குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 7

7 குலதெய்வ வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவற்றில் ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் என்று பார்த்தால் ஆண்களை விட பெண் தெய்வங்களே அதிகம் உண்டு. ஆண்களை விட பெண் தெய்வங்களில் அதிக அவதார தெய்வங்கள் உண்டு. அதன் காரணமும் புராணங்களில் இருந்து அறிந்திடலாம். எந்த ஒரு யுத்தத்திலும் ஆண் தெய்வத்தை விட அதிகமாக யுத்தங்களில் பங்கேற்றவை பெண் தெய்வங்கள் ஆகும். தேவலோகத்தை துன்புறுத்தி வந்த, ரிஷி முனிவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்திருந்த பல அரக்கர்களையும் அசுரர்களையும் அழித்தது பெண் தெய்வங்களே. அவை பல ரூபங்களை எடுத்து யுத்தம் செய்துள்ளன. அதன் காரணம் ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் அதிக சக்தி வாய்ந்தவை என்பதாகும். யோக சக்தி நிறைந்தவை. மாந்த்ரீக சக்தி கொண்டவை. இதன் காரணம் பரப்பிரும்மனின் மூல சக்தியே பெண் சக்தியாகும். அதுவே ஒரு தாயாரைப் போல படைப்பைக் கொடுக்க வல்லது என்பது பரப்பிரும்ம தத்துவம். இதற்கான உதாரணங்கள் காளி தேவி, மஹிஷாசுர மர்தினி, தசவித்தியாவின் பத்து தேவிகள், சப்த கன்னிகைகள், அஸ்வாரூடா தேவி, துர்க்கை, ஜ்வாலமுகி, சின்னமஸ்...