Lakshmi Hayagreevar Pooja

கோயம்பத்தூர் மருதமலை சாலை நவாவூர் பிரிவு அருகில் உள்ள பாலாஜி நகரில் செயல்பட்டு வருவது 'ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்' என்பதாகும். இந்த டிரஸ்ட் வேத பாட சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தில் அவர்கள் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவருக்கு சன்னதி அமைத்து அதில் மூலவரின் சிலை ஒன்றை நிர்மாணிக்க உள்ளார்கள். இந்த டிரஸ்டுக்கு சிருங்கேரி சாரதா பீடம், காஞ்சி மடம் மற்றும் தத்தாத்திரேயரின் வழித்தோன்றலான அவதூதரான ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் பாததுளி ஸ்ரீ துர்கா பிரசாத் ஆனந்த ஸ்வாமிகள் போன்றவர்களின் அருளாசியும் உண்டு. இந்த வேத பாடசாலையில் கல்வி, கேள்வி, ஞானம் மற்றும் செல்வத்தை அள்ளித் தரும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பஞ்சலோக விக்ரகம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தை அவதூதரான ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் நிறுவியதாக கூறுகிறார்கள். அவருடைய சமாதி சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ளது. இதே டிரஸ்டின் நிர்வாகத்தில் உள்ள புவனேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிலையையும் பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள். தற்போது டிரஸ்ட் அலுவலகத்தில்...