இடுகைகள்

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF

சிறு செய்தி  இந்த தொடரில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு, ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில்  PDF வடிவில் அமைத்து உள்ளேன். ஆகவே  ஜீவ சரித்திரத்தில் படிக்க வேண்டிய பகுதிகளை  மட்டும்  நீங்கள் புத்தக வடிவிலேயே நேரடியாக படிக்க இயலும்.  இதை முதல் முயற்சியாக செய்து  உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக வடிவில் ஜீவ சரித்திரத்தைப் படிக்க  உங்களுடைய  ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்பினால்  PDF ஐ அனுப்ப இயலும். நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்ப வேண்டிய முகவரி: nrj_1945@yahoo.com nrj1945@gmail.com  சாந்திப்பிரியா  30-11-2012

Thirupathi Sree Venkateswarar - 25

படம்
சாந்திப்பிரியா    லஷ்மி தேவி ஷேஷாசலத்தை அடைந்தபோது  ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு இருந்த நதிகள், ஓடைகள், நீர் நிலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு புதியதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அங்கு அவர்கள் நின்று கொண்டு இருந்த சமயத்தில் லஷ்மி கோபத்துடன் உள்ளே நுழைய  அவளைக் கண்டதும் ஸ்ரீனிவாசரும் பத்மாவதியும் நிலை குலைந்தார்கள். பத்மாவதியோ இவள் யார் நாம் உள்ள இடத்தில் வந்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில் உள்ளே வந்த லஷ்மியோ ' பெண்ணே நீ யார் என் கணவருடன் சல்லாபித்துக் கொண்டு நிற்கிறாய்' என்று கோபமாகக் கேட்க, பத்மாவதியோ ' அடியே பெண்ணே...என்னய்யா யார் என்று கேட்கிறாய்? நான்தான் இவருடைய மனைவி. எங்களுக்கு இப்போதுதான் திருமணம் ஆகி உள்ளது. நீ என்னடா என்றால் என் கணவர் என்கிறாய். என்ன என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?' என்று முறைக்க இருவரும் நீ...நான் என வாதம் செய்து கொண்டு அடிக்காத குறையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்ததைக் கண்ட ஸ்ரீனிவாசர் அவர்கள் இருவருமே தனது மனைவிகளே என்று கூறி இருவரையும் சமா...

Thirupathi Sree Venkateswarar - 24

படம்
சாந்திப்பிரியா    அப்போது ஒரு நாள் தொண்டைமானின் கனவில் விஷ்ணு தோன்றினார். அவர் அவரிடம் கூறினார் ' மன்னா, நீ பூர்வ ஜென்மத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடுத்தாய். நீ அடுத்தப் பிறவி எடுத்து ராஜாங்கத்தை ஆளும்போது, எனக்கு ஒரு ஆலயம் அமைத்துத் தருவாய் என்பதே அந்த வாக்குறுதி. அதன்படி நீயும் இப்போது அரசனாகி விட்டாய். ஆகவே எனக்கு ஷேசாசலத்தில் ஒரு ஆலயம் அமைத்தால் அங்கு நானே வந்து குடி புகுவேன். அங்கு வந்து நான் ஆலயத்தில் அமர்ந்து கொண்டு கலியுகம் முடியும்வரை மக்களைக் காத்து வருவேன். ஆகவே அங்குள்ள வராஹ ஸ்வாமியின் ஆலயத்துக்கு அருகிலேயே எனக்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்'. அதைக் கேட்ட தொண்டைமான் விழித்தெழுந்ததும் ஒரு விஸ்வகர்மாவை அழைத்து வந்து ஆலயம் அமைக்க ஏற்பாடுகளை செய்து பெரிய ஆலயம் ஒன்றை அமைத்தார். கண்களுக்குப் புலப்படாமல் அந்த ஆலயத்துக்கு அனைத்து தேவர்களும், முனிவர்களும், கடவுட்களும் பூலோகத்து மக்களும் வந்தார்கள். அங்கு விஷ்ணு வந்து குடியேறியதும் பிரும்மா தானே வந்து இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்து கலியுகம் முடியும்வரை அவை அங்கு ஓளி வீசிக் கொண்டு இருக்கும் என்று கூறினார்....

Thirupathi Sree Venkateswarar - 23

படம்
சாந்திப்பிரியா    ஸ்ரீனிவாசரான விஷ்ணுவும் பத்மாவதியும் சில காலம் வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் தங்கிக் கொண்டு இருந்தபோது  ஒரு நாள் ஆகாசராஜன்  உடல் நலமின்றி இருப்பதினால் உடனே அவர்களை கிளம்பி வருமாறு  செய்தி வர இருவரும் மீண்டும்  அரண்மனைக்குக் கிளம்பிச் சென்றார்கள்.  உண்மையைக் கூறினால் ஆகாசராஜன் அவர்கள் வரும்வரை தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் வந்ததும் ஸ்ரீனிவாசரின் கைகளைப் பிடித்துக் கொண்டு  தான்  மரணம் அடைந்து விட்டப் பின் அந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு தக்க ஏற்பாட்டை செய்துவிட்டுப் போக வேண்டும் என்றும்,  தனது மகனான வசுதானன்  மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவரையும் அவரே ஒற்றுமையுடன் இருந்து நாட்டை ஆளச் செய்ய வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டப் பின் மரணம் அடைந்தார். ஆகாசராஜர் மரணம் அடைந்து அனைத்துக் காரியங்களும் முடிந்த உடனேயே  அவருடைய பிள்ளையான வசுதானன்  மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவருக்கும்   யார் அரசுப் பொறுப்பை ஏற்பது என்பதில் சண்டை வந...

