Sunday, July 10, 2011

An American Sadhu - Part: 4

 ஒரு அமெரிக்க சாது 

In Tamil  :- சாந்திப்பிரியா 
Part-4

சுகதேவ் தாஸ்

 முடிவுரை-1
ஹரித்வார் கும்பமேளா 1998

கும்ப மேளாவில் உங்களுடைய நண்பர்களை கண்டு பிடிப்பது கடினம். நானும் ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்று இருந்தபோது சுகதேவ் தாஸ் எனும் பாபாவை தேடினேன். அவரை இதற்கு முன்னால் உஜ்ஜயினியில் சந்தித்துப் பேசி உள்ளேன். அவர் தனது பிரும்மச்சர்யாத்தைக் காப்பாற்றிக் கொள்ள எப்போதுமே தனது ஆண் பாகத்தின் மீது கட்டையினால் செய்த கற்பைக் காக்கும் பெல்டை அணிந்து இருப்பார்.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதும் வணக்கத்தை பரிமாறிக் கொண்டோம்.  எங்களுடைய நண்பர்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அதன் பிறகு அவர் மறு பிறப்பை பற்றி என்னிடம் விளக்கிக் கூறிக் கொண்டு இருந்தார். இல்லற இன்பத்தை விரும்பாதவன் அல்லது அதை அனுபவிக்காதவன் பைராகியாக பிறப்பு எடுப்பாராம். இல்லை எனில் பைராகி இல்லாத பிறவியாக பிருந்தாவனத்தில் கிருஷ்ணருடைய நகரில் பிறப்பு எடுப்பாராம். அங்கு இருந்த ஒரு வெளிநாட்டு சிஷ்யர் எங்களுக்கு தேநீர் கொண்டு வந்து தந்தார்.
அப்போது ஒரு விருந்தாளி உள்ளே வந்தார். அவர் வேறு யாரும் அல்ல ...லஷ்மண் தாஸ் . என்னைப் பார்த்ததும் முதலில் திகைத்தாலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசினார். அப்போது  அங்கு இன்னொரு வெளிநாட்டு சிஷ்யை அங்கு நுழைந்தார். அவள் சன்யாசினியாக இருந்தாலும் பிரிட்டிஷ் நாட்டு பெண் என்பதை புரிந்து கொண்டேன். அவளுடைய பெயர் 'நான்சி' என்றாலும் அவளை 'காளி மா' என்றே அழைத்தார்கள். அவள் முதல் நாளன்று தனக்கு லஷ்மண் தாஸ் பெரிய மாயத்தைக் காட்டியதாகக் கூறினாள். அவள் கையில் ஒரு நாணயத்தைக் கொடுத்து கைககளை மூடிக்கொண்டு மந்திரத்தை ஜபித்தால் அது சாம்பலாகும் என அவர் அவளுக்கு செய்து காட்டி உள்ளார். என்னை ஏமாற்றிய அதே வித்தை.
நான் மெல்ல அவளிடம் அதை எப்படி செய்ய முடியும் என்ற விஞ்ஞான உண்மையைப் பற்றிக் கூறினேன். முதலில் அவள் அதை நம்ப மறுத்தாள். ஆனால் நான் அவளுடன் நான் எதற்காக அவளிடம் பொய்யைக் கூற வேண்டும் என சமாதானப்படுத்த இருவரும் சேர்ந்து உண்மை என்ன என்பதை விளக்கி  லஷ்மண் தாஸிடம்  அதைக் குறித்துப் பேசி மடக்கினோம். அவரும் முடிவாக அது தந்திரமே என்பதை ஒப்புக் கொண்டார். அதன் பின் அனைவரும் சிலுமை  புகைத்தோம். லஷ்மண் தாஸின் பற்கள் பழுதடைந்து இருந்தன. அதற்கு இரண்டாயிரம் ரூபாய் செலவாகும் என்றார். 'காளி மா' தருவாள் என எதிர்பார்த்தே அதைக் கூறினார்.  அவை எப்படி பழுதாயின எனக் கேட்டபோது ஒருநாள் சில திருடர்கள் வந்து தம்மை தாக்கி, ஆசிரமத்தை உடைத்து அனைத்தையும் சேதப்படுத்தி விட்டுச் சென்று விட்டதாகவும் அப்போது அது ஏற்பட்டது என்றும் கூறினார்.
ராமப்பிரியா தாஸ் அவருக்கு அதற்கெல்லாம் உதவி செய்யவில்லையா? அவர் இங்கு இல்லையா எனக் கேட்டபோது அவர் அலஹாபாத் கும்பமேளாவிற்குப் பிறகு மூன்று வருடங்களாக எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை,  தன்னிடம் வரவில்லை என்றார்.
'அப்படியென்றால் ராமப்பிரியா குருவை விட்டு விலகி விட்டாரா' என்றேன்?
'தெரியாது...அவர் இப்போது சுதந்திரமாகவே இருக்க வேண்டும்' என்றார்.
அவருடைய கர்மா சரி இல்லை என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

முடிவுரை-2
அலஹாபாத் கும்பமேளா 2001
அலஹாபாத் கும்பமேளாவில் நான் மீண்டும் லஷ்மண் தாஸை சந்தித்தேன். நாங்கள் இருவரும் சிலுமை புகைத்தோம். தனியாகவே அவர் இருந்தார். அவரை சுற்றி சீடர்கள் யாரும் இல்லை.  ராமப்பிரியா தாஸ் இன்னமும் திரும்பி வரவே இல்லை என்றார். அவர் உள்ள இடமும் தெரியவில்லையாம்.
ஆனால் எனக்கு கிடைத்த செய்தியின்படி ராமப்பிரியா  சில வருடங்களாக காலிபோர்னியாவில் தனது  காதலியுடன் வாழ்ந்து கொண்டு இருப்பதாக தெரிந்தது.

No comments:

Post a Comment