Tuesday, June 14, 2011

Chausath Yogini Temple – Complete Inventory of Goddesses and Gods

சோன்சட்  யோகினி ஆலயம் 
-- சிலைகளைப் பற்றிய விவரங்களும்   --

சாந்திப்பிரியா  

கீழே  தரப்பட்டு உள்ள கட்டுரை  சோன்சட் யோகினி ஆலயம் பற்றிய இரண்டாவது கட்டுரை. அந்த ஆலயம் குறித்த விவரங்களை முதல் பாகத்தில் கூறி விட்டதினால் அதையே  மீண்டும் இங்கே கூற விரும்பவில்லை. 
இந்த பாகத்தில் சோன்சட் ஆலயத்தில் உள்ள சிலைகளின் விவரங்கள்  கொடுக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்துமே 1873-75 ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை எழுதி வைத்துள்ள குறிப்புக்கள் ஆகும்.  ஆனால் சில  சிலைகளின் இடங்கள் மாறி உள்ளதினால் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்களுடன்  இங்கு கூறப்பட்டு உள்ள விவரங்கள் ஒத்துப் போக வாய்ப்பு இல்லை.
இது குறித்த ஆராய்ச்சித் தகவல்கள் உங்களுக்குக் கிடைத்தால் அதை  kentdavis@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் கட்டுரையை சரி செய்ய அது உதவும். இந்த கட்டுரையை உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி தந்துள்ள திரு கென்ட் டேவிஸ்சிற்கு  நன்றி. 
இரண்டாவதாக  இங்கு வெளியாகி உள்ள அனைத்து யோகினிகளின் படங்களையும் திவ்யா தேஷ்வால்  - http://meinthemoment.wordpress.com/2011/03/23/the-81-yoginis-of-bhedhaghat என்ற பெண்மணி எடுத்துள்ளார்.  அவற்றை பயன்படுத்திக் கொள்ள எனக்கு அனுமதி தந்துள்ளதற்கு அவருக்கு நன்றி கூறுகிறேன்.   

This is the second part of the article on  India’s Chaunsat Yogini Temple and the Women of Angkor Wat.   Since the details of temple have been covered in the main article the same content is not reproduced  here again.  
This part deals with the Chausath Yogini Temple – Complete Inventory of Goddesses and Gods inventory which is  shown below and is based on the Archaeological Survey of India reports from 1873-75. Unfortunately, modern photos of the site show variations to the names and numbering system originally cited.  
Please contact Mr. Kent Davis (kentdavis@gmail.com) if you can help him clarify these discrepancies. My sincere thanks to Mr. Kent for the permission given to use his article.
Secondly all the photographs of the Yogini temple at Bhedahghat, Japalpur has been  reproduced from the site of  Divya Deswal - i.e   http://meinthemoment.wordpress.com/2011/03/23/the-81-yoginis-of-bhedhaghat  . All the photographs have been taken by her. I thank her for the kind permission given to me to use the material for my article.Translated Article   /  மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை 

Original in English by :  KENT DAVIS          Translated into Tamil : Santhipriya

           Photographs by Divya Deswal
             Click here to go to her site


 
பைரகாட் யோகினி ஆலயம், ஜபல்பூர்  1875
ஆலயத்தின் உள்  குறுக்களவு :  116 அடி  2 அங்குலம் , 
ஆலயத்தின் வெளி   குறுக்களவு 130 அடி  9 அங்குலம் . 

