Thursday, July 21, 2016

Kuber Poojai Clarifications (T)

--குபேர யந்திர பூஜை--
வாசகர் எழுப்பிய
சந்தேகங்களுக்கான பதில்கள்

 
1) எந்த திசையில் அமர்ந்து கொண்டு இந்த பூஜையை செய்யலாம்?

நான் எழுதி உள்ள குபேர யந்திர பூஜைக்கான கோலத்தை வடக்கு திசையைப் பார்த்து  அமர்ந்து கொண்டு செய்ய வேண்டும். ஏன் எனில் குபேரன் வடக்கு திசைக்கு அதிபதி ஆகின்றார்.

2) செல்வத்தை அருளும் லக்ஷ்மி தேவிக்கு பூஜையை செய்யாமல் எதற்கு குபேரருக்கு பூஜையை செய்ய வேண்டும்?   நேரடியாக லக்ஷ்மி தேவிக்கு செய்யும் எளிய பூஜை கிடையாதா?

சிவபெருமான் தன அதிபதிகளாக லக்ஷ்மி தேவியையும், அவளுக்கு கீழ் பணி புரிய குபேரனையும் நியமித்தார். குபேரன் தேவலோகத்தில் உள்ள குபேர பட்டிணத்தில் இருக்கும் அழகாபுரி அரண்மனையில் இவர் வீற்றிருக்கிறார். லக்ஷ்மி தேவியின் அனைத்து செல்வத்தையும் பாதுகாக்கும் பணியில் உள்ளவரே குபேரன். லக்ஷ்மி தேவி செல்வத்துக்கு அருள் புரிந்தாலும் குபேரர் சில சமயம் 'அம்மா இவர் தகுதியானவர் இல்லை' எனக் கூறி லக்ஷ்மி தேவி தரும் செல்வத்தை தடுத்து நிறுத்தி விட முடியுமாம். ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்பதினால் லக்ஷ்மி தேவியே செல்வத்தை அருள்பவள் என்றாலும் அதை குபேரனால் தடுக்க முடியும் என்பதினால் அவரையும் வணங்க வேண்டும்.   சில புராணக் கதையின்படி குபேரன் அனைத்து செல்வங்களையும் ராவணனிடம் இழந்துவிட்டு வந்தபோது அவளுக்கு லக்ஷ்மி தேவியேதன்னிடம் இருந்து செல்வத்தைத் தந்து அருள் புரிந்து அவரை தன்னிடம் உள்ள செல்வத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதாகவும் கதை உண்டு. ஆனால் எது எப்படியோ நியதியின்படி அந்த செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்து உள்ள குபேரர் பெட்டியை திறந்தால்தான் செல்வம் கிடைக்கும் என்பதினால் குபேரரையும்  லட்சுமி தேவியுடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

சிவபெருமான் செல்வத்தின் அதிபதிகளாக மஹாலக்ஷ்மியையும் அவளுக்கு கீழ் இயங்கும் தெய்வமாக குபேரனையும் படைத்தவுடன் அவர் உலகில் உள்ள செல்வ நிதிகளான பத்ம நிதி, மகாபத்மநிதி, மகரபத்மநிதி, கட்சபபத்மநிதி, குமுத நிதி, நந்தநிதி, சங்குநிதி, நீலநிதி, மற்றும் யோகநிதி எனும் ஒன்பது நவநிதிகளையும் குபேரனுக்கு தந்தாராம். அவற்றில் முக்கியமானவை மூன்றுதான். கடல் சங்கின் உள் இருந்து இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கும் நீரைப் போல தொடர்ந்து செல்வத்தை பெறும் நிலை சங்குநிதியாகும். பதுமம் என்றால் தாமரை என்ற பொருள் உண்டு. ஆகவே தாமரை மலரிலே உள்ள அடுக்கடுக்கான தாமரை இதழ்களை போல அடுக்கடுக்கான செல்வத்தை பெறும் நிலையே பத்மநிதியாகும். அதை போலவே எதிர்பாராமல் செல்வத்தைப் பெறும் நிலையே யோகநிதியாகும். ஆகவே இந்த மூன்று முக்கியமான நிலைகளையும்-பாதாளம், பூலோகம் மற்றும் தேவ லோகம் என மூன்று லோகங்களிலும் இருந்தவாறு குபேரன் வெளிப்படுத்துகின்றார். அதன் காரணமாகவே ஒன்பது கட்டங்கள் உள்ளன. குபேர யந்திரத்தின் ஒன்பது கட்டங்களிலும் குபேரர் அமர்ந்து கொண்டு அவற்றை வெளிப்படுத்துகிறார்.


அதை போலவே தேவி மஹாலக்ஷ்மி படைக்கப்பட்டவுடன் அவளும் மேலும் எட்டு குணங்களுடன் கூடிய உருவங்களை பெற்றாள். எதற்கு அத்தனை ரூபங்கள் தேவை என்றால் செல்வமே அனைத்தையும் தரும் நிலை அல்ல. அந்த செல்வத்தை முழுமையாக அனுபவிக்க வாழ்க்கையில் மேலும் சில சுகங்களை பெற வேண்டும். அஷ்ட லஷ்மிகளாக இருந்து கொண்டு அவள் தருபவை தானியம், தைரியம், சந்தானம் (மழலை செல்வம்),வெற்றி, விவேகம், மதிப்பு, சுகம் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றை தருகின்றாள்.  இவை அனைத்தும் இருந்தால்தான் செல்வம் பெற்றவன் அதன் சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதினால் செல்வம் வேண்டும் எனப் பிரார்திக்கும் நேரத்தில் தடை இன்றி செல்வம் கிடைக்க செல்வத்தை தன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்து உள்ள குபேரர் மூலமே லக்ஷ்மி தேவியை ஆராதிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

3) குபேர யந்திரத்தின் மகத்துவம் என்ன?

குபேர யந்திரம் விசேஷமான யந்திரம் ஆகும். யந்திரத்தில் உள்ள கட்டங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆகும். எதற்காக ஒன்பது கட்டங்கள்? 


இந்த யந்திரத்தில் காணப்படும் எண்களை எப்படிக் கூட்டினாலும் -குறுக்காகவோ, மேல் இருந்து கீழாகவோ இல்லை பக்கவாட்டில் என எப்படிக் கூட்டினாலும் ஒன்பது என்ற எண் வரும் (72 i.e. 7 + 2 =9). அத்தனை ஏன் மொத்த எண்களின் கூட்டுத் தொகை கூட ஒன்பது என்ற எண்  (216 = 2 + 1 + 6 =9) ஆகும்.


ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள முதல் எண்ணான இரண்டு, இரண்டு என ஒன்பது இரண்டு எண்களையும் கூட்டுங்கள். மொத்தம் 18 என வரும். அதன் எண்ணும் 8 + 1 = 9 தான். 


