இடுகைகள்

Mayil Ravanan -4

படம்
அனைவரும் தடால், துடாலேன ஓடிப் போய் அனுமானை அழைக்க அவரும் தாமதிக்காமல் ஓடோடி வந்தார் தன் ஸ்வாமியைப் பார்க்க. துள்ளி குதித்து வந்தவர் அப்படியே ராமனின் காலில் விழுந்து வணங்கி ' ஐயனே. எம்மை ஏன் அழைத்தீர். நானென்ன செய்யோணும்?' என்று பவ்யமாக கேட்க அங்கிருந்த சுக்ரீவரும் நடந்ததனைத்தையும் அவருக்கு விவரம் கூற யோசனையில் அமர்ந்தார் அனுமார். 'இன்று ராத்ரியை எப்படி கடப்பது ? அதைக் கடந்து விட்டால் சூளுரைத்தவனின் சபதம் அழிந்து போகுமே. அதுகென்ன செய்யலாம்?' அனைவரும் அதையே யோஜிக்க 'வந்ததையா ஒரு யோசனை....வந்ததையா நல்லதொரு யோசனை' என சுக்ரீவரும், சாம்பவானும் ஆர்பரித்து எழுந்து வந்தவர்கள் அனுமானுக்கொரு உபாயத்தை சொன்னார்கள் 'இன்று ராத்திரி முழுதும் உம்முடைய வாலினாலே அனைவரையும் சுற்றி கோட்டை மாதிரி சுற்றிக் வைத்து விட்டால் யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி வந்தால் வெட்டியும் சாய்க்கலாம். உயிரோடும் புதைக்கலாம். உம்மால் மட்டுமே வாலினால் ஆகாயத்தைத் தொட்டமாதிரியும், பூமிக்குள் புதைந்த மாதிரியும் இருக்குமொரு கோட்டையைக் கட்ட முடியும். நீரே அதை செய்யோணும்....ராமனின் பக்தனே .....

Mayil Ravanan -3

படம்
ராவணனும், மயில் ராவணனும் பேசிக் கொண்டிருந்ததை விபீஷணனின் பெண்ணான திரிசடை ஒட்டுக் கேட்டு விட்டாள். மயில் ராவணன் அங்கு வந்தபோதே அவளுக்கு சந்தேகம். 'என்றைக்கும் இல்லாமல் இன்று ஏனவன் இங்கு வந்துள்ளான்' என்பதை அறிந்து கொள்ளவே அவள் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டாள். அவர்கள் பேசியதைக் கேட்டு விட்ட திரிசடை மிக்க வேதனையையும் கவலையையும் அடைந்தாள். அதற்குக் காரணம் பாதாளக் காளி படு மூர்கமானவள். அவளை ஆராதித்து வேண்டினால் அனைத்தையும் தருவாள் அந்த சக்தி வாய்ந்தவள் என்பதினால்தான் மயில் ராவணன் அவளை ஆராதித்து வந்தான். அதனால்தான் மயில் ராவணனுக்கு அத்தனை சக்தி ! மாயாஜாலங்கள் அனைத்துமே அவன் உள்ளங்கையில் இருந்தது. திரிசடை மனதுக்குள் நினைத்தாள் 'அய்யய்யோ, இதென்ன நிலைமை இப்படி வந்து விட்டது. என் தந்தையோ ராமனிடம் சரணாகதி அடைந்து அவருடன் இருக்கிறார். அவர் ஆலோசனைப்படித்தானே ராமனும் இந் நாள்வரை ராவணனின் பலவீனத்தை அவ்வப்போது அறிந்து கொண்டு ராவணனின் சேனைகளை அழித்து வருகிறார். இப்போ என் தகப்பனுக்கு எப்படி சேதி சொல்வேன்? இந்த மயில் ராவணன் யுத்தத்தில் சேருவது ராமனுக்கு தெரியவில்லை என...

