இடுகைகள்

Raghuvamsam- 2

படம்
ரகுவம்சம்-2 - சாந்திப்பிரியா -  அதைக் கேட்ட திலீபனும் தான் தெரியாமல் செய்து விட்ட தவறை எண்ணி வருந்தினார். 'குருவே, அந்த சாபம் விலக நான் இப்போது என்ன செய்ய வேண்டும். எனக்கு நீங்கள்தான் வழிகாட்டி உதவ வேண்டும்' என்று கேட்க வசிஷ்ட முனிவர் கூறினார் ' திலீபா, அந்த சாபம் விலக வேண்டும் எனில் நீ செய்ய வேண்டியது அந்த காமதேனு பசுவின் கோபத்தைக் குறைப்பதுதான். ஆனால் இப்போது அந்த காமதேனுப் பசுவும் தேவலோகத்தில் இல்லை. அது வருண பகவான் செய்யும் ஒரு யாகத்தில் கலந்து கொள்ள பாதாளத்துக்கு சென்றுள்ளது. இப்போது அதன் மகளான,  சின்னக் கன்றுக் குட்டியாக உள்ள நந்தி எனும்  பசு தாய் காவல் இன்றி அங்கும் இங்கும் அலைந்தவாறு தனியாக தேவலோகத்தில் தவித்தபடி உள்ளது.  ஆகவே நீ தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன் கன்றான நந்தினிக்கு  சேவை செய்து கொண்டு அதற்கு பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது காமதேனு பசு வந்து அந்தக் காட்சியை கண்டு மனம் மகிழ்ந்து உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரியும். ஆகவே உடனடியாக நீ தேவலோகத்துக்க...

Raghuvamsam - 1

படம்
ரகுவம்சம்-1 - சாந்திப்பிரியா - காலம் மாறிக் கொண்டே இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் தமிழ் மற்றும் சமிஸ்கிருத மொழிகளில் அற்புதமாக எழுதப்பட்டு உள்ள சில காவியங்கள் மட்டும் பெருமையுடன் இன்றும் பேசப்படுகின்றன. அவற்றில் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி மற்றும் வடமொழியில் காளிதாசன் இயற்றிய குமார சம்பவம், ரகுவம்சம், பாரவியின் கிராதார்ஜுனீயம், மாகரின் சிசுபாலவதம், மற்றும் ஸ்ரீ ஹர்ஷரின் நைஷத சரிதம் ஆகியவை முக்கியமானவை ஆகும். தமிழ் மற்றும் வடமொழியில் உள்ள அந்த ஐந்து நூல்களும் ஐம்பெருங் காப்பியங்கள் என போற்றப்படுகின்றன. ரகுவம்ச காவியம் என்பது என்ன? ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினரே ரகுவம்சத்தின் கதாநாயகர்கள். சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியது என்றும் ராமபிரானுடைய மூதையோர் யார், அவர்கள் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள், ராமருடைய மறைவுக்குப் பின்னர் அவர் வம்சம் தழைத்ததா, அவர்கள் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்ன என்பதை விளக்குபவையே ரகுவம்சக் காவியம் ஆகும். ரகுவம்சத்த...

Krishna worship

படம்
கி ரு ஷ் ண   வ ழி பா டு சா ந் தி ப் பி ரி யா கிருஷ்ணர் இந்து சமயத்தில் முக்கியமான ஒரு கடவுளாக கருதப்படுபவர். இவர் பத்து அவதாரங்களை அதாவது தசாவதாரம் எடுத்த விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ண அவதாரத்தை எடுக்க அவர் பூமியிலே வாசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக பிறக்க வேண்டி இருந்தது. கிருஷ்ணா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு கருமை அல்லது அடர்ந்த நிறம் என்ற அர்த்தம் தரும். அதனால்தான் கரும் நீல நிறத்தவரான கிருஷ்ணரை கருநீல தெய்வம் என்று கூறுவார்கள். கிருஷ்ணரின் காலம் குறித்து பல சர்ச்சைகள் உள்ளன என்றாலும் புராண நூல்கள் மற்றும் ஜோதிட கணிப்புக்களின்  அடிப்படையில் கிருஷ்ணரின் பிறப்பில் இருந்து இறப்பின் காலம் கி.மு 3228 ஆம் முதல் கி.மு. 3102 வரையிலும் இருக்கலாம் என்பதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது.  வேதங்கள் இயற்றப்பட்டது அதற்கும் முற்பட்ட காலத்தில், அதாவது கி....