சோன்சட் யோகினி ஆலயத்தில் உள்ள சிலைகளின் விவரம்:-
1. ஸ்ரீ  கணேஷா  — உட்கார்ந்த நிலையில் உள்ள கடவுள்
2. ஸ்ரீ  சாத்ரா சம்வாரா  — சம்பார் எனும் இடத்தை சேர்ந்த மானின் உருவம் உட்கார்ந்த நிலையில் உள்ள யோகினியின் பீடத்தில்  காணப்படுகின்றது. ஆனால் சாத்ரா என்ற பெயரின் காரணம் தெரியவில்லை.
3. ஸ்ரீ  அஜிதா  — உட்கார்ந்த நிலையில் உள்ள பெண் கடவுள் . அது அஜிதா-சிவனைக் குறிப்பதாம்.  அவளுடைய வாகனம்  மிகப் பெரிய சிங்கம்.
4. ஸ்ரீ  சண்டிகா   — எலும்புகளையும் கீழே விழுந்து கிடக்கும் மனிதனையும் காட்டியபடி  உக்ரக உருவில் உள்ள  யோகினி  என்பவள்  துர்கா மகேஸ்வரி.  நின்றிருக்கும் நிலையில் உள்ள இவள் துர்கையின் எட்டு சக்திகளில் ஒருவளாம்.
5. ஸ்ரீ  மானந்தா  — தாமரைப் பூவின் மீது  உட்கார்ந்தபடி உள்ள  இந்த யோகினி  ஆனந்த நிலை அல்லது மகிழ்ச்சியைக் குறிப்பவள்.
6. ஸ்ரீ  கமாடி  — பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த காமதேனுவை  குறிப்பவளே  அமர்ந்த நிலையில் உள்ள இந்த யோகினி.  கமாடி எனும் அவள் நமக்குத் தேவையான அனைத்தையும் தருபவள். பீடத்தில் இரண்டு ஆண்கள் அவளை வணங்கியபடி நிற்க யோனி முத்திரையைக் கைகளால் காட்டியபடி நிற்கும்  அவள் நமது காம இச்சைகளை பூர்த்தி செய்து  தருபவள்.
7. ஸ்ரீ  ப்ரஹ்மணி — இவள் பீடத்தில் காணப்படும் அன்னத்தின்  உருவம் அவளை சக்தி எனும் பெண் தெய்வம் அல்லது பிருமாவின் மனைவி என எண்ண வைக்கின்றது .
8. ஸ்ரீ  மகேஸ்வரி  — இந்த தேவியின் பீடத்தில் காணப்படும் நந்தி எனும் மாடு  இவளை சிவனின் மனைவியான சக்தி என்பதாகக்  காட்டுகிறது.
9. ஸ்ரீ  தங்கரி  — போர் வாள் அல்லது கோடரி எனப்படும்  ஆயுதங்களை தன்னிடம் உள்ள  பத்து கைகளில் இரண்டில் ஏந்தி நிற்கும் யோகினி. அவளுடைய வாகனமும்  பெரிய சிங்கமே.
10. ஸ்ரீ  ஜயனி  — வெற்றி தேவதை எனப்படும் இவள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். அவளுடைய வாகனம் பூனை போன்ற பிராணி .
11. ஸ்ரீ  பத்மா -ஹன்ஸா   —  உட்கார்ந்த நிலையில் உள்ள இந்தக் யோகினி  யார் எனத் தெரியவில்லை. ஆனால் அவள் மலர்களை குறிப்பவள்.
12. ஸ்ரீ  ரணஜிரா  —  அமர்ந்த நிலையில் உள்ள இவள் பக்கத்தில்  ஒரு யானையுடன் காட்சி தரும்  இவள் யுத்த ஒரு தேவதை .
13. பெயர் தெரியவில்லை  — நாகினிகளுடன் (பெண் நாகங்கள்) அமர்ந்து கொண்டுள்ளவாறு  இந்த தேவதை காட்சி தருகிறாள். 
14. ஸ்ரீ  ஹன்சினி அல்லது  ஹன்சினிரா —  ஒரு வாத்து எனும் பறவையுடன் அமர்ந்து கொண்டிருக்கும்  நிலையில் உள்ள இவளுடைய பெயர் தெரியவில்லை.
15.பெயர் பொறிக்கப்படவில்லை  — 16 கைகளும்  3-கண்களையும் உடைய சிவன்  (ஆண் தெய்வம் ).
16. ஸ்ரீ  ஈஸ்வரி   —  அமர்ந்து கொண்டு உள்ள இந்த யோகினி லஷ்மி அல்லது துர்காவை குறிக்கும் சக்தி தேவதை.
17. ஸ்ரீ  தானி  — அழிக்க  முடியாத பெண் தெய்வம்.  ஸ்தானூ  அதாவது ஸ்திரம் என்பது  அழிக்க முடியாத சக்தியான சிவனைக் குறிப்பது.  ஸ்தா என்பதில் இருந்து அந்த வார்த்தை வந்ததினால் அவளை மலை முகட்டிற்கு ஒப்பானவள் என்கிறார்கள்.
18. ஸ்ரீ  இந்த்ராஜலி  —  உட்கார்ந்த நிலையில் உள்ள அவள் சூது வாது நிறைந்தவள். பீடத்தில்  காணப்படும் யானை சின்னம் அவள்  சூது வாது நிறைந்தவரான  தேவலோக இந்திரனை சேர்ந்தவளாக இருப்பாள் என எண்ண வைக்கின்றது .
19. உடைந்த நிலையில் உள்ளது. —  உட்கார்ந்த நிலையில் உள்ள இந்த யோகினி தன்னுடன் மாடு ஒன்றையும், பல எலும்புகளையும் வைத்தபடி காட்சி தருகிறாள்.
20. சிலை காணப்படவில்லை.
