Raghuvamsam - 14

ரகுவம்சம்-14 - சாந்திப்பிரியா - ரகுவம்ச அழிவின் துவக்கம் இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார். அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின...