Thursday, June 16, 2011

Story of Rice and Harvest Goddess

நாம் உண்ணும் அரிசி தானியம் 
உருவானக் கதை
சாந்திப்பிரியா 

தேவி ஸ்ரீயின் சிலை 
படம் நன்றி:-http://en.wikipedia.org/wiki/Dewi_Sri

இந்தோனேசிய தீபகற்பத்தின் ஒரு சிறிய தீவே ஜாவா. இந்த தீவு நான்கு பாகங்களாக உள்ளது. இந்த தீவின் பாதி பகுதி விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளது. மீதியில் பெரும்பாலும் காடுகளே உள்ளன. உலகிலேயே ஜாவாவில்தான் அரிசி விளைச்சல் மிக அதிகம் . அங்குள்ள விளை நிலங்களில் அரிசி தானியத்தின் கடவுள் எனப்படும் 'தேவி ஸ்ரீ' (Dewi Shree) எனும் தேவதையின் ஆலயங்கள் உண்டு. அங்கு பல வகைப்பட்ட மக்கள் உள்ளனர். அது போல அங்கு நிலவும் புராணக் கதைகளும் மிகவும் அதிகம். நாம் உண்ணும் அரிசி எப்படி வந்தது எனக் கூறும் ஜாவாவின் ஒரு புராணக் கதை மிகவும் சுவையானது. நாம் உண்ணும் அரிசி தானியம் எப்படி விளைந்தது என்பதையும் அதை உருவாக்கிய தேவதையைப் பற்றியும் கூறப்படும் ஒரு கதை இது. படித்து மகிழுங்கள்.
 