அதை போல முதல் எண்ணான இரண்டு என்பதை எப்படிக் கூட்டினாலும் - குறுக்காகவோ, மேல் இருந்து கீழாகவோ இல்லை பக்கவாட்டில் என எப்படிக் கூட்டினாலும் 6 எனும் எண் வரும். ஆறு என்பதை திருப்பிப் பாருங்கள், அது ஒன்பதாகவே இருக்கும். 


ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள இரண்டாவது எண்களை எப்படிக் கூட்டினாலும் - குறுக்காகவோ, மேல் இருந்து கீழாகவோ இல்லை பக்கவாட்டில் என எப்படிக் கூட்டினாலும் 9 எனும் எண்தான் வரும். அதை போலவே ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள இரண்டாவது எண்கள் அனைத்தையும் கூட்டுங்கள். மொத்தம் 36 என வரும். ஆக அதுவும் 3 + 6 = 9 என்பதாகிறது. 


குபேர யந்திரத்தில் மொத்தம் ஒன்பது கட்டங்கள் உள்ளதை கவனியுங்கள். அவற்றில் உள்ள மொத்த எண்களையும் ஒன்றாகப் பெறுக்கி அதன் கூட்டுத் தொகையைப் பாருங்கள்.

27 x 20 x 25 x 22 x 24 x 26 x 23 x 28 x 21= 780832483200 =45=9. 


ஆக எப்படிப் பார்த்தாலும் 9 என்ற எண்ணே வரும்.


அனைத்திலும் உள்ள இரண்டாவது எண்ணை கவனியுங்கள். 0 முதல் 8 எனும் எண்கள் காணப்படும். 0 என்பது லக்ஷ்மி தேவியின் மூல ரூபம். அடுத்து அவள் காட்டும் எட்டு தன்மைகளின் அவதார ரூபம் 1 முதல் 8 என்பவை. ஆக ஒன்பது கட்டங்களில் தனித் தன்மையுடன் இருந்தவாறு லக்ஷ்மி தேவி அருள் புரிகின்றாள்.

4) குபேர யந்திரத்தில் காணப்படும் எண்களின் தாத்பர்யம் என்ன தெரியுமா? 


அனைத்து கட்டங்களிலும் இரண்டு என்ற எண் உள்ளதைக் காணலாம். முதல் எண்ணான இரண்டு (1 + 1 +2) என்பது லக்ஷ்மி தேவியும், தெய்வம் குபேரரும் சேர்ந்து அருளும் நிலையைக் காட்டும். இரண்டாம் எண் லக்ஷ்மி தேவியின் எட்டு தன்மைகளைக் (அஷ்ட லக்ஷ்மி தேவியைக் குறிப்பதாகும்) காட்டும்.   ஒன்பது கட்டங்களின் மத்தியக் கட்டத்தில் அமர்ந்து கொண்டே (24) இருவரும் அவர்களை சுற்றி உள்ள எட்டு திசையிலும் (2 மூலைகள் x 4 பக்கங்கள் = மொத்தம் 8 திசைகள்) இருந்தும் செல்வத்தையும் வளத்தையும் தருகிறார்கள். அஷ்ட திக்குக்களில் இருந்தும் செல்வத்தை வாரி வழங்கும் லஷ்மி தேவியைக் குறிக்கும் தத்துவம் இது.

ஆகவேதான் இந்த குபேர யந்திரத்தை பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும்  அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம். இந்த தன்மைகளைக் கொண்டுதான் மந்திர தந்திர சாஸ்திரங்களின் அடிப்படையில் எந்த கட்டத்தில் எந்த எண் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருந்திருக்க வேண்டும்.

ஒன்பது கட்டங்களையும் ஒன்றிணைத்து ஒவ்வொரு பக்கத்திலும் அவற்றின் மீது காணப்படும் 'ஸ்ரீ' எனும் எழுத்து குபேரனுடன் அஷ்ட லட்சுமியாக உள்ளவளை உருவாக்கியவளான சிவ-சக்தி தேவி வசிக்கும் ஸ்ரீபுரத்தைக் குறிக்கும். ஆகவே இந்த உலகையே படைத்து அதைக் காத்தருளும் பரமாத்மன் எனும் சிவசக்தியின் முழு அருளை பெற்று உள்ளதே இந்த யந்திரம் ஆகும்.

Kuber Pooja- Clarifications (E)

Clarification to some of the queries on 
Kuber Yanthra Pooja 


(1) While performing the Kuber Pooja which side should the performer face ?

The Kuber Pooja mentioned by me should be performed by the devotees facing the North as Lord Kuber is the authority on North side.

(2) While Goddess Lakshmi devi is bestower of wealth, instead of performing Pooja to her why should one perform Pooja to Lord Kuber ? What is the sanctity?

Lord Siva appointed Goddess Lakshmi as bestower of wealth. While Goddess Lakshmi was bestower of wealth, Lord Kuber was also appointed to assist her and to be the custodian of the treasures of Goddess Lakshmi. Lord Kuber stays in a place called Kuber city in Azhagapuram in Devaloga. Even if Goddess Lakshmi grants wealth to someone who pray her,  Lord Kuber can dissuade her citing ill of the person and come in the way of possessing her grace. Therefore since both are together in the act of bestowing wealth Lord Kuber too needs to be pleased to gain wealth. There is another lore in Puranas that state that when Lord Kuber lost entire wealth to Ravan and sought asylum from Goddess Lakshmi, she was compassionate enough to grant him not only wealth, but also appointed him the guardian of her treasure house. Therefore the belief is that unless Lord Kuber opens up the treasure box, one may not gain wealth and hence, Lord Kuber needs to be worshipped along with Goddess Lakshmi whenever one seeks the grace from the Goddess for wealth.

When Lord Shiva appointed both Goddess Lakshmi and Lord Kuber, he simultaneously bestowed additional special powers to perform the function effectively. He bestowed Lord Kuber authority over nine devaloga treasures like Padmanithi, Mahapadmanithi, Magarapathmanithi, Katchapapadmanithi, Kumuthanithi, Nandanithi, Sangunithi, Neelanithi and Yoganithi. The three most important powers of treasures (Nithi) amongst them are Sangunithi act of which continue to bestow wealth like the water flowing out of a sea conch, Padmanithi which represents Lotus flower and like the layers in a lotus flower the grace will cause the treasure to multiply one after other and finally the unexpected wealth derived by one called Yoganithi. Lord Kuber exercises these three nithis in each of the three worlds like Pathaal, Boologa and Devaloga. Therefore the three aspects of treasures x three Logas are represented by way of nine squares.

Similarly Goddess Lakshmi was empowered to take eight more secondary manifestations since wealth alone will not give pleasure in life. By the eight additional manifestations in the name of Ashta Lakshmi, the Goddess of wealth  grant to her devotees Grains, Courage, Offspring, Victory, Knowledge, Respect, Happiness, Prosperity etc. Thus Goddess Mahalakshmi stay in the nine squares of the Yanthra in nine forms which includes her real form. Therefore order to achieve the above without hurdles, Lord Kuber who assists Goddess Mahalakshmi need to be worshipped along with Goddess Lakshmi to gain wealth and other eight aspects.

