Sunday, June 26, 2011

An American Sadhu

 ஒரு அமெரிக்க சாது In Tamil  :- சாந்திப்பிரியா 

Part-1

முன்னுரை:- 1992 ஆம் ஆண்டு உஜ்ஜயினியில் நடந்த கும்பமேளாவிற்கு இந்தியாவுக்கு வந்த 'தோல்ப் ஹார்ட்சுயேகர்' (Dolf Hartsuiker) என்பவர் எழுதி உள்ள அனுபவக் கதை இது. அவர்  பல சாதுக்கள் மற்றும் சன்யாசிகலை சந்தித்தார் . அதில் முக்கியமானது  ஒரு அமெரிக்க சாதுவை சந்தித்த கதை. அவரை  எங்கெல்லாம்  சந்தித்தார்?  இப்போது அவருடைய கதி என்ன, அவர் எங்கே  உள்ளார் ? ஒரு வித்யாசமான  ஆன்மீக அனுபவம்.  உண்மைக் கதையை  படித்து மகிழவும்.
Introduction:- This is an article written by Dolf Hartsuiker . He came to India in the year 1992 to witness the Kumbamela held in Ujjain and during his visit he has interacted with several Sadhus and sanyasins. One such experience is- meeting with an American sadhu at Ujjain . When and where all did he meet him? Where is the American Sadhu now? What is his fate? Read the interesting true story reproduced  below.
---------------------------------

