Mayil Ravanan -4

அனைவரும் தடால், துடாலேன ஓடிப் போய் அனுமானை அழைக்க அவரும் தாமதிக்காமல் ஓடோடி வந்தார் தன் ஸ்வாமியைப் பார்க்க. துள்ளி குதித்து வந்தவர் அப்படியே ராமனின் காலில் விழுந்து வணங்கி ' ஐயனே. எம்மை ஏன் அழைத்தீர். நானென்ன செய்யோணும்?' என்று பவ்யமாக கேட்க அங்கிருந்த சுக்ரீவரும் நடந்ததனைத்தையும் அவருக்கு விவரம் கூற யோசனையில் அமர்ந்தார் அனுமார். 'இன்று ராத்ரியை எப்படி கடப்பது ? அதைக் கடந்து விட்டால் சூளுரைத்தவனின் சபதம் அழிந்து போகுமே. அதுகென்ன செய்யலாம்?' அனைவரும் அதையே யோஜிக்க 'வந்ததையா ஒரு யோசனை....வந்ததையா நல்லதொரு யோசனை' என சுக்ரீவரும், சாம்பவானும் ஆர்பரித்து எழுந்து வந்தவர்கள் அனுமானுக்கொரு உபாயத்தை சொன்னார்கள் 'இன்று ராத்திரி முழுதும் உம்முடைய வாலினாலே அனைவரையும் சுற்றி கோட்டை மாதிரி சுற்றிக் வைத்து விட்டால் யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி வந்தால் வெட்டியும் சாய்க்கலாம். உயிரோடும் புதைக்கலாம். உம்மால் மட்டுமே வாலினால் ஆகாயத்தைத் தொட்டமாதிரியும், பூமிக்குள் புதைந்த மாதிரியும் இருக்குமொரு கோட்டையைக் கட்ட முடியும். நீரே அதை செய்யோணும்....ராமனின் பக்தனே .....