3) How is Kuber Yanthra considered to be distinctive from other Yanthra to beget wealth?

Kuber Yanthra is indeed different and distinct from other Yanthra. This powerful Yanthra comprises of nine squares. How significant are the nine squares?

Total up the numerals of any three boxes – sideways or top to bottom or even in cross direction, the total will lead to figure 9 only (72 i.e. 7 + 2 =9). Total up the nos of all the nine boxes, it will still lead to only figure 9 (216 = 2 + 1 + 6 =9).

Now total up the first no from each boxes, it will work out to 18, again leading to No 9 ( 1+8 = 9). Total up the first no 2 in each of the three boxes either side wise or top to bottom row wise, it will be 6. View the No from above, you will see only figure 9.

Similarly total up the second no either in each side squares or three squares from top to bottom, it will only end up with figure 9. Total up the entire second no, it will be 36, again leading to figure 9 only (3 + 6 = 9).

Now multiply the entire nos from all the boxes. It will only lead to figure 9.

27 x 20 x 25 x 22 x 24 x 26 x 23 x 28 x 21= 780832483200 = 45 =9.

See another aspect with the second no in each of the  boxes. You will find Nos from 0 to 8. This represents Ashta Lakshmi. The zero is her real form while the other eight are her secondary manifestations. Thus Goddess Lakshmi appears in nine forms in nine squares and bestow the total wealth needed for her devotees.

4) What is the theory of the Kuber Yanthra?

One can see figure 2 in each of the boxes. Figure 2 represents oneness of Goddess Lakshmi and Lord Kuber
(1+1=2) in granting overall wealth. Seated in the centre of the boxes (No 24) they bestow total wealth from all eight directions (Ashta Disha).  Since each side has two directions amongst them wealth will flow from eight directions when pooja is performed to this Yanthra (4 sides x 2 directions each = 8 directions).

This is why it is believed that by performing Pooja to this powerful Kuber Yanthra one will acquire enormous wealth through Lord Kuber and from Goddess Ashta Lakshmi. However the nos in each of the squares may have been formulated based on Tantra and Mantra calculations which is not clear to us.

The word Sree found on the four sides represents Goddess Parasakthi who resides in Sripuram in Himalayas along with Lord Shiva. Since the universe has been created and under the control of Paramathman which is Siva Sakthi, this Yanthra too is possessed with abundant grace of Siva Sakthi.

Saturday, July 16, 2016

Kuber Pooja (T)



(முன் குறிப்பு:- இந்த கட்டுரையை நான் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டேன். அதன் பிறகு பல நண்பர்கள் சில விளக்கங்களை கேட்டு கடிதம் அனுப்ப நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் தந்தேன்.  ஆகவே மீண்டும்  அந்த விளக்கங்களுடன் கூடிய அதே கட்டுரையை அனைவருக்கும் பயன் அளிக்கும் விதத்தில் வெளியிட்டு உள்ளேன். 2010 ஆம் ஆண்டு வெளியான முந்தைய கட்டுரை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது)

மேலே காணப்படும் யந்திரத்தை தெய்வம் குபேர யந்திரம் என்கிறார்கள். இந்த யந்திரத்தை பூஜிப்பதின் மூலம் தெய்வம் குபேரரின் அருளை பெறலாம். இது தெய்வம் குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் அனைத்தையும் இழந்து நின்றபோது மஹாலஷ்மி தேவியை வணங்கி பெற்றதாம். ஆகவே நாமும் அந்த எளிய குபேர பூஜையை செய்ய நமக்கு செல்வம் கிட்டும். செல்வத்தை தற்காலிகமாக அடைய மட்டுமே இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பது இல்லை. குடும்ப அமைதி, மகிழ்ச்சி மற்றும் பணப் பற்றாக்குறை நீங்க வேண்டும் என்பதற்காக வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்வது நல்லது.

தெய்வம் குபேரரின் அருளை பெற எளிய பூஜை ஏதாவது உண்டா என்ற கேள்வி எழுகிறதா? ஆமாம் என்பதாகக் கூறி அந்த எளிய பூஜை முறையை எனக்கு ஒரு பண்டிதர் கூறினார். ஆகவே அதை அனைவருக்கும் பலன் அளிக்கும் வகையில் இருக்கட்டும் என வெளியிட்டு உள்ளேன். இந்த பூஜையை செய்ய சமிஸ்கிருத மந்திரங்களை ஓத வேண்டிய அவசியம் இல்லை. ஸ்லோகங்களே தெரியாதவர்களும் செய்யக் கூடிய மிக எளிய பூஜை இது. இந்த பூஜை முறை மீது மனதார நம்பிக்கை, பூஜை செய்வதில் நேர்மை, பூஜையில் ஆழ்ந்த ஈடுபாடு என்ற மூன்றும் மட்டுமே தேவை.

இந்த பூஜையை துவக்கும் முன் நமக்குத் தேவை ஒரு ஒரே மாதிரியான நாணயங்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப நாணயங்களை சேர்த்து வைத்துக் கொள்ளலாம். ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் என்ற மதிப்பு அதிகமான நாணயம் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. எட்டணாவாக இருந்தாலும் அது நம் உபயோகத்தில் உள்ள நாணையமாக இருக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் விளையாட்டுக்கான நாணயங்களை பயன்படுத்தக் கூடாது.  உபயோகத்தில் இல்லாத நாணயங்களையும் பயன்படுத்தக் கூடாது. அதுவே முக்கியம். 


அடுத்து ஒன்பது நாளைய பூஜையை துவக்கும் முன் முதலில் எந்த நாளில் இருந்து பூஜையை ஆரம்பிக்க உள்ளோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுவே முக்கியம். இந்த பூஜையை வெள்ளிக் கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில்தான் துவக்க வேண்டும். பூஜையை வெள்ளிக் கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் துவக்கி தொடர்ந்து ஒன்பது வெள்ளிக் கிழமை அல்லது ஒன்பது பௌர்ணமி தினத்தில் பூஜையை செய்து முடிக்க வேண்டும். வெள்ளிக் கிழமை துவக்கினால் வெள்ளிக் கிழமையில்தான் அடுத்த எட்டு நாட்களுக்கான பூஜையையும் செய்ய வேண்டும். அதை போல பௌர்ணமி அன்று துவக்கினால் பௌர்ணமி தினத்தில்தான் அடுத்த எட்டு நாட்களுக்கான பூஜையையும் செய்ய வேண்டும். நாட்களை மாற்றி செய்யக் கூடாது. 


பூஜையை துவக்கும் அன்று காலையில் குளித்து விட்டு தெய்வப் படங்களின் முன்னால் அல்லது வாயிலில் விசேஷ நாட்களில் கோலம் போடுவது போல கோலம் போட வேண்டும். அடுத்து குபேர யந்திரக் கோலத்தை நாம் எங்கு அமர்ந்து கொண்டு பூஜை செய்ய உள்ளோமோ அந்த இடத்தில் போட வேண்டும்.

