Thursday, June 16, 2011

Rice Goddesses of Indonesia, Cambodia and Thailand


இந்தக் கட்டுரை நான் வெளியிட்டு உள்ள அரிசி மற்றும் உணவு தானிய தேவதைகளுடன் சம்மந்தப்பட்டதே. நான் எழுதி உள்ள கதை கிரேக்க மற்றும் ஜாவா நாடுகளில் நிலவும் புராணக் கதையை  அடிப்படையாகக் கொண்டது.  கென்ட் டேவிஸ் வெளியிட்டு உள்ள  இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் அரிசி தானிய தேவதை என்பது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை.  இந்தக் கட்டுரையில் பல உண்மைகளை தெரிவித்து உள்ளார் . அவற்றையும்  படித்து மகிழவும்.
This part of the article is in continuation with the story of Rice and Harvest God posted by me. Though I have posted the two stories of the Rice and Harvest God based on Java and Greek Mythological stories , Kent Davis research article on Rice God of Indonesia, Thailand and Cambodia  is worth reading  as it throws more light on those Goddesses. Read and enjoy.

Translated Article   /  மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை 

Original in English by :  KENT DAVIS          Translated into Tamil : Santhipriya

ஆசியாவில் பல இடங்களிலும் உள்ள தேவதை தேவிகளுடன் அங்கோர் வாட்டில் உள்ள தேவதைகள் மற்றும் அப்சராக்கள் எனப்படுபவர்கள் சம்மந்தம் வைத்துக் கொண்டு உள்ளார்கள். அங்கோர் வாட்டில் உள்ள பாற்கடலில் இருந்து வெளி வந்து பறந்த தேவியைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தபோது இந்தோனேசியாவின் 'தேவி ஸ்ரீ' (Dewi Shree) எனப்படும் அரிசி தானிய  தேவதை பற்றி படிக்க நேர்ந்தது.
இந்தோனேசியாவின் அரிசி தானியம் , நிலவளம் மற்றும் செழுமை தரும் தேவதை
இந்தியாவின் ஹிந்துக்களுடன் தொடர்புக் கொண்டது.
'தேவி ஸ்ரீ'யின் அசல் அல்லது  மூலப் பிரதியின்  படங்கள் கிடைக்கவில்லை என்பதினால் 'விக்கிபிடியாவின்' (Wikipedia) தற்காலத்திய படங்களையே இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் அவளுடைய நடத்தையும், தளவாடங்களும் அங்கோர் வாட்டின் தேவதைகளிடம் முற்றிலும் ஒத்துப் போகின்றது என்பது முக்கியமான விஷயம் ஆகும்.
கொஹ் கேர் எனும் இடத்தில் காணப்பட்ட
க்ஹ்மேரை சேர்ந்த உமா தேவி - Cornell Collection
'தேவி ஸ்ரீ' அரிசி தானியம் , தண்ணீர் மற்றும் சந்திரனுடன் சம்மந்தப்பட்டவள். மேலும் அவள் பாதாளத்தின் நாகம் அல்லது பாம்புகளின் இனத்துடன் அதாவது க்ஹ்மேரில் உள்ள அதே வம்சத்து பிராணிகளுடன் சம்மந்தப்பட்டவள்.
மிக உயர்ந்த என்ற அர்த்தத்தைத் தரும் பெயரான 'போ இனோ நோகர்' (Po Ino Nogar) எனும் தேவியே கம்போடியா நாட்டில் ஒரு தெய்வம். அவளை சில நேரங்களில் இந்துக் கடவுளான 'உமா' தேவியுடன் (பார்வதி) ஒப்பிடுகிறார்கள். அவளும் ஏறத்தாழ 'தேவி ஸ்ரீ'யுடன் ஒத்துப் போகின்றாள். காரணம் 'போ இனோ நோகர்' எனும் தேவி நில வளம் மற்றும் நீர்வளத்தை தந்து விவசாயம் செழிக்க அங்குள்ள மக்களுக்கு அருள் புரிபவள் என்று போற்றி வணங்கப் படுபவள். அங்கோர் வாட்டில் உள்ள அப்சராக்களைப் போல அவளும் ஆகாயம், மேகம் மற்றும் மழையைக் கட்டுப்படுத்தி வைத்து இருப்பவளாம் . பலரை மணந்துள்ள 'போ இனோ நோக'ருக்கு 97 கணவன்மார்கள் இருந்தார்களாம். 38 குழந்தைகளுக்கு தாயான அவளுக்கு 'போ யான் டாரி' ( Po Yan Dari) என்ற மகள் இருந்தாள். அவள் குகைகளிலும் நந்தவனங்களில் இருந்த குகைப் போன்ற பகுதிகளிலும் தங்கி இருந்தவாறு மக்களுக்கு நோய் நொடிகளையும், மரணத்தையும் தந்து கொண்டு இருந்தவள் என்ற கதை உள்ளது. ஆனால் அந்த புராணக் கதையின் மாறுபட்ட கதையில் அவளைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவளுடைய பெயர் 'பஜாவு டான் '(Pajau Tan) எனவும் அவள் துயரங்களைத் துடைப்பவள் என்பதினால் இறந்து போனவர்களையும் உயிர் பிழைக்க வைத்தாள். ஆகவே ஜனன- மரணத்தின் அர்த்தம் அழிந்து போகத் துவங்கியதினால் அவள் ஆகாயத்தில் இருந்த சந்திரனில் சென்று வசிக்குமாறு அங்கு அனுப்பி வைக்கப்பட்டாளாம். 'போ இனோ நோகரின்' இன்னொரு பெண்ணின் பெயர் 'போ பியா திகுஹ்' (Po Bya Tikuh) என்பது. அவள் வயல்களில் உள்ள எலிகளுடைய தலைவியாம். அதனால் வயலில் விளையும் பயிர்களை எலிகள் பாழாக்காமல் பாதுகாப்பவள்.
'போ இனோ நோகரின்' படம் கிடைக்கவில்லை. ஆனால் தாய்லாந்து நாட்டின் அரிசி தானிய தேவதை மிகவும் புகழ் பெற்றவள். 'மே போசொப்' {Mae Posop (แม่โพสพ)} எனப்படும் அந்த தெய்வம் நீர்வளம், நில வளத்தைத் தருபவளாக வணங்கப்படுகிறாள். இந்த தேவதையின் பெருமையைப் பற்றி தெரிந்து கொள்ள 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் ஆம் தேதி வெளியாகி உள்ள தாய்லாந்து நாட்டின் மகராணி சிரிகிட் விழாவில் கலந்து கொண்டார் ** எனும் கட்டுரையைப் படிக்கவும் .