21. ஸ்ரீ  தாகினி  — இந்த தேவி யார் என்பது தெரியவில்லை. ஆனால் அவள் பீடத்தில் ஒட்டகம் காணப்படுகின்றது.  ஆகவே அவளை ஆராய்ச்சியாளர்கள் ஒட்டகத்தை வாகனமாகக் கொண்ட உஷ்ட்ரகினி தேவி என்கிறார்கள்.
22. ஸ்ரீ  தனேன்த்ரி   —இதன் அர்த்தம் ஓசை. பற்களை நறநறவென கடித்து  பயமுறுத்தும் ஓசையை  எழுப்புபவள். அமர்ந்த நிலையில் காணப்படும் இவள் பீடத்தில் தரை மீது சாஷ்டாங்கமாக படுத்து வணங்கும் ஒரு மனிதரின்  உருவம்  உள்ளது.   
23. சிலை காணப்படவில்லை.
24. ஸ்ரீ  உட்டாலா   - துரிதமாக செயல்படும்  யோகினி என்பதை அவளுடைய  சின்னமான மான்  எடுத்துக் காட்டுகின்றது.  அவள் அமைந்த நிலையில் காட்சி தருகிறாள். 
25. ஸ்ரீ  லம்பதா  — இவள் பீடத்தில்  தரை மீது சாஷ்டாங்கமாக படுத்து ஒருவர் வணங்கும் காட்சியில் உருவம் உள்ளது.  இவள் அமர்ந்துள்ள நிலையில் காட்சி தருகிறாள். அவள்  நடத்தைக் கெட்ட பெண்மணி போன்றவளாம். 
26. ஸ்ரீ  உஹா  — இந்த தேவி சரஸ்வதி நதியைக் குறிப்பவளாம்.  எண்கள்  29 மற்றும் 68 இல் காணப்படும் யோகினிகள் கங்கை மற்றும் யமுனையைக் குறிப்பவர்களாம். உஹா  என்றால்  விவேகம் என்பது. அந்த பெயருக்கு ஏற்றார்போல பேசும் சக்தி மற்றும் பேச்சுத் திறமையைத் தரும் சரஸ்வதியே இவள்  என்பதை  அவள் வீற்று உள்ள பீடத்தில் காணப்படும் மயில் வாகனம் காட்டுகின்றது. சரஸ்வதி நதியின் வாகனம் மயிலாம்.    
27. ஸ்ரீ  *த்சமட  — இந்த யோகினியின் பீடத்தில் பன்றியின் உருவம்  காணப்படுகின்றது. அவள் பெயரில் உள்ள *முதல் எழுத்து என்ன எனத் தெரியவில்லை. யோகினி அமர்ந்த நிலையில் உள்ளாள்.
28. ஸ்ரீ  காந்தாரி  — குதிரை  அல்லது  கழுதையை வாகனமாகக் கொண்டும்  இறக்கைகளைக் கொண்டும் உள்ள  இந்த யோகினியின் பெயர் குதிரை என்று அர்த்தம் தரும் கந்தர்வா என்ற எழுத்தில் இருந்து வந்திருக்கலாம்.  மேலும் அவள் விரைந்து செயல்படுபவள் என்பதை அவளுக்கு உள்ள இறக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
29. ஸ்ரீ  ஜானவி  — இது கங்கை நதியின் பிரசித்தி பெற்றப் பெயர். அவளது வாகனம் முதலை என்பதினால் அவள் கங்கை தேவியாகவே இருக்க வேண்டும்.
30. ஸ்ரீ  தாகினி  —அமர்ந்த  நிலையில் உள்ள இந்த யோகினி ஒரு பெண் அரக்கியாக இருக்க வேண்டும் . அவளது சின்னம் ஒரு மனிதன் மற்றும் எலும்புக் கூடு.
31. ஸ்ரீ  பந்தனி  — பந்தன் என்றால் பிணைத்தல் , இணைத்தல் என்று அர்த்தம் . மேலும் காயப்படுத்துதல், உயிரை அழிப்பது போன்ற குணங்களைக் கொண்டவள் இவள் என்பதினால் அமர்ந்த நிலையில் காணப்படும் இவளை  பந்தினி என்கிறார்கள். அவள் பீடத்தில்  காணப்படும் மனிதர் சிறை பிடிக்கப்பட்ட கைதியாம்.
32. ஸ்ரீ  தர்ப்பஹரி  — தர்ப்பா என்றா ராக்ஷஸா அல்லது அசுரன் என்று அர்த்தம்.  அவள் பீடத்தில் சிங்கத்தின் உருவம் உள்ளது. அவளது முகமும் சிங்க முகம் ஆகும். 
33. ஸ்ரீ  வைஷ்ணவி  -- விஷ்ணுவின் மனைவியே இவள். அவளது பீடத்தில் கருடனின் உருவம் உள்ளது. 
34. ஸ்ரீ *தங்கினி  — உட்கார்ந்து கொண்டு  இருக்கும்  யோகினி  ஒரு கருடனுடன் காட்சி தருகிறாள். அவள் பெயரின்  *முதல் எழுத்து தெரியவில்லை.
35. ஸ்ரீ  ரிக்க்ஷினி    — இந்த யோகினியின் பீடத்தில் முதலையின் உருவம் உள்ளது. முதல் எழுத்து என்ன என சரியாகத் தெரியவில்லை. முதலையின் சின்னம் நதியைக் காட்டுகின்ற அமைப்பில் உள்ளது. ஆகவே அவள் ரிக்ஷா மலையில் இருந்து வெளி வரும் ரிக்க்ஷினி  எனப்படும் நர்மதையாக இருக்கலாம்.  முதலை மீது நிற்கும் பெண்மணியை நர்மதா மாய் அல்லது நர்மதை தாய் என்கிறார்கள்.
