Munneeswaram Temple (T)
                  {மேலே உள்ள சிவலிங்கம் போர்துகீசியரால் 1595 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஆலய  இடிபாடுகளின் இடையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு வெளிசுவற்றில் 1900  ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.   இதையும், ஆலய இடிபாடுகளையும் ஆராய்ந்து பார்த்ததில் 1505 ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை  தருவதற்கு முன்னரே இந்த ஆலயம் இருந்துள்ளது என்பதை உறுதிபடுத்துகின்றது.      Photo Courtesy:- By flickr Ed –  http://www.flickr.com/photos/plonker/3864975820/, CC BY-SA 2.0,  https://commons.wikimedia.org/w/index.php?curid=8715666 }          இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரு காலத்தில் ஒரே பகுதியாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீலங்காவிலும்  பல புகழ் பெற்ற சைவ ஆலயங்கள் இருந்துள்ளன. ஒரு விதத்தில் ஸ்ரீலங்காவை சைவ பூமி என்று கூறினாலும் கூட  சரியாகவே இருக்கும். அதற்குக் காரணம் சக்தி வாய்ந்த பல சிவாலயங்களும், முருகன் ஆலயங்களும் அந்த நாட்டில்  உண்டு.  ஸ்ரீலங்காவில் உள்ள புகழ் மிக்க பல ஆலயங்கள் ராமாயணக் காலத்துடன்  சம்மந்தப்பட்ட இடமாகும். ஸ்ரீலங்காவ...