(தாய்லாந்து நாட்டின் மகராணி சிரிகிட் விழாவில் கலந்து கொண்டார் ** Tamil Translation of ''Queen Sirikit of Thailand presided over a ceremony'' from http://www.thaindian.com/newsportal/thailand/hm-the-queen-to-observe-ceremony :-
மேன்மைமிகு மகராணி அவர்கள் 09 .08 .2008 ஆம் தேதியன்று அரிசி தானிய தேவதையை போற்றி பூஜிக்கும் விழாவில் பங்கேற்கின்றார். செய்தி :-அம்ரித்ரஷ்மிஸ்ரீசேதி.
தாய்லாந்து நாட்டின் மேன்மை மிகு மகராணி சிரிகிட் அவர்கள் இன்று - ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதியன்று - ஆங் தாங் மாகாணத்தில் நடைபெறும் அரிசி தானிய தேவதையை நிலத்திற்கு அழைக்கும் வைபவத்தில் கலந்து கொள்ள வருகின்றார். இந்த வைபவம் தாய்நாட்டின் பண்டைய பழக்கத்தை பெருமைப் படுத்தும் விதத்தில் அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தினால் நடத்தி வைக்கப்படுகின்றது.
இந்த வைபவம் இன்று மதியம் விவசாயிகள் மீது என்றுமே கருணைக் காட்டும் மேமை மிகு மகராணியை பெருமைப் படுத்தும் விதத்தில் நடைபெற உள்ளதாக விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சரான சோம்சக் ப்ரிசான்தக்குள் (สมศักดิ์ ปริศนานันทกุล) அவர்கள் கூறினார். மேலும் அவர் கூறுகையில் '' தாய்நாட்டின் 'ஆங் தாங் மாகாணத்தை சேர்ந்த 'சவாயேங் ஹா' மாவட்டத்தில் , 'தம்பொன் சி புவா தாங்' எனும் இடத்தில் உள்ள பண்ணையில் நடைபெறும். நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் நிலவிவரும் அரிசி தானிய விவசாய பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்து இருக்கும். இந்த வைபவம் கடைசியாக சித்ரலடா அரண்மனையில் 1961 ஆம் ஆண்டு நடைபெற்றதற்குப் பிறகு 30 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வைபவத்தின் மூலம் தாய்லாந்து நாட்டின் அரிசி விவசாய முறைகள் , அதன் பெருமை போன்ற அனைத்து விவரங்களையும் தாய்லாந்து நாட்டின் விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்து இருக்கும் . மேலும் இந்த வைபவத்தின் மூலம் தாய்லாந்து நாட்டு மக்கள் தமது அன்னை பூமியின் அரிசி தானிய விவசாயப் பெருமையை எண்ணி மகிழும் வகையில் இருக்கும் என்றார் .
செய்தியின் ஆதாரம்: National News Bureau, Public Relations Department of Thailand )

