இடுகைகள்

Tirupathi Sree Venkateswar - 20

படம்
சாந்திப்பிரியா  குறத்தி குறி சொல்லி விட்டுப் போனதும் அரசனும் அரசியும் யோசனையில் ஆழ்ந்தார்கள். இதென்னடா கூத்து, நம் பெண் ஒரு வேடனைக் காதலிக்கிறாள். குறி சொல்ல வந்த குறத்தியோ அந்த வேடன்தான்  மாப்பிள்ளையாகப் போகிறார் என்கிறாள். நாரதரோ வரவுள்ள  உன் கணவர் நாராயணனின் அவதாரமாக இருப்பார் என்று நம் பெண்ணிடம் கூறினார்.  இதென்ன குழப்பமாக உள்ளதே  என்று நினைத்தார்கள். அதற்கு முன்னால் தனது பெண்ணை அழைத்து ஆகாசராஜன் பேசினார். 'மகளே, உண்மையாகவே நீ அந்த  வேடனைதான் விரும்புகிறாயா? உனக்கு நல்ல மாப்பிள்ளையாக நாங்கள் பார்த்து ஏற்பாடு செய்து தருகிறோமே அம்மா..... உன்னால் அந்த வேடனை திருமணம் செய்து கொண்டு காட்டில் வசிக்க முடியுமா? நீ எங்கே, அந்த வேடனின் வசதி எங்கே?......நன்கு யோசனை செய்து பார்த்து கூறம்மா ' என்று அறிவுரை செய்ய, பத்மாவதியோ ' அப்பா...நான்  உங்கள் மனதுக்கு எதிராக எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால் எப்போது மனதார ஒருவரை காதலித்து அவரே என் கணவனாக வர வேண்டும் என ஒரு பெண் நினைத்து ஏங்கத் துவங்குவாளோ அப்போதே அவளுக்கு அந்த ஆண்தான் கணவராகி வி...

Thirupathi Sree Venkateswarar - 19

படம்
சாந்திப்பிரியா  அடிக்கடி பத்மாவதி தோட்டத்துக்குச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு வருத்தத்துடன் எதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட அவள் தோழிகள் அவளுடைய கவனத்தை திருப்ப முயன்றார்கள்.  இனிமேலும் காலம் கடத்துவது தவறு என்று எண்ணிய  பத்மாவதியின் தோழிகள் அவளது தாயாரான தாரிணி தேவியிடம் சென்று பத்மாவதியின் மன நிலைக் குறித்து கூறி விட்டார்கள். அவளும் தனது மகள் சில நாட்களாகவே முன்னைப் போல ஓடியாடிக் கொண்டு இருப்பதில்லை, அடிக்கடி தூங்கி வழிந்து கொண்டே இருந்தாள், சரிவர சாப்பிடவில்லை என்பதை எல்லாம் கவனித்து வந்திருந்தாள்.  ஒருசில நேரத்தில் அதைப் பற்றிக் கேட்டபோது தனக்கு ஒன்றுமே இல்லை. எப்போதும்  போலத்தானே இருக்கிறேன் என்று பத்மாவதி கூறி விட்டாள் என்பதினால் அவள் அதிகம் கவலைப்படாமல் இருந்திருந்தாள் . மரத்தடிக்குச் சென்று தனிமையில் அமர்ந்த  கொண்டு யோசனையில் இருந்த  நிலையை  மாற்ற  அவள் தோழிகள் முயன்றார்கள்  அவளுக்கு ஒருவேளை வயதுக் கோளாறாக இருக்கலாம், தானே சரியாகிவிடும் என்று அதிகம் கவனம் செலுத...

