எலுமிச்சம் பழங்களை கட்டி வைத்து இருப்பார்கள். பண்டிதர் வந்து முக்கிய பூஜைகளை ஆரம்பித்து மாலைக்குள் பூஜையை முடித்து வைப்பார். அந்த வழிபாட்டில் கலந்து கொள்ளும் பெரும்பாலோர்கள் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்களே. விரதம் இருக்கும் பெண்கள் இரவு முழுவதும் அந்த மண் பொம்மைக்கு முன்னால் கண் விழித்து அமர்ந்தபடி நாட்டுப் பாடல்களைப் பாடியபடி இருப்பார்கள். அந்த நாட்டுப் பாடல்களில் இது ஒன்று:

பகீரே அரே ரீ பாபு ரீ 
கெட்டர் பகீ னா தான் கயிலி
உய்தா உய்தா தான் கே பொயதா பொய்தா ரங் சே
ஷோரய் னோலர் ஷக் பாஷ்பீ
இக் பபுபை தலியா அர் இக் பபுயில் கலியா
ஆர் இக் புபிர் கோபலி திலக்
குல் நா சிலிடே தக் தியா கோய ஜாய்
படுத் போடிசி ரத்தார் கேடீ
அரே ரே கேடார் பாகி நஹார் கேயிலே
கெட்டர் பகீ னா தான் கயிலி
உய்தா உய்தா தான் கே பொயதா பொய்தா ரங் சே
ஷோரய் னோலர் ஷக் பாஷ்பீ
இக் பபுபை தலியா அர் இக் பபுயில் கலியா
ஆர் இக் புபிர் கோபலி திலக்
குல் நா சிலிடே தக் தியா கோய ஜாய்
படுத் போடிசி ரத்தார் கேடீ
அரே ரே கேடார் பாகி நஹார் கேயிலே
இந்தப் பாடல்  அங்குள்ள நிலங்களில் வந்து பயிர்களை உண்ணும் பறவைகள்  மற்றும் விலங்குகளை விரட்டி அடிக்குமாம் . சில சமயங்களில் விரதம் இருக்கும்  பெண்கள் தங்கள் கைகளில் வில் அம்புகளை ஏந்தியபடி வயலில் அமர்ந்து  கொண்டிருந்தபடி அங்கு  மரத் தட்டுகளில் வைக்கப்பட்டு உள்ள பழங்கள்,  பாக்குகள், வாழை, எலுமிச்சை முதலியவற்றை திருடிச் செல்லும் விலங்குகளை  பயமுறுத்தி துரத்துவார்கள். அவர்கள் உறங்குவது இல்லை. விடியற்காலை  துவங்கியதும் பாடல்களைப் பாடியபடியே அந்தப் பெண்கள் விதை விதைப்பது, அறுவடை  செய்வது போன்றவற்றை செய்து கொண்டு இருப்பார்கள். காலை நன்கு விடிந்ததும்  அங்குள்ள மண் பாத்திரங்களை  எடுத்துக் கொண்டு போய்  அதில் உள்ள  பண்டங்களைக் கொண்டு சமையல் செய்து தமது  குடும்பத்தினருக்குத் தருவார்கள்.  அந்தப் பண்டிகையைக் குறிக்கும் வகையில் அரிசி மாவு கோலங்களும்  போடுவார்கள். கார்திகேயப் பெருமானின் சிலையை எடுத்துக் கொண்டு போய்   நதிகளில் அதை  கரைப்பது இல்லை. மாறாக அதை தத்தம்  வீட்டு தோட்டத்திலோ  அல்லது வயல்களிலோ வைத்து விடுவார்கள். அது பயிர்களைக் காப்பாற்றும் என்றும்  நம்புகிறார்கள்.
இயற்கையை மாசு படுத்தாமலேயே விவசாயத் தொழிலை செய்தபடி  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அறுவடை காலங்களில் பயிர்களை பாம்புகள்,  பெருச்சாளிகள் போன்றவை உண்டு   நாசம் செய்யாமல் இருக்கவும், செழிப்பான  அறுவடை நடக்கவும் அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டு கார்த்திகேயர்  வணங்கப்படுகிறார். அறுவடை நடக்க அருள் புரியும் கார்த்திகேயக் கடவுளுடன்  உள்ள சேவல் மற்றும் மயில் போன்றவை ஒன்று சேர்ந்து வளத்தையும், அனைத்தும்  நல்லபடி நடக்க உதவுவதாகவும்  நம்புகிறார்கள். சேவலும் மயிலும் ஒரே இனத்தை  சேர்ந்தவையே  எனவும் அவற்றின் குணங்கள் என கீழுள்ளதை பட்டியலிட்டுக்  கூறுகிறார்கள்:
- எதிரிகளுடன் வீராவேசமாக சண்டை இடுதல்
 - விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருப்பது
 - அனைவருக்கும் நல்லதை கொடுத்தபடி இருப்பது
 - துன்பமுற்ற பெண்களுக்கு உதவுவது
 
- தாரகாசுரனுடன் யுத்தம் முடியும்வரை உறக்கத்தையே வென்றவர்.
 - தேவர்களின் படைத் தலைவராக இருந்தவர்.
 - தாரகாசுரனின் கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருந்த சுரபாலனை பத்திரமாக விடுதலை செய்து  கொண்டு வந்தவர்.
 
