இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெண்கடுகு- White Mustard

படம்
குடும்ப அமைதிக்கு வெண்கடுகு   சாந்திப்பிரியா சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை. சகோதர, சகோதரிகளிடையே மன வேறுபாடு. வீட்டில் உள்ள பெண்கள்  திருமணம் ஆகிய பின்  கணவனுடன் சென்று வசிப்பார்கள். அது போல ஆண்கள் தன்னுடன் வசிக்க தன் மனைவியையும் அழைத்து வருவார்கள். ஒரு குடும்பத்தில் பெண்கள் வெளியே சென்று விட, புதுப் பெண் உள்ளே நுழைய  பெரும்பாலும் அந்த இரு பிரிவுப் பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மூலமே  மனஸ்தாபங்கள் தோன்றத் துவங்குகிறது. சின்ன சின்ன பிரச்சனைகளினால் ஏற்படும் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் எழுகிறது.  இன்னும் சில குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்கு இடையேயும் மனஸ்தாபங்களும் வெளியில் தெரியாத வெறுப்பும் ஏற்படும்போது அவை அனைவரது குடும்ப வாழ்க்கை மற்றும் மன நிலையை பாதிக்க அவர்கள் அமைதி இன்றி  வாழ்கிறார்கள். பல வருடங்களாக ஒற்றுமையுடன் இருந்த  நல்ல குடும்பங்களில் கூட திடீர் என  இப...

Book Review- Ayyanar and Mariamman –Folk Deities in South India

படம்
ஐயனார் மற்றும் மாரியம்மன் -கிராம தேவதைகள்- புத்தக விமர்சனம் சாந்திப்பிரியா    1949 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த திருமதி  'க்ரிஷ்டா நியுயேன்ஹோபர்' எனும் எழுத்தாளர் ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள கிராம மக்களின் வாழ்கை முறை மற்றும் கலாச்சாரங்களைக் கண்டறிய தனது கணவருடன் அங்குள்ள பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். தான் கண்டறிந்த உண்மைகளை  பல படங்களுடன் தனது இணையதளமான http:/www.pbase.com/neuenhofer என்பதில் வெளியிட்டு உள்ளார். அந்த ஆர்வத்தின் காரணமாக கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள டோகோ, பெனின் மற்றும் கானா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல அறிய  புத்தகங்களையும் எழுதி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் சில 'டோகோ மற்றும் பெனின்', 'வூடூ மக்களின் தாய் நாடு', 'கானாவில் பிட்டிஷ் நாட்டு பாதிரியார்கள்', 'பில்லி சூனிய பகுதிகள் மற்றும் தகன முறைகள்' போன்றவை ஆகும்.  பல இடன்ன்களுக்குச் சென்றாலும்  அவருக்கு பிடித்தமானதாக இருந்தவை இந்திய கிராமங்களே என்பதினால் வருடத்துக்கு ஒரு முறையாவது இந்தியாவி...