India’s Chaunsat Yogini Temple and the Women of Angkor Wat

இந்தியா மற்றும் காம்போடியாவில் உள்ள  யோகினி ஆலயங்கள்
-- ஆராய்ச்சியாளரின் பார்வையில் --

சாந்திப்பிரியா  

கீழே  தரப்பட்டு உள்ள கட்டுரையும்  ஆலய சம்மந்தப்பட்ட கட்டுரை என்றாலும் இது சற்று வித்தியாசமானது. ஆலயங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பலனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் இதை படிக்கும் மற்றவர்களுக்கும்  அந்த காலங்களில் கட்டப்பட்டு உள்ள ஆலயங்களின் தன்மை, காரணம் போன்றவற்றை படித்து அறிந்து கொள்ளும்போது  வியப்பூட்டுவதாக இருக்கும். ஆகவே இந்த மாதிரியான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிலவற்றை அதை எழுதி உள்ளவர்களிடம் இருந்துப் பெற்று அவர்களின் அனுமதியுடன் மொழிபெயர்த்து  கீழே தந்து உள்ளேன்.  அவற்றை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். 
அனுமதிக்கு நன்றி: கென்ட் டேவிஸ்
The article published below is  somewhat different from other articles published in this blogger. This  article is published with the sole intention to make available  more material to the  persons engaged in the process of research and studies of temples. Other readers will be astonished to read various facts behind the construction of such temples.  I have  been able to obtain  some articles from those who has  authored them and  reproduced here  for the benefit of the  Tamil  reading public. This is however published with the  kind permission of the authors. Please offer your comments on this article.


Translated Article   /  மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை 

Original in English by :  KENT DAVIS          Translated into Tamil : Santhipriya
                http://WWW.devata.org
 

“கட்டிடக் கலையின் அடிப்படை தத்துவத்தை தகர்த்து எறிந்து கட்டப்பட்டுள்ள இங்குள்ள ஆலயங்களில் சக்தி தேவியின் ரகசியங்களைக் எடுத்துக் காட்டும் 64 யோகினி ஆலய நிழல்களே காணப்படுகின்றது. சக்தி தத்துவம் மேலும் பலமடைகின்றது.....''


துடிக்க வைக்கும் இந்திய நாட்டு தெய்வ  ஐதீகங்களைக் ஒப்பிட்டு அங்கோர் வாட் ஆலய பெண்களின் ரகசியங்களை வெளிக்கொண்டு வர இயலுமா ?
- கென்ட் டேவிஸ் (Kent Davis)
கம்போடியாவின் 'சியாம் ரீப்' எனும் இடத்தில் உள்ள இந்து ஆலயம்

கம்போடியாவின் (Cambodia)  அங்கோர் வாட்டில் (Angkor Wat) உள்ள 'சியாம் ரீப்'  (Siam reap) எனும் இடத்தில் காட்டுப் பகுதியில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள இந்துக்களின் ஆலயம் உலகின் மிகப் பெரிய மதச் சின்னத்தைக் காட்டும் கட்டிடம் . அது மட்டும் அல்ல இங்குள்ள 'க்ஹெமீர்' (Kmer) ஆலயம்  1000 ஆண்டுகளுக்கும் மேலாக 1796 பெண்களின் சிலைகளை தன்னுள் தக்க வைத்துக் கொண்டு உள்ளது என்பது  அதன் தனிச் சிறப்பு.

