Wednesday, June 22, 2011

Life Story of Meher Baba

அவதார புருஷர் மெஹெர் பாபா , 1894 – 1969  
 Original in English 
Meher Baba Information org


Translated into Tamil by 
சாந்திப்பிரியா   
 
மெஹெர் பாபா என்றால் 'கருணை உள்ளம் படைத்தவர்' என்ற அர்த்தம் தரும் . 1920 ஆம் ஆண்டுகளில் அவருடைய தெய்வீகம் வெளியில் தெரியத் துவங்கிய காலத்தில் அவருடைய சில சீடர்களால் அவருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. மெஹெர் பாபாவின் வாழ்கை வரலாற்றை சுருக்கமாக எழுதுவது என்பது எளிதானது அல்ல. இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த அவரை அனைத்து மதங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் இயேசு கிறிஸ்து , வருங்காலத்தை முன்னறிவிப்பவர், ஆபத்தில் இருந்து விடுவிப்பவர் மற்றும் பாதுகாவலர் என்றே கூறி வந்தார்கள் . பல நல்ல தொண்டுகளையும் எண்ணற்ற செயல்களையும் வாய் திறந்து பேசாமல் மவுனமாக இருந்தபடி செய்து கொண்டு வந்தார். 1925 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டுவரை அவர் வாழ்ந்து வந்த சுமார் நாற்பத்தி நான்கு வருட காலத்தில் மவுனமாகவே அவர் இருந்து கொண்டு செய்து வந்த காரியங்கள் எண்ணற்றவை.
ஏழை எளியவர்கள், தொழு நோயாளிகளுக்கு உதவி, கிராமத்தினருக்கு இலவச மருத்துவ உதவி போன்றவற்றை நடைமுறைப்படுத்த தனது சீடர்களுக்குப் பயிற்சி தருதல், அன்பு எனும் ஆசிரமத்தின் மூலம் வித்தியாசமான முறையில் மாணவர்களுக்கு ஆன்மீகப் பயிற்சி தருதல், ஆன்மீகத்தில் ஊறித் திளைத்தவர்கள் மற்றும் தன்னைக் காண வந்து கொண்டே இருந்த திரளான புதிய புதிய பக்தர்களுடன் இணைந்து பணியாற்றுதல், புத்தகங்கள் எழுதுவது மற்றும் சொற்பொழிவுகளில் ஆன்மீகத்தின் புதிய பார்வையில் விளக்கங்கள் தருவது , மற்றும் தன்னை நாடி வந்து கேட்டுக் கொண்ட பக்தர்களில் சொந்த விஷயங்களில் வழிகாட்டி உதவுவது போன்ற பலவற்றையும் வாய் திறந்து பேசாமல் வேறு வகையில் எடுத்து உரைத்து வந்தார். ஆனால் அனைத்துக்கும் அடித்தளமான மொழியாக அவர் அன்பே இருந்தது.     

 

