Saturday, February 7, 2015

Mathura Kali Amman

2012 ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை திரு பாலசுப்ரமணியன் என்பவர் எழுதி உள்ள புது செய்திகளுடன் மீண்டும் வெளியிடப்படுகிறது 
 
மதுர காளி அம்மன்
சாந்திப்பிரியா

 (படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html ) 

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். இது காஞ்சி பரமச்சாரியாளான ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம் என்கிறார்கள்.
 இந்த ஆலயம் உள்ள இடத்தின் மலையின் பெயர் மதிர மலை என்பார்கள். இந்த ஆலயத்தில் உள்ள காளி தேவி ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பஸ்வாமி என்ற இரண்டு காவல் தேவதைகளுடன் இந்த ஊரைக் காத்து வருவதான ஐதீகம் உள்ளது. ஆலயத்தின் தல விருஷம் மதுர மரம். ஆலயம் 1000 அல்லது 1500 வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
இந்த ஆலயம் குறித்து பல சுவையானக் கதைகள் உள்ளன . ஆனால் அவற்றுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் வாய்மொழிக் கதையாகவே ஆண்டாண்டு காலமாக விளங்கி வருகின்றது.
ஒரு முறை ஆதி சங்கரர் இந்த மலைப் பிரதேசத்தின் வழியே வந்து கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம். அவருக்கு தாகம் எடுத்தது, ஆனால் சுற்றிலும் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அவர் தேவியை நினைத்து மனமுருகி வேண்டிக் கொண்டபோது, அங்கு இருந்த மதுர காளியம்மான் அவர் முன் தனது சுய ரூபத்தில் தோன்றி அங்கு ஒரு நீர் ஊற்றை வரவழைத்து அவர் தாகத்தைத் தீர்த்தாளாம். அதன் பின் அங்கேயே அவள் ஒரு நான்கு அடி உயர கல் சிலையாக மாறிவிட, ஆதி சங்கரர் அந்த சிலையை எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.


இன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் இந்த மலைப் பிரதேசத்தின் மூன்று ரிஷிகள் வசித்து வந்தார்கள். அவர்கள் அங்கு தாபத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் ஒரு குழந்தை அங்கு அழுதுகொண்டு அனாதையாகக் கிடந்தது. அதை அவர்கள் கருணையோடு எடுத்து வந்து வளர்த்து அறிவு புகட்டினார்கள். அந்தக் குழந்தை நன்கு அவர்களிடம் ஆன்மீகப் பாடம் கற்றுக் கொண்டவுடன், அங்கிருந்து கிளம்பி ஷேத்ராடனம் சென்றுவிட்டது. அந்த நேரத்தில் ஒரு நாள் அந்த மூன்று ரிஷிகளும் அந்த மலையின் (தற்போது ஆலயம் உள்ள இடத்தில்) ஒரு மரத்தில் தேன்கூடாக மாறி விட்டார்களாம். அதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரு முனிவரிடம் பெற்று இருந்த சாபமே. பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரே குடும்பத்தினர். அந்த மலையில் தேன் எடுப்பவர்கள். ஒரு முறை அவர்கள் அந்த முனிவர் அங்கு தவத்தில் இருந்ததைப் பார்க்காமல் அவர் தவம் இருந்த மரத்தின் மீது இருந்த தேன் கூட்டை கலைக்க அந்த கூட்டில் இருந்த தேன் அந்த முனிவர் மீது வாய் மீது விழுந்து அவர் தவம் கலைந்தது. ஆகவே அவர் அவர்களை தேன்கூடுகளாக மாறி விடுவார்கள் என்றும் பல காலம் பொறுத்து ஒரு சாபத்தினால் அங்கே வந்து குழந்தையாக பிறக்க உள்ள நாரத முனிவர் அவர்களின் சாபத்தைத் தீர்ப்பார் என்றும் சாபமிட்டார். ஆகவே அந்த முனிவர்கள் அந்த மரத்தின் மீதே தேன் கூடுகளாக மாறி அமர்ந்து இருந்தார்கள். அபோது அந்த மரத்தடியில் வந்து இளைப்பாறும் ரிஷி முனிவர்களின் வாயில் ஒரு சொட்டு தேன் விழுமாறு அவை பார்த்துக் கொள்ளும். அதன் காரணம் தமது பூர்வ ஜென்மக் குழந்தை அங்கு வந்தால் அந்த செய்கையை புரிந்து கொண்டு தமக்கு சாப விமோசனம் தரும் என்பதற்காகவே.

 தேசிய நெடுஞ்சாலையில் வரும்
வளைவில் திரும்ப வேண்டிய இடம் 
(படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )
இப்படியாக பல ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்கள் வளர்த்து ஆளாக்கிய பூத்தார் என்ற பெயர் கொண்ட முனிவராக மாறி இருந்தக் குழந்தை மீண்டும் அங்கு வந்து அவர்களைத் தேடினார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. அப்போது அந்த மூன்று முனிவர்கள் தேன்கூடாக இருந்த மரத்தின் அடியில் படுத்து இருந்தபோது அவர் வாயில் ஒரு சொட்டு தேன் விழுந்தது. உடனேயே அவர் அந்த செய்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். அங்கேயே இருந்த காளியின் முன் தவமிருந்து அவளது அருளைப் பெற்று அவர்களுக்கு சாப விமோசனம் பெற்றுத் தந்தார். ஆகவே இனிமையான தேனை போன்ற வாழ்கையை வழங்கும் இடமான அந்த ஆலயம் மதுர (இனிமை என்று பொருள்) பெயர் கொண்டு மதுர மலை ஆயிற்று.

 ஆலயத்தில் ஒரு காட்சி 
(படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )
நான்கு கைகளைக் கொண்ட அன்னையின் ஒரு கையில் அக்ஷயபாத்திரம் இருக்க தந்து இடது காலை மடித்து வைத்துக் கொண்டு ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். சாதாரணமாக காளி உக்ரஹ வடிவில்தான் அனைத்து ஆலயத்திலும் காலடியில் தான் வதம் செய்த மனிதன் மீது நின்றபடி காட்சி தருவாள். ஆனால் இங்குள்ள காளியோ கருணை முகத்துடன் காட்சி தந்து அருளைத் தருவதால் மதுர காளி அம்மன் என்ற பெயரைப் பெற்றாள். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பக்தர்கள் தரிசிக்க ஆலயம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் கண்களுக்குத் தெரியாமல் அங்குள்ள சித்தர்களும் ரிஷி முனிவர்களும் அந்த ஆலயத்து தேவியை வணங்க ஆலயம் மூடப்பட்டு உள்ளதாம். இந்த மதுர காளி தேவியும் உக்ரஹமான காளியின் அவதாரமே.