Thirupathi Sree Venkateswarar- 18

படம்
  சாந்திப்பிரியா  இனியும் தன் அவதாரத்தை அவள் நினைவில் இருந்து மறைத்து வைத்திருக்கலாகாது, அதை வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டாலும் அதே சமயத்தில் இன்னும் சில நாட்கள் அது அவர்கள் இடையே ரகஸ்யமாகவே வைத்திருக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்ந்தார். தன் தாயாரை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அவர் பார்த்தப் பார்வையில் அவளுக்கு பழைய நினைவுகள் மீண்டும் தோன்றின. அவர் கூறத் துவங்கினார் ' அம்மா, நான் இந்தப் பிறவியில் ஸ்ரீனிவாசனாக மனித உருவில் அவதரித்து உள்ளதினால், அந்த உடலுக்கான சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதுவே நியதி. நான் விஷ்ணுவாக இருந்தால் என்ன? இப்போது அந்த உடலில் நான் இல்லை என்பதினால் இந்த மனித உடலுக்கான சில கடமைகளை செய்யவே வந்துள்ளேன். உனக்கு முன் ஜென்மத்தில் கொடுத்த வாக்கின்படி உன்னையும் இந்தப் பிறவியில் என்னோடு என் தாயாராக இணைத்துக் கொண்டு விட்டேன்.  நான் கிருஷ்ணராக இருந்தபோது நடந்தக் கதை மட்டும்தானே உனக்கு இதுவரை தெரியும். இப்போது நான் ராமனாக அவதரித்து இருந்தபோது நடந்த சிறிய சம்பவத்தைக் கூறுகிறேன். அதையும்  இப்போது ...

Thirupathi Sree Venkateswarar -17

படம்
சாந்திப்பிரியா  பத்மாவதி மீது காதல் கொண்டார்  ஸ்ரீனிவாசர்   ஆடிப்பாடிக் கொண்டு வந்தவளைக் கண்டதுமே ஸ்ரீனிவாசருக்கு அவள் மீது தன்னை அறியாமலேயே காதல் பிறந்தது. எத்தனைப் பேரழகியாக இருக்கிறாள், இவள் எனக்கு மனைவியாகக் கிடைத்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணினார். அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவரை பத்மாவதியும் நோக்கினாள். யாரது அரண்மனைத் தோட்டத்தில் வந்து அமர்ந்து உள்ளார் என்பதைப் பார்ப்பதற்காக தனது தோழிகளுடன் அவர் அருகில் சென்றதும் அவர் வேற்று மனிதர் என்பது புரிந்தது.   அவள் அவரிடம் கேட்டாள் 'ஐயா, நீங்கள் யார்? இங்கு எப்படி வந்தீர்கள்? இது அரண்மனை தோட்டம் ஆயிற்றே' என்று கேட்க அவர் எழுந்து நின்று கொண்டு தான் சேஷாசலம் என்ற ஊரில் இருந்து வருவதாகவும் ஒரு மதம் பிடித்த யானையை துரத்திக் கொண்டு தனது குதிரையில் வந்து கொண்டு இருந்தபோது, அந்த யானை அந்த இடத்தில் வந்தப் பின் எங்கோ மறைந்து ஓடி விட்டது. வேண்டும் என்றே தான் அங்கு வரவில்லை. ஆனால் வழி தவறி வந்து விட்டாலும், தாகமாக இருந்ததினால் அந்த தாடகத்தில் இருந்து தண்ணீரைக் குடித...

Thirupathi Sree Venkateswarar -16

படம்
சாந்திப்பிரியா   இப்படியாக பூர்வ ஜென்மத் தாயாரான வகுளா தேவியின் அரவணைப்பில் இருந்த அவதாரப் புருஷரான விஷ்ணுவிற்கு ஸ்ரீ வராஹா ஸ்வாமியின்  ஆலயத்தில் தங்க இடம் கிடைத்ததும் அவருக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயரை வகுளாதேவி சூட்டினாள்.  விஷ்ணுவின் அவதாரமான இந்த ஸ்ரீனிவாசரே முன் அவதாரத்தில் கிருஷ்ணராக இருந்தவர். யசோதைக்கு அவள் முன்னிலையில்  திருமணம் செய்து கொள்வதாக முன் அவதாரத்தில் கிருஷ்ண அவதாரத்தில்  இருந்தபோது கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற வகுளாதேவிக்கு இப்போது  மகனாக வந்துள்ளார்.  அவர்கள் இருவரும் வராஹப் பெருமான் கொடுத்திருந்த இடத்தில் சிறிய குடிலை அமைத்துக் கொண்டு அங்கு வாழத் துவங்கினார்கள். அதே நேரத்தில் ஸ்ரீனிவாசன் என்ற பெயரைக் கொண்ட பெருமாள் வனத்துக்குச் சென்று வேட்டை ஆடத் துவங்கினார். வேட்டை ஆடி மிருகங்களைக் கொல்வது  பாபமில்லையா என்று கேள்வி எழும்பலாம். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஸ்ரீனிவாசப் பெருமாள் வேட்டை ஆடியதும் ஒரு மாயையே. பூர்வ ஜென்மங்களில் பலர் செய்திருந்த பாவங்களினால் அவர்கள் இந்த ஜென்மத்தில் மிருகங்களாகப் பிறந்து...