பண்டை காலம் முதலேயே கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் அரிசி பயிரிடும் காலம் துவங்கும் முன்னால் அரசின் சார்பில் நிலம் உழும் விழா *** எனும் வைபவம் மே மாதங்களில் நடைபெறும்.

(நிலம் உழும் விழா*** Tamil Translation of ''Royal Ploughing Ceremony'' From Wikipedia, the free encyclopedia:-
அரசாங்க அரிசி நெல் விதைக்கும் சடங்கு என்பது கம்போடியா மற்றும் தாய்லாந்துக்ஹெமேர் மொழியில் ''ப்ரெஅஹ் ரீச் பிதி ச்ரோட் ப்ரியா நியாங்கோல்'' {("Preah Reach Pithi Chrot Preah Neangkol" ) (Khmer:ព្រះរាជពិធីបុណ្យច្រត់ព្រះនង្គ័ល) } எனக் கூறுகிறார்கள். தாய்லாந்து நாட்டு மொழியில் அதை கண் 'புயேட் சமொங் கோன்' {การพืชมงคล (Kan Phuetchamongkhon)} அல்லது முழுமையாகக் கூற வேண்டும் எனில் 'பிரா ரட்சப்பிதி ப்ஹுட்சமொன்கோன் சரோட் ப்ரா நங்கன் ரேக் நா க்வான்' அல்லது 'உழவாளர்கள் தினம்' (Phra Ratchaphithi Phuetchamonkhon Charot Phra Nangkhan Raek Na Khwan; also observed as Farmer's Day.) என்கிறார்கள்.மன்னர்கள் ஆட்சி மன்னர்களின் ஆட்சி காலத்தில் பர்மா நாடு இருந்தபோது அங்கு அரசு சார்பில் நிலம் உழும் விழா பர்மியர்களின் விரத காலங்களான ஜூன் முதல் ஜூலை வரை நடைபெற்று வந்தது. போன்ற நாடுகளில் மழைக் காலத்தின் பின்னர் துவங்கும் நெல் பயிரிடும் காலத்தைக் குறிக்கும் வகையில் செய்யப்படுகின்றது. அதை
2009 ஆம் ஆண்டு இந்த விழா மே மாதம் 11 ஆம் தேதி தாய்லாந்திலும், மே மாதம் 12 ஆம் தேதி கம்போடியாவிலும் நடைபெற்றது. ஜோதிட ரீதியாகவே நாட்கள் கணக்கிடப்பட்டாலும் அந்த விழாக்கள் மே மாதமே நடைபெற்றது.
இந்த விழாவில் சம்பிரதாயமாக ஏர் கலப்பையில் பூட்டப்பட்ட இரண்டு எருதுகளைக் கொண்டு ஒரு நிலத்தை உழுவார்கள். அதில் பிராமண பண்டிதர்கள் அரிசி விதையை தூவுவார்கள். அதன் பின் அந்த எருதுகளுக்கு அரிசி, சோளம், எள் மற்றும் பச்சை பட்டாணி போன்றவற்றை ஒரு தட்டில் வைத்துத் தந்தப் பின் புதியதாக வெட்டியா புல் மற்றும் விஸ்கி பானத்தையும் தருவார்கள்.
அந்த மாடுகள் அவற்றில் உண்ணும் உணவைக் கொண்டு வர உள்ள அறுவடை எந்த அளவு செழிப்பாக இருக்கும் அல்லது அறுவடை செழுமையாக இருக்காதா என்பதை கணித்துக் கூறுவார்கள்.