மிகவும் உயர்ந்த மற்றும் மிகவும் புனிதமான நிலையான பக்கன்
எனப்படும் காட்சியில் அங்கோட் வாட்டின் ஒரு தேவதை
(Photo: Kent Davis)
'அங்கோர் வாட்டில்' உள்ள இந்த பெண்களின் சிலைகள் யாரைக் குறிக்கின்றன, அவை அங்கு ஏன் வைக்கப்பட்டு உள்ளன என்பதற்கான காரணமோ இல்லை அவற்றின் தத்துவம்  என்ன என்பதும்  எவருக்கும் தெரியவில்லை. அத்தனை மாபெரும் வளாகத்துக்குள் எதற்காக இப்படிப்பட்ட பெண்களின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன என்பது மிகப் பெரிய மர்மமாகவே உள்ளது.
அங்கோர் வாட்டின் ஒவ்வொரு பெண்களின் சிலை அமைப்பும் வடிவமும் வெவ்வேறாகவே உள்ளன. அந்த சிலைகளில் காணப்படும் முக பாவங்கள், நகைகள், தலை முடி அலங்காரம், உடுத்தி உள்ள துணிகளின் அமைப்பு, கைகள் காட்டும் முத்திரை சின்னங்கள், அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் அவை அமர்த்தப்பட்டு உள்ள  இடங்கள் போன்ற அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டதாகவே காணப்படுகின்றன.
'க்ஹெமீர்'  நாகரீகம் பற்றி எந்த குறிப்புக்களோ அல்லது செய்திகளோ எழுதப்படவில்லை. ஆனால் அங்கு நிலவிய நாகரீகத்தின் ஓரளவு செய்தியை 'ஜுவு டகுவோன்' என்ற சீன தூதரின் குறிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.  அவர் அங்கோர் வாட் கட்டப்பட்டதிற்குப் பின் அதாவது 150 வருடங்களுக்குப் பிறகு அங்கு சென்று வந்தவர்.
'ஜுவு டகுவோன்' க்ஹெமீரில் இருந்தப் பெண்களைப் பற்றிய தமது அபிப்பிராயத்தை தெரிவிக்கத் தயங்கவில்லை. அரச மாளிகைகளில் காணப்பட்ட பெண்கள், அந்த நாட்டு வியாபாரங்களில் தான் பார்த்த பெண்கள் மற்றும் காமவெறி கொண்ட பார்வையுடன் மேலாடைகள் இன்றி நிர்வாணமாக குளித்துக் கொண்டு இருந்தப் பெண்கள் என பல வகைகளான பெண்களைப் பற்றிய செய்தியை விவரமாக அவர் எழுதி இருந்தாலும், 'ஜுவு டகுவோன்' அங்கிருந்த அற்புதமான ஆலயங்களில் மரியாதைக்குரிய காட்சிகளில் வடிவமைக்கப்பட்டு உள்ள பெண்களின் சிலைகளைப் பற்றி ஏன் எழுதி வைக்கவில்லை என்பதும் தெரியவில்லை.

தேவதா.ஆர்க் என்ற அமைப்பு க்ஹெமீர் நாகரீகத்தில் பெண்களின் பங்கு என்னவாக இருந்து இருக்கும் என்பதைப் பற்றியும், அவர்கள் யார் என்பதைப் பற்றியும் ஆராய்ந்து வருகின்றது. அது குறித்து இந்தியாவிலும் சில விவரங்கள் கிடைக்கலாம் எனவும் நம்புகின்றது.
இந்தக் கட்டுரை இந்தியாவின் யோகினிகள்  மற்றும் பெண் தெய்வங்களைப் பற்றி ஆராய்கின்றது. அங்கோர் வாட் ஏற்பட்ட காலத்தில் இருந்த க்ஹெமீர் மதத்தினர் தெய்வீக    பெண் வழிபாடுகளை வைத்து இருந்தார்களா என்பது தெரியவில்லை என்றாலும் க்ஹெமீர் ஆலயங்களில் புனித பெண் தேவதைகளை வடிவமைத்துக் காட்டி உள்ளார்கள்.  அந்த ஆலயத்தில் ஆண் தெய்வ சிலைகள் அனேகமாக இல்லை என்பதே உண்மையாக உள்ளது.

யோகினி என்பது என்ன?

மேலே உள்ளது  தேவனாகரீக மொழியில் எழுதப்பட்டு உள்ள யோகினி என்ற வார்த்தை.

இந்து மற்றும் புத்த மத வழிபாட்டு முறைகளில் யோகினி என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. ஆகவே வாசகர்களும் அது குறித்த விவரத்தைப் பற்றிய செய்தியை அவை எங்கெங்கு கிடைக்குமோ அங்கெல்லாம் ஆராயலாம்.
யோகினி என்பவள் யோகா கலையை பயின்று  ஞானம் பெற்றவளாக இருக்கலாம் ஆல்லது ஆன்மீகத்தின் உச்சியில் சென்று இருக்கலாம். யோகி என்பவர் அவளை ஆராதிப்பவர். தான் பெற்றுள்ள அமானுஷ்ய சக்திகளினால் யோகினி மனிதர்களின் உடலில் பல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.  அவ்வளவு ஏன் அவளால் வானில் பறக்கவும் முடியும்.