அரிசி தானியம் உருவாகக்  காரணமான தேவதையின் ஜாவா நாட்டுக் கதை

 தேவி ஸ்ரீயின் அற்புதமான சில சிலைகள் 
படம் நன்றி: http://antiquedewistone.blogspot.com/ 
ஒரு முறை தேவலோகத்தின் அதிபதியாக இருந்த பத்ர குரு என்பவர் புதியதாக ஒரு மாளிகையை தேவலோகத்தில் அமைக்க நினைத்தார். ஆகவே அவர் அனைத்து தேவர்களையும் கடவுட்களையும் அழைத்து அந்த மாளிகைக் கட்ட அவரவரால் முடிந்த உதவியை செய்யுமாறு ஆணையிட்டார்
அனைவரும் அவரவரால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்யத் துவங்கினார்கள். ஆனால் 'டிராகன்' (Dragon) எனப்படும் பறக்கும் நாகமான 'அந்தா' (Antha)  என்ற பாம்பினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம் அதற்கு கால்களும் இல்லை. கைகளும் இல்லை. அதுதான் ஒரு நாகம் ஆயிற்றே. தன்னால் ஒன்றுமே செய்ய இயலாதை நிலையைக்  குறித்து அந்த நாகம் தனது நண்பர்களிடம் ஆலோசனைக் கேட்டது. ஆனால் அதற்கு மற்றவர்கள் எப்படி உதவ முடியும். ஆகவே அந்த நாகம் ஒரு காட்டிற்குச் சென்று அமர்ந்து கொண்டு தனது நிலையை எண்ணி அழத் துவங்கியது. அது அழத் துவங்கியதும் முதலில் அதன் கண்களில் இருந்து பூமியில் சிந்திய கண்ணீர் துளி மூன்று முட்டைகளாக மாறின. அதைப் பார்த்து  'அந்தா' ஆச்சர்யம் அடைந்தது.  தன்னுடைய  கண்ணீரில் எப்படி முட்டை வந்தது.  அப்போது வானத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் கூறியது, 'அதை எடுத்துப் போய் பத்ர குருவிடம் உனது பங்காகக் கொடுத்து விடு'.
 விவசாய நிலங்களில் தேவி ஸ்ரீயின் சிறிய ஆலயங்கள் 
படம் நன்றி :-http://en.wikipedia.org/wiki/Dewi_Sri
அதைக் கேட்டு மகிழ்ந்த நாகமான 'அந்தா'வும் அந்த மூன்று அதிசய முட்டைகளையும் தனது வாயில் கவ்விக் கொண்டு அரண்மனையை நோக்கி செல்லத் துவங்கியது. அப்படி போய்க் கொண்டு இருந்தபோது அதன் வாயில் இருந்து இரண்டு முட்டைகள் கீழே விழுந்து உடைந்து விட்டன. ஆகவே கவலைக் கொண்ட 'அந்தா' மிகவும் கஷ்டப்பட்டு மூன்றாவது முட்டையை எடுத்துக் கொண்டு போய் மன்னனிடம் தந்து அந்த முட்டை வந்தக் கதையைக் கூறியது. அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த மன்னனும் அந்த முட்டையை பத்திரமாகப் பாதுகாத்து அதில் இருந்து குஞ்சு வெளி வந்ததும் தன்னிடம்  வந்து என்ன வந்தது என்பதைக் கூறுமாறு அதை அனுப்பினார். 
சில மாதங்களுக்குப் பிறகு அந்த முட்டை உடைந்து அதில் இருந்து மிக அழகிய பெண் ஒருவள் வெளிவர 'தேவி ஸ்ரீ' என அவளுக்குப் பெயரிட்டு அவளை மிகவும் பாதுகாப்பாக அந்த மன்னன் வளர்த்தார். ஆனால் நாளாக நாளாக அவள் பெரியவள் ஆனதும் அவளை தான்தான் தந்தைப் போல வளர்த்தவள் என்ற எண்ணத்தை  மறந்த மன்னன் அவள் அழகில் மயங்கி  அவள் மீது காதல் கொண்டான்.  தன்னுடையப் பெண் என்றும் பாராமல் அவளை கெடுக்க  முயன்றான். அதனால் தகாத விளைவுகள் ஏற்பட்டுவிடுமே என பயந்து போன மற்ற கடவுட்கள் ஒன்று சேர்ந்து  அத்தகைய தகாத  சம்பவம் தேவலோகத்தில் நடக்க கூடாது என எண்ணி அந்தப் பெண்ணுக்கு விஷம் வைத்து அவளைக் கொன்று விட்டார்கள். இறந்து போன அவளை பூமியில் சென்று அங்கு புதைத்து விட்டார்கள். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பூமியில் புதைக்கப்பட்டவளின் கண்களில் இருந்து முதலில் சில செடிகள் வெளி வந்தன. அது மட்டும் இல்லாமல்  மெல்ல அவளது உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் சிறு செடிகள் வெளி வந்தன. அங்கு பெரும் அளவில் அந்த பயிர் வளரத் துவங்கியது.  அதில் இருந்து எழுந்த தானியமே  பின்னர் நாம் உண்ணும் அரிசி தானியம் என ஆயிற்று. இப்படியாக நாம் உண்ணும் அரிசி தானியத்தைப்  படைத்தவள் 'தேவி ஸ்ரீ' எனும் தேவதையே. அரிசி தானியம் பிறந்த இந்த  புராணக் கதை ஜாவாவில் உள்ளது.  அவளே நீர்வளம் மற்றும் நிலா வளத்தின்  தேவதையாக உள்ளாள்.  அவளுக்கு நிலங்களில் ஆலயங்களும் எழுந்தது.