 ஆலயம் செல்லும் வழி 


 Balasubramanian NR has left a new comment on your post "Mathura Kali Amman

இந்த தலத்தின்  பெருமையைக் குறித்து திரு N R பாலசுப்ரமணியன் என்பவர் எழுதி அனுப்பி உள்ள கீழ் கண்ட செய்தியை வெளியிடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 
திரு பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி:- 

..............''.பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக் இருப்பதால் இங்கு வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும். அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும். நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள். செல்லியம்மன், அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.

சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே, மிக பிரசித்தி பெற்ற திருக் கோயிலாகும், அம்பிகை என பக்தர்கள் கூறவே மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் , பேசும். பேசியது…பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். ஒரு நடமாடும் தெய்வம் - மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். நம் துயர் களைவதற்காகவே - கருணையே தவிர - அம்பாளை பார்த்து விட்டோம் என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். .அடியார்கட்கு அருள் செய்ய, வேண்டுதல்களையும் நிறைவேற்ற அமர்ந்துள்ளாள். அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாகும். குடும்ப தீராத வழக்குகளை, பிரச்னை தீர, தம்பதியர் ஒற்றுமைக்காகவும், குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தியடைய, வாழ்வில் நன்மைகள் பல பெற்று, திருமண தடை நீங்கவும், பூர்வஜென்ம வினை பிணிகள் தீர, மாங்கல்ய பாக்கியத்திற்கும், தோஷ சாப நிவர்த்திக்காகவும், ஐஸ்வர்யம் பெருகவும், இங்கு வேண்டிக்கொள்கிறர்கள். அம்மன் வடக்கு திசை நோக்கி அருளும் நிலையிலேயே காட்சி. திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. இது ஒரு சக்தி பீடமாகும்.

வெள்ளி கிழமைகளில் மாலை பக்தர்கள் தங்க தேர் இழுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். சிறப்பு அபிஷேகம், எலுமிச்சை தீபம், மாவிளக்கு

ஏற்றலாம். கரங்களில் சூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறாள். . மாங்கல்ய பாக்கியத்திற்கு, மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
இங்கு தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

Yesterday, i.e. 5.2.15, Shri Yesudas, Carnatic Musician visited the temple along with his family Members and sang a song in praise of the Goddess. They stayed till the end of the Puja.............''

36 comments:

 1. A powerful Deity and a visit to HER temple solves many problems of the Devotees.

  Balasubramanian NR

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. மதுர காளியம்மன் அறிந்தேன்
  நன்றி ஐயா

  ReplyDelete
 4. நன்றி ஐயா, நன்றி

  ReplyDelete
 5. sir , please tell me madurakalli amman kayathiri mandram

  ReplyDelete
 6. sir, please tell me madurakalli amman kayathiri mandram

  ReplyDelete
 7. Azhagu Deivamai Vilankum Engal Shri Mathurakali
  Azhagirke Azhagu Serkum Anbu Aanaval Engal Thai
  Aadhai Shankararin Thagam Thanithaval
  Jothi Aanaval Parasakthi Aanaval
  Olikkum Oli Serkkum Sudarin Sudar Aval
  Kanchi Mahanudaya Poorvasrama Kula Deivamaval
  Akilam potrum Ambigai Jagadambigai Aval
  Malurumana Malarin Menmai Kondaval
  Shantha Swaroopamai Thigazhum Deivathai Aval
  Baktharkal Kurai Theerukkum Arumai Thai Aval
  Thingal Velli kizhamai thorum Katchi Tharubaval
  Anaivarukkum Aarogyam Anugraham Seibaval
  Oppila Ulaga Anandha Valli Akilanda Nayagi Aval
  Vaiyagam potrum Dakshina Kali Sakthi Vadivanaval
  Sarva Vyathikalukkum Nivaranam Alikkum Sarveswari Aval
  Amrutheshwari Amirtha Varshini Mahadevi Aval
  Aval Namam Japam Seibavarkalukku Sarvartha Siddhi Aval
  Than Bhakthargal Kural kettu Odi Varubaval
  Thrisula Maheswari Simha Vahini Aval
  Sivadoothi Swaroopi Shri Mathurakali Aval
  Engal Parasakthi Shri Mathurakali Aval

  ReplyDelete
 8. தெய்வம் பேசுமா? ஆம்! தெய்வம் பேசும்!. ஆம்! பேசியது ஆம்! தெய்வம் பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். காஞ்சி ஸ்ரீ காமகோடி சந்திரசேகர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் குல தெய்வம். அம்பாளை நாம் பார்த்தது இல்லை அவள் ஒரு நடமாடும் தெய்வம்.அவள்து கருணையே தவிர நாம் செய்த புண்ணியம் அல்ல. உலகமெலாம் போற்றுகின்ற நடமாடும் தெய்வம். கை இரண்டும் கூப்பி என் கண்களையே மூடி மெய்யதனில் நிறுத்தி மெழுகாக உருகி செய்யும் செயல் யாவும் சிறப்புறவே அமைய துய்ய நின் பாதம் துடராய் நான் பற்ற தொட்டு துடரும் வினைகள் எனை விட்டு விலகி ஓடும் எட்டிப் பார்க்கும் துன்பம் பட்டு மறைந்து போகும் பற்றப் பற்ற என் நெஞ்சம் தூயதாக ஆகும் சுற்றம் சூழல் எல்லாம் மதித்து எனை இங்கு வாழ்த்தும் தூர நின்ற என் மேல் பாசம் மிகவும் வைத்து வாழ்வில் ஏறிப் போக பாதை அருமையாக அமைத்து நான் கோரிய வரம் அனைத்தும் குறைவின்றிக் கொடுத்து பாரியைப் போல் வள்ளலென விளங்குகிய என் தெய்வம் ஆதிசங்கரர் வாக்கில் அவதாரமான கடவுளாம் ஶ்ரீ மதுரகாளி ஜெய ஜெய ஶ்ரீமதுரகாளி. தினமும் பிரியமுடன் காத்திடும் தாயே.அணையா சோதியென தென்னவரும் போற்றுகின்ற தாயே தஞ்சம் என்றுனை நாடினேன் எந்தன் உள்ளத்தில் உந்தன் அன்பை நிதம் கண்டு மகிழ ஆசை அம்மா ரட்சிதருள்வாய் என்னை நீயே! உந்தன் அருளை அன்புடனே வாரி வழங்கும் அம்மா நின் வழிகாட்டுதலின் படியாக நான் வாழ நினது கருணகடாக்ஷம் வேண்டி போற்றி பணிந்திட அருள்வாய் பரமேஸ்வரியே உடலிலே நலமும் தருவாய் உன்னை நித்தம் காண உன் பிள்ளை