தாய்லாந்தில் இந்த வைபவம் சுகோதை சக்ரவர்த்தி (1238–1438) ஆட்சி காலத்தில் இருந்து வந்தது. 1920 ஆம் ஆண்டுகளில் மன்னன் பிரஜாதிபோக் என்பவர் ஆட்சியில் அந்த விழா நிறுத்தப்பட்டது. ஆனால் 1930 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மன்னன் பூமிபோல் அடுல்யடேஜ் என்பவரினால் மீண்டும் அந்தப் பழக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
கம்போடியா மற்றும் தாய்லாந்த் போன்ற நாடுகளில் ஆட்சியில் இருந்த சக்கரவர்த்திகள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் அந்த வைபவம் நடைபெற்று வந்தது. சில நேரங்களில் அந்த சக்ரவர்த்திகளே ஏற் கலப்பை பிடித்துக் கொண்டு சிறிது தூரம் நிலத்தில் உழுவது உண்டு.
தற்போது தாய்லாந்து இளவரசரான மஹா வஜிரலோங்கோர்ன் என்பவர் தலைமையில் பாங்காகில் சனம் லுவாங் எனும் நகரில் அந்த வைபவம் நடைபெறுகின்றது. பூமிபோல் அடுல்யடேஜ்ஜின் சித்ரலட அரண்மனை வயலில் நடைபெறும் அந்த விழாவின்போது வயலில் தூவப்படும் அரிசி நெல் விதையை அந்த விழா முடிந்ததும் அங்குள்ள பார்வையாளர்கள் ஓடிச் சென்று பொறுக்கிக் கொண்டு வருவார்கள். காரணம் அந்த விதைகள் மிகவும் புனிதமானது என்ற நம்பிக்கையே. அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தம்மிடம் உள்ள நெல் விதிகளுடன் அதைக் கலந்து நிலங்களில் பயிரிடுவார்கள் .
கம்போடியாவில் அந்த நட்டு மன்னரான நோரோடோம் சிஹமோனி மற்றும் அந்த நாட்டு பிரதமரான ஹுன் சென்
என்பவர்களின் முன்னிலையில் இந்த வைபவம் நடைபெறும்.)

'மே போசொப்' แม่โพสพ- தாய்லாந்த் நாட்டின் அரிசி தானியத்தின் தேவதை. இதில் உள்ள எழுத்துக்களைப் பார்த்தால் அவை தாய்லாந்து நாட்டின் மொழி அல்ல, மாறாக க்ஹ்மேர் எழுத்துக்கள் என்பது தெரியும். இதன் அர்த்தத்தை யாராவது விளக்கினால் நல்லது.
கீழே உள்ள அனைத்தும் க்ஹ்மேர் பெண்களைப் பற்றி நாம் செய்யும் ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளன.
1. அங்கோர் வாட் சிலைகளில் காணப்படும் தேவதைகளும் மேம்பாடு, நீர்வளம், மற்றும் நிலவளத்தை பெருமளவில் தருகின்ற குணங்களைக் கொண்டவர்களே.
2. இங்குள்ள தேவதைகளும் பாதாளம், சந்திரன் தண்ணீர் மற்றும் புனித நாகங்களுடன் சம்மந்தப்பட்டவைகளே.
3. 10 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் தேவி ஸ்ரீ இருந்துள்ளதாக நம்பப்படும் ஜாவா நாடு க்ஹ்மேர் நாகரீகத்துடன் சம்மந்தப்பட்டு இருந்தது.
இதை முடிக்கும் முன் அரிசி தானியம் மற்றும் ஜாவா நாட்டின் பழக்க வழக்கங்கள்  பற்றி தாய்லாந்து நாட்டை சேர்ந்த 'விப் ரோங்கிஸ்ட்' (Vipp Rongsit) என்பவர் எழுதி உள்ளதைப் படியுங்கள்.

