Varagur Temple
வரகூர் ஆலயமும் நாராயண தீர்த்தரும் சாந்திப்பிரியா பூபதி ராஜன் என்ற சோழ மன்னனின் ஆட்சியில் இருந்த இடமே கீழ் தஞ்சாவூரில் உள்ள பூபதி ராஜபுரம் என்பது. அதுவே தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது. வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். இங்குள்ள வெங்கடேச பெருமான் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. பல ஆலயங்கள் ஸ்வயம்புவாகத் தோன்றியதாகக் கூறப்படும் தெய்வங்களின் சிலையை கொண்டுள்ளதாக உள்ளதினால் அவை புனித தீர்த்தங்களாக ஆகி உள்ளன. அவற்றில் காவேரியின் கிளை நதியான குடமுருட்டி நதிக்கரையில் அமைந்துள்ள, சோழர்கள் காலத்தை சேர்ந்த, எண்ணூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் புராதானமான ஆலயம் எனக் கூறப்படும் இந்தத் தலமும் ஒன்று. இதை பூலோக வைகுண்டம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் தனது மடியில் தாயாரை அமர்த்திக் கொண்ட கோலத்தில் உள்ளார். அற்புதமான சோழ மன்னர்கள் காலத்துக் கலையில் காணப்படும் அதை வீர நாராயணன் எனும் சோழ மன்னனே பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இங்குள்ள வெங்கடேச பெருமான் ஸ்வயம்புவாகத் தோன்றியவர...