வெண்கடுகு- White Mustard

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு சாந்திப்பிரியா சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை. சகோதர, சகோதரிகளிடையே மன வேறுபாடு. வீட்டில் உள்ள பெண்கள் திருமணம் ஆகிய பின் கணவனுடன் சென்று வசிப்பார்கள். அது போல ஆண்கள் தன்னுடன் வசிக்க தன் மனைவியையும் அழைத்து வருவார்கள். ஒரு குடும்பத்தில் பெண்கள் வெளியே சென்று விட, புதுப் பெண் உள்ளே நுழைய பெரும்பாலும் அந்த இரு பிரிவுப் பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மூலமே மனஸ்தாபங்கள் தோன்றத் துவங்குகிறது. சின்ன சின்ன பிரச்சனைகளினால் ஏற்படும் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் எழுகிறது. இன்னும் சில குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்கு இடையேயும் மனஸ்தாபங்களும் வெளியில் தெரியாத வெறுப்பும் ஏற்படும்போது அவை அனைவரது குடும்ப வாழ்க்கை மற்றும் மன நிலையை பாதிக்க அவர்கள் அமைதி இன்றி வாழ்கிறார்கள். பல வருடங்களாக ஒற்றுமையுடன் இருந்த நல்ல குடும்பங்களில் கூட திடீர் என இப...