மேலே காணும் யந்திரக் கோலத்தைப் போல அரிசி மாவு, குங்குமம் மற்றும் மஞ்சள் பொடியைக் கொண்டு யந்திரத்தின் உருவம் (கோலம்) போட வேண்டும். கட்டங்கள் குங்குமத்திலும், எண்கள் அரிசி மாவினால் மற்றும் ஸ்ரீ எனும் எழுத்து மஞ்சள் பொடியினால் போட வேண்டும்.

பூஜை செய்பவரால் தவிர்க்க முடியாத காரணத்தினால் பூஜையை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவருடைய வீட்டில் குடும்பத்தின் உள்ள யாரேனும் ஒருவர் ஒருவர் அதை தொடர்ந்து செய்யலாம். ஆனால் அந்த நபர் அதே வீட்டில் உள்ளவராக, அதே குடும்பத்தினராக இருக்க வேண்டும்.

முதல் நாள் பூஜையில் எந்த நாணயத்தை பயன்படுத்தினீர்களோ, அதே மதிப்பிலான நாணயங்களைத்தான் ஒன்பது நாள் பூஜையிலும் பயன் படுத்த வேண்டும். உதாரணமாக ஒரு ரூபாய் நாணயத்தைக் கொண்டு பூஜை செய்தீர்கள் என்றால், ஒன்பது நாட்களிலும் அதே மதிப்பிலான அதாவது ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் பூஜையிலும் ஒவ்வொரு மதிப்பிலான நாணயமோ இல்லை ஒரு ரூபாய் இரண்டு, மீதி ஐந்து ரூபாய் நாணயம் என பயன்படுத்தக் கூடாது. ஆகவே பூஜையை துவக்கும் முன்னரே ஒரே மாதிரியான எண்பத்தி ஒரு நாணயத்தை (அதாவது 9 x 9 =81) சேர்த்து வைத்துக் கொண்டே பூஜையை துவக்க வேண்டும். 




பூஜையை எந்த நாளன்று துவக்கினார்களோ அதே தினத்தன்று ஒன்பது நாள் பூஜையை செய்ய வேண்டும். எண்களின் பக்கத்தில் நாணயத்தை வைக்கும்போது எழுத்துக்கள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டு அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும். மேலே  உள்ள மாதிரிப் படத்தைப் பார்க்கவும்.

குபேர யந்திரக் கோலம் போட்டு நாணயங்களையும் அதில் வைத்து முடித்ததும் யந்திரத்தின் முன் ஒரு சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை துவக்க வேண்டும். பூஜையில் கூற வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா? மிகவும் சுலபமாகக் கூற முடியும் சுலோக வடிவிலான பிரார்த்தனை அது.

நீங்கள் எதற்காக பூஜை செய்ய விரும்புகின்றீர்களோ அதற்கேற்ப பிரார்த்தனையை செய்யவும். உதாரணமாக:

  • மஹாலக்ஷ்மி தேவியே, இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். என் கடன்கள் தீர்ந்து எனக்கு மன நிம்மதி கிடைக்க நீ அருள் புரிய வேண்டும்.
  • அல்லது மஹாலக்ஷ்மி தேவியே, இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். எனக்கு ஏற்பட்டு உள்ள பண இழப்புக்கள் தீரவும், வாங்கிய கடன்கள் அடைபடவும் தேவையான செல்வம் கிடைத்து எனக்கு மன நிம்மதி கிடைக்க நீ அருள் புரிய வேண்டும்.
  • அல்லது  மஹாலக்ஷ்மி தேவியே, இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். எனக்கு ஏற்படும் வீண் விரயங்களை தடுத்து செல்வம் நிலைக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் நீ அருள் புரிய வேண்டும்.
  • அல்லது  மஹாலக்ஷ்மி தேவியே, இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். என் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கத்  தேவையான அளவிலான செல்வம் கிடைக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் நீ அருள் புரிய வேண்டும்.
  • அல்லது  மஹாலக்ஷ்மி தேவியே, இந்த நாணயத்தை பூஜிப்பதின் மூலம் நான் உன்னை வணங்குகின்றேன். என் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான செல்வம் கிடைக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் நீ அருள் புரிய வேண்டும்.
இப்படியாக எந்த பிரச்சனை தீர வேண்டும் என வேண்டுகிறீர்களோ அதை மனதாரக் கூறி விட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும் பூக்களை வைக்க வேண்டும். அப்படி பூக்களைப் வைக்கும்போது அதில் போடப்பட்டு உள்ள எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயத்தின் மீதே பூக்களை வைக்க வேண்டும். முழு பூவை வைக்க வேண்டியதில்லை. இடம் இருக்காது என்பதினால்  இதழ்களை மட்டும் வைக்கலாம். ஆகவே அந்த கட்டங்களை அதற்கு தக்கவாறு போட வேண்டும். கீழ் உள்ள மாதிரிப் படத்தைப் பார்க்கவும். 



பூ கிடைக்கவில்லை என்றால் அதை விட சிறந்தது குங்குமத்தை நாணயத்தின் மீது தூவலாம். அதை குங்கும அர்ச்சனயைப் போல செய்யலாம்.


ஒன்பது முறையும் வேண்டிக்கொண்டு ஒவ்வொரு முறையிலும் அந்த கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீது பூவை வைத்து அல்லது குங்குமத்தை தூவி ஆராதிக்க வேண்டும். முடிவில் கற்பூரத்தை ஒரு தட்டில் ஏற்றி குபேர யந்திரத்தை சுற்றி மூன்று முறை கற்பூர ஆரத்தி காட்டிய பின் அந்த கோலத்தை வணங்கிவிட்டு பூஜையை முடித்து விடலாம். கற்பூர ஆரத்தியை யந்திரத்தின் நான்கு முனைகளையும் தொடுமாறு சுற்றிக் காட்டுவதின் தாத்பர்யம் என்ன என்றால் அந்த தீயானது வீட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள எதிர்மறை விளைவுகளின் ஆதிக்கத்தை பொசுக்கி, வீட்டிற்குள் நுழையும் லக்ஷ்மி தேவியும் தெய்வம் குபேரரும் மகிழ்ச்சியோடு அங்கு இருக்க வகை செய்வதாகவும் கூறுகிறார்கள். 



ஆக இந்த பூஜையில் நாம் ஓதுவது மந்திரம் அல்ல, அது நம்முடைய பக்தி பூர்வமான கோரிக்கை மற்றும் பிரார்தனையைத்தான். வேறு சுலோகம் தெரியும் என்றால் கற்பூரம் காட்டும் முன்னால் அதை கூறிவிட்டு கற்பூரம் காட்டலாம். ஆனால் இந்த பூஜைக்கு வேறு சுலோகம் கூற வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் பூஜைக்கு தேவை இந்த பூஜையின் மீது முழுமையான நம்பிக்கை மட்டுமே.