Thirupathi Sree Venkateswarar- 15

படம்
சாந்திப்பிரியா    சோழ மன்னனுக்கு பிசாசாக மாற சாபம் கொடுத்தப் பின், அதற்கு அடுத்த ஜென்மத்தில் அவன் மீண்டும் மன்னனாக பிறக்கவும் விஷ்ணு அருள் புரிந்தப் பின் பசுவும் கன்றும் மறைந்து விட்டன.  அந்த பிசாசு வடிவில் இருந்த சோழ மன்னனே பின்னர் சுதர்மன் எனும் மன்னனின்  மகனாகப் பிறந்த ஆகாசராஜன். அந்த ஆகாசராஜனுக்கு மகளாகக் பூமியில் கிடைத்தவளே பத்மாவதி. முன்னரே கூறியது போல பத்மாவதி எனும் பெயரில் ஆகாசராஜன் மூலம் லஷ்மியின் துணை அவதாரமும் பூமியில் இருந்து அவதரித்து விட்டாள்.  பிசாசாக மாறிய சோழ மன்னனின் செய்கை மூலம் விஷ்ணு பகவானும் பூமியில் மனித உருவில் ஸ்ரீ வராஹா ஷேத்திர வனத்தில் பூமியில்  தோன்றி விட்டார். இனி அவர்கள் இணைந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் லஷ்மி தேவி மீண்டும் விஷ்ணுவுடன் இணைவாள். இந்த பூமிக்கு கண்கண்ட தெய்வமாக விஷ்ணுவும் லஷ்மியும் ஒன்றிணைந்து  மக்களுக்கு செல்வ மழையையும், வேண்டியதைத் தரும் கலியுக வரதராகவும் மாற வேண்டும். அந்தப் பின்னணியில் இப்போது விஷ்ணு பகவான் எழுமலையானான  சரித்திரக் கதை துவங்குகிறது. ...

Tirupathi Sree Venkateswar - 14

படம்
சாந்திப்பிரியா   மறுநாள் முதல் ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி அரச மாளிகை ஆட்டு இடையன் எப்போதும்  போல மாடு மேய்க்க வனத்துக்குப் போகும்போது நாரதர் ஒரு இடையன் போன்ற இன்னொரு வேஷத்தில் வனத்துக்குச் சென்று அவனுடன் நட்பை ஏற்படுத்திக்  கொண்டு, பேசிக்கொண்டே செல்வது போல அவன் செல்லும் பாதையை திசை திருப்பி விஷ்ணு அமர்ந்து  இருந்த புற்றின் அருகில் இருந்த புற்கள் மீது சென்று மாடுகளை மேய வைக்க ஏற்பாடு செய்தார்.  அங்கு நிறையப் புற்கள் இருந்ததினால் இடையனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பசுக்களை அந்தப் பகுதியில் இருந்தப் புற்கள் மீது  மேய  விட்டான்.   அந்த தறுமணத்தை நன்கு  பயன்படுத்திக் கொண்ட  பசுவும் கன்றுமாக இருந்த சிவனும், பிரும்மாவும்  விஷ்ணு அமர்ந்திருந்த புற்றின் அருகில் சென்று அதன் மீது  ஒரு ஓட்டையை ஏற்படுத்தி அதன் மூலம் விஷ்ணுவின் வாயில் பாலை சுரந்து அவருக்கு பலமூட்டினார்கள். விஷ்ணுவும் லஷ்மி, லஷ்மி என முனகிக் கொண்டே அந்தப் பாலை பருகினாலும், அங்கேயே தன்னை மறந்து அமர்ந்திருந்தார். அ...