36. ஸ்ரீ  சாகினி — வில்சன் என்பவர் இந்த பெண் யோகினியை  குறிப்பிட்டு 'அவள்  நல்ல குணம் உள்ளவள் அல்ல என்றாலும் சிவன் மற்றும் துர்க்கை என்ற இருவருக்கும் சேவகம் செய்து வந்தவள்' என்று கூறுகிறார்.  மேலும் சுடுகாடுகளைப் பற்றி எழுதப்பட்டு உள்ள  குறிப்புக்களில் மன்னன்  விக்ரம் அந்த யோகினி இறந்து போனவர்களில் உடல்களை தின்று கொண்டு இருந்ததைப் பார்த்துள்ளாதான செய்தியைக் கூறுகின்றது.  அந்த யோகினியின் பீடத்தில் காணப்படும் கழுகின் உருவம் அந்த செய்திக்கு வலு சேர்கின்றது. 
37. ஸ்ரீ  கண்டாளி    — இந்த யோகினியின் பீடத்தில் ஒரு மணி அதாவது கண்டா எனப்படும் ஆலய மணி போன்ற உருவம் காணப்படுகின்றது.
38. ஸ்ரீ  தத்டாரி  — இந்த பெயர் 'டிரம்பட்' (Trumpet) எனப்படும் மூக்குள்ள பாத்திரம் போன்ற இசை வாத்தியத்தின்  பெயரை குறிக்கின்றது.  ஒரு யானையின்  தலை மீது  அமர்ந்து உள்ள சிலையின் பீடத்திலும் யானையின் உருவம் காணப்படுகின்றது. தத்டா என்பது  அந்த வாத்தியத்தில் வெளிப்படும் ஒரு ஓசை  என்று நினைக்க வேண்டி உள்ளது.
39. பெயர் காணவில்லை  — நடனமாடும் யோகினியின் சிலை 
40. ஸ்ரீ  கங்கினி  — முதல் எழுத்து புரியவில்லை. அந்த யோகினியின் சின்னம் ஒரு மாடு
41. ஸ்ரீ  பீஷாணி    — பயங்கர குணமுடைய  யோகினி.  பிஷானா என்பது சிவனைக் குறிப்பது.  தலை விரித்த பயங்கர கோலத்தில் காட்சி தரும் அவள் அமர்ந்து கொண்டு  உள்ளாள்.
42. ஸ்ரீ  சடனு  சாம்பரா  — சம்பாரா என்பது ஒரு  காட்டு மானின் பெயர். அமர்ந்த நிலையில் காட்சி தரும் அவள் பீடத்தில்  காட்டு மானின் உருவம்  உள்ளது.
43. ஸ்ரீ  கஹனி  — இந்த யோகினியின் பீடத்தில் செம்மறிக் கடாவின் உருவம் உள்ளது.  அவள் பெயரின் முதல் எழுத்து சந்தேகத்திற்கு உரியது.  அவள் அழிக்கும் குணம் கொண்டவள்.
44. பெயர் காணவில்லை — காளியைப் போன்று நடனமாடும் நிலையில் உள்ள யோகினி.
45. ஸ்ரீ  துடுரி  இந்தப் பெயர் வந்ததின் காரணம் தெரியவில்லை. 'து'  என்றால்  தீயது அல்லது துன்பத்தை தருவது என்று அர்த்தமாம் .  ஆகவே இந்த யோகினி துன்பத்தை தருபவளாகவே இருக்க வேண்டும்.  ஆனால் இவளது சின்னமாக சேணம் பூட்டப்பட்ட (முகத்தின் இருபுறமும் கண்களை நேராக மட்டுமே  பார்க்க முடிந்தவாறு போடப்பட்ட முகமூடி)  குதிரை காணப்படுவது  நம்மை குழப்புகின்றது. 
46. ஸ்ரீ  வராஹி    — வராஹா அவதாரம் எடுத்த விஷ்ணுவின்  துணைவி. அமர்ந்த நிலையில் காணப்படும் அவளது பீடத்தில் காட்டுப் பன்றியின்  உருவம் காணப்படுகின்றது.
47. ஸ்ரீ  நளினி —நல் என்றால் பிணை என்று அர்த்தம்.  அவளது பீடத்தில் ஒரு மாடு மற்றும் பசுவின் உருவம் உள்ளது.  உட்கார்ந்துள்ள  அந்த யோகினியின் தலை பசு மாட்டின் உருவமாக  உள்ளது.
48. தென் கிழக்கு வாயில்
49. சிலை காணப்படவில்லை.
50. ஸ்ரீ  நந்தினி  -- உட்கார்ந்து உள்ள  யோகினி பார்வதி என்பதற்கு அடையாளமாக அவளது பீடத்தில் நந்தி மாட்டின் உருவம் காணப்படுகின்றது.
51. ஸ்ரீ  இந்ராணி  —  அமர்ந்துள்ள நிலையில் உள்ள இந்த யோகினி தேவலோக மன்னனான இந்திரனின் துணைவியாகவே இருக்க வேண்டும்.
52. ஸ்ரீ  எருரி அல்லது  இஜாரி   —  இந்த யோகினியின் முகம் பசு மாட்டின் முகம். அவள் பீடத்தில் பசுவின் உருவம் காணப்படுகின்றது.
53. ஸ்ரீ  ஷண்டிமி  — ஷண்டா என்றால் காளை மாடு.  ஆனால் உடைந்த நிலையில் உள்ள இந்த சிலையின் பீடத்திலோ ஒரு கழுதையின்  உருவமே காணப்படுகின்றது.