பூஜை முடிந்தப் பின் கோலத்தை உடனே அழித்து விடக்கூடாது. மறுநாள்வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும்.

மறுநாள்தான் கோலத்தை ஒரு துணியினால் துடைத்து எடுக்க வேண்டும். கோலத்தை துடைக்கும் முன்னால் அந்த ஒன்பது நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். சில்லறை வேண்டும் என்பதற்காக அதை மாற்றி வைத்துக் கொள்ளக் கூடாது.

மறுநாள் காலை எழுந்து குளித்ததும் அந்த யந்திரத்தில் உள்ள நாணயங்களை பத்திரமாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பணத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ளாதீர்கள். அதை எந்த காரணத்தைக் கொண்டும் வேறு வகைக்கு செலவு செய்யக் கூடாது. அது லக்ஷ்மி தேவி மற்றும் தெய்வம் குபேரருடைய செல்வம்  ஆகும்.

யந்திரத்தின் மீது நேரடியாக விளக்குமாற்றால் பெருக்கக் கூடாது. துணியினால் அதை அழித்தப் பின்னரே அந்த இடத்தைப் பெருக்கலாம். கோலத்தை துடைக்கும் முன்னால் அந்த ஒன்பது நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் எண்பத்தி ஒரு நாணயங்களையும் ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

அதன் பின் அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பழம் தர வேண்டும். வீட்டிற்கு வரும் வகையில் சுமங்கலிகள் கிடைக்கவில்லை எனில் ஆலயத்தில் சென்று அங்குள்ள ஏதாவது ஒன்பது சுமங்கலிப் பெண்மணிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணுக்கும் கூட வெற்றிலைப் பாக்கு, பழம் தரலாம். அவர்களும் கிடைக்கவில்லை என்றால் லஷ்மியின் சன்னதியில் தாம்பூலங்களை அப்படியே வைத்து விட்டு வரலாம். இதன் தாத்பர்யம் என்ன என்றால் இப்படியாக ஒன்பது பெண்களுக்கும் பெற்றுக் கொள்ளும் தாம்பூலத்தை லக்ஷ்மி தேவியே அவர்கள் உருவில் வந்து ஒன்பது கட்டங்களிலும் செய்யப்பட்ட பூஜையை அங்கீகரித்து பெற்றுக் கொண்டதான நிலை என்பதான அர்த்தம்.

ஒன்பது கட்டங்களின் தாத்பர்யம் என்ன என்றால், அவை அனைத்தும் உங்கள் வீட்டின் அனைத்து திசைகளையும் (எட்டு திசைகள்) நடுப்பகுதியையும் குறிப்பதாகும். நடுப் பகுதியே லக்ஷ்மி மற்றும் குபேரரை பூஜிக்கும் நீங்கள் என்பதாகும். இப்படியாக எட்டு திசைகளில் இருந்தும் செல்வத்தை வாரி வழங்கியபடி லக்ஷ்மி தேவியும், தெய்வம் குபேரரும் உங்கள் வீட்டில் வந்து உங்களுடன் வசிக்கத் துவங்கும் நிலையை குறிப்பதாகும்.

பூஜை முடிந்த ஒன்பதாம் நாளன்று கண்டிப்பாக பூஜை செய்தவர் ஏதாவது ஒரு லஷ்மியின் ஆலயத்துக்குச் சென்று தம்முடைய அதே பிரச்சனையைக் கூறி அவளை அதை களையுமாறு வேண்டிக் கொண்டு வர வேண்டும். தனி லஷ்மி ஆலயம் இல்லை என்றாலும் கவலை இல்லை. வேறு எந்த ஆலயத்துக்காவது சென்று லஷ்மியின் சன்னதிக்கு சென்று வேண்டுதலை வைத்தப் பின் ஒன்பது நாட்களும் பூஜை செய்து வைத்த எண்பத்தி ஒரு நாணயங்களையும் லஷ்மி தேவியின் உண்டியலில் போட வேண்டும் அல்லது அதை அப்படியே சன்னதியின் தட்டில் போட்டுவிட்டு வர வேண்டும். அதைப் போடும் முன்னால் தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கையைப் போல தனக்கும் பல மடங்கு செல்வம் தர வேண்டும் என லஷ்மி தேவியை மனமார வேண்டிக்கொள்ள வேண்டும்.

இந்த பூஜையை குறிப்பிட்ட காரணத்துக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. வசதி உள்ளவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட தினத்தில் பக்தியுடன் செய்து வந்தால் வீட்டில் அமைதி நிலவும். பணப் பிரச்சனை இருக்காது. செல்வம் நிலைக்கும். அப்படி பொதுவாக செய்யும் பூஜையின்போது நாம் கூற வேண்டிய த்யான சுலோகம் ‘அம்மா, மகாலஷ்மித் தாயே, நீ எங்களுடைய வீட்டில் நிரந்தரமாகத் தங்கி எங்களைக் காத்தருள வேண்டும்’ என்பதே.

Kuber Pooja (E)


(Note:- I published this article in the month of September 2010. Many readers kept on seeking  some clarification on the pooja and I sent individual replies to them. Therefore the revised  article has been re posted for the benefit of the readers covering all those points. The earlier article published in the year 2010 has been removed) 

The one you see above is called Guber Yanthra, the Yanthra that invokes the grace of God of wealth Guber. This Yanthra was given to Lord Guber by Goddess Lakshmi when Lord Guber lost his wealth on account of a curse. The pundits say that if one performs Pooja to this Yanthra they will gain wealth. This Pooja need not be performed only to gain wealth temporarily to meet the crisis requirement, but if the Pooja is regularly done twice or thrice in a year, there would be no crunch of fund at home, peace will prevail, and there will be all round happiness at home so say the Pundit.

Is there simpler form of Pooja available to perform and to invoke the blessings of Lord Guber? One of the simplest forms of performing Lord Guber Pooja was narrated to me by a pundit and I take pleasure in sharing the same for the benefit of everyone. An important aspect of this Pooja is that one need not chant sanskritised mantras while performing the Pooja. Only dedication, sincerity and unflinching belief is suffice to perform the simplest Pooja for Lord Guber.

The main item required for performing this Pooja is Coins of same size and value. One need not bother about the minimum or maximum value of coins needed. It can be even 50 paise coins provided it is in circulation as legally issued by the state. One should not use duplicate coins i.e replica of original coins sold in the market commercially. This is most important. 


The second most important aspect to be kept in mind is to decide the day from when one can commence the Pooja. It is nine days Pooja and should commence beginning from either Friday or the day of full moon. Once the day is decided then the nine days of Pooja should be performed only on those specific days in continuation for nine weeks, i.e if the Pooja had commenced on Friday, then the Pooja shall be performed every Friday in continuation totaling to nine Fridays. Similarly if it had been started on Full moon day, then the Pooja shall be continued in the next nine Full moon days and not on any other day. 
Once the day is decided, take bath in the morning and then draw some floral designs (Rangoli) with rice powder in front of the deity (if separate Pooja room is available) as drawn traditionally during festive seasons and then draw the following Guber Yanthra in the place where you decide to sit and perform the Pooja.