ஒரு மரத்தடியில் நின்று கொண்டு இருந்த நான் பலரும் அங்கும்  இங்குமாக  அலைந்து  கொண்டு  இருப்பதைக் கண்டேன். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தார் சாலையில் காலணி கூட இல்லாமல் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். ஆண்கள் வெள்ளை நிறத்திலும், பெண்கள் வண்ண வண்ண ஆடைகளையும் அணிந்து கொண்டு இருந்தது பார்க்கவே ரம்யமாக இருந்தது. அவர்களில் பலரும் இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் கும்பமேளாவைப் பார்க்க வந்து இருந்த மக்கள். இன்னும் சில நாட்களில் வானத்தில் உள்ள கோள்கள்  சரியான இடத்தில் வந்து அமரும்போது  தெய்வங்கள் கீழே இறங்கி  வரும், அவர்களைப் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பு சிலருக்கு உள்ளது.  ஆமாம் அந்த நேரத்தில் புனித ஸ்நானம் செய்தால் மோட்ஷம் பெறலாம் என்ற  நம்பிக்கை அவர்களுக்கு .
மகன்த் சியாராம் தாஸ்
அங்கிருந்த சாதுக்களும் எளிதில் அனைவரும் செல்ல முடியாத இந்தியாவின் தொலை தூர இடங்களிலும் இருந்து வந்து உள்ளவர்கள்.  அவர்களை தெய்வங்களின் பிரதிநிதிகளாகவே  சிலர் நினைத்து இருக்க வேண்டும். காரணம் அவர்களை அங்கு வந்து சந்தித்த மக்கள்  கீழே விழுந்து நமஸ்கரித்து விட்டுச்  சென்றார்கள். அந்த சிலருடைய நெற்றியில் இருந்த வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் போடப்பட்டு இருந்த சூலம் போன்ற குறிகளில் இருந்து அவர்கள் ராமாயணத்தின் கதாநாயகரான ராமபிரானின் பக்தர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.  
சற்று தள்ளி இருந்த இன்னொரு பாபா தலைமுடி  நீண்டு கிடந்தது. உடம்பில் சின்ன சிவப்பு துணியைத் தவிர வேறு எதுவும் இல்லை. நெற்றியில் இருந்த மூன்று  பட்டையான சாம்பல் நிறக் கோடுகளைப் பார்த்தேன். அவர் சிவனை வழிபடுபவராக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அனைவரும்  யோகிகளாகவே  இருக்க வேண்டும். 
சுமார் பதினைத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ராம பகவான்  பிரிவை சேர்ந்த சாதுக்கள், சன்யாசிகளுக்காக   ஒதுக்கப்பட்டு இருந்த அந்த இடத்தில் இந்த சிவன் பிரிவை சேர்ந்த சாதுவைப் பார்த்தபோது சற்று வித்யாசமாக இருந்தது. அந்த சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக டென்ட்டுக்களில்  சாதுக்கள் தங்கி இருந்தாலும் அதற்குள் உட்கார்ந்து கொள்ளாமல் சிலர் எரிந்து கொண்டு இருந்த நெருப்பின் அருகில் அமர்ந்து இருந்தார்கள். 
அப்போது அந்த சாலை வழியே முக்கால்வாசிக்கும் மேலான நிர்வாண மனிதர் ஒருவர் தனது ஆண் உறுப்பை மட்டும் சிறிய அளவில் மறைத்துக் கொண்டு இருந்த துணியுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர் உடல் முழுவதும் சாம்பல் பூசப்பட்டு இருந்தாலும் அவர் வட நாட்டில்  இருந்து வந்திருந்த சாது போல  நல்ல நிறத்தில் இருந்த உடம்பு  காட்டியது.  கூர்ந்து பார்த்தேன். அவருடைய விழிகளும்  நீல நிறமாக இருந்தது.  அவர் வட நாட்டை சேர்ந்தவர் அல்ல, ஆனால் வெளி நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என எண்ணினேன். அருகில் இருந்த குழாயில் அவர் தனது தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து இருந்தார். 