  ReplyDelete
 9. இரண்டு தினங்களுக்குமுன் உடல் அசக்தம். வயதான கோளாறு வலி தாங்க முடியாத அவஸ்தை. பார்க்க வந்த நபர் ஒருவர் அ வரின் அவஸ்தையைக் காணப் பொறுக்காமல் ஸ்வாமி ரூமு ல் இரு ந் து கையில் அம்பாளின் ப்ரஸாதம் எதையோ கொண்டு வந்து தடவினார். வேறு எதுவாக இருக்க முடியும்! அம்பாளின் விபூதி நம்பினால் நம்புங்கள்...எப்படி அவஸ்தையைத் தாங்க முடியாமல் துடித்தார் அது ஒரு நிமிஷத்தில் மறைந்தது. இது தான் ஶ்ரீ மதுரகாளி அம்பாளின் சக்தி 

  ReplyDelete
 10. Aalayam Mathuraalayam
  Aalayam Karunaalayam
  Aalayam Arulaayam
  Aalayam Baktha Rakshanaalayam
  Aalayam Janma Sapalyaalayam
  Aalayam Aadhi Shankara Bhagavat Padal Thagam Theertha Aalayam
  Aalaym Pujya Shri Kanchi Mahan Poorvashrama Kula Devalayam
  Aalayam Parvathi Swaroopa Parameshwari Aalayam
  Aalayam Soma Sukra Vara Darshanalayam
  Aalayam Baktha Vaanchitha Prapthalayam

  ReplyDelete
 11. கவசம் கவசம் கவசம் உன் நாமம்
  ஶ்ரீ மதுரகாளி ஜெய ஜெய ஶ்ரீமதுரகாளி. தினமும் பிரியமுடன்
  உரைத்தால் கவசமாய் காக்கும் எந்நாளும்
  சரணம் சரணம் சரணம் உன் பாதம்
  சரணம் தந்திடும் துணை வரும் எந்நாளும்
  எங்கெங்கே நான் இருந்திடும் போதிலும்
  அங்கெல்லாம் துணை வந்து காக்கும் உன் நாமம்
  மறுநொடி நடப்பது இந்நொடி அறியேன்
  மறுநாள் எப்படி நான் இங்கு சொல்வேன்
  வருவன எல்லாம் நல்லவை ஆக
  மனதினில் நினைப்பேன் உன் நாமம் உரைப்பேன்
  வழித் துணையாக வருவாய் நீயும்
  விழிகளில் வைத்தே காப்பாய் நாளும்
  அழித்திடுவாயே என் வினை நீயும்
  கழித்திடுவேனே உன்னை எண்ணி நானும்
  உரைப்பேன் உரைப்பேன் உன் திரு நாமம்
  உருகியே அழைப்பேன் உன்னை எந்நாளும்
  கவசமாய் காத்திட விரைந்தே வருவாய்
  காவலாய் இருந்தே நல்வழி தந்திடுவாய்

  ReplyDelete

 12. என் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய பேறு ஒன்று உண்டென்றால், அது ஸ்ரீமதுரகாளியி ன் திருவருள்தான். என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்அவர் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு தேடல் இருந்தது. தேடிக் கொண்டிருக்கிற பொருள் ஏதோ ஒரு பெரிய பொருள் என்பது மட்டும் புரிந்தாலும், எதை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அப்படிப்பட்ட கால கட்டத்தில் ஒருநாள் எதேச்சையாக கடைத் தெருவில்சந்தித்தேன். எனக்கு ஆச்சரியம்.

  மிகுந்த ஆன்மிக நாட்டம் கொண்டவரான அவர் நான் சற்றும் எதிர்பாராதவகையில், சிறுவாச்சுர் போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா?" என்று கேட்டார். நானும் உடனே ஓ! வரேனே!" என்று சொன்னேன்.

  வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சோன்னபோது, என் மனைவிக்கு ஆச்சரியம். என்ன திடீர்னு என்று கேட்டாள். நண்பர் கூப்பிட்டார். எனக்கும் போகணும்னு தோணிச்சு!" என்று பதில் சொல்லிவிட்டு நண்பரோடு அம்பா ளை தரிசிக்க சிறுவாச்சுர் பஸ் பிடித்தேன்.

  அப்போது செல்லும் வழியில் என்னைப் போலவே ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். சிலர் உரக்க.ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மனத்துக்குள்ளேயே ஜபித்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் எனக்குப் புதுசு இல்லை வியப்புடன் சென்று கொண்டிருந்தேன். இடத்தை நெருங்கிய போது பக்தர்களின் கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நான் மெய்மறந்து அந்த வரிசையில் கரைந்தேன்.அம்பாளை தரிசிக்கும்போது ‘பேசலாமா? கூடாதா? பேசலாமென்றால் என்ன பேசுவது? ஏதாவது கேள்விகள் கேட்லாமா?’ எனக்குள்ளே விடை தெரியாத பல கேள்விகள்.

