Temples in Malwa Region - 7

சாந்திப்பிரியா - 7 - ........ஸ்ரீ ஒம்காரீஸ்வரர் ஆலயம் மூன்றாவது கதை என்ன என்றால் ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தபோது ஒம்காரேஸ்வரத்தில் நடந்த போரில் பாதாளத்தில் இருந்த சிவபெருமான் நர்மதை நதியின் உள்ளே இருந்து வெளியில் ஜ்யோதிர் லிங்க வடிவில் வெளி வந்து தேவர்களுக்கு அதிக சக்தியைத் தந்து அவர்களை வெற்றி பெற வைத்தாராம். அதனால்தான் ஒம்காரேஸ்வரர் ஜ்யோதிர் லிங்க ஆலயமாயிற்றாம். இங்குள்ள ஆலயம் ஐந்து தளங்களை (அடுக்குகளாக) கொண்டதாக இருக்க ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு சிவலிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருகிறார். அவை ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர், சித்தேஸ்வர், கும்பேஸ்வர் மற்றும் த்வஜேஸ்வர் என்ற பெயரில் பூஜிக்கப்படுகின்றன. ஓம்காரேஸ்வரர் ஆலயத்துக்கு செல்ப...