தாய்லாந்த் அரிசி மற்றும் 'மே போசொப்' எனும் அரிசி 
தானிய தேவதையின் விழாக்கள்
---'விப்  ரோங்க்சிட்' (Vipp Rongsit) --

 
தாய்லாந்தின் 'மே போசோப்' - แม่โพสพ -
எனும் அரிசி தேவதை 
சியாமியர்களின் முக்கிய உணவு மற்றும் வியாபாரம் அரிசி தானியமே.அரிசி தானியத்தைக் கொண்டு  செய்த உணவை சலாட், மீன், இறைச்சி, கடல் பிராணிகள் உணவு போன்றவற்றுடன் சேர்த்தே தருவார்கள். தாய்லாந்து மக்களில் மூன்றில் இரண்டு பாக மக்கள் அரிசி தானிய விளைச்சலில்தான் பெருமளவு சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தமது குடும்பத்திற்காக மட்டும் அதிக அளவில் அரிசி தானிய விவசாயம் செய்யவில்லை, உலகிலேயே மிக அதிகமாக அரிசி தானிய ஏற்றுமதி செய்பவர்களும் அவர்களே. தாய்லாந்து நாட்டின் அனைத்து செலவினங்களுக்குமான பண வரவில் பாதி பாகம் அரிசி தானிய ஏற்றுமதியினால்தான் கிடைக்கின்றது. சியாமில் ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் அந்த நபருக்கு மாத சம்பளத்துடன் அரிசி தானியமும்  தர வேண்டும்.
இப்படியாக அரிசி  தானிய விளைச்சல் என்பது நாட்டின் வளர்ச்சியில்  மட்டும் அல்ல தாய்நாட்டு மக்களின் உணர்வுகளுடனும் கலந்தே உள்ளது.   ப்யா அனுமான் ராஜட்ஹோன் (Phya Anuman Rajadhon) எனும் தாய்நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் தாய் நாட்டின் பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதியதில் இப்படிக் கூறி உள்ளார். - ' ஒரு சியாமிச்ஸ் நாட்டவர் தனக்கு பசியாக உள்ளது என்பதை தாய் மொழியில் கூறுகையில் 'ஹியூ கையோ' என்பாராம். அதன் அர்த்தம் 'அரிசிக்காக எனக்கு பசிக்கின்றது' என்பதே. எந்த உணவையும் அருந்தும்போது அவர்கள் கூறுவார்கள் 'தன் கையோ'. இதன் அர்த்தம் ' நான் அரிசி சாப்பிடுகிறேன்'. சாதாரணமாக அவர்கள் எந்த உணவைப் பற்றிக் கூறினாலும் கையோ என்பார்கள். கையோ என்றால் அரிசி தானியம் என்று பொருள். 
தாய்லாந்தின் 'மே போசோப்'
எனும் அரிசி தேவதை 
அரிசி தானிய விளைச்சலின்போது பல சடங்குகளை செய்கிறார்கள். பண்டைய காலத்தில் கொண்டாடப்பட்ட அளவில் தற்போது அது கொண்டாடப்படவில்லை  என்றாலும் அது நிறுத்தப்படவில்லை. 'மே போசோப்' எனும் அரிசி தானிய தேவதை அல்லது அரிசி தானிய தாயாரை முறையாக துதித்து, போற்றி வணங்கினால் விவசாயிகளின் விளைச்சல் பெருகி நிறைய வருமானம்  வரும் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க அவள் வழி செய்வாள் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். அவளை போற்றித் துதிக்காதவர்கள் வறுமையில் வாடி, நோய் நொடியினால்  அவதிப்படுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை .
'மே போசோப்' எனும் அந்த தேவதை இந்து மற்றும் புத்தமத கடவுட்கள் இருந்த மவுன்ட் அபுவில் இருந்து இங்கு வந்து விளை  நிலத்தில் தங்கினாள் .  அவள் ஏழு மலைகளையும் ஏழு கடல்களையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்து வந்திருந்தாளாம். அவள் புனித காலடியில் மிதிபட்ட மீன்கள் பல ஆயிரக்கணக்கில் மீன்களை  பெற்றேடுத்ததாம். அதனால்தான்  சியாமிய நாட்டு நீர் நிலைகளில் கிடைக்கும் மீன்களுக்கு பஞ்சமே இல்லையாம்.
தாய் நாட்டில் ஒரு ஆலயத்தில்
உள்ள மே போசோப் சிலை 
அரிசி தானியம் வெளிவரத் துவங்கிய  உடன் அந்த  காலத்தை  தானியத்தின் செடி  கர்பமுற்றுள்ள காலம் எனக்  கருதுகிறார்கள். ஆகவே செடிகளிலும் உயிர் உள்ளது என்ற தத்துவத்தை நம்பும் அவர்கள் கர்பமுற்றுள்ள  அவற்றை நல்ல நிலையில் பாதுகாத்து வரவேண்டும் என நினைகின்றார்கள்.  உயிருள்ள எல்லாவற்றிலுமே ஆத்மா எனும் ஜீவன்  உள்ளது, அவற்றில் மனிதர்கள், மிருகங்கள் மற்றும் தாவரங்கள் என  அனைத்தும் உள்ளன.  ஒரு மரணம் நிகழும்போது அதற்குள் உள்ள ஜீவன் பறந்துவிடும். அது திரும்ப வருவது இல்லை. 
வாழ்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்- பிறப்பு, வயதுக்கு வந்த நிலை மற்றும் திருமணம்- போன்ற அனைத்திலுமே அவற்றுக்கு என ஒரு சடங்கு செய்கிறார்கள். ஆகவே கருவுற்று உள்ள அரிசி தானிய தாய்க்கு காலையில் வாழைப்பழம், எலுமிச்சை மற்றும் கரும்பை வைத்து பூஜிக்கிறார்கள். அவற்றை விவசாயிகள் ஒரு கூடையில் வைத்து அவற்றை விவசாய நிலங்களில் ஒரு கம்பு மீது கட்டி வைத்து விடுவார்கள். அப்படி செய்வதன் மூலம் வயல்களுக்கு வெளியில் உள்ளவர்கள் வயலுக்குள் தமது மிருகங்களை மேய விடக் கூடாது என்ற சமிக்கையையும் தரும். அதன் பின் அந்த விவசாயி ஒரு சீப்பை எடுத்து தானியத்தைக் கோதி விடுவார். வாசனை திரவியங்கள், முகப் பவுடர் போன்றவற்றையும் அதற்கு போடுவார். அதாவது அந்த  நெல் தானிய பயிரை ஒரு அரிசி தானிய தாயாகவே கருதி அப்படிசெய்வார். அப்படி செய்தப் பின் அவளிடம் தமது விளைச்சலுக்கு எந்த தொந்தரவும் வரக் கூடாது என வேண்டுவார்.