  கியூ என்னை முன்னே அழைத்துக்கொண்டு போனது. சுமார் எட்டு மணிக்கு கியூவில் சேர்ந்த நான் அம்பா ளைஅருகில் கண்டபோது மணி பதினொன்று அம்பா ளை நமஸ்கரித்து என் அறியாமையையும் வெளிப்படுத்தினேன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால்அண்மையில் தரிசித்ததால்எனக்கு மெய்சிலிர்த்தது. பித்துப் பிடித்த நிலையில் நான் இருந்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்த அழுகை கூட ஒரு வகை தொழுகைதானே. முந்தைய பிறவியில் இழந்த ஒரு பொருளை நான் இப்போது கண்டெடுத்தேனோ என்று நினைக்கத் தோன்றியது. தேடிக் கொண்டிருந்த பொருள், என் மடியில் வந்து விழுந்தது போன்ற மகிழ்ச்சி. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அருகில் தரிசித்த கணத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. என்னை பூசாரிகள் ஆசீர்வதித்தார்கள். தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கத் தொடங்கினார். சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தேன். நம்மை அவர் கவனிக்கவில்லையே என மனத்துக்குள்ளே ஏக்கம். அதே நேரம், தரிசனத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லோரும் பழம், பூ, என்று வாங்கிக் கொண்டு வந்ததை அவர் முன் சமர்ப்பிக்கிறார்கள்.

  மௌனமாக மீண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தொடங்கினார். மீண்டும் என்னை நோக்கி சாமி வரணும். எதிர்பார்த்துக்
  கா த்திருந்தேன். லேசாகச் சிரித்துவிட்டு . சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் என்னை நோக்கி பார்த்து, அம்பாளின் உத்தரவு வந்தது, பிரசாதம் வழங்கத் தொடங்கினார் ஒரு கணமும் தாமதிக்காமல் கும்பிட்டு வணங்கி விட்டு அவரிடமிருந்து பிரசாதம் பெரும் போது புதையல் கிடைத்த சந்தோஷம் எனக்கு.

  வீட்டுக்கு வந்ததும் வந்தபோது என் சந்தோஷம் இரட்டிப்பானது. குளித்துத் தயாராகி, பூஜை அறையில் அமர்ந்து அம்பாளை தியானித்தேன். அம்மனை மனத்திலே இருத்திக்கொண்டு அம்பாளை வணங்கி விட்டு, நுழைவாயிலையே பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தேன். இப்படி ஒரு அரிய வாய்ப்பினை அருளி இருக்கிறாளே என்ற மகிழ்ச்சி; அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய நண்பர் அந்த இடத்தில் பிரவேசித்தார். பல ரசிக்கத்தக்க விஷயங்கள் இடம்பெற்றன. அந்தக் கணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி கோஷம் முழங்கியது

  அங்கே திரண்டிருந்த ஆன்மிக அன்பர்கள் மத்தியில் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.அடுத்த சில நிமிடங்களில் எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு. ஆனந்தத்தில் என் கண்கள் நீர் பெருக்கிட்டன.

  ReplyDelete
 13. புகழ் பெற்ற பல ஆலயங்களில் ஸ்ரீமதுரகாளி ஸ்தலம் ஒன் று. ஒருமுறை ஒருவர் பெரியவாளை தர்ஶனம் செய்யபோனார்.அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரை தனியாக அழைத்து மஹாப்பெரியவா சொன்னார். பெரியவாளின் அனுக்ரஹத்துக்கு ரொம்பப் பாத்ரமானவர். ஸ்ரீமதுரகாளி கோவிலுக்குசென்று ப்ரார்த்தனை செய்து கொள்ள வரசொன்னார்.ஒன்னோட எதிர்காலம் ரொம்ப க்ஷேமமா இருக்கும். நெறைய பாக்யம் கெடைக்கும். ஆக பெரியவாளின் அனுக்ரஹம் கிடைத்தது. ஒரே வியப்பு. அன்னையிடம் ப்ரார்த்தனை செய்தார்

  ReplyDelete
 14. அம்பாள் மஞ்சள் மணக்கிறது தூபம் தீபமொளிர்கிறது தீபத்தினை பசு நெய்விட்டு ஜொலித்திருக்கும் (உன்) தரிசனம் இனிக்கிறது
  காலையும் மாலையும் திங்கள் வெள்ளி தினம் தரிசிக்கலாம் அற்புத அலங்காரம்
  காணக் கிடைக்காத தாய் உந்தன் திருக்கோலம்
  அம்பாள் சந்நிதி வந்ததுமே சங்கடம் விலகுகிறது
  அஞ்சேல் என்றே அபயக்கரம் தோன்றி அருள்கிறது தியானித்து ஒரு முறை சுற்றி வர நிம்மதி பிறக்கிறது மறு முறை சுற்றி வர மாற்றங்கள் தெரிகிறது
  தரிசனம் முடிந்ததுமே கரிசனமாய் உந்தன்
  இருவிழி அள்ளித் தரும் அருளும் இங்கே தெரிகிறது
  ஏற்றங்கள் வருகிறது ஏழ்மையும் விலகுகிறது
  வெற்றிகள் குமிந்து உடன் விதியும் மாறுகிறது
  மற்றொன்றும் வேண்டாமல் பதமலர் தர வேண்டி
  சட்டென்று மனதினிலே நல்லெண்ணம் பிறக்கிறது
  அன்னை நாமம் அது மட்டும் உள்மனதில்
  சஞ்சாரமிட்டு இங்கே உயர்வாய் ஒலிக்கிறது-இதுக்கெல்லாம் நல்ல கொடுப்பினை வேண்டும்
  வினைகளைக் களைவாய் போற்றி
  குணமுடன் வாழ அருள்வாய் போற்றி. திங்கள் வெள்ளி -கிழமை அமாவாசை பெளர்ணமி சிறப்பு மிக்க நாள் ஏனைய நாட்களில் மூடப்படுவது வழக் கம் நமது குல தெய்வ வழிபாட்டில் குல தெய்வத்துக்கான வழிபாடு அற்புதமானது அம்பாள் அருளைப் பெறுவோம் ஓம் சக்தி

  ReplyDelete
 15. மா தவம் நீ தான் அம்மா காணக் கிடைக்காத உந்தன் தரிசனம்
  மஹா சக்தி நீ தானே அம்மா
  த்யானம் செய்வோரின் சலனம்
  ஷண நேரம் கொண்டு தீர்ப்பாயே நீயும்
  துதி பாடும் மனதின் துயரங்கள் மாற்றி
  துணை தந்து அருள்வாயே என்றும்
  உன் சேவை செய்வோரின் தேவை
  அறிந்தே நீ அருள்வாய் எப்போதும்
  மனதார உன்னை நினைப்போரை நாளும்
  உன் நிழலில் வைப்பாயே நீயே 

