Wednesday, March 20, 2013

Village Deities - 8

கிராம தேவதைகள் -8

சேலம் மாவட்டத்தில் ஒரு கிராம தேவதை
ஆலயத்தில் காணப்படும் காளியம்மனின் சிலை

[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ]

கீழ்காத்தி கடா மறவர் காளி


[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

புதுக்கோட்டை அறந்தாங்கி ஜில்லாவில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே கீழ்காத்தி கிராமம். ஒரு காலத்தில் அந்த ஊரில் சின்ன மறவர் மற்றும் பெரிய மறவர் எனும் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். கருப்பருக்கு விழா எடுக்கும் காலங்களில் அவர்கள் கருப்பருக்கு பலி தந்தப் பின் மிச்சமாகும் இறைச்சியை பாதிப் பாதியாகப் பங்கீட்டுக் கொள்வார்கள். ஒரு முறை சின்ன மறவர் தன் சகோதரர் பெரிய மறவரின் குடும்பம் சிறியதுதானே என்ற எண்ணத்தில் அவருக்கு சற்று குறைவாக இறைச்சியை தந்து விட்டு தான் நிறைய இறைச்சியை எடுத்துச் சென்றார். அடுத்த ஆண்டும் அவர் அப்படியே செய்ய பெரிய மறவனின் மனைவி அதைக் கண்டு பொறுக்க முடியாமல் ''நான் இனி உனக்கு சோறு போடா மாட்டேன். போய் கோவிலில் இருந்து அல்லது கிராமத்தாரிடம் இருந்து உணவை வாங்கிக் கொள்'' எனக் கூறி அவரை துரத்தி விட,அதனால் வருந்திய பெரிய மறவர் தூரத்தில் இருந்த காட்டில் சென்று படுத்துக் கொண்டார். தூங்கிக் கொண்டு இருந்த அவரை ஒரு சிறிய பெண் தட்டி எழுப்பி , ''நீ கவலைப்படாதே, உன்னை நான் காப்பாற்றுகிறேன்'' என்றாள். அப்படி கூறிவிட்டு அவள் மறைந்து விட அவர் அது கனவு என நினைத்து தூங்கி விட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அவர் அருகில் ஒரு காளியின் சிலை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பியவரை மனைவி இனிய முகத்துடன் வரவேற்றாள். பெரிய மறவர் அதை ஒரு இடத்தில் வைத்து அதற்கு பூஜை செய்து வரலானார். அந்த சிலை வந்தப் பின் அந்த ஊரில் பல பிரச்சனைகள் தோன்றின. ஆகவே ஊரில் புதிய ஆலயம் வந்ததினால் இது நடக்கிறதோ என சந்தேகப்பட்ட கிராமத்தினர் அதைக் குறித்து ஒரு மந்திரவாதியை கேட்டபோது அவர் அந்த சிலைக்கு பக்கத்தில் அடைக்கலம் காத்த ஐயனார் ஆலயத்தை அமைத்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று கூற அவர்களும் அதை செய்தனர். அதை செய்தப் பின் காளி அந்த ஊரை நல்ல முறையில் பாதுகாத்து வந்தாள். பெரிய மறவரே அந்த சிலையை எடுத்து வந்ததினால் அதை கதா ( பெரிய என்று அர்த்தம்) மறவர் காளி அல்லது காத்தம் பெரியாள் என பெயரிட்டு அழைத்தனர்.
ஆரம்பம் முதலிலேயே காளியின் சிலை மண்ணினால் செய்யப்பட்டு இருந்தது. ஆகவே ஒவ்வொரு வருடமும் கிராமத்தினர் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் ( ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம்வரை) இரண்டு புதிய சிலைகளை செய்து வைத்து பூஜித்தப் பின் பழைய சிலையை அந்த ஆலயத்தின் பின்புறம் வைத்து விடுவார்கள். ஆனால் பல ஆண்டுகளாக அங்கு விழா எதுவும் நடக்கவில்லை.
ஆலயத்தில் உள்ள காளிக்கு முக்கியமாக புடவை சாத்துவார்கள் . அதை எவருக்கும் கொடுப்பது இல்லை, விற்பதும் இல்லை. அவற்றை எடுத்துப் போய் ஆலயத்தின் பின்புறம் அதை போட்டு வைப்பார்கள். ஆலயத்தில் மேல் கூறை இல்லாததினால் புடவைகள் நாளடைவில் எவருக்கும் பயன்படாமல் வீணாகிக் கிடக்கும்.
இன்னொரு பழக்கமும் அங்கு உண்டு. காளியை சுற்றி பிரதர்ஷனம் செய்வது இல்லை. ஆலயத்தில் உண்டியலில் பணம் போடுவதும் இல்லை. பணத்தை காளியின் தொடையில் வைத்து விட்டப் பின் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திரமாக அடுத்த ஆண்டு வரை வைத்து இருப்பார்கள். அப்படி செய்வதின்மூலம் தமது செல்வம் பாதுகாக்கப்படுவதாக நம்புகிறார்கள். அதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் ஆலயத்தில் கொடுத்து விட்டு புதிதாக வைத்த பணத்தைப் எடுத்துக் கொண்டு வருவார்கள்.
காளிக்கு அருகில் கறுப்பர் உள்ளார். அடைக்கலம் காத்த ஐயனார் ஆலயமும் உள்ளது. மேலும் சின்ன கறுப்பர், பெரிய கறுப்பர் மற்றும் பன்னிரண்டு பிற சிறிய தேவதைகளுக்கும் சிலைகள் உள்ளன. வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆலயத்தில் கூட்டம் நிறம்பி வழிகின்றது. ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் ஆலயத்தின் அருகில் வரை செல்ல தனி பேருந்துகள் விடப்படுகின்றன.
--------------
பின் குறிப்பு:
புதுக்கோட்டை ஊருக்குள்ளேயே உள்ள இந்த கிராம தேவதையாக காதகாளி வெயிலும், மழையும் தம்மை ஒன்றும் செய்யாது என்பதை பக்தர்களுக்கு உணர்த்த விரும்பியதினால்தான் திறந்த வெளியிலேயே இருக்குமாறு தன்னை வைக்குமாறு அருள் பாலித்தாள். அதனால்தான் அந்த ஆலயம் மேற்கூரை அற்ற ஆலயமாக அமைந்து உள்ளது.

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இந்த ஆலயத்தில் இங்கு சின்ன கருப்பர், பெரிய கருப்பர், முனீஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், குறத்தி அம்மன், யானை குதிரை போன்றவர்களுக்கு சிலைகள் உள்ளன. குழந்தை வரம் வேண்டிக் கொண்டு ஆலயத்துக்கு   


பாண்டிச்சேரியின் அருகில் ஒரு கிராமத்தில்
ஐயனார் தன் மனைவியுடன் உள்ள சிலை

[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். -சாந்திப்பிரியா ]
வரும் பெண்கள் காளிக்கு எதிரே உள்ள மரத்தில் தங்களது சேலைத் தலைப்பைக் கிழித்துத் தொட்டில் கட்டுகிறார்கள். குழந்தை பிறந்ததும் தமது பிரார்த்தனை நிறைவேறியதை காட்டும் வகையில் மறக்காமல் இங்கு வந்து மரத் தொட்டில் கட்டி விட்டுப் போகிறார்கள். மேலும் இந்த ஸ்தலத்தின் ஆதிக் கடவுளான அடைக்கலம் காத்த ஐயனார், தன் தேவியருடன் அமர்ந்திருக்கும் சன்னதியும் உள்ளது - சாந்திப்பிரியா

No comments:

Post a Comment