உணவு  தானியம் உருவாகக்  காரணமான தேவதையின் கிரேக்க  நாட்டுக் கதை 
அரிசி தானியத்தின் தேவதை 'தேவி ஸ்ரீ' என்பவளைப் பற்றிய  புராணக் கதை ஜாவாவில் இருக்க  கிரேக்க நாட்டில் கூட விளை நிலத்தின் அதிபதியான தேவதைப் பற்றிய புராணக் கதை ஒன்று உள்ளது அது என்ன? படியுங்கள்.
டிமீட்டர் என்பவள் விளை நிலம் மற்றும் தானிய நிலங்களைக் காக்கும்  தேவி 
கிரேக்க நாட்டில் 'டிமீட்டர்' (Demeter) என்ற தேவதை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. அவளை மிகவும் அன்புடன் வளர்த்து பாதுகாத்து வந்தாள் டிமீட்டர். வயதுக்கு வந்தப் பெண் அங்கும் இங்கும் ஓடியாடித் திரிந்தாள். அப்போது இளமை எழிலுடன் இருந்த 'பெர்சிபோன்' (Percephone)  என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணை பாதாளத்தில் இருந்த மன்னன் பார்த்தான். அவள் அழகிலும் துடிப்பிலும் மயங்கியவன்  அவள் மீது காதல் கொண்டான். ஒரு நாள் அவள் ஏமார்ந்து இருந்த நேரத்தில் அவளை பாதாளத்துக்குள் இழுத்துக் கொண்டு போய் அவளை மணந்து கொண்டான். அவளை பாதாளத்துக்குள் இழுத்துக் கொண்டு போனபோது அவள் கதறினாள் . அவள் கதறலைக் கேட்ட அவள் தாயாரான 'டிமீட்டர்' அவளை காப்பாட்ற  ஓடினபோது அவள் மறைந்து விட்டாள். ஆகவே தன்னுடைய  பெண்ணை தேடிக் கொண்டு கையில் ஒரு விளக்குடன் இரவு பகல் எனப் பார்க்காமல் 'டிமீட்டர்' அனைத்து உலகிலும் செல்லத் துவங்கினாள். 
மகளைத் தேடி அலைந்த டிமீட்டர் 
படம் நன்றி:- http://www.paleothea.com/SortaSingles/Demeter.html
சுமார் ஒன்பது நாட்களாக பசி, தூக்கம், துணியை மாற்றிக் கொள்ளுதல்  என அனைத்தையும் துறந்தவள் தனது மகளைத் தேடி அலைந்தாள். அப்போது அவள் அலைந்து திரிந்து கொண்டு இருந்ததைக் கண்ட கடல் தேவன் அவளை வஞ்சகமாக அடைந்தான். அவனிடம் இருந்து தப்பிக்க அவள் குதிரையின் உருவம் எடுக்க கடல் தேவனும் ஆண் குதிரையின் வடிவம் எடுத்து அவளை பின் தொடரலானான். அதில் வெற்றியும் பெற்றான்.  அது முதல் அவளை தன் வசம் வைத்துக் கொண்டாலும் 'டிமீட்டர்' தனது மகளை தேடுவதை நிறுத்தவில்லை. அந்த நேரங்களில் அவள் பல இடங்களிலும் பல அற்புதங்களை செய்து கொண்டு போனாள். பேச முடியாமல் முடங்கிக் கிடந்த குழந்தையை தொட்டு அவளை நல்ல நிலைக்கு ஆளாக்கினார். தன்னை கேலி செய்தவனை பல்லியாக மாற்றினாள். அவளை அனைவரும் தெய்வப் பிறவியாகவே பார்க்கலாயினர்.
இப்படியாக அலைந்து கொண்டு இருந்தவளை ஒரு நாள் வழியில் சந்தித்த ஒரு தேவதை வானத்திலே உள்ள சூரிய பகவான் யார் எங்கு போனார்கள் என்பதை அறிந்து இருக்க முடியும் என்பதினால் சூரிய பகவானின் உதவியை நாடி அவளுடைய மகள் எங்கு சென்று  இருக்க முடியும்  என்பதை கண்டு பிடிக்குமாறு  அவளை  அறிவுறுத்தினாள். அதைக் கேட்டவள் சிறிதும் தாமதிக்காமல் வானத்தில் பறந்து சென்று சூரிய பகவானிடம் தன்னுடைய மகளைப் பற்றிக் கேட்க அவரும்  அவளிடம் நடந்த உண்மைகளைக் கூறி அவளுடைய மகள் பாதாளத்துக்குள் இருக்கின்றாள் என்ற சேதியைக் கூறினார். அதற்கு  மேலும் அவளுடைய கணவனே அந்த பாதாள மன்னனுக்கு உடந்தையாக இருந்தார் என்றும் கூறினார். கோபமுற்ற 'டிமிட்டர்'  தன்னுடைய மகள் தனக்கு கிடைக்காதவரை இந்த பூமியில் விளையும் அனைத்து உணவுப் பொருட்களும் அழிய வேண்டும் என சாபமிட பயிர்கள் வாடி வதங்கின.  அவள் பூமியின் தேவதையாகவும் இருந்ததினால் அனைத்துப் பயிர்களையும் வாட விட்டாள். நாட்டில் பஞ்சம் ஏற்படத் துவங்கியது.  அதனால் நாடு திகிலடைய அவளுடைய கணவன் ஓடோடி வந்து அவளிடம் தனது முட்டாள்தனத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.  பயிர்கள் விளைய உதவுமாறு கேட்டான். ஆனால் அவளோ முதலில் தனது மகளை கண்டவுடன்தான்  அவற்றை சரி செய்வேன் என பிடிவாதமாக மறுத்து விட்டதினால் உடனே தன்னுடைய மகளை மேல் உலகிற்கு அனுப்பி வைக்குமாறு பாதாள மன்னனுக்கு செய்தி அனுப்பினான். 