  ReplyDelete
 16. ஸ்ரீ காஞ்சி காமகோடிமஹாஸ்வாமி சரணம் சரணம்
  என்ன பெரும் பாக்கியம் நான் செய்தேனோ தெரியாது
  தாயே உன் சேவடியை காணவே என் இதயம் தான் குளிர்கின்றதே. நான் போகும் வழி வந்து துணை புரிவாயே
  உன் திருநாமம் கூற பெரும் பாக்கியம் நான் என்ன செய்தேனோ தெரியாது. தஞ்சமென சரணடைந்தேன் வந்திடு என்னை காத்திட என்னை கரை சேர்த்து அருள் புரிவாயே இரு கைகள் உயர்த்தி என் கண்ணிலே உன்னை காணவே வாக்கினில் உன் திருநாமம் பாட, என்னை வந்து காத்திடுவாய் கொஞ்சமும் குறையாத அன்பு அருளி
  நெஞ்சத்தில் நிம்மதி நிலைக்கச் செய்திடுவாய்
  அபயம் தந்து எனை ஆட்கொள்ளுவாய் அஞ்சேல் அஞ்சேல் என்றே உரைப்பாய் தாயே
  தியானத்திற்கு உகந்தது அம்மா உன் திருவுருவம்
  பூஜிக்கத் தகுந்தது உன் திருப்பாதங்கள்
  பக்தர்கள் செய்திட்ட பாக்யமாம், சிறுவாச்சுர் வாழ் தயாநிதியே எங்கும் எவர்க்கும் என்றென்றும் மங்களம் தருவாய்

  ReplyDelete
 17. விழிகளில் பெருகி வழியும் நீரோடு
  உருகியே ஸ்ரீமதுரகாளி என்று அழைத்தால் வாராது இருப்பாயோ அம்மா உன்னை மனதினில் ஒரு முறை ஆழ்ந்தே நினைத்து உரிமையில் அழைத்தால் வாராது இருப்பாயோ அம்மா
  இருகை குவித்து இங்கே ஒருமனதாகவே உன்நாமம் உரைத்திட வாராது இருப்பாயோ அம்மா
  திருக்கை உயர்த்தி அருளிட அழைக்கின்றேன் அம்மா
  கேட்டதும் நீ உடனே வாராது இருப்பாயோ அம்மா
  நிகழ்ந்திடும் யாவையும் முன்பே எழுதி வைத்த
  பிரம்மனின் எழுத்தையும் மாற்றிடும் உன்னருளே அம்மா
  நிகழ்கால செயல் யாவும் நிர்ணயிக்கும் முன்வினைகள் அவை யாவும் நலமாக செய்வதும் உன் துணையே அம்மா
  வருங்காலம் அமைதியில் இனியதாய் இருந்திட
  எதிர் வரும் தீயவைகள் அவை யாவும் மறைந்திட
  தருவாயே உன்னருளை அதைவேண்டிக் கேட்கின்றேன் அம்மா

  ReplyDelete

 18. போதாது ஒன்றும் போதாது ஸ்ரீமதுரகாளியி ன்
  பெருமை சொல்ல வார்த்தை ஒன்றம் போதாது
  பலகோடி பக்தர்களைக் கொண்டவள் அவள் நம்
  துயர் துடைக்க ஓடி வந்து அருள்பவள்
  தடையின்றி அருளைத் தரும் தாய் அவள்
  மனம் ஏறி வழி நடத்திச் செல்பவள்
  தினம் வேண்டுபவர் குறை தீர்த்து நின்றவள்
  மண்ணகத்து மாந்தர் துணையானவள் பக்தர்கள் போற்றும் கடவுளென ஆனவள்
  அவளின் பெருமையை சொல்ல
  வார்த்தை ஒன்றும் போதாது சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மா தருவாயே உன்னருளை

  ReplyDelete
 19. அள்ளித் தரும் அருள் பொழிந்த அன்னை
  ஸ்ரீமதுரகாளியி ன் கருணை
  பதகமலம் பணிந்து விட்டேன் பக்திவரம் தாராய்
  பாரபட்சம் இல்லாமல் பிள்ளை முகம் பாராய்
  செந்தேனாய் இனிக்கும் உன் நாமம் உரைக்க கரும்பினிய தமிழாலே பாடி வந்தேன் செவி கொடுத்துக் கேட்டு என்னைச் சேர்த்தணைப்பாய் தாயே நான் காரிருளில் கலங்குகின்றேன் கைவிளக்காய் வாராய் தனியாய் நின்றேன் என் துணையாய் வந்தாய் என் மனதுக்கு ஆறுதல் தந்தாய் துடித்திடும் என் இதயத்தில் பக்தியைத் தந்தாய் என் பாவங்கள் தடுத்து நீ அருள்வாய் அழுதால் ஆறுதல் அளிக்கும் தாயே

  உன் கருணையின் பலத்தில் என் வழி நலமே
  உன்போல் உண்டோ சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மா தாயே இவ வுலகில். மனசு முழுதும் சிலிர்க்க கண்முன் உன் காட்சி கிடைக்கிறது உன் நிழல் கிரீடமாய் ஜொலிக்கிறது தருவாய் மோக்ஷம் பாதம் பணிந்து கும்பிடுகிறோம் அன்னை ஸ்ரீமதுரகாளி தாயே 

  ReplyDelete
 20. கண்களில் அருளே
  தாங்கிய உருவே
  கைகளில் ஆசிகள்
  தேக்கிய இறையே
  தோற்றத்தில் எளிமை
  பார்வையில் அருமை
  மனமெங்கும் நிறைவே
  தந்திடும் அருளே
  தாயினும் தயவே
  தவத்தின் முடிவே
  தூய்மைப் பாதம்
  துதித்திட தாங்கும்
  வாய்மை வழியில்
  நடந்தால் உயர்த்தும்
  தரணியில் தோன்றி
  வரமருள் தெய்வம்
  சிறுவாச்சுர் ல் உரை
  ஸ்ரீ காமகோடி சந்திரசேகர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் குல தெய்வம்
  சரணம் சரணம் சரணம் உன் பாதம்
  சரணம் தந்திடும் துணை 