Thirupathi Sree Venkateswarar - 22

படம்
சாந்திப்பிரியா  விஷ்ணு மற்றும் பத்மாவதியின் திருமண வைபவம்  திருமணத் தேவைக்கான செல்வம் கிடைத்ததும், தனது மூத்த சகோதரரான கோவிந்தராஜரை  அழைத்த ஸ்ரீனிவாசர் (கோவிந்தராஜர் வகுளாதேவியின் மூத்த மகன் ஆவார். அதை ஏற்கனவே கூறி உள்ளேன்) அனைவருக்கும் வந்து தங்கும் இடமும் உணவருந்தவும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கூறினார். ஆகவே கோவிந்தராஜரும் தயங்காமல் பூலோகத்திலயே  வைகுண்டத்துக்கு இணையான இடத்ததை  தற்போது திருப்பதி மலை உள்ள இடத்திலேயே விஸ்வகர்மாவின் உதவிடன் செய்தார்.  அதே சமயம் கருட பகவானை அழைத்த ஸ்ரீனிவாசர் யாரை எல்லாம் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்பதை  வகுளா தேவி மற்றும் நாரத முனிவருடன் கலந்து ஆலோசனை செய்தப் பின்  அனைவருக்கும் தமது பூத  கணங்கள் மூலம் திருமண செய்தியை அனுப்பி அவர்களுக்கு தாம்பூலம், பழங்களைக் கொடுத்து அழைக்கச் சொல்லுமாறும், அந்த வேலையை கருடனே செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  நிறைய கடனை குபேரனிடம் இருந்து பெற்று வந்திருந்ததினால்  செலவு செய்ய பணத்துக்குப் பஞ்சமே இல்லை எனும் அளவில் காரிய...

Tirupathi Sree Venkateswarar - 21

படம்
சாந்திப்பிரியா   விஷ்ணு குபேரரிடம் கடன் வாங்கியக் கதை  மன்னனிடம் இருந்து திருமணத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் ஸ்ரீனிவாசருக்கும் வகுளா தேவிக்கும் ஆனந்தம் ஆகி விட்டது. அது போல பத்மாவதியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் . இனி அடுத்தக் காரியமாக திருமணத்துக்கு வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும். ஆனால் ஸ்ரீனிவாசரின் திருமணம் நடைபெற உள்ள செய்தி கிடைத்ததும் வைகுண்டத்தில்  இருந்த நாராயணன் கவலையோடு அமர்ந்து இருந்தார். அப்போது நாரதர் அங்கு அவரைக் காணச் சென்றார். அவர் கவலையுடன் இருப்பதைக் கண்ட நாரதர் ' நாராயணா நீங்கள் ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறீர்கள்? பூலோகத்தில் மனித உருவில் ஸ்ரீனிவாசராக உள்ள நீங்கள் விரைவில் லஷ்மியை திருமணம் செய்து கொண்டு உங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்தி விட்டு மீண்டும் வைகுண்டத்துக்கு திரும்பி வர உள்ளீர்கள். ஆகவே இப்போது ஏன் வினசத்துடன் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதைக் கேட்ட நாராயணனோ ' நாரதரே இப்போது  வைகுண்டத்தில் லஷ்மி தேவி இல்லாததினால் என்னிடம் திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான செல்வம் இல்...

Tirupathi Sree Venkateswar - 20

படம்
சாந்திப்பிரியா  குறத்தி குறி சொல்லி விட்டுப் போனதும் அரசனும் அரசியும் யோசனையில் ஆழ்ந்தார்கள். இதென்னடா கூத்து, நம் பெண் ஒரு வேடனைக் காதலிக்கிறாள். குறி சொல்ல வந்த குறத்தியோ அந்த வேடன்தான்  மாப்பிள்ளையாகப் போகிறார் என்கிறாள். நாரதரோ வரவுள்ள  உன் கணவர் நாராயணனின் அவதாரமாக இருப்பார் என்று நம் பெண்ணிடம் கூறினார்.  இதென்ன குழப்பமாக உள்ளதே  என்று நினைத்தார்கள். அதற்கு முன்னால் தனது பெண்ணை அழைத்து ஆகாசராஜன் பேசினார். 'மகளே, உண்மையாகவே நீ அந்த  வேடனைதான் விரும்புகிறாயா? உனக்கு நல்ல மாப்பிள்ளையாக நாங்கள் பார்த்து ஏற்பாடு செய்து தருகிறோமே அம்மா..... உன்னால் அந்த வேடனை திருமணம் செய்து கொண்டு காட்டில் வசிக்க முடியுமா? நீ எங்கே, அந்த வேடனின் வசதி எங்கே?......நன்கு யோசனை செய்து பார்த்து கூறம்மா ' என்று அறிவுரை செய்ய, பத்மாவதியோ ' அப்பா...நான்  உங்கள் மனதுக்கு எதிராக எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால் எப்போது மனதார ஒருவரை காதலித்து அவரே என் கணவனாக வர வேண்டும் என ஒரு பெண் நினைத்து ஏங்கத் துவங்குவாளோ அப்போதே அவளுக்கு அந்த ஆண்தான் கணவராகி வி...