ஆனால் பாதாளத்துக்குள் சென்று திருமணம் செய்து கொண்டு பாதாளவாசியாக 'பெர்சிபோன்' மாறி விட்டதினால் அவளால் பூமியில் சென்று வாழ முடியாது.  பூமிக்குச் சென்றால் சில மாதங்களே வாழ முடியும். அதுவும் வேறு ரூபத்தில்தான் இருக்க முடியும். அதன் பின் அவள் பூமியில் தானாக இழுக்கப்பட்டு விடுவாள்.  அப்படி ஒரு ஏற்பாட்டை அவளுடைய கணவன் செய்து விட்டான்.  அவளுடைய கணவன் அவளுக்கு மாதுளம்பழ விதைகளை தந்து அதை சாப்பிடுமாறு கூறினான்.  அதை உண்டால் சில காலம் அவளால் மேல் உலகில்  இருக்க முடியும் என்று கூறி அவளை அனுப்பினான்.அவளும் வேறு வழி இன்றி  ஒரு செடியின் உருவத்தில் பூமிக்கு வந்து தனது தாயாரை சந்தித்தாள். 'டிமேடேருக்கு மகளை சந்தித்தது ஆறுதலாக இருந்தது. ஆனால் அவளால் அவளுடைய சுய ரூபத்தில் இருக்க முடியாது , நடந்து விட்டவை மாற்ற முடியாதவை என்பதை உணர்ந்த 'டிமீட்டர்' வேறு வழி இன்றி  வருடத்துக்கு நான்கு மாதமாகவாவது தன்னுடைய மகள் தன்னுடன் இருக்க வேண்டும்  என்பதினால் அவளை உண்ணும் தானியமாக வந்து பூமிக்கு மேல் தங்கி இருக்குமாறு கூறினாள். 'டிமெடேரின்' சாபத்தினால் அழிந்துவிட்ட மற்ற உணவு தானியங்களுக்கு  பதிலாக 'பெர்சிபோன்' உணவு தானியமாக தனது பாதாள மக்களுடன் பூமிக்கு வந்து தங்கிச் சென்றாள். போகும் முன்  அந்த தானிய உருவை இழந்து விட்டுச்   செல்ல வேண்டி இருந்தது.  இப்படியாக உருவானதே  அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் . அவளுடன் வரும் அவள் பரிவாரங்கள் பூமியில் தங்கி தமது உடல்களில் இருந்து பூவை வெளிப்படுத்தி அதை தானியமாக்கி  பூமியில் விட்டுச் செல்ல வேண்டி வந்தது. அந்த பூவும் காய்களுமே  அரிசி நெல் மற்றும் கோதுமை போன்ற பல உணவு  தானியம் ஆயிற்று.
இப்படியாக தான் சாபமிட்டு அழித்த உணவுச் செடிகளுக்குப் பதிலாக அரிசி  மற்றும் கோதுமை தானியத்தை  பூமியில் தோன்றக் காரணம் ஆனவளே  'டிமீட்டர்'. அதனால் பூமியில் உள்ள அனைவரும் 'டிமேடேரை'  உணவு தானியம் தரும் தாயாக போற்றி வணங்கினார்கள். அவளும் அந்த பயிர்களை எப்படி காப்பது, எப்படி வளர்ப்பது, எப்படி அவற்றின் இனப் பெருக்கத்தை செய்வது போன்ற அனைத்தையும் பூமியில் இருந்தவர்களுக்குக் கற்றுத் தந்தாள். அந்த பயிர்களைக் காத்து வந்தாள். இப்படியாகத்தான் 'டிமிட்டர்' நிலவளத்தைக்  காக்கும் தேவியாக மாறினாள்.

2 comments:

 1. Indian Vedic contribution is a reservoir of Vibrant Information and
  Harmonious Creativity. May the womb of nature embrace all with
  tranquil blessings from this day forward. Let this attract one's
  attention affecting them positively. It is a Sanctuary of the Self a
  Creative Venue which serves as an Enduring Expression of Lightness,
  where a peaceful Atmosphere with Sunlight Flows and serene atmosphere
  prevail.

  In the storm of life we struggle through myriads of stimuli of
  pressure, stress, and multi problems that seek for a solution and
  answer. We are so suppressed by the routine of this every life style
  that most of us seem helpless. However, if we look closely to ancient
  techniques we shall discover the magnificent way to understand and
  realize the ones around us and mostly ourselves. If only we could stop
  for a moment and allow this to happen. May all beings be happy (Loka
  Samastha Sukhino Bhavanthu)

  ReplyDelete