லஷ்மி , பார்வதி மற்றும் சரஸ்வதி மூவரும்
சேர்ந்த ஒரு தேவியின் உருவம்
Painting by V.V. Sagar
யோகினியின் பாதை தாந்த்ரீகத்தைக் ( சமஸ்கிருதத்தில்= பின்னுவது) அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் . அதாவது இந்த உலகின் ஆண் மற்றும் பெண்களின் சேர்கையில் காணப்படும் சிவ சக்தி  தத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்து உள்ளது.
 யோகினிகள் என்பவர்கள் தேவி அல்லது பெண் கடவுட்களில்  இருந்து வெளிப்பட்டவர்கள். அவர்கள் சாந்தமான மற்றும் உக்ராஹ குணங்களைக் கொண்ட பெண் தேவதைகள் எனப்படும் மகாவித்யா வின் (தாக்கினி அல்லது பெரும் பாண்டித்தியம் எனப்படுவது) பத்து தேவதைகளாகவும் இருக்கலாம்.
யோகா மற்றும் தந்திரக் கலை பயிலும் தேவி உபாசகர்கள் யோக சக்தியை அடைய இந்த தேவதைகளையே ஆராதிக்கின்றார்கள்.
யோகினிகளை பெண் கடவுளின்  இன்னொரு அவதாரமான துர்கையின் அவதாரங்களாகவே கருதுகிறார்கள். உலகைக் காக்க நடந்த யுத்தத்தில் தனக்கு துணை இருக்க துர்காவே யோகினிகள் எனப்படும் எட்டு தேவதைகளை  துர்க்கை படைத்தாளாம். அவர்களை சிலர்  மாத்ரிகாஸ் என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள். பின்னர் அந்த எட்டு யோகினிகளையும் உலகின் அனைத்தையும், அதாவது நீர்வளம், தாவர வளம், செழுமை, நோய்கள், பிறப்பு மற்றும் இறப்பு போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் 64 யோகினிகளாக மாற்றிப் போற்றினார்கள்.
ஆகவே பல முடிச்சுகள்  போட்டது  போல பல்வேறு திசைகளில் பார்க்கப்படும் அந்த யோகினிகளின் சக்திகளை குறித்து முடிவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம்.

யோகினி என்பவர்கள் பெண் கடவுட்களா இல்லை துர்தேவதைகளா ?

இந்தியாவில் உள்ள யோகினி ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக யோகினி ஆராதனைகள் செய்யப்பட்டு வருவதைப் பார்க்கும்போது நமக்குத் தோன்றுவது யோகினிகள் உண்மையிலேயே தெய்வங்களா .....அல்லது துர்தேவதைகளா?
ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களினால் முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகள் அந்த தேவதைகளை பயங்கர குணங்களிலேயே  காட்டி உள்ளன.  இது குறித்து மிரண்டா ஷா என்பவர் எழுதி உள்ள புத்தமத தேவிகள் (அல்லது தேவதைகள் ) மற்றும் டேவிட் கார்டான் வைட் என்பவர் எழுதிய 'கிஸ் ஆப் தி யோகினி ' போன்றவர்கள் எழுதி உள்ள புத்தகங்களைப் படிக்கலாம்.
1862 - 65 ஆம் ஆண்டில் இந்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த அலேக்சாண்டர் கன்னின்ஹம் என்பவர் கஜுரஹோவில் உள்ள யோகினி ஆலயம் குறித்து  தெரிவித்துள்ள கருத்தில் கீழே உள்ளவாறு கூறினார்:-


ஸ்ரீ தனேன்த்ரி - Photo by Raju-Indore.

''சோன்சட் யோகினி அல்லது 64 பெண் துர்தேவதைகள் '' என்பது கஜுரஹோவின் மிகப் பழமையான ஆலயம். இந்த  ஆலயம் மட்டுமே வடக்கு மற்றும் தெற்கு என்ற வித்தியாசத்தைக் காட்டும் வகையில் இல்லாமல் அமைந்துள்ளது. இந்த  ஆலயம் மட்டுமே முழுவதும் பாறைக் கல்லினால் ஆனதாக உள்ளது. ஆனால் மற்றவை கேன் (Kane) நதிக்கரையில் இருந்த இளம் வண்ண நிறத்திலான பாறை மண்ணைக் கொண்டு கட்டப்பட்டு உள்ளன. ஜோகினி அல்லது யோகினிகள் எனப்படும் துர்தேவதைகள் உயிர் வதைக்கும் பெண் கடவுளான காளியின் சேவகிகள்.
யுத்தங்கள் நடக்கும்போது அந்த தேவதைகள் பசியோடு அந்த யுத்த பூமிக்குள் ஓடி   மனிதர்களின் ரத்தங்களை ஒரே மடக்கில் குடித்து விடுபவர்கள். 'பிரபோத சந்திரோதயா' என்ற புத்தகம் இந்த தேவதைகளை ''இவர்கள் யுத்த பூமியில் ஆனந்த நடனமாடும் பேய் பிசாசுகளின் துணைவியர்கள்'' எனக்  குறிப்பிட்டு உள்ளது.
''காளியுடன் அந்த தேவதைகளுக்கு உள்ள தொடர்பைப் பார்க்கும்போது அந்த ஆலயம் சிவனுக்கு அற்பணிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அதற்குக் காரணம் ஆலய நுழை வாயிலில் உள்ள வினாயகரின் சன்னதியே.  அதே சமயம்  அங்குள்ள பண்டிதர்கள் ஆலயங்களை அந்த யோகினிகளுக்காக கட்டி  உள்ளதின்   காரணமாகவே  யுத்தத்தில்  வெற்றி  பெற்றார்கள் எனக் கருதுகிறார்கள்.
''வான்ஸ் கென்னடி (பக்கம் 490) என்பவர் எழுதி உள்ள புத்தகத்தில் -பிரம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி மற்றும் மஹேன்த்ரி  - என்ற ஆறு மோகினிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு   'தைத்திய ஜலாந்தரா' என்பவனை விரைவாக அழித்து அவன் உடலில் இருந்து வெளிவரும்  ரத்தத்தைக் உடனேயே குடித்து  விடுமாறு சிவபெருமான் அந்த தேவதைகளுக்கு ஆணையிட்டார் என்றும்  கூறி  உள்ளார். 
''இந்தக் கூற்று அனைத்தும் உண்மை என்றால் பல யோகினி ஆலயங்கள் இங்கு கட்டப்பட்டு இருந்திருக்கும்.  ஆனால் அப்படிப்பட்ட ஒரு பழக்கம்  இருந்திருக்காது என்பதை இந்த இடத்தில் யோகினிகளுக்காக   ஒரே ஒரு ஆலயம்  மட்டுமே கட்டப்பட்டு உள்ளது என்பதில்  இருந்து அறிந்து கொள்ளலாம். இது சிவனின் துணைவியான துர்க்கை  அல்லது காளி தேவதைக்காகவே அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்.'' 