  ReplyDelete

 21. அன்னையின் வடிவம் ஸ்ரீமதுரகாளி
  உலகத்து நாயகியான பராசக்தி அவள். தன்னை நாடி வருவபவர்களுக்கெல்லாம் வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருகிறாள். கேட்டவற்றையெல்லாம் தரும் கற்பகமாக அவள் விளங்குகிறாள். தன் மெய்யடியார் துயர்தீர்க்க, தன் குழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுந்தருளி அமர்ந்த திருக்கோலமாக அருள் செய்கிறாள்
  ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எல்லா ஆலயங்களிலும் அமர்ந்த திருக்கோலத்திலேதான் காண்கிறோம்.
  தன் அடியார் அழைக்குமுன்னே ஓடிவந்து அருள் செய்தற்காகவே விழிப்புடன் இருக்கிறாளாம்!
  அன்னையின் அருள் பெருக்கு எத்தகையது என்பதற்கு எத்தனை எத்தனையோ சான்றுகள் கூறலாம். அற்புதமான மலர்களாக மலர்ந்து, நம்மை வசீகரிக்கும் தன்மை பெற்றவள். சோழமண்டலத்தில் இவருடைய பெயர் நிலைத்து நின்று விட்டது அமாவாஸ்யை, பூர்ணிமையின் பொலிவிலே தாயின் அற்புத வடிவம் தற்பொழுது பளிச்சென்று பொன்னிறமாக ஒளி வீசுகின்றா ள். தஞ்சையை ஆண்டுவந்த அரசர் சரபோஜி மன்னர் கூட கண்டதென்ன? மகாதேஜஸ்வியாக ஒளி வீசுகின்றாள். உலக சிந்தையே சிறிதுமில்லாத மெய்ஞ்ஞானிபோல் மானஸிக பூஜை செய்து கொண்டிருந்தவர்களுக்கு தாயின் காட்சிதருகிறாள் திருவருள்.தெரிகிறது.இவரைப் பற்றிய கதைகள் பல உண்டு. அவளது எல்லையற்ற பேரெழில், பேரன்பு, தாயின் திருவருள்.அவர்களுக்கு கண்ணுக்குப் புலனாகிறது. தாயின் அற்புதாமன ரூபஸெளந்தர்யம் எப்படித் தெரிகிறது என்பதை அருகில் சென்று காண
  வேண்டும். வீற்றிருக்கும். அன்னையின் திருவுருவுக்கு மலர்களைத் திருவடிகளிலே தூவி
  தாயின் அற்புத வடிவை காண வேண்டும். இறைவியின் முன்னே கண்ணீர் மல்க நின்ற, கூடியிருந்த மக்கள், கண்களை மலரவிழித்து ஒரு முறை பார்த்தால் மறு முறை பார்க்க தோன்றும். நெற்றித் திலகம் பளிச்சென்று தெரிகிறது அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழையையும் பொறுத்து மூடி மறைத்துக் காக்கும் பேரன்புதான் தாயின் திருவருள். உன் பெருமைகளை துதிப்பவர்களுக்கு எதுதான் கிட்டாது தாயே. அவ ளை மதிக்கின்றவர்களுக்கு நம்மை வசீகரிக்கும் முறை கூடதெரியாதா! அமுதவெள்ளமாக வெளிவந்தது அன்னையின் கருணை. அன்னையைத் தொழுபவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா ஒருமுறைசென்று பாருங்கள். இதன்பின் அற்புதமான காட்சி கண்முன்னே விரிகிறது. அம்மா இதோ தெரிகிறாள். மேலும் மேலும் கேள்விகளும் விடைகளும் எதற்கு? இன்பம் காண்பவள் தாய். ஒரு முறை ஸ்ரீமதுரகாளி என்று அழைத்தால் போதும்; ஓடிவந்து வாரி எடுத்து அணைத்து வேண்டுவதை எல்லாம் தருகிறாளாம்.
  எனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன். இது மட்டுமல்ல, இன்னும் என்ன என்ன நல்லன உண்டோ அவை எல்லாவற்றையும் ஒருங்கே தரவல்லது இவளது பேரருள். தமிழ் மக்களாகிய நாம் பாக்கியசாலிகள்

  ReplyDelete
 22. Shri Mathura Kali, the goddess of power and strength, is perhaps the most important Goddess of the Hindus. She is the destroyer of evil with her four mighty arms. As Parvati, she is serene, the pretty consort of Lord Shiva by his side in the snowy peaks of the Kailash mountain, while Shri Mathurakali is on the foothills of Mathiramalai or known as Periyaswamy Malai. Goddess Shri Mathura Kali has the inherent dynamic energy through which she protects HER devotees. She represents the power of the Supreme Being that preserves moral order and righteousness. Shri Mathura Kali is also called as Divine Mother, protects mankind from evil and misery by destroying evil forces such as selfishness, jealousy, prejudice, hatred, anger, and ego. She remains as Shakti - the divine power to her beloved deovtees. Lord Shiva gave her a trident while Annapoorani gave her an Akshaya Patra and the god of mountains, Himavat gifted her with a lion to ride on. Charugan, the Asura capturing the power of the local village Deity Shri Chelliamman by tantric acts was making the life of the villagers at Siruvachur enraged by the disastrous events. The demon was trying to escape and it is only at the instance of Lord Shiva based on the villagers prayers, the tale of woe, deputed Goddess Parvathi who assumed the form of Shri Mathura Kali with her sword Shri Mathurakali hacked the demon into pieces. He was then buried as per his wishes in front of the Sannathi. At that moment, Goddess Parvati - wife of Lord Shiva - was going to get back to her place, having heard their tale of woe, particularly from Chelliamman, local Village Deity, she agreed to stay back at Siruvachur and was known as Shri Mathura Kali. In fact, widespread worship of goddess Durga, a form of Goddess Parvathi, is found in texts of the 4th and 7th centuries A.D., with the resurgence of goddess worship during those times itself.