54. ஸ்ரீ  ஐங்கினி — இவளது  பீடத்தில் யானையின் தலையைக் கொண்ட ஒருவனின் உருவம் இருக்க அந்த யோகினி யானைத் தலையுடன் காட்சி தருகிறாள்.  இங்கா என்றால்  அசைவது அல்லது அங்கும் இங்கும் போவது என்று பொருள்.
55. பெயர் காணப்படவில்லை — உட்கார்ந்த நிலையில் உள்ள இந்த யோகினிஒரு காட்டுப் பன்றியின்  தலையுடன் காட்சி தருகிறாள் . அவள் பீடத்திலும் பன்றியின் உருவம் உள்ளது. 
56. ஸ்ரீ  டேரண்டா அல்லது  டேசண்டா  — இவளுடைய  பீடத்தில்  மகிஷாசுரனின் உருவம் உள்ளதினால் இருபது கைகளிலும் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு  அமர்ந்த நிலையில் காணப்படும் இவள் மகிஷாசுரமர்தினி எனும் துர்கையாகவே இருக்க வேண்டும்.
57. ஸ்ரீ  பராவி  — இந்தப் பெயர் பார்வதியைக் குறிப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. பத்து கைகளைக் கொண்டு அமர்ந்தபடி காட்சி தரும் இவள் துர்கையின் அவதாரமாகவே  இருக்க வேண்டும்.
58. ஸ்ரீ  வாயுவேன  — உடைந்த நிலையில் உள்ளது  இந்த யோகினியின் சிலை. அவள் காற்றைப் போல பறப்பவள் என்ற பெயருடன் உள்ளத்தின் காரணம் அவள் பீடத்தில் காணப்படும் காட்டு மானின் உருவமே.  
59. ஸ்ரீ  உபேர  வர்த்தனி  — ஒளியை தருபவள் என்ற பெயர் கொண்டுள்ள இவளது சிலையும் உடைந்த நிலையில் உள்ளது.  இவளுடன் காணப்படும் அபஸ்வராக்கள் எனப்படும் 64 குட்டி தேவதைகள் அவர்கள்  64 யோகினிகளை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகின்றது. இவளது பீடத்தில்  காணப்படும் பறவையின் உருவம் நமக்கு வேறு கோணத்தில் ஆராய உதவி  செய்யவில்லை.
60. பெயர் காணப்படவில்லை  — பீடத்தில் யானையின் உருவம் உள்ள இவள் நடனமாடிக்கொண்டு உள்ள காட்சி தருகிறாள்.
61.  ஸ்ரீ  சர்வடோ -முக்ஹி    — இந்த யோகினி 12 கைகளும் மூன்று தலைகளையும் கொண்டு இருக்கின்றாள். அவளது ஒரு முகம் அவளது மார்பகங்களுக்கு இடையே காணப்படுகின்றது .  அவளது பீடத்தில் தாமரை மலரும் ஆறு  இரட்டை முக்கோணங்களும் உள்ளன. அதனால் அவள் பெயர் அப்படி அமைந்து இருக்கலாம்.
62. ஸ்ரீ  மண்டோதரி ­ — மண்டோதரி என்பவள் சொர்க்கத்தில் இருந்த நடன மாத்துவான ஹேமா  மற்றும் மாயாசுரனின் மகள். அவள் மிகவும் பக்தி மிக்கப் பெண்மணி. பொய் கூறுவது பிடிக்காது. அது போல  தவறு செய்வதையும்  விரும்பாதவள். அவள் அழகில் மயங்கிய ராவணன் அவளை தன்னுடைய மனைவிகளில் முதன்மையானவளாக கருதினான். அவள் வீற்றிருக்கும் பீடத்தில் இரண்டு ஆண்கள் அவளை கைகூப்பி வணங்கிய நிலையில் நிற்கிறார்கள். 
63. ஸ்ரீ  க்ஹெமுக்கி  —  உடைந்து உள்ள இந்த யோகினி சிலையின் பீடத்தில் காணப்படும் நீண்ட அலகைக் கொண்ட பட்ஷியினால் அவளுக்கு அந்தப் பெயர் வந்திருக்கலாம். அதன் அர்த்தம் பெரும்தீனி தின்னும் வாயைக் கொண்டவள் என்பதே. 
64. ஸ்ரீ  ஜாம்பவி  — இந்த யோகினி கிருஷ்ணருடைய மாமனாரான கரடிகளின் தலைவரான ஜாம்பாவட்டின் மனைவியாக இருக்கலாம்.  அந்த சிலையின் உடல் உடைந்து உள்ளது என்றாலும் அவள் கரடியின் முகத்தைக் கொண்டு இருந்துள்ளவளாக தெரிகின்றது.
65. ஸ்ரீ  ஔரக    — உடைந்து உள்ள இந்த சிலையின் பெயரின் முதல் எழுத்து சரிவரப் புரியவில்லை.  அவள் பீடத்தில் காணப்படும் நிர்வாண மனிதனின் உருவத்தைக் கொண்டு நம்மால் இந்த சிலையைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை .
66. சிலை காணப்படவில்லை
67. ஸ்ரீ  திர -சிட்டா  — ஸ்திரச் சித்தா அதாவது நிலையான சிந்தனை கொண்டவள் என்பதைக் காட்டும்வகையில் அமர்ந்து கொண்டுள்ள நிலையில் உள்ள இந்த யோகினியின் பீடத்தில் அவளை கைகூப்பி  வணங்கிய ஒரு மனிதர் நிற்கும் உருவம் உள்ளது.