ஒரு பழங்காலத்திய பெண்மணி ஒருவர் மேர்வானின் நெற்றியில் முத்தம் கொடுக்க மேர்வானின் இளம் பருவம் முடிவுக்கு வந்தது. ஒரு ஆலயமாகவே நடமாடிக்கொண்டு இருந்த 120 வயதான தலை முழுவதும் நரைத்த முடியுடன் காணப்பட்ட ஹஸ்ரத் பாபாஜன் என்பவர் ஒரு சத்குரு ஆவார். பலுசிஸ்தானை சேர்ந்த அந்தப் பெண்மணி அந்த சம்பவம் நடந்ததற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பூனாவிற்கு வந்தார். குளிர், வெய்யில் , இரவு மற்றும் பகல் என எதையும் சட்டை செய்யாமல் சாலை ஓரத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட வேப்ப மர நிழலில் அமர்ந்து கொண்டு  இருந்த அவளைத் தேடி இந்தியாவின் பல இடங்களிலும் வந்து கொண்டு இருந்த பக்தர்கள் அவளிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்ற வண்ணம் இருந்தார்கள்.
அப்படிப்பட்ட காலத்தில் ஒரு நாள் மேர்வான் சைக்கிளில் அந்த வழியே சென்று கொண்டு இருந்தார். அவரை பார்த்த பாபாஜான் கையை அசைத்துக் காட்டி அவரை அருகில் அழைத்தார். அவரும் சைக்கிளை அருகில் நிறுத்தி வைத்து விட்டு அவள் முன்னால் சென்று அமர்ந்தார். கண்களை மூடிக் கொண்டார். எத்தனை நேரம் எனத் தெரியாது. அந்த சந்திப்பின் முடிவில் பாபாஜான் மேர்வானை அருகில் அழைத்து அவரது நெற்றியில் ஒரு முத்தமிட்டார். அவ்வளவுதான் மேர்வான் எழுந்தார், ஒன்றும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
அதன் பின் பலமுறை மேர்வான் அங்கு சென்று பாபாஜானை சந்தித்தபோதெல்லாம் பாபாஜான் கூறுவார் 'என்னுடைய இந்தக் குழந்தை ஒரு காலத்தில் உலகை ஆட்டிப் படைக்க உள்ளது''.
அந்த சம்பவத்திற்கு பிறகு  அடுத்த ஏழு வருடங்களில் பாபாஜானைப் போலவே  ஆன்மீகத்தில் பெருமை வாய்ந்த மேலும் நான்கு சத்குருக்களுடன் மேர்பான் தொடர்பு கொள்ள வேண்டி வந்தது. அந்த நான்கு பேர்களில் குறிப்பிடத்தக்க இருவர் அந்தக் காலத்தில் பெரும் புகழ் பெற்று இருந்த, முஸ்லிம் துறவி எனப்பட்ட சீரடி சாயி பாபா மற்றும்  இந்துவாகப் பிறந்து இருந்த உபாசினி மகராஜ் என்பவர்கள் ஆவர். அந்த இருவரும் ஆன்மீக பக்தர்களுக்கு மேர்வானும் ஒரு அவதாரப் புருடர் என்று அடையாளம் காட்டி பல நேரங்களில் தம்மிடம் வந்த பக்தர்களை அவரையும் சென்று தரிசிக்குமாறு அனுப்பி வைத்தார்கள்.  
 
அந்த முதலாவது ஏழாண்டு காலத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஜோரஷ்டிரியன்ஸ் போன்ற அனைத்து பிரிவில் இருந்தும் அவரிடம் வந்த மக்கள் அவரை தமது குருவாகவே ஏற்றுக் கொள்ளத் துவங்கினார்கள். அப்படி ஆரம்ப காலத்தில் வந்த பக்தர்கள் அவருக்கு கொடுத்த அடையாளப் பெயரே மெஹர் பாபா என்பது.
1922 ஆம் ஆண்டில் பல சீடர்களுடன் மெஹர் பாபா பூனாவை விட்டுக் கிளம்பி மும்பைக்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்தவர் 'சத்குருவின் வீடு' எனப் பொருள் தரும் ''மனசில் -ஈ -மீம்'' என்ற புதுமையான ஆசிரமத்தை அமைத்து அங்கு தங்கினார். அங்கு தன்னுடன் வந்து தங்கிய சீடர்களுக்கு ஒழுக்கத்தையும் கடுமையான பயிற்சிகளையும் கற்றுத் தந்தார். இரவும் பகலும் கடுமையான விரதங்களை மேற்கொண்டு உடலை வருத்திக் கொண்டு தானும் ஆன்மீகப் பயிற்சியை எடுத்துக் கொண்டார்.
அடுத்த ஒரு வருடங்களில் மும்பையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் தனித்து இருந்த பீடபூமியான அஹமத் நகர் என்ற இடத்திற்குச் சென்று அங்கு அடுத்த இருபத்தி ஐந்து வருடங்கள் தன்னுடைய பணிகளுக்கு இடமாக இருக்க மெஹெர்பாத் என்ற ஆன்மீக மையத்தை ஸ்தாபனம் செய்தார்.
மெஹர் பாபா தன்னையே ஒரு உதாரண புருஷராக காட்டி தன்னுடைய சீடர்களுடன் சேர்ந்து தானும் அவர்களைப் போலவே கடுமையாக உழைத்தார். வரட்சி பூமியாக இருந்த அந்த இடத்தில் தங்கும் இடங்களைக் கட்டி தங்க வசதி செய்தார். பிரேம் ஆசிரமத்தை அங்கு நிறுவி இந்தியா மற்றும் இரானில் இருந்து வந்த மாணவர்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்தார். அவ்வப்போது அவர் வெகுதூர இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அவர் ரயில் மூலமும் மற்றும் நடைப் பயணமாக மேற்கொண்ட யாத்திரையில் பாகிஸ்தானின் குவெட்டா மானிலம், கராச்சி , கிழக்கு மும்பையின் பகுதிகள், மகராஷ்டிர மானிலம் முழுவதும் மற்றும் பெர்ஷியா போன்ற இடங்கள் அடங்கும். அவர் சென்ற இடங்களில் எல்லாம் தமது சீடர்களை அங்கும் இங்கும் அனுப்பி  தொழு நோயாளிகள் மற்றும் ஏழை மக்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து வரச் சொல்லி அங்கு அவர்களை தன்னுடைய கையாலேயே குளிக்க வைத்து , உடை உடுத்தி அனுப்புபவர். 1925 ஆம் ஆண்டு அவர் இனி தான் இறக்கும்வரை வாய் திறந்து பேச  மாட்டேன் என்ற சபதம் எடுத்துக் கொண்டார்.  மையத்தை ஸ்தாபனம் செய்தார். 