அங்கோர் வாட்டில் உள்ள ஆலயமும் யோகினிகளின் ஆலயமா ?

இந்தியாவின் யோகினி ஆலயங்களைப் பற்றி எழுதப்பட்டு உள்ள செய்திகளைப் போல தேவதா அல்லது அப்சராக்களின் ஆலயம் எனும் அங்கோர் வாட் ஆலயம் பற்றிய செய்திகள் எங்குமே காணப்படவில்லை.

அங்கோர் வாட்டின் மேற்குப் பக்க கோபுரத்தின் கிழக்குப்  
பகுதி சுவற்றில் உள்ள தேவதையின் சிலை

அங்குள்ள சிலைகளும் யோகினிகளே என்றால் அவர்கள் தேவகணங்களில் காணப்படும் சாந்தமான குணங்களைக் கொண்ட யோகினிகளே  எனலாம்.
அங்கோர் வாட்டில் காணப்படும் பெண்கள்  எந்த விதமான பயங்கர ரூபத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவர்களின் முகத்தில் நீட்டிக் கொண்டுள்ள பற்களோ, பல கண்கள்  போன்றவையும்  இல்லை. இறக்கைகள் அல்லது அசாதாரண உடல்  அமைப்புக்கள் இல்லை.  மாறாக அவை  சாந்தமாகவே  காட்சி அளிக்கின்றன.
அங்கோர் வாட்டில் உள்ள எந்த ஒரு பெண்ணின் சிலையும்  மாடு, குதிரை, சிங்கம் போன்றவற்றின் மீது அமர்ந்துகொண்டு உள்ள அல்லது பிற விலங்கு முகத்தைக் கொண்டுள்ள  பெண் தெய்வ  தோற்றங்களில் அமைக்கப்பட்டு இருக்கவில்லை.
அது மட்டும் இல்லை, அங்குள்ள தேவதைகள் மனித   ஓட்டினால் அல்லது  எலும்புகளினால் கோர்த்த அல்லது ஆயுதங்களைக் கொண்ட எந்த விதமான ஆபரணங்களும் அணிந்து இருக்கவில்லை.
அங்குள்ள அனைத்து பெண் சிலைகளும்  நின்ற நிலையிலும்  கால்கள் தரையைத் தொட்டவண்ணம் உள்ளன. ஒரு சிலைக் கூட உட்கார்ந்த நிலையில் காணப்படவில்லை. ஆனால் சில சிலைகள் மட்டும் நடனமாடும் காட்சியைக் காட்டும் பாவத்தில் அமைந்து உள்ளன. 
அங்கோர் வாட் ஆலய  பெண்களும் யோகினிகளைப் போலவே  தெய்வீகத் தன்மை பெற்றவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.  அவர்களில் சிலர் யோகினிகள் காட்டும்  முத்திரா எனப்படும் கைகளின் பாவம் போலவே தமது கைகளின் முத்திராக்களையும் காட்டுகிறார்கள்.  இங்குள்ளவர்கள் அழகான தோற்றத்திலும்  காணப்படுகிறார்கள்.
அங்கோர்  வாட்டில் காணப்படும் பெண்களின் அமைப்பு  இயற்கை அழகோடு ஒன்றி உள்ளது என்றாலும் இந்திய யோகினி ஆலயத்தில் உள்ள பெண்கள் பயங்கர ரூபங்களிலும் மனிதர்களால் மாறுபட்ட காட்சியில் படைக்கப்பட்ட ரூபங்களிலும் உள்ளார்கள்.
ஆனாலும் இந்த இரண்டு இடங்களிலும் உள்ள ஆலய பெண்களிடையே பல  ஒற்றுமைகள் உள்ளன என்பது உண்மை.  ஆகவே அந்த ஆலயப் பெண்களை - முக்கியமாக ஜபல்பூரில் பைராகாட் எனும் இடத்தில் உள்ள சோன்சட் யோகினி ஆலயத்துடன்  ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியம்.