68. ஸ்ரீ  யமுனா  — இந்த சிலைக்கு உரியவள் ஜமுனா நதி தேவி. அவள் பீடத்தில் காணப்படும் ஆமையின் உருவமே அவளுடைய சின்னமாகும்.
69. சிலை காணப்படவில்லை
70. ஸ்ரீ  விபாஸ  — பயங்கரமான அல்லது  உடலை துளைப்பவர் என்ற பொருள் தரும்  இந்த யோகினியின்  பீடத்தில் அவளை நமச்கரித்தபடி ஒருவர் இருக்க, அதனுடன் எலும்புகளும் கிடப்பதைப் பார்த்தால் அவளும் துர்கையின் படைப்பே  என எண்ணத் தோன்றுகிறது.
71. ஸ்ரீ  சின்ஹா -சின்ஹா  — சிங்க முகத்தைக் கொண்ட யோகினியின் பீடத்தில் சிங்க முகத்தைக் கொண்ட நரசிம்மாவைப் போல ஒருவர் உள்ளார். ஆகவே இவள் நரசிம்ஹா அவதாரத்தில்  வந்த விஷ்ணுவின்  துணைவியாக இருக்காலாம்.
72. ஸ்ரீ  நிலதாம்பரா    —  இந்த யோகினியின் பீடத்தில் கருடனின் உருவம் உள்ளதினால் விஷ்ணுவுடன் தொடர்புக் கொண்டவளாக இருக்கலாம் என்றாலும் இந்த யோகினி நிலம்பரா எனும் துர்தேவதை. 
73. சிலை பழுதடைந்து உள்ளது —  அமர்ந்து உள்ள நிலையில் காட்சி தரும் இந்த யோகினிச் சிலையின் பீடத்தில் கொழுந்து விட்டு எரியும்   தீ ஜ்வாலையின் உருவம்    காணப்படுகின்றது.
74. ஸ்ரீ  அந்தகாரி    —  விழுங்கி விடுவது போல வாயை திறந்து வைத்துக் கொண்டு  அமர்ந்து கொண்டு இருக்கின்றாள்  இந்த யோகினி.  அந்தா என்ற பெயர் யமனுக்கும் உண்டு. அவரை சேர்ந்தவளாக இவள் இருக்கலாம். அவள் பீடத்தில் காணப்படும் பசுபதி எனும் மாடு அவள் சிவனை சேர்ந்தவளோ என்றும் எண்ணத் தோன்றும். பசுபதியும் மரணத்தை தருபவர் என்பதினால் அவளுடன்  சம்மந்தப்பட்டவளாகவும்  இவள் இருக்கலாம். 
75. பெயர் தெரியவில்லை. — இந்த யோகினி சிலையின் பீடத்தில் உள்ள மாட்டின் உருவத்தில் அதன் மூக்கு நீண்டு உள்ளது.
76. ஸ்ரீ  பிங்களா  — இந்தப் பெயரின் அர்த்தம் பழுப்புக் கலந்த மஞ்சள் நிறம் அல்லது  கேசரி நிறம் எனப்படும் பழுப்பு கலந்த சிவப்பு நிறம்.  இந்த சிலையின் பீடத்தில் உள்ள மயில் இவள் ஸ்கந்த குமாரன் அல்லது கார்த்திகேயர் என்பவற்றின் சக்தி தேவதையாக இருக்கலாம் என எண்ண வைக்கின்றது.
77. ஸ்ரீ  அன்க்கலா  — இந்த யோகினி சிலையின்  பீடத்தில் இருவர் கைகூப்பி  வணங்கியவாறு  நிற்கின்றார்கள். ஆனால் இந்தப் பெயருக்கான அர்த்தம் விளங்கவில்லை.
78. பெயர் பொறிக்கப்படவில்லை  —  நடனமாது மாதுவின் உருவில் உள்ள இந்த சிலைக்கு அடியில் ஒரு பறவை காணப்படுகின்றது.
79. ஸ்ரீ  ஷத்த்ர  -தர்மினி  — இந்த வார்த்தை இரண்டும் ஒன்றாக சேர்த்தால்  அதாவது ஷத்ரதர்மா என்றால்  வீரனின் கடமை அதாவது வீரம் என்பதே. ஆனால் ஷத்ர என்பதில் இருந்து வரும் ஷத் என்பதின் அர்த்தம்  நார்நாராக கிழித்து விடுவது  மற்றும்  அப்படியே விழுங்கி விடுவது என்றும்  அர்த்தம்.  இந்த சிலையின் அடியில்  தலையில் எலும்பு மாலைகளைப் போட்டுக் கொண்டு  பல பெண்கள் அமர்ந்து உள்ளதைப் போலவும், பீடத்தில் சங்கிலி போட்டுப் பிணைத்த மாட்டின் உருவமும் உள்ளன.  ஆகவே இந்த யோகினி மரணத்தை கொடுப்பவளாக  இருக்கலாம்.
80. ஸ்ரீ   விரேந்ரி  —இந்த பீடத்தின் மீது  கையில் வாட்களும் கேடயமும் வைத்துக் கொண்டு பல பெண்கள் அமர்ந்து உள்ளனர். இந்த யோகினி பகை உணர்வைக் கொண்டவள் .  இவள் பீடத்தில் ஒரு குதிரையின் தலையும் எலும்புத் துண்டுகளும் உள்ளன.
81. சிலை காணப்படவில்லை
82. ஸ்ரீ  ரித்தாலி    தேவி  — இந்த யோகினி தீமையை செய்பவள் என்பது அவள் அமர்ந்துள்ள பீடத்தில் காணப்படும் கூறிய நகங்களுடனான விலங்குகளின் உருவங்களில் இருந்து தெரிய வருகின்றது.
83-84 – மேற்கு நுழை வாயில்


ஆக மேற் கூறப்பட்டுள்ள சிலைகளை  ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்
(a) அஷ்ட சக்தி மற்றும் சக்தி தேவதைகள் ……………………..8 சிலைகள்
(b) கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் …………3
(c) காளியைப் போல நடனமாடும் தேவதைகள் ………………………4
(d) சிவன் மற்றும்  விநாயகர் …………………………..2
(e) யோகினிகள்  (சோன்சட்  யோகினி  ) .........நல்ல நிலையில் உள்ளவை - 57  /  காணாமல் போனவை- 7  / மொத்தம் ……….64
'e' யில் உள்ள அனைத்தும் சேர்ந்து ……………………………………………………..81
(f) இரண்டு நுழை வாயில்கள்    [= 3 இடைவெளிகளுடன் ]…………………………

ஆக  e+f  என்ற இரண்டும் சேர்ந்து மொத்தம்  ………………………………..84

Gauri sankara inscriptions Chausath Yogini Temple  Complete Inventory of Goddesses and Gods
                                                                    யோகினி சிலைகள் மீது காணப்படும்
                                                                  வார்த்தைகளும் எழுத்துக்களும்
ஆலயத்தில்  உள்ள  யோகினிகளின்  புகைப்  படங்கள்  

4 comments:

 1. continued  as an example:


  DSC00238 Sri Satana Sambara
  7. * Sri Satanu Sambara —Sambara refers to the Sambar deer, which is also seen on the pedestal of this seated goddess (conjecture on my part considering the description)

  DSC00241 Erudi
  8. Sri Erudi – the horse faced yogini

  They look more (to me) as in Kent"s listing respectively:
  64. Sri Jambavi — The “bear goddess,” with a bear on her pedestal, evidently points to Jambavat, the fabulous king of the bears who was the father-in-law of Krishna. This statue probably had a bear’s head; but it is now broken.
  46. Sri Varahi — One of the saktis of Vishnu, as the Varaha Avatara. There is a boar on the pedestal, and this seated sakti goddess has a boar’s head.
  but then I don't see a boar on the pedestal... nr 241, Sri Erudi according to Shanti, comes with Horseface according to Priya, whereas i seem to see Boar (Varahi?)face and namewise comes closest with Kent's Sri Eruri/ Ejari, described as

  52. Sri Eruri, or Ejari — The first reading seems preferable. The yogini has a cow’s head, and there is a cow on her pedestal.