The model Yanthra as shown above should be drawn with pure rice powder white in colour, Red Vermilion powder used by ladies to put mark in their forehead and then the yellow turmeric powder. The outer border should be drawn with Vermilion powder and the numerals with rice powder (White). The words ‘Sree’ should be with turmeric powder (Yellow).

Once someone has begun the Pooja, for some unavoidable reason, they could not continue the Pooja on some of the days due to any reason, they need not feel worried. The Pooja can be performed in continuation by someone in the same family staying in the same house, to ensure that the link of the nine days Pooja is not broken.

Be sure that if you had used a particular valued coin, for the entire period of nine days the same valued coins need to be used. For example you had chosen to perform the Pooja with one rupee coin on the first day, then on all the nine days it should be only one rupee coin and not mixture of coins like one day one rupee coin, one day two rupee coin and some other day it is eight annas coin and so on. Therefore once you have made up your mind to perform the nine day Pooja ritual, first collect 9 x 9 = 81 coins of the same type and same value for the Pooja. 




As said earlier the Pooja has to be performed for continuous nine specific days beginning from any one of the days you have commenced. For example you have commenced it on Friday, next eight Fridays the Pooja will have to be performed. Similarly if you have commenced it on Full moon day, continue performing the nine days Pooja on every full moon day stretched to nine full moon days. While performing the Pooja keep the coins inside each of the boxes in such a manner that the letters are not erased during Pooja. See below the model illustration.

How do you perform Pooja? Very simple. After you drew the Yanthra in the manner shown, keep the coins as shown above and then light up an oil lamp in front of the Yanthra and begin chanting one of the following prayers for which you specifically intended to perform the Pooja.

  • Oh, mother Mahalakshmi, I salute thee in the form of this coin, give me enough wealth to wipe off my debts and give me mental peace and happiness. or 
  • Oh Mahalakshmi I salute thee in the form of this coin, grace me to recover my losses in business or loans given and give me mental peace and happiness. or 
  • Oh Mahalakshmi I salute thee in the form of this coin, grace me to retain the wealth which gets drained off unnecessarily and give me mental peace and happiness. or 
  • Oh Mahalakshmi I salute thee in the form of this coin, grace me with enough wealth to impart education to my children and give me mental peace and happiness. or 
  • Oh Mahalakshmi I salute thee in the form of this coin, grace me with enough wealth to run my family. and give me mental peace and happiness.
At the end of the chanting, also pray to the Goddess Mahalakshmi and Lord Guber to stay with you forever and grant prosperity. 

Every time you have chanted the above, keep a small size flower over the coin without erasing the no. The boxes are to be thus drawn in such a manner that enough space is available to keep nine flowers on the coin. One need keep full flower. It can also be the betel of flowers without stem. 
 
If you cannot procure flowers, then sprinkle Vermilion powder called Kunkum (used to apply on forehead by married ladies) which will be far better than flowers. See below the model illustration to understand this aspect.

Once you have completed chanting the prayer for nine times and offered flowers or vermilion powder over the coin, light up camphor in a lamp holder and show it before the Guber Yanthra circling the Yanthra three times to ensure that the entire areas of the Yanthra are shown the camphor lamp. This act symbolizes the act of burning the negative energies with the power of the Yanthra so that Goddess Lakshmi and Lord Guber who enters your home through the Yanthra will feel comfortable to stay there. 


 
What we chant in this Pooja is our simple and sincere prayer from our heart without invoking them with mantra. If someone know Lakshmi slokas, they can also be recited, but not mandatory. What one need in perfect faith in this prayer and sincerity without shadowing any pinch of doubt in mind.

Once the Pooja is completed, do not rub away the Yanthra or remove the coins and flowers on them immediately the same day. It should be retained for the entire day and only in the next day the place could be cleaned.

Next day morning also after you take bath, remove the coins safely, wipe it out the coins clean and retain them separately in a box or wallet. Do not spend those coins or allow them to get mixed up with other money/coins at home. They belong to Goddess Lakshmi and Lord Guber.

The Yanthra drawn should be cleaned by wiping with a cloth and not to be broomed. Collect the coins after performing Pooja on all the nine days and keep them together safe. However you can mix up those eighty one coins with which the Pooja was performed and keep them in a bag or wallet separately.

Every time after completing the day’s Pooja offer turmeric, betel leaves and betel nut with a fruit to nine married women (not a virgin girl). This is called offering tambula or tambulam (in Sanskrit tambula and in tamil tambulam). If you are unable to offer it to nine women by inviting them home, offer the same to any married women or virgin girls in any of the temples. There too if you are unable to find nine married women, keep them in the sanctum before the Goddess and come back. This can be done any time before the end of the day. The crux is that the act symbolizes the reverence shown to Goddess Mahalakshmi who reportedly appear in the form of those ladies to symbolically show out that she has accepted your prayer from each of the nine boxes you have drawn in the Yanthra.

The tenet of the Pooja for the Yanthra with nine boxes is that they represent the nine points of your home i.e. eight directions and the centre of the house which is you. Thus at the end of the nine days Pooja, pleased with your prayer both Goddess Mahalakshmi and Lord Guber enter into your home showering wealth from all directions and settle in you to give you prosperity.

At the end of the nineth day’s Pooja one who had performed the Pooja should go to any one of the temples to offer their prayer and worship to Goddess Mahalakshmi in her sanctum. In case the temple exclusive to her is not found, you can go to any of the temples where Goddess Mahalakshmi is seated in some sanctum and she can be worshipped there. After worshiping the Goddess on the nineth day, the entire eighty one coins are to be deposited in her hundi or sanctum as they belong to her which will beget several time more wealth like the offering you have made in fulfilment of their prayer.

The pundits say that it is not necessary to perform the Pooja only to derive temporary benefit, but by performing this Pooja on regular basis. If this exercise is continued regularly say twice or thrice an year in the family, it will show a miraculous effect by way of ending unwanted expenditures, vanishing tensions in the minds of all in the family and realization of sense of natural happiness to the entire family members. When someone regularly perform this Pooja as a habit- thrice or even frequently, then the general prayer could be ‘Mother Mahalakshmi, please continue to stay with us forever and grace us’.