வட்ட வடிவமான , மேல் கூரை இல்லாத யோகினி ஆலயங்கள்

இந்தியாவில் பிராமணர்கள் எப்போதுமே இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தை புண்ணியஸ்தலம் என்றே நம்புகிறார்கள். அதில் குளிப்பதினால் செய்த பாபங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதனால்தான்  நர்மதை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் இடத்தில் உள்ள பைராகாட்  புனித தலமாக ஏற்கப்பட்டு உள்ளது.

மேலே உள்ளது 84 யோகினிகளை உள்ளடக்கி நிற்கும் பைராகாட் யோகினி ஆலயம். அதன் நடுமையத்தில் சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட கௌரி சங்கரா ஆலயம் அமைந்துள்ளது. இரண்டு நதிகளும் கலக்கும் இடத்தில் மலை மீது அமைந்து உள்ள இந்த வட்டவடிவமான யோகினி ஆலயம்  நடுவில் உள்ள சிவன் ஆலயமான கௌரி சங்கரா  ஆலயத்தை அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாக்கும் அரண்போல அமைந்து உள்ளது. இப்படியான வட்டவடிவத்தில் அமைந்துள்ள ஆலயங்கள் பிராமணீயத்திற்கு  ஏற்ற வகையில் அமைய இல்லை என்றாலும் அது யோகினி ஆலய அமைப்பிற்கு  ஏற்ப -ஹிரார்பூர் மற்றும் ராநிபூர் சரியா போன்ற இடங்களில் உள்ள யோகினி ஆலயங்கள் போன்றே  அமைந்து உள்ளது. கஜுராவில் உள்ள யோகினி ஆலயம்  நீட்ட வடிவமானது. ஆனால் நான்கு யோகினி ஆலயங்களுமே மேல்கூரை போடப்படாமல் உள்ளன. 
பைராகாட்டில் உள்ள ஆலயத்தின் குறுக்களவு 130 அடியாகும். (ஆலயத்தின் உட்புற குறுக்களவு அளவு 116 .2  அடிகள் மற்றும் வெளிப்புற குறுக்களவு 130 .9 அடிகளாகும்) . இந்த ஆலயத்தின் உட்புறம் 84 பிரிவுகளாக தூண்களினால்  தடுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தடுப்பின் மத்தியிலும் 4.9 அடி x 5.0 அடி x 3.6 அடி உயர சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள 84 தடுப்புக்களில் ஆலயத்தின் நுழை வாயில் மேற்கு பக்கத்தில் இரண்டு இடங்களிலும், தென்கிழக்கில் ஒரு இடத்திலுமாக  காணப்படுகின்றன. மீதி உள்ள 81 இடங்களிலும்  தேவதைகளின் சிலைகள் வைக்க உயரமான பீடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  அவற்றில் இரண்டே இரண்டு ஆண் உருவ சிலைகள்தான் காணப்படுகின்றன.

பைராகாட்டின் யோகினி ஆலய சிலைகள்

பைராகாட்டில் உள்ள ஆலயத்தில் காணப்படும் சிலைகள், அமர்ந்தும், நின்றிருக்கும்   நிலையிலும்  உள்ளன. அவற்றில் சில சிலைகள் உடைந்து போன நிலையில் இருக்க, சில சிலைகள் காணப்படவில்லை. பொதுவாக அங்குள்ள அனைத்து  யோகினிகளும் கைகளில் ஆயுதம் ஏந்தி நான்கு கைகளைக் கொண்டு உள்ளன. அந்தப் பெண் சிலைகளின் மார்பகங்கள் மிகப் பெரியதானவை என ஆராய்ச்சியாளர்கள் எழுதி உள்ளார்கள்.
இங்குள்ள யோகினிகள் அல்லது பேய்களைப் போன்ற பெண்கள்  சோன்சட் யோகினி அதாவது 64 யோகினிகள் எனப்படுகிறார்கள். அவர்கள் துர்கா தேவியை காத்து நிற்பவர்களாம்.
பைராகாட்டின் யோகினி ஆலயம்,  1875.

