Guru Charithram -11

...........அத்தியாயம் - 5(ii) அதைக் கேட்ட அவரது பெற்றோர் மனம் வருந்தினார்கள். சுமதிக்கு தத்தாத்திரேயர் காட்சி தந்தபோது அவளுடைய மகன் எதைக் கூறினாலும் அதை தடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தது மனதில் அழியாமல் இருந்தாலும் தனக்கு மகனாகப் பிறந்து விட்ட ஒருவர் துறவற நிலைக்கு செல்வதை மனத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள். அவர் இப்படிக் கூறியதும், அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ''மகனே, எங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மகனாக வந்து விளக்கேற்றி வைப்பாய். எங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தருவாய் என நினைத்தோமே. குருடனாகவும், முடமாகவும் உள்ள உன் சகோதரர்களை எங்கள் காலத்துக்குப் பின்னர் யார் பாதுகாத்து வருவார்கள் என்று நாங்கள் வருந்திக் கொண்டு இருந்த நேரத்திலே, கவலைப்படாதே, நான் இருக்கிறேன் என்பது போல நீ வந்து என் வயிற்றில் பிறந்து எங்களுக்கு மன அமைதியை தந்தாய். ஆனால் அந்த மகிழ்ச்சி உடைந்து போய்விடும் போலல்லவா இருக்கிறது நீ துறவி என்ற நிலையில் செல்ல நினைப்பதும். எங்களுக்கும் வயது ஏறிக் கொண்டே உள்ள நிலையில் உ...