இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Temples in Malwa Region - 20

படம்
சாந்திப்பிரியா                                                        -  20 - வழியில்  சில  ஆலயங்கள்  சித்தவட்டை  தரிசித்தப் பின்னர் உஜ்ஜயினியில் இருந்துக் கிளம்பி தேவாஸ் சென்று  மதியம் அங்கிருந்துக் கிளம்பி இந்தூருக்குச் சென்றோம். வழியில் மீண்டும் பிலாவலி சிவன், பஞ்சமுக ஹனுமான் ஆலயம், காளி தேவியின் ஒரு ஆலயம் போன்றவற்றுக்குச் சென்று  பின்னர் இந்தூரில் இருந்த  ஒரு அனுமான் ஆலயம், கீதாபவன்  போன்ற  ஆலயங்களுக்கு சென்றப் பின் மாலை பெங்களூருக்கு  பயணித்தோம். இப்படியாக எங்கள் பயணம் இனிதே முடிந்தது. நான்கு வேதங்களையும் தன்  கையில்  வைத்து உள்ள பஞ்ச முக ஹனுமான் நர்த்தனம் ஆடும் காளி  தேவி சாமுண்டி தேவி  (இளையவள்) சாமுண்டி தேவி  ( மூத்தவள் )...

Temples in Malwa Region - 19

படம்
சாந்திப்பிரியா                                                        -  19 - சித்தவட்  ஆலயம்    அங்கிருந்துக் கிளம்பி நாங்கள் அடுத்துச் சென்றது சித்தவட் எனும்   ஆலயம். அதன் காலமும் பல ஆயிரம் முற்பட்டது என்கிறார்கள். இந்த ஆலயம் உஜ்ஜயினியின் இன்னொரு எல்லையில் சிப்ரா நதிக்கரையில்தான் உள்ளது.  கங்கைக்கு   யாத்திரை செய்து இறந்தவர்களுக்கு சிரார்தங்களை  செய்து இறந்து போனவர்களுடைய ஆத்மாக்களை மோட்ஷம் பெற வழி வகுப்பது போலவேதான்   இங்கு வந்து  இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்வார்கள். அதை பிரேத ஷீலா  என்கிறார்கள்.  அதாவது பிரேதங்களுக்கு விடுதலை தரும் இடம் என்பதாகும்.  கங்கைக்கு செல்வதும், கயா, விருந்தாவன் மற்றும் நாசிக் போன்ற இடங்களுக்கு  சென்று இறந்தவர்களுக்கு இறுதி கார்யங்கள...

Temples in Malwa Region - 18

படம்
சாந்திப்பிரியா                                                        -  18 - திரிவேணி சங்க  சனீஸ்வரர் ஆலயம்    மறுநாள் காலை  கிளம்பி முதலில் நேராக திரிவேணி சங்கத்தில் உள்ள சனீஸ்வர தேவர் ஆலயத்துக்கு சென்றோம். உஜ்ஜயினியி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஏழு அல்லது எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உஜ்ஜயினியின் எல்லையில்  இந்தூருக்கு செல்லும் பாதையில் உள்ள இந்த திரிவேணி சங்க சனி ஆலயத்தில் இரண்டு சனி தேவர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் ஏழரை நாட்டு சனி தேவர் மற்றும் இரண்டாமவர் இரண்டரை ஆண்டு சனிஸ்வரர். அவர்களோடு வினாயகரும் காட்சி தருகிறார்.   இப்படியாக  ஒரே சன்னதியில் மூவரும் இருப்பது வேறு  எங்கும் கிடையாது. அவர்களது சன்னதியை சுற்றி உள்ள தனித் தனி சன்னதிகளில் மற்ற நவக்கிரக தேவர்கள் அமர்ந்து உள்ளார்கள...

Temples in Malwa Region -17

படம்
சாந்திப்பிரியா                                                        -  17 - கோபால் மந்திர் ( ஆலயம் )   உஜ்ஜயினியில் நகர மையத்தில் உள்ளது கோபால் மந்திர் எனப்படும் கிருஷ்ணர் ஆலயம். இது 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். இங்குள்ள சன்னதியில் காணப்படும் கிருஷ்ணர் இரண்டு அடி உயரமானவர். அவர் சிலை முழுவதுமே வெள்ளியினால் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தின் முக்கியமான ஒரு செய்தி என்ன என்றால் முன்னர் முகலாய படைஎடுப்பின்போது குஜராத்தில் இருந்த சோமனாத் ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்ற முகமது கஜனி அந்த ஆலயத்தில் இருந்த வெள்ளிக் கதவுகளையும் கொண்டு சென்றான். அதன் பின் அப்கான் நாட்டின் மீது படையெடுத்த இன்னொரு மன்னன் அதை பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கு கொண்டு சென்று விட்டான். ஆனால் பின்னர் மராட்டிய மன்னர் வம்சத்தை சேர்ந்த மகாராஜா சி...