  I sincerally hope that somehow you can enlighten me, and in the long run, us all and mankind in general, in untangling this puzzle and come to an deeper understanding of those Yoginitemples.

  then there is additional questions:
  in Kent's article I read: Another valuable resource for me is Vijaya Dahejia’s book YOGINI; Cult and Tradition – A Trantric Tradition. Her list is accurate, but she has listed only 64 names. I'm trying to order the said book, and wonder whether in the meantime you could reproduce that list, or sent a link where to find the list, to me?
  I read somewhere there is 6 (or more?) lists...any suggestion where to locate those?
  for instance: "Several more lists of the 64 Yoginis given in the H.C. Das book, will be interesting to compare.sps1014200 "
  Could that be HC Das Iconography of Sakta Divinities, Delhi 1997 ???

  Would you have some more pictures (or links to) of the outside, inside-overview, view of gallery, of surroundings and/or the other yogintemples?
  If it feels usefull in sorting out, I can surely sent the full of my provisional compilation, from which the example is just a 3 %...
  Hope we can help eachother out to reach deeper understanding I eagerly await your reply, currently for the next month in Goa, before returning to Europe, Jai Ma, yours, Inti

  ReplyDelete
 2. Dear Shanti Priya (a, trying to put information of three kinds from three sites together, I got a clearly mismatching set of descriptions and images and also sequencenumbering...
  so a little confused...

  Although the yoginitemples intrigued me already longtime, I only recently got to know them better, thanks to to possibillities of the internet and your generous contributing and sharing on it, for which I would like to express my deepest heartfelt thanks. In the future I would like to add my own contributions towards widening the knowledge and accesabillity of such on a, as yet to be opened, website/blog, eventually creating a virtual/digital tour....and for that I hereby ask your kind permission to use any material used on your sites/blogs, under due aknowledgement of authorship of text, pictures and linking to your sites/blogs.

  but as continuing, as I said: trying to put information of three kinds from three sites together, I got a clearly mismatching set of descriptions and images and also sequencenumbering...
  so a little confused...and have some questions (further down below).


  first of all I downloaded Kent Davis article and his list is starting from West entrance...
  http://www.devata.org/2010/03/chausath-yogini-temple-complete-inventory-of-goddesses-and-gods/

  then I downloaded Divya Deswal's article (Posted by divychetana on March 23, 2011 in call of the goddess http://meinthemoment.wordpress.com/2011/03/23/the-81-yoginis-of-bhedhaghat/) and her list starts with South-East entrance (with an unknown image in the entance... is this true, or does it belong in the wider West entrance....?) and downloaded the folder with pictures named by their original numbers from the camera.....

  so I was (I thought) happy to have those all identified, named by name, in sets of three at
  Shanti Priya's Tamil blog, http://santhipriyaspages.blogspot.in/2011/06/chausath-yogini-temple-complete.html

  and put the last two together....then starting to insert Kent Davids list and numbering I noticed that the pictures (Divya's) didn't match the descriptions (Based on Kent"s) sitting with the names that Priya attached to them.....following.....?

  So now there is a couple of questions:
  - The pictures taken and a selection it appears from the numbering, are I suppose taken in clockwise continuing order of appearence, starting from the South East entrance. True?
  - That "unknow image" nr 1 Divya , is truely in SE entrance?
  - The sequence of descriptions doesn't seem to match order of pictures (DC) how would you explain that?
  - the sequence of Divya"s list differs from Kent"s list...true? and why?
  - How did Shanti come to putting names to pictures?

  AND MY MOST BASIC QUESTION:
  - could you please correllate names, picture and their positioning in niches, preferably in the numbering order of the archeological survey's plan (as in the plan below), correct order?
  to be continued, or probably second part of too long comment came thru first...

  ReplyDelete
 3. I understand that Mr. Kent Davis has replied to your queries in his site?

  ReplyDelete
 4. Sir,
  Regarding your query -"I hereby ask your kind permission to use any material used on your sites/blogs, under due aknowledgement of authorship of text, pictures and linking to your sites/blogs" I would only request you to avoid using the articles for which I have taken specific permission from certain site owners to reproduce them in my blogger.
  Otherwise you can certainly use any of my original articles for expanding the knowledge by giving due acknowledgement to my blogger.

  ReplyDelete