Patteeswaran Durgaa Temple
பட்டீஸ்வரர் துர்க்கை ஆலயம் சாந்திப்பிரியா பட்டீஸ்வரம் என்ற ஊர் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டார் தொலைவிலேயே உள்ளது. பட்டீஸ்வரம் என்றாலே அங்குள்ள துர்க்கை அம்மன் ஆலயம்தான் அனைவர் மனதிலும் வரும் . காரணம் ராகு தோஷம் உள்ளவர்கள் தமது தோஷத்தை களைந்து கொள்ள அந்த ஆலயத்துக்குதான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் முக்கியமான மற்றொரு மகிமை குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆலயத்தில்தான் மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது. சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் தமது அரண்மனைப் பாதுகாக்க நான்குபுறங்களிலும் துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் என்பவர்களுக்கு சன்னதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம். அவர்களே இந்த ஆலயத்தில் தாம் வணங்கி வந்த துர்கையின் சிலையைக் கொண்டு வைத்ததாக நம்புகிறார்கள். இந்த பட்டீஸ்வரம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள். இந்த ஐந்து கோபுரங்களை உள்ளடக்கிய மாபெரும் ஆலயம் தோன்றியது ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் இருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள். சோழர...