  ReplyDelete
 23. ஸ்ரீமதுரகாளி தாயே அம்மா உந்தன் மலரடியே சரணம்
  நாமெல்லாரும் இப்பிறவியில் நம்மை ஈன்றெடுத்த தாயாரை அம்மா என்கிறோம். நூறு வயது வரை வாழ்ந்தாலும் இப்பிறவிக்கு ஒரு தாயார்தான். அடுத்த பிறவியில் யாருடைய வயிறோ? யாரை நாம் அம்மா என அழைத்தபடி எவள் பின்னால் ஓடுவோமோ? அதை யாராலும் அறிய முடியாது. ஆனால் எத்தனையெத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கென ஒரு தாய் நிரந்தரமாய் இருக்கிறாள். கண்ணையும், கருத்தையும் நம் மீதே பதித்தபடி. அவளை நாம் அழைக்கக் கூடத் தேவையில்லை. தானே வந்து உதவுவாள். அவள் யார்?

  அவள் தான் சிறுவாச்சூர். ஆம் ஸ்ரீமதுரகாளி அம்மன் தான். அகில உலக அன்னைக்கு பக்தர்கள் பல உண்டு உலகத்தவரின் நம்பிக்கைக்கு கலங்கரை விளக்காக ஆங்காங்கு சக்தி பீடங்கள் விளங்கி வருகின்றன. அவ்வாறு உலக மக்களால் போற்றப்படும் தலங்களில் குறிப்பிடும்படியான ஒன்றாக விளங்கி வருகிறது அருள்மிகு தேவி ஸ்ரீமதுரகாளிஅம்மன் திருத்தலம் .

  தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் சக்தித் திருத்தலங்களில் மகிமை மிக்கது இத்திருத்தலம். தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்தத் தாய் தன் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத்தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் பெறுவதே குழந்தையின் இயல்பு. அதே போல ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலாப் பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.

  ஏழை, பணக்காரன் படித்தவன் முதல் பாமரன் வரை அவள் பாதம் காண ஓடி வருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம் அவள்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நாயகி! அகில உலகமும் காக்கும் அந்த அன்பு அன்னையைத் தொழுவோம்! அனைத்து அருளும் பெறுவோம்.

  ReplyDelete
 24. நம்மிடம் எல்லாரையும்விட அன்பாக இருப்பது தாயார் தான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் சொல்லலாம். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. மனப் பூர்வமாக நமஸ்காரம் செய்துவிட்டால் போதும். அம்பாளை நம்பிக்கையுடன் நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம்

  ReplyDelete
 25. அருளைத் தருபவள் அன்பை வளர்ப்பவள்
  ஆறுதல் தந்து ஆசி தருபவள்
  இடரை அழிப்பவள் இன்பம் தருபவள்
  ஈர்த்து அருளிடும் உயர்ந்த தாயார் அவள்
  எங்கும் நிறைந்தவள் என்னுள் அமர்ந்தவள்
  வாழ்த்துகின்ற அறிய துணை அவ ள்
  ஒளியாய் வருபவ ள் வாழ்வில் ஒளியைத் தருபவள்
  ஓங்காரப் பரம்பொருளாய் உயர்ந்து நிற்பவ ள்
  ஔடதமாய் இருந்து என்றும் துயர் துடைப்பவள்

  ReplyDelete
 26. காணக் காண பேரின்பம் பெருகுதே
  காத்தருள் புரியும் தேஜோ ரூபி நாயகியை
  அன்னை வீற்றிருக்கும் அழகு தலத்திலே
  தானும் இருந்து பக்தர்களை தாங்கிடும் தேவதயை
  சோதனை தாங்கிடும் சக்தி தருபவளை
  சேதங்கள் வாராமல் காத்து அருள்பவளை
  பேதமேதுமின்றி காத்தருள் புரிபவளை
  காணக் காண பேரின்பம் பெருகுதே

  ReplyDelete
 27. ஸ்ரீமதுரகாளியே எங்கள் குல தேவதயே
  சகல சக்தியும் தந்திடுவாள் தேஜோரூபியே
  சர்வ துக்கம் தீர்த்திடுவாள் சுபதேவதயே
  வீரமான வெற்றி தரும் விஜயதேவதயே
  நம்பிக்கை விருத்தி செய்யும் தேவதயே
  கேட்கும் வரங்கள் தந்திடுவாள்
  செல்வம் பல தந்திடுவாள்
  பிள்ளைப் பேறைக் கொடுத்திடுவாள்
  சர்வலோகம் காத்திடுவாள்
  இதயத்தில் குடியிருப்பாள்
  இருளை நீக்கி அருளைப் பொழியும் தேஜோரூபியே

  ReplyDelete
 28. வாடினேன் வாடி வருந்தினேன் ஸ்ரீமதுரகாளியைக் காண
  மனத்தால் பெருந்துயர் இப்பிறவியில் பிறந்து
  கூடினேன் நம்பிக்கை காத்து சக்தி அருள்பவளை
  அவள் தரும் நலம் கருதி
  ஓடினேன் ஆம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியைத் தேடி
  நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
  ஸ்ரீமதுரகாளி என்னும் நாமம்

  ReplyDelete
 29. உம் நாமம் துதி பாடும் பக்தர் கூட்டம்
  கூப்பியே கையிரண்டும் உருகியே மனதினில்
  தரணியில் முன்னம் நினைத்ததுமில்லை
  தப்பித் தவித்து துள்ளித் துடித்து
  துன்பத்தில் ஆழ்ந்து அல்லல் பட்டு
  வாடும் பக்தர்களை காத்திடும் என் தாயே
  பெறியது உன்னுள்ளம்
  வேறொன்றும் நானறியேன்
  எப்படித்தான் கண்டெடுத்தீரோ
  ஒப்புயர்வில்லாத உத்தம நாயகியை
  கடைக்கண் வைத்தெங்களை
  கதி தந்து காத்திடுவாயே
  வேறொன்றும் நானறியேன்
  ஸ்ரீமதுரகாளி தாயே