எனக்கு அவர் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல் . ஆனால் அவரோ விரைவாக  அங்கிருந்த டென்ட்டுக்களில்  நுழைந்து மறைய நான் அவரைப் பின் தொடர்ந்தேன். V வடிவத்தில் அமைந்து இருந்த டென்ட்டுக்களின் உள்ளே சென்றேன். அங்கு ஒரு இடத்தில் வெள்ளை தாடியுடன் நல்ல வெண்மை நிற துணியை உடுத்திக் கொண்டு ஒரு சன்யாசி நின்று  இருந்தார். அப்போது ஒரு இளம் சன்யாசி வந்து அவர் கால்களை தொட்டு வணங்கினார்.  அவரை அந்த வயதான சன்யாசி கைகளைத் தூக்கி  நிறுத்தி  ஆசி கூறினார். அங்கு இன்னும் சில டென்ட்டுக்கள் போடப்பட்டு வந்தன.  அந்த வேலைகளில்  இளம் சாதுக்கள் ஈடுபட்டு வந்தார்கள்.  அவர்கள் ஒருவருக்கொருவர் சிரிப்பு மூட்டிக் கொண்டு பேசியபடி  வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.  அந்த பெரிய சாதுவிடம் சென்ற நான் '' ஜெய் ஸ்ரீ ராமா '' எனக் கூறினேன்.
அங்கிருந்த மற்ற சாதுக்கள்  சற்று தொலைவில் இருந்த இன்னொரு  டென்டைக் காட்டி என்னை அங்கு செல்லுமாறு கூறினார்கள். அவர்கள் கூறியபடி அங்கு சென்ற நான் ஒரு  வெள்ளை உடை அணிந்த வயதான சாது அங்கு உட்கார்ந்து உள்ளதைக் கண்டேன். அவர் ஒரு பாயின் மீது அமர்ந்து கொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்து ''ஜெய் ஸ்ரீ ராமா'' எனக் கத்தினார்.  மேலும் அவர் '' உன்னுடைய நண்பன் வந்து இருக்கிறான் பார்'' எனக் கூவ அங்கு ஒரு வெள்ளை நிற சாது வந்தார்.
அவர் வந்ததும் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டார்கள். எனக்கும்  ஒரு பாயைப் போட அதில் நான் அங்கேயே அமர்ந்தேன். ஆமாம் நான் எந்த சாதுவைத் தேடி வந்தேனோ அந்த சாது அங்குதான் இருந்தார்..... தனது பெரிய வயிறு கால்களை தொடும் அளவில் அமர்ந்து இருந்த அந்த வயதான சாது '' நீ எங்கிருந்து வருகிறாய்'' என என்னிடம் கேட்டார்.
''ஹாலந்த்'' என்று கூறிய நான் பல இந்தியர்களுக்கும் அது தெரியாது என நினைத்துக் கொண்டு  ''ஐரோப்பா'' என மீண்டும் கூறினேன்.
''ஒ.......அது நல்ல இடம்'' என்றவர்  அது சரி நீ இந்தியாவுக்கு உன்னுடைய குருவைத் தேடி வந்து உள்ளாயா ?'' என்று கேட்டார் . அது கேள்வியாகத் தெரியவில்லை, அது அவருடைய அனுமானமாகவே தெரிந்தது.
''உனக்கு ஒரு குரு வேண்டும். குரு இல்லாமல் இருப்பவர் டிக்கெட் இல்லாமல் வண்டியில் பயணிப்பவர் போன்றவர்'' என்று அவர் கூறவும் நாங்கள் அனைவரும் சிரித்தோம். அவருடைய வாயில் பற்களே  இல்லை. பேசியதோ தடுமாற்றமான அரைகுறை ஆங்கிலம்.
'' அப்படிப்பட்ட நிலையில் டிக்கெட்டை சரி பார்ப்பவர் வந்தால்........என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது''. அதற்கு மேல் நான் விஷயத்தை திசை திருப்ப முயலவில்லை.  அவர் தொடர்ந்தார் '' குருவின் மனம் ஒரு யானையைப் போன்றது.  குருவே கடவுளுடன் தொடர்ப்பு கொள்ள நேரடி சாதனம்.  நீ உன்னுடைய நாட்டிற்குப் போய்  குருவை நினைத்துக் கொள். அவர் உனக்கு கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்தித்  தருவார். ஒரு குருவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும்''. அவர் குரு யானையைப் போன்றவர் என்று கூறியது எதைக் குறிக்கும், அதனுடைய நினைவின் ஆற்றலையா , இல்லை  ஐந்தாவது கை எனப்படும் அதனுடைய தும்பிக்கையையா ? எனக்குப் புரியவில்லை.
அதைக் கேட்ட நான் அந்த வெள்ளை நிற சாதுவை திரும்பிப்  பார்த்தேன் (அமேரிக்கா சாது). அதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கும் அவர் அவற்றை நம்புகிறாரா? ஆனால் குருவின் முன்னால் பத்மாசனம் போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தவர்  அவர் குரு கூறுவதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டி புன்முறுவல் செய்தார். அவர் எத்தனைதான் சாம்பலை உடம்பில் பூசிக் கொண்டு இருந்தாலும் அவருடைய வெள்ளை தோலின் நிறம் அதை மீறி வெளிக் காட்டியது. அவருடைய மெல்லிய தோற்றம்,  தளர்ந்து இருந்த உடல் அமைப்பு போன்றவை  அவருடைய உண்மையான வயதை விட வயதைக் கூட்டியே காட்டிக் கொண்டு இருந்தது.