அழகின் உருவமான மயிலை வைத்துக் கொண்டு இருந்த கார்திகேயரை இளமையும்  அழகையும் கொண்டவர் என்று  எண்ணும் மணமாகாத பெண்கள் தனக்குக் கிடைக்கும்  கணவனும் அவரைப் போலவே இளமையும் அழகையும் கொண்டவராக இருக்க வேண்டும் என அவரை  வழிபடுகிறார்கள். மணமான ஆனால் மழலை செல்வம் அற்ற பெண்கள் தாம்   மழலை  செல்வம் பெற  அவரை வழிபடுகிறார்கள். அதனால்தானோ என்னவோ அங்குள்ள  விலைமாதர்கள் தங்களுக்கு அழகு வேண்டும் என்றும் , திருடர்கள் தமக்கு  வாழ்க்கையில் வளம் பெற வேண்டும் என்பதற்காகவும்  அவரை வழிபடுகிறார்கள்.
புராணங்களில் கூறப்பட்டு உள்ள கார்த்திகேயக் கடவுளின் குணங்களைப் போன்றே உள்ளவர் என்பதினால் அறுவடை நடக்க அருள் புரியும் கடவுளாக கார்திகேயரும் கருதப்பட்டு 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் அவரை வேண்டிக் கொண்டு கூட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. அவரை லஷ்மி, சரஸ்வதி மற்றும் விநாயகருடன் சேர்த்தே வழிபட்டார்கள். பெங்காலிகள் கார்திகேயரை ஒரு பிரும்மச்சாரி என்றே கருதி வழிபட்டார்கள். ஆனால் புராணங்களில் கூறப்படும் கார்த்திகேயக் கடவுளுக்கு தேவசேனா என்ற மனைவி உண்டு. தாரகாசுரனைக் கொன்றைப் பின் அவளை மணந்து கொண்டு விசாகா என்றப பெயர் கொண்ட மகனையும் பெற்றுக் கொண்டார். தேவி புராணத்தில் இது குறித்து கூறப்பட்டு உள்ளது. தேவி புராணத்தின்படி தேவசேனா தமது பக்தர்களுக்கு சஷ்டி தேவி என்றப பெயரில் அருள் புரிந்தார். பிரும்ம பைபர்த்தப் புராணமும் கார்திகேயரின் மகனான விசாகா பற்றிக் கூறி உள்ளது.
புராணங்களில் கூறப்படும் கார்த்திகேய கடவுளின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரை விலை மாதர்கள் வழிபடும் கடவுளாகவே இங்கு காண்கிறார்கள். புராணங்களில் காணப்படும் கார்த்திகேயர் தைரியசாலி, வெற்றி வீரர், பராக்கிரமசாலி என்று புகழ் பாடியவார்கள் இன்றோ இவரை அழகானவர், இளமையானவர், வீர்யம் தருபவர் என்ற கொச்சையான எண்ணங்களில் பார்க்கத் துவங்கியதினால் ஏற்பட்ட விளைவே அது. இப்படியாக அவரை மற்றக் கடவுளைக் காணும் பீடத்தில் இருந்து இறக்கி விட்டதனால் பெங்காலிகள் அவரை 'பாபு கார்த்திகேயா' என்றே அழைக்கின்றார்கள்.
கூட்டு வழிபாடுகளில் புராணங்களில் கூறப்படும் கார்த்திகேயர் துர்கா மாதாவுடன் சேர்ந்து வழிபடப்படுகிறார். துர்கையுடன் சேர்த்து அவருடைய சிலைகளை கடலில் கரைத்து விடுகிறார்கள். நல்ல அறுவடைக்கு அருள் புரியும் கார்த்திகேயர் நிலங்களின் செழிப்பிற்கும், வளத்துக்கும் வணங்கப் படுகிறார். அதுபோல பெண்கள் மழலை செல்வம் பெற்றிட வணங்கப்படும் கடவுளாகவும் காணப்படுகிறார். அவரை இங்குள்ளவர்கள் தேவை ஏற்படும்போது மட்டுமே பூஜித்தாலும் நடைமுறையில் செய்யப்படும் பூஜைகளில் அவரை பூசிப்பது இல்லை. கார்த்திகேயக் கடவுள் குறித்து இப்படியாக பிரார்த்தனை செய்து பூஜிப்பதாகக் கூறலாம்:

கார்த்திகேயன்  மஹாபாகன் மயூராபதி சன்ஸ்திதம்  
தபலா கங்கனா வர்ணபாங் ஸக்த்திஹஸ்தான் பரப்பிராதம்
திவிஷூஜங் ஷத்ரூ ஹன்தரான் நானானன்கரபூஷிதம்
பிரசன்னவதானன் தேவான்ஷாதன ஸ்த்துப்பிதம்
ஓம் கண கார்த்திகேயாய நமஹா
தபலா கங்கனா வர்ணபாங் ஸக்த்திஹஸ்தான் பரப்பிராதம்
திவிஷூஜங் ஷத்ரூ ஹன்தரான் நானானன்கரபூஷிதம்
பிரசன்னவதானன் தேவான்ஷாதன ஸ்த்துப்பிதம்
ஓம் கண கார்த்திகேயாய நமஹா

கருத்துகள்
கருத்துரையிடுக