  ReplyDelete
 30. ஸ்ரீ மதுரகாளிதேவியம்மன் ரொம்ப சாந்த சொரூபத்துடன் அமர்ந்திருப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள். மேலும், இந்த அம்மன் அருள் கூட்டும் முக பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஸ்ரீ மதுரகாளிதேவி கோவில் சந்நிதிக்கு வந்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை வரம் வாய்க்குமாம். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்கு பட்டுப்பாவாடை மற்றும் தங்ககவசம் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலின் பங்குனி/சித்திரைத் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம். பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். கோவில் அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தை முகம் ஒன்று. இடத்தை அடைந்தபோது, கூட்டமான கூட்டம். பக்தி பிரவாகத்தில் ஆண்களும், பெண்களும், பெரியவர்களும், நடுத்தர வயதினரும், இளைய தலைமுறையினரும், சிறுவர்கள், சிறுமிகளுமாக ஜாதி பேதமில்லாமல் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். !ஆம் நாம் இவ்வுலகில் காண்பதனைத்தும் இறைவியின் கைவண்ணமே தவிர வேறெதுவுமில்லை. நாம் காண்பதனைத்தும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அவளுடையதே. நம்முடைய உயிரும் அது தங்கியுள்ள உடலுமவள் அளித்ததே நமகென்று எதுவுமே சொந்தமில்லாத நிலைமையில் நான் என்றும் .எனது என்றும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது ? அ ம்பாளை மட்டும் உங்கள் உள்ளத்தில் விளையாட விடுங்கள்.
  அவன் உங்கள் மனதில் உள்ள அனைத்து அசுரர்களையும் அழித்து உங்களுக்கு ஆனந்தமயமான வாழ்வை நிச்சயம் அருள்வாள்
  தாய்போல கருணை தரும் அன்பு முகம் நம்மிடையில் காட்சிதரும் ஆனந்த முகம் நமஸ்காரம் புரிகின்றோம் நம் தாயை இன்று. ஆடி வெள்ளி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளும் இங்கே விசேஷம். இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மாங்கல்ய பலம் பெருகும் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். மேலும், ஆடி மாதம் வெள்ளி மற்றும் கடைசிதை வெள்ளிக் கிழமைகளில் இந்தக் கோயிலில் நடைபெறும் விசேஷ அபிஷேக, பூஜை ஆராதனைகளில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசிக்க, அவளருளால் சகல நலன்களும் கிடைக்கும்.அவள் திருநீறணிந்தால்; தயை கூர்ந்த அருள் புரிவாள். நம் நாவால் விவரிக்க இயலாத இறையம்சம் உடையவள் உலகம் ஈன்றத் தாயவள் சிறுவாச்சுரில் வந்து வீற்றிருக்கும்போது நமக்கு கவலைஎதற்கு அவள் தம் திருவடியை தலைமேற் கொண்டு வாழ்வோம் அவள் நாம ஸ்மரணை ஒன்றேதுணையாக இருக்கும் எங்கும் ஸ்ரீ மதுரகாளி எதிலும் ஸ்ரீ மதுரகாளி என்று நினைத்தால் அதிசயம் மட்டுமில்லாமல் அவள் க்ருபை ஒன்றே துணையாக இருக்கும் நம்பினோர் கெடுவதில்லை என நிதமும் நிரூபிக்கும் ,அம்பாள் கருணைக் கடல். எண்ணியது எண்ணியாங்கு நமக்கருளும் தெய்வம்

  ReplyDelete
 31. ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல். இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை. கடவுள் அருள் துனண நிற்க கவனத்துடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும். மதிர மலையில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன முதலில் சென்று அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை ஆண்கள் மட்டும் செல்லலாம் ஆனால் தற்போது தரிசிப்பவர்களுக்கு சாத்தியமாகும் தற்போது சுனையருவியையும் தரிசிக்கலாம் சித்தர்கள் பாறை காணக் கிடைக்கிறது. அவள் அருளுக்கு ஸ்ரீ மதுரகாளி தாயே ஈடாக வேறொன்றும் இல்லை அவள் துணையே நாமம்.அவள் அருளை மனதில் வைத்து கவலையெல்லாம் மறப்போம் காலையும் மாலையும் தொழுது வேண்டியதை பெறுவோம் ஒரு முறை வாழ்வில் வந்ததும் நிரந்தரமானது அவள் துணையே நாமம்
  ஒரு முறை உரைத்ததும் மறுபடி உரைத்திட வைப்பது அவளருளே. ஆலயம் சென்று அவளைத் தொழுது கோரிக்கையும் வைப்போம் வேளையும் பொழுதும் அவளை எண்ணியே கடமைகளைச் செய்வோம் தோளில் உள்ள சுமைகளை எல்லாம் அவளிடமே சேர்ப்போம்
  வாழ்வில் வந்திடும் நன்மைகள் அறிந்து நம் நன்றியை கூறிடுவோம் அவளின் கருணையில் பாதைகள் தெளிந்திடும் நல்ல பயணத்தை தொடர்ந்திடுவோம்
  மருளில்லாத வாழ்கையை அடைவோம் மேலும் நன்மைகள் செய்திடுவோம். பொருள்களின் மீது பற்று வைக்காது பக்தியில் திளைத்திடுவோம் கருணைக் கடலின் பார்வையில் வீழ்ந்து அவள் குடை நிழலில் சேர்வோம் மலர் போன்ற மனமும் மதிப்பான குணமும்
  தெளிவான எண்ணமும் துணிந்த செய்கையும்
  நிலையான அன்பும் உயர்வான பண்பும்
  அளவில்லா அடக்கமும் அளவோடு பெருமையும்
  விலகாத தன்னம்பிக்கையும் விலையில்லா வெற்றியும்
  தளராத பக்தியும் துதி பாடும் உள்ளமும் இவையாவும் தந்தெனக்கு நீ அருள வேண்டுகிறேன் ஸ்ரீ மதுரகாளி தாயே
  சரணம் சரணம் நின் தாள் சரணமம்மா சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்.

  ReplyDelete
  Replies

  1. Shri Mathurakali is also one of the Swaroopam of Durga. Goddess Parvathi has taken many Avathars to protect the devotees. Durga Swaroopam is one of them. Here is a Sloka about Goddess Durga, which you may all like to hear.

   https://youtu.be/iquBJsZyBLI?list=PLqYfFW19a7i5w9Dw90TBPxEE0eJOBrjeh&t=8

   Delete
 32. Mr Balasubramanian, can you please send me your e mail id? I have certain views to communicate. my email id is nrj1945@gmail.com
  Thanks

  ReplyDelete
 33. Vanakam
  Can you clarify if MathuraKali and MaruthiAmman are the same? Thanks.

  ReplyDelete
 34. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 35. Sir,
  Have you not seen my mail sent to yo ?
  I have opened a separate blogger for Mathura Kaliyamman to exclusively put your content on it.
  Please click the link below to see the site which has your contents.
  http://mathurakali.blogspot.in/

  ReplyDelete