'ஆமாம்  அவர்  கூறுவது  உண்மைதான். குருஜி  நம்மை  விட  மெத்த  ஞானம்  உள்ளவர்.  அபாரமான ஆய்வு வலிமை உள்ளவர்''. அப்படி அந்த அமெரிக்க சாது கூறியபோது அவர் உச்சரித்த குருஜி என்ற வார்த்தையை இதயத்தில் இருந்து வெளிப்படுவதைப் போலவே மென்மையாக  உச்சரித்தார்.  மேலும் அவர் தனது குருவை தான் எப்படி சந்தித்தேன் என்ற  விவரத்தைக் கூறினார். அவர் ஏழு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்தபோது எந்த குறிக்கோளும் இன்றி எதோ காரணத்தினால் ஈர்க்கப்பட்டு பல இடங்களிலும் நடந்து வந்த மத விழாக்களில் கலந்து கொண்டு சுற்றித் திரிந்தார். அதை அவர் கர்மா, அதாவது தனது தலைவிதி என்று கூறினார். விரைவில் அவர் ஒரு  குருவை  சந்தித்து அவரிடம் சேர அவரே எவருக்கு ராமரின் சேவகன் என்ற பெயரான 'ராமாப்ரியா தாஸ் ' என்ற புதிய பெயரை அவருக்கும் சூட்டினார்.
அப்போது அங்கிருந்த அவர் குரு கூறினார்' 'இப்போது ராமப்பிரியா தாஸ் ஏழு வயதுக் குழந்தை''. அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கொல் என சிரித்தோம். ஆனால் ராமப்ரியா தாஸின் பேச்சு  அதனால் தடைபடவில்லை, அவர் தொடர்ந்து கூறினார். ''தீட்ஷை பெறுவது  புதிய பிறப்பு எடுப்பது  போல, புதிய வாழ்கையின் ஆரம்பம்,  கடவுளுக்கு  பணி  செய்யும் வாழ்கை  .  முதலில் இருந்த தோற்றம்  மற்றும் குணங்களில் புதிய மாற்றம்  ஏற்பட்டு விட்டாலும்  இன்னும் எத்துணையோ நான் கற்க வேண்டும்''. எப்படி அவற்றை விளக்கியவர்  அமெரிக்க பாணியில் பேசினார் என்றாலும் மிக ஸ்பஷ்டமாக தடங்கல் இன்றி அவரிடம் இருந்து அவருடைய எண்ணங்கள் வெளி வந்தன.
அவர் அங்கு வந்தப் பின் அடிக்கடி காலிபோர்னியாவுக்கும்  சென்று  விட்டு வந்துள்ளார். அங்கு சென்றாலும் மலை அடிவாரங்களில் சென்று ஒரு கூடாரம் அமைத்து அதில் தங்கி இருந்தபடி ஒரு சாதுவை  போன்ற  வாழ்கையை மேற்கொண்டார். அதனால் அவருக்கு சில பிரச்சனைகள்  ஏற்பட்டன. அவரை  ஒரு அனாதைப் போலவே அங்கிருந்த ஆட்சியாளர்கள் நடத்தினார்கள்.  '' அங்குள்ள அரசாங்கத்திடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க  முடியும்.  அவர்களை இயக்குவது முதலாளிகள், மாபியா கும்பல் மற்றும் உளவுத் துறையினர்.  அமெரிக்காவில் உள்ள மக்கள் வாழ்கையில் விரக்தி அடைந்து உள்ளார்கள். அங்குள்ள 20 சதவிகித மக்கள்  சாலைகளில் தங்கியே  வாழ்கையை ஓட்டுகிறார்கள். ஏழை மேலும் மேலும் ஏழையாக மாறிக்கொண்டு வருகிறான், பணக்காரர்களோ மேலும் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டு வருகிறார்கள் . இப்படிப்பட்ட நிலைக்குக் காரணம் அரசாங்கத்தின் கொள்கை. அரசுக்கு எதிரான கருத்துக்  கொண்டவர்களை  அடக்கி வைக்க வைக்க இது ஒரு வழிமுறை. ஐரோப்பியாவின்  வாழ்கை என்பது  குறைந்த வசதியுடன் வாழ போராட வேண்டி உள்ள ஒரு  வாழ்கை''. அவர் மேலும் தொடர்ந்து நாட்டில் நிலவும் குற்ற அளவு, இன வெறி மற்றும்  மாசுபட்ட சூழ்நிலை போன்ற பலவற்றையும் கூறி இருந்தவாறு  என்னையும் தன் கருத்தை  ஆமோதிக்கச்  செய்வதில் முனைந்து இருந்தார்.
நான் கூறினேன், '' ஆமாம் அவை அனைத்தையும் நானும் கேட்டு உள்ளேன். உங்கள் குருவைப் பற்றி இப்போது கூற முடியுமா?''.
அவர் கூறினார் '' என்னுடைய குருவின் பெயர் லஷ்மண் தாஸ்''. அப்படி கூறிக் கொண்டே தன்னுடைய குருவை வாஞ்சையுடன் பார்த்தார். அதைக் கேட்ட அவர் குரு தனது பொக்கை வாயை மெல்லத் திறந்து  புன்முறுவல் செய்தார்.
''நீங்கள் புகை பிடிப்பீர்களா'' என்று அமெரிக்க சாதுவின் குரு கேட்டார். நான் '' ஆமாம்''  என்றவுடன் தனது இடுப்பில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து அதில் இருந்து சிறிது மார்கியன எனும் போதைப் பொருளை எடுத்தார். அது பச்சை நிறத்தில் இருந்த இலைகளைப் போல இருந்தது.
நான்  எனக்குத் தெரிந்த அளவு இந்தியில் ''ஒ, பட்டி'' அதாவது இலைகள் என்று கூறி விட்டு, ''உங்களுக்கு நான் உயர்வான சில்லும்மை தருகிறேன்'' என்றேன்.
அதை எனக்கு வேறு ஒரு சாதுவே தந்து இருந்தார். அதனுடன் ஒரு சிகரெட்டையும் எடுத்து அவருக்கு கொடுக்க அமெரிக்க சாது கூறினார் '' நான் புகை பிடிப்பதை விட்டு விட்டேன்''.
...........Part-II......To be continued

No comments:

Post a Comment