Mayil Ravanan -2

படம்
  பிரகஸ்தன் சொன்னான் 'ஐயா ஸ்வாமி, உமக்கென்ன ஆயிற்று? உமக்கு எத்தனை தாயாதி உள்ளார்கள் என்று கூட நினைவில்லாமல் இப்படிக் கேட்குறீர்கள்? பாதாள இலங்கையில் உமக்குள்ளவன் மயில் ராவணன் ஒருவன்தானே. அவனே உமக்கு தாயாதி முறை சகோதரன். அவனை அழைத்தால் அவன் யுத்தம் செய்தும், தந்திரம் செய்தும் ராம-லஷ்மணர்களின் படைகளை துவம்சம் செய்து விடுவான். அவனை வெல்ல இன்னும் யாரும் பிறக்கவில்லை. ஜெயிக்க வேணும் என்றல் ஜெயித்தே காட்டுவான் ஐயா ....அவன் ஜெயித்தே காட்டுவான். உடனே மயில் ராவணனை அழைப்பீராக' என்று தூபம் போட்டான். பிரகஸ்தன் அப்படிக் கூறிய உடனேயே ராவணன் நினைத்தான் 'அடடா...இந்த யோசனை எனக்கேன் மனதில் வரவில்லை? மயில் ராவணன் அசாத்திய சூரனாயிற்றே!. இந்த யோசனை நல்ல யோசனைதான். போகட்டும், மயில் ராவணா, நான் உன்னைப் பார்க்க வேண்டுமே' என மனதார அவனை நினைத்தான். மனதில் நினைத்தால் போதும், மயில் ராவணனுக்கு அங்கே ராவணன் தன்னை நினைத்தது தெரிந்து விடும். அவன்தான் மாயாவி ஆயிற்றே. மயில் ராவணன் யோசனை செய்தான் 'இதென்ன திடீர் என என்னை என் தமயன் ராவணன் என்னை நினைக்கிறான்? தீர்க்க முடியாத கஷ்டம் இல்...

Mayil Ravanan-1

படம்
ஆதி காலத்தில் இருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் கதையை  நாரத முனிவர் கௌதம ரிஷிக்கு சொன்னதாக நாட்டுப்புறக் கதையில் கூறப்பட்டு வருகிறது. காலம் காலமாக  நாட்டுப்புறங்களில் வாய்மொழிக் கதையாக கூறப்பட்டு வந்துள்ள மயில் ராவணனின் கதை  முதன் முதலில் 1868 ஆம் ஆண்டில்தான் சிறுகதை நூலாக அச்சில் வெளியிடப்பட்டது என்கிறார்கள்.   ராமாயணத்தில் வரும் ராவணனையும் அவன் சந்ததியினரையும்  பற்றிய கதைகள் பலவும்  மயில் ராவணன் கதை என்றும் சதகண்ட ராவணன் அல்லது விதுர ராவணன் என்ற பெயரிலும் காலம் காலமாக நிலவி வருகின்றன.  ராமாயணத்தைத் தவிர பின்னர் கூறப்பட்டு உள்ள அந்த இரண்டு கதைகளும் நாட்டுப்புறக் கதைகளாக அறியப்பட்டு வந்துள்ளன. புராணங்களில் அவற்றைப் பற்றிய கதைகள் காணப்படவில்லை. அவை பெரும்பாலும் பாவைக் கூத்து எனும் தோல் பொம்மைகளைக் கொண்டு நடத்தப்படும் பொம்மலாட்ட நிகழ்ச்சியாகவும், தெருக்கூத்தாகவும்  நடத்தப்பட்டு வந்துள்ளன. மயில் ராவணனைக்  குறித்த செய்திகள் அங்காங்கே சில புராணங்களில் காணப்பட்டாலும் சதகண்ட ராவணனைக் குறித்த செய்திகள் காணப்படவில்லை. சதகண்ட ர...