Neelamadhava-Puri Jagannathar - 6

படம்
6 காலம் ஓடியது. பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூலவர்களின் சிலைகளை மாற்ற வேண்டிய காலம் வந்தபோது, அந்த சிலைகளை அமைக்க தேவையான தெய்வீக வேப்ப மரம் உள்ள இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என ஆலயத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவர்களில் மூத்த வயதானவர் கனவில் தோன்றிய மங்களா தேவி, திருவிழாவை துவக்கியதும், தெய்வீக வேப்ப மரத்தை தேடப் போகும் குழுவினர் தன் ஆலயத்தில் வந்து தங்கி தன்னை வழிபட்டால் தான் அந்த மரத்தை தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்குக் கூறுவதாக வாக்குறுதி தந்தாள். அது முதல் நபகலேபரா திருவிழா துவங்கியதும், சிலைகளுக்கான மரத்தை தேடும் குழுவினர் முதலில் மங்களா தேவியின் ஆலயத்துக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்து அவளை ஆராதிப்பார்கள். அவர்கள் அங்கு சென்றதும், ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குத் தேவையான மரங்கள் உள்ள இடங்களை மங்களா தேவி கண்டுபிடித்து, அந்தக் குழுவின் தலைவரிடமும், வேறு சிலரிடமும் அவர்கள் கனவில் தோன்றி அந்த மரங்கள் உள்ள இடத்துக்கு செல்லும் வழியை மங்களா தேவி கூறுவாளாம்.  ஒரே மரத்திலேயே ஜகன்னாதர், சுபத்ரை மற்றும் பாலபத்திரரின் சிலைகளை செய்ய மாட்டார்கள். ஒவ...

Neelamadhava-Puri Jagannathar - 5

படம்
5 மரங்களில்  வேப்ப மரம் ஆண் வர்கத்தை சார்ந்தது என்றாலும் வேப்ப மரமே பல பெண் தெய்வங்களுக்கு விசேஷமான மரமும் ஆகும்  என்பதினால் வேப்ப மரத்தை ஜாதி பேதம் இல்லாமல், ஆண்களும் பெண்களும் வணங்குகிறார்கள்.  அதனால்தான் ஆணான  பூரி ஜகன்னாதரும், பெண்ணான சுபத்ரையின் உருவமும் இந்த மரத்தில் வடிவமைக்கப்படுகிறது. அந்த வேப்ப மரமும் சில தனித் தன்மைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி தேடப்படும் வேப்ப மரத்தின் தன்மைகள் என்ன ? 1) கருமையான நிறத்துடன் காட்சி தர வேண்டிய வேப்ப மரத்தில் அது வளர்ந்தது முதல் எந்த பறவையின் கூடும் கட்டப்பட்டு இருக்கக் கூடாது. 2) அந்த வேப்ப மரத்தின் பக்கத்தில் ஒரு புளிய மரம் இருக்க வேண்டும் 3) அந்த மரத்தின் அருகில் சுடுகாடு இருக்க வேண்டும் 4) அந்த மரத்தின் அடியில் பாம்புப் புற்று அல்லது பாம்புப் பொந்து இருக்க வேண்டும். 5) அந்த அடிப்பகுதியில் உள்ள பொந்தில் கொடுமையான விஷ நாகம் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும். 6) மரத்தின் அடிப்பகுதி வளைந்திருக்காமல், வேர் பகுதியில் இருந்து பத்து அல்லது பன்னிரண்டு அடி உயர அளவு வரை, நேராக வளர்ந்து இருக்க வேண்டும் ...