1920 ஆம் ஆண்டு முதல் பாபா தமது செயல்பாடுகளை  சற்று மாற்றிக் கொண்டார். 1930 ஆண்டுகளில் பெரும்பாலும் அவர் உலக நாடுகளில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அந்த காலகட்டத்தில் பாபா இங்கிலாந்து,  ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்து அங்கு இருந்த ஆரம்ப கட்ட பக்தர்களுடன் தமது தொடர்பை வலுப்படுத்திக் கொண்டார்.
முப்பதாம் நூற்றாண்டு ஆண்டு வாக்கின் முடிவில் இருந்து கடவுள் பித்தர்களாகி பக்தி கொண்டு அலைந்து ஞான முதிர்ச்சி பெற்ற ஆன்மீகவாதிகளுடன் தொடர்பை அதிகப்படுத்திக் கொண்டார். இந்தியா முழுவதும் வெளி உருவில் பைத்தியக்காரர்கள் போல தோற்றம் கொண்டு அலைந்து திரிந்து கொண்டு இருந்த  ஆன்மீக முதிர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கானவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களுடன் பணியாற்றினார். 
5
1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியன்று அது வரை மெஹர் பாபா வாழ்ந்து கொண்டு இருந்த வாழ்கையை துறந்து விட்டு முற்றிலும் புதிய வாழ்கை முறையை துவக்க எங்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம், என்ற எந்த விதமான குறிக்கோளுமே இல்லாமல், யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்காமல் தேர்ந்து எடுக்கப்பட்ட தனது இருபது சீடர்களை அழைத்துக் கொண்டு குறைந்த அளவில், தேவையான அளவிற்கான மாற்று  உடைகளை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு  மேகார் பாபா நடைப் பயணம் கிளம்பினார். இந்தியா முழுவதும் பயணத்தை மேற்கொண்ட அவர்கள், கையில் பணம் எடுத்துக் கொள்ளவில்லை. தாம் யார் என்பதை எவருக்கும் தெரிவிக்கவில்லை. அங்காங்கே பிச்சை எடுத்து கிடைத்ததை சாப்பிட்டார்கள். இப்படியாக மிகக் கடினமான வாழ்கைப் பயணத்தை மெஹர் பாபாவுடன் மேற்கொண்டவர்கள் அதனால் களைப்படைந்தாலும் தமது குருநாதர் இட்ட கட்டளைக்கு ஏற்ப அவருடன் நடந்து சென்றார்கள். 
அனைத்தையும் துறந்துவிட்டு புதிய வாழ்கையை மூன்று ஆண்டுகளுக்கு மேற் கொண்டு அதை முடித்துக் கொண்டப் பின் மீண்டும் பாபா உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவுக்கு உள்ளேயும் தொடர்ந்து பல பயணங்களை மேற்கொண்டார். வெளிநாட்டில் மூன்று பயணங்களை மேற்கொண்டார். அப்படி மேற்கொண்ட ஒரு பயணத்தின் போது 1952 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தமது சீடர்களுடன் சென்று கொண்டு இருந்த பாபா ஓக்லஹோமாவில் இருந்த பிராக் எனும் நகரில் ஏற்பட்ட  கார் விபத்தில் பலத்த காயம் அடைந்தார்.
அந்த விபத்து ஏற்பட்டு நாலரை ஆண்டுகளுக்குப் பின் அதைப் போன்ற  இன்னொரு பயங்கர கார் விபத்து இந்தியாவில் பூனா நகரில் இருந்து சதாராவுக்கு அவர் வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தபோது ஏற்பட்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்து இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இந்தியாவிலோ அவருக்கு ஏற்பட்ட விபத்தில் வலது பக்க இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் அந்த விபத்துக்களில் ஏற்பட்ட கடினமான வலிகளையும் பொருட்படுத்தாமல் வாயை விட்டுக் கத்தாமல் மேலும் மவுனமாகவே இருந்தது பாபாவின் மன உறுதியையே காட்டியது. 

