Bagavaan Satya Sayi Baba
சத்யா சாயி பாபா தான் கூறிய வயதில்தான் சித்தி அடைந்து உள்ளார் ! சாந்திப்பிரியா புட்டபர்த்தி சத்ய சாயி பாபா அவர்கள் தன்னுடைய காலத்தைக் குறிப்பிடுகையில் :" நான் 95 வயது வரை வாழ்வேன்" என்று கூறியிருந்தாராம். அதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது .தற்போது 86 வயதே ஆகும் அவர் உடல் நிலை தேறி மீண்டும் நல்லபடியாக வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்து இருந்தனராம். பாபாவின் பூத உடல் இந்த நிலையில் சாயி பாபாவின் வாக்குக்கு பொய் ஆகிவிட்டதே என பலரும் நினைக்கலாயினர். சித்தி அடைவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் ஏப்படி சித்தி அடைந்தார் என்ற ஐயம் எழலாம். ஆனால் அது குறித்து இன்றைய தினமலர் நாளிதழில் வெளி ஆகி உள்ள ஒரு செய்தி யைக் கீழே தந்து உள்ளேன். ''சாய் பாபாவின் மரணம் குறித்து தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங...