Guru Charithram 50
அத்தியாயம் -41 சித்த முனிவரின் கால்களின் அடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் 'குருவே என்னுடைய சந்ததியை சேர்ந்த சாயம்தேவா என்ற ஒரு பிராமணர் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு குருசேவை செய்ததாகக் கூறுவார்கள்.அவருடைய கதை உங்களுக்குத் தெரிந்தால் அதை எனக்குக் கூறுவீர்களா?' என்று கேட்டார். அதைக் கேட்ட சித்த முனிவர் நமத்ஹரகாவுக்கு கூறத் துவங்கினார். 'நமத்ஹரகா, சாயம்தேவா என்பவர் உன்னுடைய பாட்டனாரின் சகோதரர் ஆவார். அவர் மீது ஸ்வாமிகளுக்கு மெத்த அன்பு உண்டு. ஸ்வாமிகளை அவர் தனது குருதேவராக ஏற்றுக் கொண்டு இருந்தவர். ஸ்வாமிகள் சென்ற இடங்களுக்கு எல்லாம் சாயம்தேவாவும் சென்று முடிந்த அளவு அவருக்கு சேவகம் செய்தவர். இந்த நிலையில் ஸ்வாமிகள் கனக்பூருக்கு செற்று தங்கி இருந்தபோது அதைக் கேள்விப்பட்ட சாயம்தேவாவும் கனக்பூருக்கு சென்று அவரை வணங்கினார். சாயம்தேவாவை கண்டதும் மனம் மகிழ்ந்து போன ஸ்வாமிகள் அவர் தலை மீது தன் கையை வைத்து 'சாயம்தேவா, நீ பல ஜென...