இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Thiruppaarkadal- Two temples

படம்
திருப்பாற்கடல் சாந்திப்பிரியா படம் நன்றி:- http://www.cyberkerala.com/rajaravivarma/ravivarma-lithoprint-7.htm  சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அதாவது NH 4 சாலையில் வருவது காவேரிப்பாக்கம் எனும் சிறு ஊர். இது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர், வேலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் அல்லது காஞ்சிபுரம் வழியே வந்தால் அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காவேரிபாக்கத்தை அடைந்தவுடன் அங்கு யாரையாவது கேட்டால் திருப்பாற்கடலுக்கு செல்லும் வழியைக் கூறுவார்கள். பெங்களூரில் இருந்து சென்றால் ராணிபேட்டையைத் தாண்டியவுடன் அந்த சிற்றூர் உள்ள பெயர் பலகையைக் காணலாம். சென்னையில் இருந்து வரும்போது  ராணிபேட்டைக்கு முன்பே வரும்  காவேரிபாக்கத்தை அடைந்தவுடன் இடது புறம் திரும்பிச் செல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து சென்றால் காவேரிபாக்கத்தை அடைந்ததும் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும். திருப்பாற்கடலில் இரண்டு பண்டை கால ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுவானவர் சிவபெருமானின் சிவலிங்கத்தின் ஆவுடையார் மீது நின்ற காட்சியில் இருக்கின்றா...

Meru Narasimmar

படம்
ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்திர ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சமேத ஸ்ரீ ஆஞ்சநேய ஆலயம் சாந்திப்பிரியா நான் சமீபத்தில் பெங்களுர் ரூபன் அக்ரஹாரம் எனும் இடத்தில் இருந்த நரசிம்மர் ஆலயத்துக்கு சென்றேன். ஆலயம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. அதைப் பார்த்தபோதே அது மிகவும்  புராதான ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிந்தது.  ஆலயத்தில் நுழைந்ததுமே மிகப் பெரிய அரச மரத்தின் அடியில் இருந்த நாக தேவதைகளும், ஒரு சக்தி தேவியின் சிலையும் அதை உறுதிப்படுத்தியது.   தூண் ஆஞ்சநேயர்  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள ஒரு பெரிய ஸ்தம்பத்தில் ஹனுமார் சிலை இருந்தது. அதுவும், நாக தேவதைகளும் அங்கிருந்த மக்களினால் வழிபடப்பட்டு வந்துள்ளன. அதுவே அங்கு இருந்த கிராமத்தின் ஆலயமாக இருந்துள்ளது. ஆனால் இன்று அந்த ஆலயம் ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்திர ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சமேத ஸ்ரீ ஆஞ்சநேய சன்னதி ஆலயமாகி உள்ளது. ஆலயம் பிரதான சாலையை விட்டு சற்று சற்று உள்ளே அமைந்து உள்ளதினால் பலருக்கும் தெரியவில்லை.  மேரு நரசிம்மரின் இரண்டு தோற்றங்கள்  இந்த ஆலய...

Devendra's son Jayantha and Narasimhar

படம்
  இந்திரனின் மகன் ஜெயந்தா  மற்றும் நரசிம்மர் மகிமை சாந்திப்பிரியா   தேவேந்திரனின் மகனே ஜெயந்தா என்பவன்.  தேவேந்திரனுக்கு ஜெயந்தா, மிதுசா, நீலம்பரா, ராஸ்ப்பா, சித்திரகுப்தா என்ற  பல மகன்கள் உண்டு. தேவேந்திரனின்  மனைவியான  சாச்சி தேவி என்பவள் மூலம் ஜெயந்தா பிறந்தாலும் அவன் நல்ல குணங்களைக் கொண்டவன் அல்ல. பாவம் சாச்சி தேவியோ நல்ல குணங்களைப் பெற்றவள். ஜெயந்தாவினால் பல கஷ்டங்களை இந்திரன் ஏற்க வேண்டி இருந்தது.  கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ஜெயந்தா   ஜெயந்தா  தேவலோகத்தில் கேளிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவன். ரதி ரம்பைகளின் ஆட்டங்களில் மனதை மயக்கிக் கொண்டு நிற்பவன். பெண்களின் விஷயத்தில் தீய எண்ணம் கொண்டவன். தான் தேவேந்திரனின் மகன் என்பதினால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தவன்.  ஜெயந்தா எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒரு கதை  ஆத்யந்த ராமாயணத்தில் உள்ளது. ஒருமுறை வனவாசத்தில் இருந்த ராமர்-சீதை இருவரும் தமது பரிவாரங்களுடன் சித்ரகுடா எனும் இடத்தில் சென்று  தங்கினார்கள். அப்போது ஒருநாள் ராமபிரான்  ...