அறுவடை காலம் முடிந்ததும் அங்குள்ள தானியங்களை எடுத்துக் கொண்டு போய் நெல் களஞ்சியத்தில் வைத்து விடுவார்கள்.  அவை விலை நிலத்திலேயே கிடந்தால் அங்குள்ள எறும்புகளும், எலிகளும் அவற்றை தின்றுவிடும் என்பதினால் அரிசி தானியத் தாயாராக கருதப்படும் நெல் களஞ்சியங்களை காப்பாற்றவே அப்படி செய்வார்களாம்.  நெல்லை  அடித்து அரிசியை தனியாக பிரித்து எடுத்தப் பிறகு அந்தக் குவியலுக்கு வாத்து முட்டை, இனிப்புகள் மற்றும் பழங்களைப் படைத்து ஆராதிப்பார்கள். சிதறிக் கிடக்கும் மிச்ச அரிசி தானியங்களை பத்திரமாக வாரி எடுத்து  'மே போசொப்பின்' அரிசி எனப்படும் கூடையில் பத்திரமாக வைத்து விடுவார்கள். அடுத்து நெல் பயிர்களை ஒன்று சேர்த்து ஒரு பொம்மையைப் போல செய்து அதை அந்த அரிசி கூடையில் வைத்து விடுவார்கள். அந்த பொம்மையை அரிசி தானிய தாயார் எனக் கருதுகிறார்கள். மீண்டும் மழைக் காலம் துவங்கியதும் நிலத்தில் பயிரிடும் சமயத்தில் அந்தக் கூடையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள அரிசியையும் சேர்த்தே விதைப்பார்கள். அந்த அரிசி தானியத் தாயார் விளை நிலத்தில் விதைக்கப்படும்  விதைகள் நல்ல பயிரைத் தரும் என்பதே அப்படி செய்வதின் நம்பிக்கை. அதன் பின் அந்த பொம்மையை  ஒரு முறைப்படி  அழித்து விடுவார்கள்.
மே போசோப் உருவ தாயத்து 
விளை நிலத்தில் மட்டும் அல்ல  மற்றவர்களும் அரிசி தானிய தேவதைக்கு  மரியாதை செலுத்துவார்கள்.  அரிசி தானிய தாய்க்கு மரியாதை தரும் வகையில் உணவு அருந்தியதும் அந்த உணவருந்திய தட்டை நோக்கி இரு கைகளையும் கூப்பிக் கொண்டு வணங்குவார்கள்.  மீதம் வைத்து விட்ட உணவை தூக்கி எறிவது, உணவை கீழே சிந்தி அதை மிதித்து விடுவது  போன்றவை அவளை  அவமரியாதை செய்யும் விதம் ஆகும் என்றும் அதனால் அவள் கோபம் அடைவாள் என்றும் கருதுகிறார்கள்.  செய்யப்பட்ட உணவின் தரத்தை குறைக் கூறும் முன்  மனதில் அரிசி தானிய தேவதையிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பின்தான் அந்த உணவைப் பற்றிக் குறைக் கூறுவார்களாம்.  
அது போல பூனை, மாடு, நாய், பன்றி, பசு, கோழி போன்ற பிராணிகளுக்கு அரிசியை  அல்லது அரிசி உணவை போடும் போது அதை நேரடியாக  பூமியில் வைக்கக் கூடாதாம். ஒரு தட்டில் வைத்தே அதை அவற்றுக்கு தர வேண்டும்.  அப்படி செய்தல் அவளை அவமரியாதை செய்ததற்கு சமமாகி விடும் என்றும் அதனால் அவள் அங்கிருந்து சென்று விடுவாள் என்றும் அவர்கள் வீட்டில் வறுமை வரத் துவங்கும் என்பதும் பல நம்பிக்கைகள்.

'விப் ரோங்க்சிட்' என்ற இந்த கட்டுரை ஆசிரியரைப் பற்றிய பின் குறிப்பு
'தாய்லாந்த் அரிசி மற்றும் 'மே போசொப்' எனும் அரிசி தானிய தேவதையின் விழாக்கள்' எனும் மேலே உள்ள  கட்டுரையின்  ஆசிரியரான 'விப் ரோங்க்சிட்' என்பவர்  தாய் நாட்டு சமையல் கலை மற்றும் தாய் நாட்டு உணவு செய்வதில்  பிரபலமானவர்.  

No comments:

Post a Comment