Gurulinga Swamigal - Tamil
தமிழ்நாட்டின் சென்னையை சுற்றி பல மஹான்கள் மற்றும் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலாக இருக்கலாம் என்கின்றார்கள். ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் கூடிய வரலாறு கொண்டதாக உள்ளது. சாதாரணமாக அதீத சக்தி கொண்ட சமாதி ஆலயங்களில் நுழைந்ததும் நம்மை எதோ ஒரு உணர்வு அலை ஆக்ரமிப்பதைக் காணலாம். அந்த அதிர்வலைகள் எழுவது அந்தந்த சமாதிகளில் அடங்கி உள்ள மஹான்களின் அருளாசியாகும். நாங்கள் சென்னையில் சை தாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயத் தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த சித்தரான குருலிங்க ஸ்வாமிகளுடைய சமாதி ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அந்த உணர்வலைகளை உணர முடிந்தது. சித்தர் குருலிங்க ஸ்வாமிகளுடைய இளமைக் கால வரலாறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார் என்ற உண்மையை மட்டும் பக்தர்கள் சிலர் மூலம் அறிய முடிந்ததாம். அவர் வரும் வழியில் பல மகிமைகளை நிகழ்த்தி உள்ளதாகவும், தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல மக்களுடைய வியாதிகளை மாய நிவாரணத்தினால் ...