Wednesday, July 13, 2016

Vellai Veppilaikkari Temple (T)

வெள்ளை வேப்பிலை
மாரியம்மன் ஆலயம்
 
சாந்திப்பிரியா 

நான் ஒருமுறை மாயவரம் சென்று இருந்தபோது இரண்டு அற்புதமான ஆலயங்களைக்  கண்டேன். இரண்டு ஆலயங்களில் முற்றிலும்  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலான இலைகளைக் கொண்ட வேப்ப மரத்தின் அடியில் அன்னை மாரியம்மன்கள் குடி இருக்கிறார்கள் என கேள்விப்பட்டோம். அவர்களை 'வெள்ளை  வேப்பிலைக்காரி' என அழைக்கின்றார்கள். யாருமே எளிதில் நம்ப முடியாத செய்தியாக இருந்ததினால் அந்த ஆலயத்தைக் காண ஆவல் கொண்டோம்; அந்த ஆலயத்தை தேடி அங்கு சென்றோம்.

முதலாவது ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாடுதுறை ஆதீனம் செல்லும்  வழியில், மாயவரம்-ஆடுதுறை சாலையில் மாயவரத்தில் இருந்து சுமார் 17 கிலோ தொலைவில் உள்ள மல்லர்பெட் எனும் கிராமத்தில் இருந்தது. அங்குள்ள மாரியம்மனை 'அன்னை வெள்ளை வேம்பு மாரியம்மன்' எனும் பெயரில் அழைக்கிறார்கள். அந்த ஆலயத்தில் ஆலமரத்தைப் போல மிகப் பெரிய வேப்ப மரம் உள்ளது. அதில் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை வெளேர் என இலைகள் இருக்க மறு பக்கத்து இலைகள் பச்சை பசேல்  என இருந்தனவாம். சில காலத்துக்குப் பிறகு வெள்ளை இலைகளைக் கொண்டு இருந்த வேப்ப மரத்தின் அந்தப் பகுதி மட்டும் பட்டுப்போய் விட்டதாம். 


 பட்டுப் போய் இருந்த கிளையின்  முறிந்திருந்த பாகம்
 மாரியம்மனைப் போல காட்சி அளிக்கிறது

அந்தக் கிளையின் வேர் பூமியில் சுமார் பத்து அடி தூரம் படர்ந்து சென்று அடுத்த மூலையில் பெரிய மரமாக வளர்ந்து இருந்தது. அதன் அடியில் தெற்கு நோக்கிப் பார்த்தபடி மாரியம்மன் அமர்ந்து இருக்கிறாள். ஆகவே அதன் மீதே கல்லினால் ஆன தரையைப் போட்டு, படர்ந்து உள்ள கிளையை மூடி அம்மனின் தாமரை மலரைப் போன்ற ஆசனத்தை அமைத்து அம்மனை அதன் மீது வைத்து உள்ளார்கள்.

தெற்கு நோக்கிப் பார்த்து அமர்ந்திருக்கும் அன்னை மாரியம்மன்  வேறு எங்குமே கிடையாது. சாதாரணமாக ஆலயங்களில் உள்ள அன்னை மாரியம்மன் உக்ரஹ  வடிவில் காணப்படுவாள். ஆனால் இங்குள்ள மாரியம்மன் கோபமான கோலத்தில் இல்லாமல் யோக வடிவில் அன்னை யோக மாரியம்மனாக இருக்கிறாள்.
முதலில் அன்னை மாரியம்மன் வேப்ப  மர உருவிலும், அதன் அடியில் சிறிய சிலையாகவும் எழுந்தருளி இருந்துள்ளாள் அந்த காலத்தில் அருகில் இருந்த வனங்களிலும், இந்த மரத்தின்  அடியிலும் முனிவர்கள் தவத்தில் இருந்திருக்கின்றார்கள். அவளை அங்கு வந்து வணங்கிய  சித்தர்கள் அவளை யோக வடிவில் இருக்குமாறும், அதே கோலத்தில் அன்னை மாரியம்மன் அவர்களுக்கு ஆசிகளை வழங்க வேண்டும் எனவும் வேண்டி இருந்திருக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த ஊர் மக்கள் அன்னை மாரியம்மனின் அருளால் எந்த அளவு நன்மைகளை அடைய முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணராத துவங்கினார்கள். உடல் நலமின்றி இருப்பவர்கள் அங்கு வந்து அந்த மரத்தின் வெள்ளை வேம்பு இலையை கிள்ளி எடுத்து உண்டால் வியாதிகள் குணம் ஆகி வந்ததினால் அந்த வெள்ளை இலையை பலருக்கும் பிரசாதமாக தந்து வந்துள்ளார்கள். ஆகவே பலரும் அங்கு வந்து இலைகளை பறித்துக் கொண்டு சென்றதினால் அந்த மரத்துக்குள் இருந்த அன்னைக்கு உடலெல்லாம் ரணம் ஆகிவிட்டதாம். அதனால் வருத்தமுற்று அன்னை மாரியம்மன் அங்கிருந்து கிளம்பி வேறு இடத்துக்கு சென்று விட்டாள் என்பதினால்  மரம் பட்டுப்போய் விட்டதாக கூறுகிறார்கள். ஆனாலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அன்னை மீண்டும் அங்கு வந்து அங்கு அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசிகளை வழங்கத் துவங்கினாளாம்.

இங்கு வந்து குழந்தை பாக்கியம் பெற வேண்டினால் எத்தனை ஆண்டுகள் குழந்தைகள் இல்லை என்றாலும் குழந்தை பிறக்கும் என்கிறார்கள். இந்த மாரியம்மன் அத்தனை சக்தி உள்ளவளாம். பட்டுப்போய் இருந்த கிளையின்  முறிந்திருந்த பாகம் மாரியம்மனைப் போல காட்சி அளிக்கிறது ஒரு அதிசயம்.  


 

அந்த ஆலய பூசாரியான திரு வீரமணி எனும் பூசாரியின் தகவலின்படி அந்த வேப்ப மரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்போது ஆலயம் உள்ள இடத்தில் ஒரு நதி இருந்ததாம். நதியோரம் அமர்ந்துள்ள மாரியம்மன் சுயம்பு தேவியாகும். அந்த வேப்ப  மரத்தின் அடியில் பல சித்தர்கள் தவத்தில் இருந்து இருக்கிறார்கள். திருமூலர் எனும் சித்தர் இங்கு வந்து வழிபட்டு தவத்தில் இருந்திருக்கிறார். இயற்கையின் சீற்றங்களினால் ஏற்பட்ட மாற்றத்தினால் தற்போது அந்த நதி விலகி சென்று விட, ஆலயத்தின்  எதிரில் மஞ்சனாறு எனும்  பெரிய  நீர் வாய்க்கால் ஓடுகிறது. அது வீரசோழன் நதியின்  கிளை நதியாகும். அந்த மரத்தின் முன்காலத்தைய  புகைப்படம் - வெள்ளை வெளேர் என்று வெண்மையான இலைகளுடன் இருந்த படம்- ஆலயத்தில் மாட்டி வைக்கப்பட்டு உள்ளது.