Some unknown story from Purana

படம்
ஹிரண்யகஷிபுவின் மகன்  பிரஹலாதன் எப்படி விஷ்ணுவின் பக்தன் ஆனான் ? சாந்திப்பிரியா நாம் அனைவருமே ஹிரண்யகஷிபு நரசிம்ம அவதாரம் பெற்ற மகாவிஷ்ணுவினால் கொல்லப்பட்ட கதைதான் பெரும்பாலும் அறிந்து இருபோம். ஆனால் அது ஏன் நடந்தது, ஹிரண்யகஷிபுவிற்கு பிரஹலாதன் மகனாகப் பிறந்தது ஏன் என்பதையோ அவன் எப்படி விஷ்ணுவின் பக்தனாக இருந்தான் என்ற கதையையோ பலருக்கு தெரிந்து  இருக்காது. காரணம் பல புராணங்களில் கூட அந்தக் கதை மாறுபட்டு உள்ளது. ஒரு ஜென்மத்தில் ஹிரண்யகஷிபுவும், அவனுடைய சகோதரரான ஹிரண்யாஷ்டசகனும் வைகுண்டத்தில் ஜெயா- விஜயா எனும் பெயர்களில் துவாரகாபாலகர்களாக இருந்தவர்கள். அவர்கள் ஒருமுறை பிரும்மாவின் மகன்களை வைகுண்டத்தில் நுழைய விடவில்லை என்பதினால் அவர்கள் மூன்று  யுகங்களில் ஆண்களாக  பூமியில் பிறந்து விஷ்ணுவினால் அல்லது விஷ்ணுவின் ஏதாவது ஒரு அவதாரத்தினால்  மரணம் அடைவார்கள் என  சபிக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் பார்வதியிடம் சென்று அழுதபடி பெண்களான  தமக்கு விடிமோட்ஷம் தருமாறு வேண்டினார்கள். அவளும், அவர்களின் சாபத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும், ஆனால் அவர...

Narad Leela

படம்
நைமிசாரண்ய நீதிக் கதை சாந்திப்பிரியா   ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் சௌனர் முதலிய மகா முனிவர்கள் கூடி மோட்ஷம் அடைய சரியான வழி எது என்பதைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அமர்ந்து இருந்த சூதக முனிவரை நோக்கி அவர்கள் கேட்டார்கள் ' ஹே பவித்ரமான முனிவரே, புராணங்களிலும், இதிகாசங்களிலும், தர்ம சாஸ்திரத்திலும் பல விதமான நெறி முறைகள் கூறப்பட்டு உள்ளன. மனிதர்களும், ரிஷி முனிவர்களும், ஏன் சன்யாசிகளும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களிலும், கடவுள் பக்தியிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்கள் அனைவருக்குமே இறுதியில் மோட்ஷம் கிடைப்பது இல்லை. சிலருக்கு மட்டுமே அது கிடைக்கின்றது. இந்த கலி காலத்தில் கடவுள் மீது மிக மிக அதிக பக்தி வைத்துக் கொண்டும்,  ஆலய வழிபாட்டை பிரதானமாகக் கொண்டும் இருக்கின்றார்கள். ஊருக்கு ஊர் ஆஸ்ரமங்களும், தெய்வப் பிறவிகளும், மகான்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆலயங்கள் போதாது என்று அங்கெல்லாம் மக்கள் சென்று இறை வழிபாட்டை கடை பிடிக்கிறார்கள். ஆனாலும் கலி காலத்தில் வாழும் மக்கள் அற்பாயுசு உள்ளவர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், வியாதிகளினால் ...