மெஹர் பாபாவின் பிற்காலப் பகுதியும் வேறு விதத்தில் அமைந்து இருந்தது. எப்போதாவது மட்டுமே தனது பெரும் திரளான பக்தர்களுடன் பொழுதைக் கழிப்பது மற்றும் தனி மனிதர்களின் வேண்டுகோட்களுக்கு இணங்கி அவர்களுக்கும்  மற்றும் தம்மிடம் புதியதாக வந்து சேரும் பக்தர்களுக்கும்  தரிசனம் தருவது போன்றவற்றை அவர் செய்து வந்தாலும் பயணம் செய்வதை அறவே நிறுத்திக் கொண்டார். பெரும்பாலான நேரத்தில் அனைவரையும் தவிர்த்து, தனிமையில் இருந்தபடி தமது முழு சக்தியையும் பிரபஞ்ச சம்மந்தமான வேலைகளில்  செலவு செய்தார்.
அப்படி தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு வாழத் துவங்கியவருடைய உடல் நிலை நாளாக நாளாக மோசம் அடைந்து கொண்டே வந்தது. 1968 ஆம் ஆண்டு அவருடைய மோசமான உடல் நிலையைக் கண்ட அவருடைய பக்தர்கள் அவர் வேலைகளை குறைத்துக் கொண்டு உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாலும் பாபா அவற்றை  பொருட்படுத்தவில்லை. அவர் அருகிலேயே இருந்து கொண்டு அவர் படும் அவஸ்தைகளை பார்த்துக் கொண்டு இருந்த சிஷ்யர்களுக்கு மட்டுமே அவர் பட்ட கஷ்டங்கள் தெரியும். முடிவாக அனைவரும் மகிழ்ச்சி அடையும் விதத்தில் ஒரு நாள் மெஹர் பாபா தனது வேலைகள் நூற்றுக்கு நூறு சதவிகிதத்தில் முடிந்து விட்டதாகவும், உலகம் அதன் பயனை விரைவில் உணரும் என்று கூறினார். அதன் பின்னரும் அவருடைய உடல்நிலை மேலும் மோசம் அடைந்து கொண்டு இருந்தது.  பாபா தனது முடிவு நெருங்கிக் கொண்டு இருப்பதை  மறைமுகமாக அனைவருக்கும் கூறி வந்தார்.
1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதியன்று மதியம் தனக்கு கொடுக்கப்பட்டு வந்த மருந்துகளின் அளவு குறித்து வேடிக்கையாக பேசிக்கொண்டு இருந்தவர் அப்படியே சமாதி எய்தினார் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
 Acknowledged with thanks for permission given to use contents

Photos used with permission of the copyright holder
Avatar Meher Baba Perpetual Public Charitable Trust
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------No comments:

Post a Comment