Mayil Ravanan

படம்
 முன்னுரை வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதினர். அது புராணமாயிற்று. ராமாயணக் கதை உலகெங்கும் பல வடிவங்களில் புழங்கி வருகிறது. அது போலவே தமிழ் நாட்டிலும் வங்கத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் ராவணனின் தாயாதி வழி சகோதரன் மயில் ராவணன் என்பவர் தன் சகோதரன் ராவணனுக்கு உதவ ராம லஷ்மணர்களை கடத்தி வந்து காளிக்கு பலி கொடுக்க முயன்ற நாட்டுப்புறக் கதை புழக்கத்தில் இருந்துள்ளது. பல்வேறு வருடங்களாக அது செவி வழிக் கதையாகவே கூறப்பட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் முதன் முதலாக 1958 ஆம் ஆண்டுகளில் மயில் ராவணனின் கதை எழுத்து வடிவில் வந்ததாக கூறுகிறார்கள். அதை கிராமப்புறங்களில் தெருக்கூத்து அல்லதுஒருவிதமான பொம்மலாட்டத்தின் மூலமே கூறி வந்துள்ளார்கள். அந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி பொம்மைகளைக் கொண்டு நடத்தப்பட்டது இல்லை. பதனிடப்பட்ட, தோல்களில் உண்மையான மனிதர் உயரத்தில் வண்ண உருவம் தீட்டி, வெள்ளைத் திரைகளுக்குப் பின்னால் வைத்து பெட்ரோமாஸ் விளக்கு ஒளியின் துணையைக் கொண்டு வெள்ளைத் திரைகள் மீது அவற்றின் உருவை அசைய வைத்து நிழல்லாட்டதின் மூலம் கதையைக் காட்டுவார்கள். அந்த நிழல் கலை தஞ்சாவூரை ஆண்டு வந்த ...

Patabiraman Kavithaigal

படம்
  எழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> நம்மை பார்த்து பொறாமைப்படுபவர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி? ? திரு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் கேள்வி ஆம் கொடுக்கின்ற எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டு இன்னும் இன்னும் என கேட்கும் "அக்னியை"விட மோசம் "பொறாமை தீ: இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லவும்...அதாவது நம்மை பார்த்து பொறாமைபடுபவர்களிடமிருந்து தப்பிக்க...வழி சொல்லவும்  பதில் பொறாமைப்படுபவர்களைப் பார்த்து மகிழுங்கள் (மனதில் மட்டும்) அதை வெளிக் காட்டாதீர்கள். அவர்களை விட நீங்கள் மேம்பட்டு நிற்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும். நீங்கள் அடைந்த நிலையை அவர்கள் அடையமுடியவில்லையே என்று மனதிற்குள் வெதும்பட்டும் . அதன் வெளிப்பாடுதான் அவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் , தடங்கல்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். ஒரு மின் விளக்கில் உள்ள உலோகத் திரியில் ஏற்படும் மின் தடையினைப் பொருத்துதான் அதன் ஒளிரும் தன்மை அதிகமாவதைபோல உங்கள் செயல்பாடுகளும் பிரகாசிக்கும். தடைகளை கண்டு அஞ்சாதீர்கள். பொறாமைக்காரர்களிடம் போராடி உங்க...

Pattabiraman Kavithaigal - 2

படம்
  எழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> என்னே இறைவன் கருணை! நமக்கு உயிரையும் உடலையும் மற்று அனைத்தையும் கேளாமலே தந்ததுமட்டுமல்லாமல் அவைகளை நாம் அனுபவிக்க மனதையும், துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள அறிவையும் அளித்த இறைவனுக்கு ஒவ்வொரு கணமும் நாம் நன்றி செலுத்த வேண்டும். அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. இறைவனை நாம் நாள் தவறாமல் பூசிக்க வேண்டும். அவனை பூசிப்பதர்க்கு பெரிய ஆடம்பரங்கள் தேவையில்லை என்று கண்ணனே கீதையில் சொல்லிவிட்டான். ஒரு பூ,ஒரு இல்லை(துளசி),நீர் (தீர்த்தம் )போதும் என்று சொல்லிவிட்டான். சிவபெருமானோ ஒரு வில்வ பத்ரமே போதும் என்று சொல்லிவிட்டான்.லிங்கம் போதும் ஆடம்பரமான கோயில்கள் ஏதும் தேவையில்லை என்று இருந்துவிட்டான். அவன் மைந்தன் விநாயகனோ இன்னும் எளிமையாக்கி விட்டான் வழிபாட்டை. மண்ணினால் பிடித்து வைத்தாலும்,பசும் சாணத்தினால்,அல்லது மஞ்சளில் பிடித்து அதில் அருகே முளைத்திருக்கும் இரண்டு அருகம்பில்லை என் மீது போட்டால் போதும் அதுவே எனக்கு பரம திருப்தி என்கிறான். உடனே அதில் நான் பிரசன்னமாகிவ...