அங்குள்ள எட்டு சிலைகளை அஷ்ட சக்தி தேவதைகளின் உருவமாக கண்டறிந்து உள்ளார்கள். உட்கார்ந்து உள்ள சிலைகள் யோகினிகள் . ஒவ்வொன்றும் வெளிர் கருப்பு நிறக் கல்லில் அதிக கலை அமைப்புக் கொண்டவையாக வடிவமைகப்பட்டு உள்ளன.
அங்குள்ள நான்கு தேவதைகளின் உருவங்கள் ( எண்கள் 39,44, 60 மற்றும் 78) செதுக்கப்பட்டவை அல்ல.  அவை  அதிக கலை அமைப்பைக் கொண்டவை அல்ல. அவற்றில் எண் 44 என்பது  காளி  தேவதையின் சிலை என நம்புகிறார்கள்.  மற்றவைகளும் அதே தேவியின் பிற வடிவங்கள் என்றே கருதுகின்றார்கள்.
அங்குள்ள சிலைகளில் ஆண்கள் சிவன்  மற்றும் வினாயகர் மட்டுமே  (எண்கள் 15 மற்றும் 1).  அவை இரண்டு ஆண் தெய்வங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
மொத்தத்தில் அந்த வட்ட வடிவமான கட்டிடத்தில் உள்ள சிலைகளை ஐந்து பிரிவுகளாக பிரித்து வைத்து உள்ளார்கள்.  அவை கீழே தரப்பட்டு உள்ளன:

அஷ்ட சக்தி எனப்படும் சக்தி       --- 8 சிலைகள்
கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி  என்பன   --- 3    
காளி மற்றும் நடனமாடும் தேவிகள்   -- 4
சிவன் மற்றும் விநாயகர்    -- 2
யோகினிகள் அதாவது சோன்சட் யோகினிகள்    --  நல்ல நிலையில் 57 மற்றும் காணப்படாதவை - 7  என மொத்தம் 64 
ஆக மேலே உள்ள அனைத்தும் சேர்ந்து மொத்தம்   -- 81 
இரண்டு  நுழை வாயில்கள் (அவற்றின் இடையே உள்ள காலி இடம் =3)    -- 3
ஆக மேலே உள்ள அனைத்தும் சேர்ந்து மொத்தம்   -- 84
{குறிப்பு:- மேலே உள்ள தளத்தில் கட்டப்பட்டு உள்ள விரிவான பட்டியல் இந்திய அரசின்  தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் 1873 - 75 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பதினால்  அவை மாற்றி அமைக்கப்பட்டப் பின் எடுக்கப்பட்டுள்ள   புகைப் படங்களும் அவற்றின் பெயர்களும் மாறி இருக்க வாய்ப்பு உள்ளது. இதில் யாருக்கேனும் சரியான தகவல் கிடைத்தால் அவற்றை என்னுடன் தொடர்ப்புக் கொண்டு எனக்கு என் இ-மெயிலில்  (kentdavis@gmail.com ) அனுப்பலாம்.}

மற்ற ஆதாரங்கள்


(1) சோன்சட் யோகினி ஆலயத்தில் உள்ள மொத்த தெய்வ  மற்றும் தேவிகளின் விரிவான பட்டியலைப் பார்க்க   இங்கே கிளிக் செய்யவும் .  இந்திய அரசின்  புதைப் பொருள் ஆராய்ச்சி மையம் 1873 - 75 ஆம் ஆண்டுகளில் தொகுத்த  அட்டவணையை ஆதாரமாகக் கொண்டு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ள விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

(2) திவ்யா தேஸ்வால் என்பவர் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதி உள்ள பைராகாட்டின் 81 யோகினிகள் என்ற   கட்டுரையில் இவற்றின் புகைப் படங்களைக் காணலாம்.


