Temples for Lord Twin Hanuman (T)

ரெட்டை ஹனுமார் ஆலயங்கள் நாங்கள் சில நாட்களுக்கு முன்னால் மாயவரம்- கும்பகோணத்துக்கு சென்று இருந்தபோது சில ரெட்டை ஹனுமார் ஆலயங்களை பார்க்க நேரிட்டது. ஒரே சன்னதியில் இரண்டு தெய்வங்களாக ஹனுமார் சிலைகளை பிரதிஷ்டை செய்து இருந்தார்கள். ஒரே சன்னதியில் இரண்டு வினாயக பகவான் சிலைகள் உள்ள ஆலயங்களை பார்த்து இருக்கின்றோம். ஆனால் இரட்டை தெய்வமாக ஹனுமான் உள்ள ஆலயங்களை பார்த்தது இதுவே முதல் முறை ஆகும். சாதாரணமாக ஆலயங்களில் மூல சன்னதியில் பல தோற்றங்களில் ஆலயத்தின் பிரதான தெய்வம் அமர்ந்திருந்தாலும், அவர்களுடைய இரண்டு சிலைகள் இருக்காது. ஆனால் இந்த மூன்று ஆலயத்திலும் ஒரே சன்னதியில் பகவான் ஹனுமாரின் இரண்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. அவற்றில் இரண்டு ஆலயங்களைக் குறித்த வரலாறு புராணங்களில் காணப்படவில்லை என்றாலும் அவற்றில் இரண்டு ஆலயங்கள் கிராமியக் கதைகளை மையமாகக் கொண்டவை. மூன்றாவதில் சிறு புராணக் கதை உள்ளது . மேலே உள்ளவை மேல ப் பாதி கிராம ரெட்டை ஹனுமார் ஆலயத்தின் படங்கள் மேல ப் பாதி கிராம ஆலயம் குறித்து கூறப்படும் கதை என்ன என்றால் பல நூறு வருடங்களுக்கு...