Chennai- Periandavar Temple

படம்
திருநிலை பெரியாண்டவர் ஆலயம் சாந்திப்பிரியா திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 14 கிலோ தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 12 கிலோ தொலைவிலும் உள்ளது திருநிலை பெரியாண்டவர் ஆலயம் . பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்துள்ள ஆலயம் இது. மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த அடர்ந்த காடு போன்ற பகுதியில் உள்ளது திருநிலை கிராமம். இரு குளங்களின் மத்தியில்- கிழக்கு பகுதியில் ஒரு குளமும் தெற்குப் பக்கத்தில் மற்றொரு ஏரியும் உள்ள இடத்தில்தான் சிவபெருமான் வந்து தன்  பாதத்தைப் பதித்து நின்றார் என்பது தல வரலாற்றின் ஒரு செய்தி. மேலும் அங்கு சுயம்புவாகத் தோன்றிய வரை சுற்றி இருபத்தி ஒரு சிவ கணங்கள் மண் உருண்டை உருவில் அவரை வணங்கியபடி உள்ளன. இவை அனைத்தும் இங்கு வந்தக் கதை சுவையானது. கைலாயத்தில் ஒரு நாள் சிவபெருமான் பார்வதியோடு அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நாரத முனி  அவர்களை வந்து வணங்கினார். வந்தவர் ஏழேழு உலகங்களிலும் -தேவலோகம் முதல், அனைத்து உலகிலும் அதர்மம் பெருகி விட்டது என்றும், தேவர்களும், தேவகணங்களும் ...

Land of Snakes

படம்
நாகங்கள் ஆண்ட பூமி  - காஷ்மீரின் பந்தேர்வாஹ்  மலைப் பள்ளத்தாக்குப் பகுதி சாந்திப்பிரியா  வாசுகி மற்றும் சீமாட் வாஹன் நாகங்கள்    நீங்கள் நாகங்கள் (பாம்புகள்) ஆண்டுள்ளதான   பூமி  பற்றி  கேள்விப்பட்டு உள்ளீர்களா? இல்லை என்றால் காஷ்மீரத்தில் உள்ள பந்தேர்வாஹ் எனும் மலைப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு  செல்லவும். அதுவே நாகங்கள் ஒரு காலத்தில் ஆண்டு வந்த  என்கிறார்கள். பந்தேர்வாஹ் என்பது ஜம்மு மற்றும் காஷ்மீரத்தின் பல மொழி பேசும் பல மத மக்கள் ஒற்றுமையாக வாழும் இடம். இமய மலை அடிவாரத்தில் உள்ள இந்த பள்ளத்தாக்கு அற்புதமான இயற்கை அழகுகளைக்  கொண்ட பூமி. அங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கு மக்கள் பேசும் மொழியான  பந்தேர்வாஹ் என்பது  ஹிமாச்சலப் பிரதேச மொழியுடன் ஒத்து உள்ளது . ஆனால் பந்தேர்வாஹ் மொழியின் சில சொற்களை பந்தேர்வாஹ் பகுதி மக்களால் மட்டுமே உச்சரிக்க முடியுமாம். பந்தேர்வாஹ் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி இருந்த இந்த பகுதியைப் பற்றிய புராணக் கதை இது. இதை 'நாகோன் கா பூமி' என ஹிந்தியில் அழைக்கி...

Aprameya Swami Temple

படம்
அப்ரமேய ஸ்வாமி  மற்றும்    நவநீத கிருஷ்ணன் ஆலயம் சாந்திப்பிரியா    அப்ரமேயர்    கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் உள்ள இன்னொரு புகழ் பெற்ற ஆலயமே நவநீத கிருஷ்ணன் மற்றும்  அப்ரமேய ஸ்வாமி ஆலயம். இந்த ஆலயம் பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள தொட்டமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது . தேசிய நெடுஞ் சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது இடது பக்கம் மாலூரைத் தாண்டி அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் செல்லும் சாலையில்தான் நாடி நரசிம்மர் ஆலயமும்  உள்ளது. ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத  அப்ரமேயர்    அப்ரமேயர் ஆலயம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இல்லை இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆலயத்தின் கட்டிட அமைப்பைப் பார்க்கும் போது இந்த ஆலயம் நிச்சயமாக 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் அதாவது  980 ஆம் ஆண்டுகளில் இங்கு நந்த தீபம் ஏற்றும் சேவைகள...