மாரியம்மன் சில நேரங்களில் தனக்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனில் அங்கிருந்து கிளம்பி இன்னொரு இடத்துக்கு சென்றுவிட்டு வருவது உண்டாம். அந்த இரண்டாவது இடம்  மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் பாதையின் இடையில் உள்ள திருவிளங்காடு என்பதாகும். அங்கிருந்து கிளம்பி  மயிலாடுதுறை  கும்பகோணம் மெயின் ரோடு வழியில் உள்ள  திருவலன்காடு எனும் இடத்துக்குச் சென்று இரண்டாவது வெள்ளை வேப்பிலைக்காரி ஆலயத்தை பார்த்தோம். அங்கு எங்களை திகைக்க வைக்கும் வகையில் அங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் பாலைப் போன்ற வெள்ளை நிறத்தில் வேப்ப இலை கொத்துக் கொத்தாக இருந்தன.  அதைவிட இன்னோர் அதிசயம் அங்கிருந்து சுமார் பத்தடி தூரத்தில் இருந்த இன்னொரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த இலைகள் மஞ்சளைப் போல மஞ்சள் நிறத்தில் இருந்தது.

சிறு குறுகலான வழியில் இருந்த கிராமத்துக்கு உள்ளே இருந்த ஒரு பெரிய வயல் வெளியில் இருந்தது அந்த ஆலயம். நமது வாகனத்தை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு, சிறிய பாதை மூலம் சுமார் 100 அடி உள்ளே நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். அங்குள்ள அன்னை மாரியம்மனையும் 'வெள்ளை வேப்பிலை மாரியம்மன்' என்றே கூறுகிறார்கள். இளம் பச்சைக் கூட இல்லாமல் வெள்ளை வெளேர் என்று கொத்து கொத்தாக வேப்ப இலைகள் இருந்ததைக் கண்டு வியந்து நின்றோம். அந்த ஆலயத்தின் கதையும் சுவையானது.  மல்லார்பேட்டையில் இருந்த மரத்தின் வெள்ளை இலையை வியாதிகளைக் குணப்படுத்தும் இலையாக கருதி அதை மாரியம்மனின் பிரசாதமாக மக்கள் பறித்துக் கொண்டு சென்றதினால் தனது உடல் முழுவதும் ரணமாகி விட வேதனை அடைந்த மாரியம்மன் சமயபுரம் மாரியம்மனை  சந்தித்து அவளிடம் அழுதாளாம். அவளும் அந்த வெள்ளை வேப்பிலைக்காரியை தன்னுடன் இங்கு வந்து அமர்ந்து கொள்ளுமாறு  அறிவுறுத்த வெள்ளை இலை வேப்ப மரத்தின் அடியில்  குடியிருந்த அன்னை மாரியம்மன்  அங்கிருந்து கிளம்பி இங்கு வந்து அமர்ந்து கொண்டாளாம்.  இப்படியாக பெரியவள் வெள்ளை நிற இலைகளுடனான வேப்ப மரத்திலும், அவள் தங்கை மஞ்சள் நிறை இலையுடன் இருந்த  வேப்ப மரத்திலும் அமர்ந்து கொண்டார்களாம். அன்னை மாரியம்மனின் தங்கை தங்கி இருந்த வேப்ப மரத்தின் இலை மஞ்சளாக காட்சி தருகிறது. அவளை 'மஞ்சள் பூ பாவாடைக்காரி' என்று  அழைக்கிறார்கள். 
 
வெள்ளை இலைகளைக் கொண்ட வேப்ப  மரம் 
அங்குள்ள ஆலயத்தை பாதுகாத்து வரும் சாவித்திரி அம்மா எனும் பெண்மணி அந்த நிலத்தின் சொந்தக்காரர். ஒருநாள் அவர் கனவில் வந்த மாரியம்மன் அந்த நிலத்தில் ஒரு இடத்தைக்  காட்டி அங்கு தனக்கு தங்க சிறிது இடம் தருவாயா எனக் கேட்டதும், விழித்து எழுந்தவர் காலையில் அவர் கனவில் வந்த இடத்தில் சென்று பார்த்தபோது அங்கு சின்னஞ் சிறிய  வேப்ப மரமும் அதன் அருகில் ஒரு பாம்புப் புற்றும் இருந்ததைக் கண்டார். உடனேயே அந்த இடத்தை சுற்றி சுத்தம் செய்து அந்த புற்றையும் வேப்ப மரத்தையும் வணங்கத்  துவங்கினார். நாளடைவில் அந்த வேப்ப மரம் சற்று வளராத துவங்கியதும் அதன் இலைகள் வெண்மை நிறத்துடன் இருந்தன.   இன்னும் சில நாட்களில் அந்த வேப்ப மரத்தின் அருகில் இன்னொரு வேப்ப மரம் மஞ்சள் நிறத்திலான இலைகளுடன் தோன்றின. அப்போதும் அவள் கனவில் வந்த மாரியம்மன் அந்த புதிய மரத்தில் தனது தங்கை வசிப்பதாகவும் அவளுக்கும் அங்கு தங்க இடம் வேண்டும் எனக் கேட்க அந்த கிராமத்து பெண்மணி அந்தக் கட்டளையையும் ஏற்று வழிபாட்டு தலம்  அமைத்து வழிபடத் துவங்கினாள். அந்த இரு மரங்களுக்கும் இடையே அருகில் உள்ள ஒரு பெரிய பாம்புப் புற்றில் ஐந்து தலை நாக உருவில் அவர்கள் இருவரும் வசிக்கிறார்களாம். வெளிச் சாலையில் 'வெள்ளை வேப்பிலைக்காரி ஆலயம் செல்லும் வழி' என்ற விளம்பர போர்டு காணப்படுகிறது. எந்தவிதமான விளம்பரமும் இன்றி  இந்த இடத்து ஆலயத்தை திருமதி சாவித்திரி எனும் பெண்மணி அமைதியாகப் பாதுகாத்து வருகிறார்.
  
பின் குறிப்பு: 
------------------
நான் முன்னரே அன்னை மாரியம்மனின் உருவங்களில் பல அம்மன்கள் உண்டு என்பதை எழுதி உள்ளேன். பார்வதியின் ஒரு அவதார உருவமே அன்னை மாரியம்மன் என்பவள். ஆகவே சமயபுரம் அன்னை மாரியாம்மனுடைய குடும்பத்தை சேர்ந்த அனைவருமே மாரியம்மன் எனப்படுவர். அவர்கள் பல இடங்களில் குடி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அன்னை மாரியம்மனின் விசேஷ சக்தி உண்டு. அவர்களில் பெரியவளே சமயபுரம் அன்னை மாரியம்மன் ஆவார். அவர் பார்வதி தேவியின் அவதாரம் ஆகும். பார்வதியே அன்னை மாரியம்மனாக பல அவதார ரூபங்களில், கிராமங்களிலும், நகரங்களில் காணப்படுகிறாள். கிராமத்தில் உள்ள ஆலயத்தில் அவளை கிராம தேவதை என்றும், நகர ஆலயங்களில் அம்மன் என்றும் அம்பாள் என்றும் கூறுகிறார்கள்.