(3)  இந்தியாவின் ஆன்மீகம் பற்றி 200 ருக்கும் அதிகமான அற்புதமான கட்டுரைகளை கவிதா அவர்கள் எழுதி உள்ளார்கள். அவற்றின் மூலம் நாம் க்ஹ்மேர் சமூகத்தினரின் தேவதைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது. அவள் எழுதி உள்ள கட்டுரைகளில் முக்கியமானது   ஸ்வர்கத்தில் கந்தர்வாக்கள்  மற்றும் அப்சராக்கள்  மற்றும்  சோன்சட்  யோகினி ஆலயம் , திரிபுரசுந்தரி  சாமுண்டேஸ்வரி  தேவி …போன்ற மற்றும் பல கட்டுரைகள்

(4)  ஹிரார்பூர் யோகினி  ஆலயம்

இந்தக் கட்டுரையில் 9 முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை  பெருமையுடன் இருந்து வந்த  யோகினி ஆலயங்களைப் பற்றிக் கூறப்பட்டு உள்ளது.

(5)  Voyage au Cambodge: l’architecture khmer (தலைப்பு வேறு மொழியில் உள்ளது)   

1866 ஆம் ஆண்டில் 'தவுடார்ட் டி லாக்ரீ' என்பவருடன் கம்போடியாவிற்கு சென்ற 'லூயிஸ் டலபோர்டி' என்பவர் கஜரஹோ மற்றும் க்ஹ்மேர் இருந்த யோகினி ஆலயங்களை ஒப்பிட்டு எழுதியுள்ளார்.  அது குறித்து அவர் பிரான்ஸ்  மொழியில் எழுதி உள்ள வாசகம்  இது “…enfin le temple Chauonsat Jogini Khajurao dont les soixante-quatre niches en forme de petites préasats sont terminées par des cercles décroissants cannelés semblables aux couronnes de lotus des sommets khmers.” (p. 425)

பைராகாட் கௌரி சங்கரா ஆலயம் விவரம் (1875) 
(1875)சோன்சட் ஆலயத்தின் மத்தியில் உள்ள கௌரி சங்கரா ஆலயத்தின் மேல் கூரை நவீன காலத்தை ஒட்டியது. இந்த ஆலயம் கல்சூரி வம்சத்தை சேர்ந்த ராணி துர்காவதி (1524-1564) கட்டியது.  அந்த ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள ஒரு குகைப் பாதையை பெரிய பாறை கல்லினால் மூடி வைத்து உள்ளார்கள். அந்த குகைப் பாதை அங்குள்ள ஆலயத்தையும்  மதன் மகால் மாளிகையில் இருந்த அந்த ராணியின் அறையையும் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

கௌரி சங்கரா ஆலயம்  Photo by Raju-Indore. 
இந்த ஆலயத்தின் மத்தியில் உள்ள கூடம் பாறைக் கற்களினாலும் செங்கல்களினாலும் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கூடம் சமசீர் அமைப்பில் இல்லாமலும் மத்தியப் பகுதியுடன் சமமாக இல்லாமலும் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஆலயத்தின் தரை பழுதடையாமல் முதலில் அது கட்டபட்டபோதிருந்த  நிலையிலேயே உள்ளது.

பைராகாட் கௌரி சங்கரா ஆலயம்

இது 1555 AD யில் கட்டப்பட்டது. அதே காலமான 1116 - 1550 AD யில்தான் அங்கோர் வாட்டும் கட்டப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். கௌரி சங்கர ஆலயம் கல்சூரி  வம்சத்தை சேர்ந்த ராணியான அல்ஹான தேவியினால் அவளுடைய மகன் நரசிம்ஹதேவன் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டது. அந்த ஆலயத்தின் கருவறை வாச நுழை வாயிலில் காணப்படும்  கல்வெட்டு செய்தி மூலம் 1180-1195 AD ஆண்டு காலத்தில் ஆட்சில் இருந்த கலாச்சி மன்னன் விஜய சிம்ஹாவின் தாயாரான கோசலாதேவி அந்த ஆலயத்தின் கௌரி சங்கரரை தினமும் வந்து வழிபாட்டு வந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குள் ஐந்து சிலைகள் உள்ளன. 1863 முதல் 1865 வரை அங்கு ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தினர் அவற்றின் அளவை 4x 1.6 அடி எனவும் 2 x 7.6 எனவும் கூறினார்கள். வெளியில் இருந்த சன்னதிகளின் அளவுடன் அதை ஒப்பிடும்போது அவை முதலில் அமைக்கப்பட்டு இருந்த சிலைகளே என்பது தெரிய வருகின்றது.

அந்த சிலைகள் வருமாறு:-

-கரிய நீல நிறக் கல்லில் விஷ்ணு மற்றும் லஷ்மி
-6 அடி உயரம், 3.6 x 1.10 அடி அளவில் ஏழு குதிரைகளை ஓட்டிக்  கொண்டு  அருணுடன்  நிற்கும் காட்சியில் சூரிய பகவான்
- சிறிய சிவன் பார்வதி (ஹரா கௌரி என்ற பெயரில் )
- சிறிய வினாயகர்
அவற்றைத் தவிர சிறிய சிலையான தர்மா, நான்கு கைகளைக் கொண்டு பெண், 1.10 அடி உயர  புத்தர் , பூமாலைகளுடன் பறக்கும் ஒரு உருவம்,  பீடத்தில் புத்தரின் பொன்மொழிகள் போன்றவை.
அங்குள்ள புத்தர் வடிவங்களைப் பார்க்கும்போது அந்த சன்னதி புத்த ஸ்தூபி மீது அமைந்து இருக்கலாம் என எண்ணத் தோன்றினாலும்  அங்குள்ள சிலைகளில் உள்ள வாசகங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த பொன்மொழி வாசகங்கள் அந்த கட்டிடம் கட்டப்பட்ட வெகு காலத்துக்குப் பின்னரே செதுக்கப்பட்டு இருந்திருக்க  வேண்டும் என எண்ணத் தோன்றுகின்றது.

சோன்சட் யோகினி ஆலய கட்டிட அமைப்பின் விவரங்கள் (1875 ஆண்டுக் குறிப்புகள்)

அந்த ஆலயத்தின் உள்பகுதியின் மொத்த குறுக்களவு 116 .2 அடி என்றாலும் அந்த ஆலயத்தின் வெளிப்  பகுதியின் மொத்த குறுக்களவு 130 .9 அடி ஆகும்.  வட்டவடிவமான சுவற்றின் மீது வட்டவடிவில் கட்டப்பட்டு உள்ள அந்த சன்னதிகள்  84 பகுதியாக சதுர வடிவிலான தூண்களினால் தடுக்கப்பட்டு உள்ளன. 4.9 அடி அகலமும்  5.3 1/2 "அடி நீளமும் கொண்ட அந்த சன்னதிகள்  அனைத்தும் முன்புறத்தில் முன் கூரையுடன் அமைந்து உள்ளது. அவற்றின் உயரம் பூமியில் இருந்து  8.6 அடி ஆகும். அவற்றின் பின்புறம் உள்ள தடுப்பு சுவற்றின் தடிமானம்  2 . 7 1/2 " அடி ஆகும். ஒவ்வொரு சன்னதியின்  மேல் பகுதியில்  உள்ள முன்கூரை சுமார் 10 " நீளத்திற்கு  வெளிப்புறமாக அறை வட்ட வடிவில் சாய்ந்து உள்ள அமைப்பில் கட்டப்பட்டு உள்ளது. அந்த வட்டவடிவ ஆலயத்தின் மேல்கூரை முழுவதும் 8 முதல் 9 அங்குல கனத்திலான பாறை தட்டினால் மூடப்பட்டு சுவர்களுடன் ஒன்றிணைந்த வகையில் அழகாக இணைக்கப்பட்டு உள்ளன.


யோகினி ஆலயத்தின் ஒவ்வொரு  சன்னதியும்  எப்படி கட்டப்பட்டு உள்ளது

இங்குள்ள ஆலயம் 84 பிரிவுகளாக தூண்களினால் தடுக்கப்பட்டு உள்ளன என்பதை பார்த்தோம். அவற்றின் இடையே உள்ள இடைவெளி (நுழை வாயில்) இரண்டு மேற்கு பக்கத்திலும் ஒன்று தென் கிழக்குப் பகுதியை நோக்கியும் உள்ளன. ஒவ்வொரு சன்னதியிலும்  ஒரு பீடம் உள்ளது. அதன் அளவு 3.5 அடி நீளம் 1.8 அடி அகலம், மற்றும் 1.0 அடி உயரமாகவும் உள்ளன. ஒவ்வொரு தூணும் 10.6 அடி சதுரத் தூண்கள். அவற்றின் இடைவெளி 3.5 1/2 அடி. ஆனால் தூண்களின் பின் புறத்தில் உள்ள இடைவெளி 3.7 1/2 அடியாக உள்ளது. காரணம் அதற்குள் அமைந்துள்ள பீடங்கள் அதற்குள் அப்படியே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே.
அமர்ந்த நிலையில் உள்ள சிலைகளின் அளவு 4.2 அடி உயரம் மற்றும் 2.5 1/2 அடி அகலம்..


மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு உள்ளது யோகினி ஆலயத்தில் உள்ள 84 சன்னதிகளின் அமைப்பு.  நடுவில் உள்ளது சிவனுக்காக கட்டப்பட்டுள்ள கௌரி சங்கராவின் ஆலயம்.

..........அடுத்த பாகத்தில் அந்த ஆலயங்களில் உள்ள யோகினிகளின் பெயர்கள் மற்றும் படங்கள்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Kudai Swamigal -E

Vasanthapura Temple ( E)