Thursday, August 19, 2010

Varalashmi viratha Manthras and Songs

பொன்னாண்டாள்  ராமநாதன் பாட்டியின் சேவை 
இந்த பாட்டியின் பெயர் பொன்னாண்டாள் ராமநாதன். பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். வயது எண்பத்தி எட்டு. வாழ்வது சென்னையில்.  இவருடைய  பொழுதுபோக்கு தெய்வீக சம்பந்தமானவற்றை எழுதுவது. அதை போடோ காப்பி  எடுத்து  தெரிந்தவர்களுக்கு தருவது. இந்த  வயதிலும் அவர் குரல் இனிமையானது. கல்யாணங்களில் இவர்  பாடும்போது இதுவா இந்த பாட்டியின் குரல் என வியக்கலாம். அனைவரும் நல்ல முறையில் வரலஷ்மி நோம்பு செய்ய வேண்டும் என்பதற்காக வரலஷ்மி விரதத்தன்று ஒருவர் சொல்ல வேண்டிய சுலோகம் மற்றும் அன்று பாட வேண்டிய பாடல்களை தானே எழுதி அதை சிலருக்கு அனுப்பி உள்ளார். மற்றவர்களுக்கு எதுவும் தெரியக்கூடாது. தனக்கு மட்டுமே அனைத்தும் தெரிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தன்னை வந்தே அனைத்தையும் அனைவரும் கேட்க வேண்டும் என கர்வபங்கம் கொள்ளும் பலரிடையே  பூஜைகளை மற்றவர்களும் சரிவர செய்யட்டும் என்ற எண்ணத்தில் தானே தயாரித்து அனுப்பி உள்ள இந்த காலத்து பாட்டி போற்றப் படவேண்டியவர் . ஆகவே அதை பிரசுரிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வரலஷ்மி விரதம் செய்பவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி. எத்தனை வருடமானாலும் இதை வைத்திருந்து பூஜைகளை செய்யலாம். நம் முன்னோர்கள் செய்து வந்த எளிமையான வழிபாட்டு முறையில் எழுதப்பட்டு உள்ள இது  வரலஷ்மி நோம்பின் வேத மந்திரப் புத்தகம் !


  ஸ்ரீ கணேசாய நமஹா  ,  பாரதி தீர்த்த குருவே நமஹாதிருவிளக்கு அர்ச்சனை
சிவாயை நமஹா
சிவகர்யை நமஹா
இச்சா சக்தியை நமஹா
க்ரியா சக்தியை நமஹா
ஸ்வர்ண ஸ்வரூபிண்யை நமஹா
ஜோதி லஷ்மியை நமஹா
தீப லஷ்மியை நமஹா
மஹா லஷ்ம்மை நமஹா
தான்யா லஷ்ம்மை நமஹா
தைர்ய லஷ்ம்மை நமஹா
வீர லஷ்ம்மை நமஹா
விஜய லஷ்ம்மை நமஹா
ஜய லஷ்ம்மை நமஹா
வர லஷ்ம்மை நமஹா
காம வல்லியே நமஹா
காமாஷி சுந்தரியே நமஹா
க்ரஹ லஷ்ம்மை நமஹா
சுப லஷ்ம்மை நமஹா
ராஜ லஷ்ம்மை நமஹா
சித்த லஷ்ம்மை நமஹா
சீதா லஷ்ம்மை நமஹா
சௌபாக்கிய லஷ்ம்மை நமஹா
திரிபுர லஷ்ம்மை நமஹா
நவக்ரஹ தாயின்யை நமஹா
அண்டர் நாயகியே நமஹா
அகிலாண்ட நாயகியே நமஹா
பிரும்மாண்ட நாயகியே நமஹா
 

ஸ்ரீ வரலஷ்மி அம்மன் பூஜையில் பாடவேண்டிய பாடல்கள்


ஸ்ரீ வரலஷ்மி தேவியை ஸ்வாகதம் சொல்லி தீப ஜோதியோடு அழைத்து
வந்து பூஜா தேவி பீடத்தில் அமரச் செய்வது.

-----
1) தீப ஜோதியோடு வருவாய், - நீ தீப ஜோதியாய் வருவாய்
திருமகளே பொருள் தருமகளே- நீ தீப ஜோதியாய் வருவாய்
2) உனதருள் உளதேல் உலகாம் - இன்றேல் உலக வாழ்வு கொடும் நரகமாம்
தான தானிய சௌபாக்கியம் தருவாய்- திருமகளே பொருள் தருமகளே- நீ தீப ஜோதியாய் வருவாய்
3) பாற்கடல் உதித்த பொற்கொடியே -உந்தன் பார்வை பெற்றவர் கேதும் எளிதாம்
சேர்ந்தப்பின் பயனுறும் செல்வமும் தருவாய்- திருமகளே பொருள் தருமகளே- நீ தீப ஜோதியாய் வருவாய்
4) வீரத் திருமகளின் நோக்கம் எல்லாம் -வெற்றி அளிக்கும் மன ஊக்கம்
சீரும் சிறப்பும் மனத் திறமையும் தருவாய்- திருமகளே பொருள் தருமகளே- நீ தீப ஜோதியாய் வருவாய்
5) செந்தாமரை மலர் ஒளியே- ஐயன் திரு மார்பினுள் மணியே
எந்தாய் நினதருள் -வாழ்க- வாழ்க நீ - திருமகளே பொருள் தருமகளே- நீ தீப ஜோதியாய் வருவாய்
6) கமலா நயன மிகும் கருணை எந்தன் கவிகள் பாடுமிடம் பொழிவாய்
வமிசமுழுது மெனக்கருள் வரம் தருவாய் -திருமகளே பொருள் தருமகளே- நீ தீப ஜோதியாய் வருவாய்
7) தோகை நினதருளின் துணையால் நான் தொட்டதெல்லாம் பலனளிக்கும்
யோகா போக சுக வாழ்கையும் தருவாய் -திருமகளே பொருள் தருமகளே- நீ தீப ஜோதியாய் வருவாய்
சுபம் திருவிளக்கு அர்ச்சனை அன்னையின் மங்களம்

அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி கனத்த கோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாகவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
உருகாத நெஞ்சம் உன்பால் உருகிற்றெவ் வுருக்கத்தாலும்  
பெருகாத கண்ணீர் ஆறாய் பெருகிற்றே பெருக்கால் முன்னம்  
சருகாத ஞானம் பூத்துத் தழைத்து இன்பக் கனியாக் காண
பருகாத மதுரத் தேனினை பருகினேன் பயன் பெற்றேனே
எப்பிறப்பும் எய்தொணா இயற்கையான சித்தியை
இப்பிறப்பில் என்கரத்தில் இசைந்தளிக்கும் சக்தியாம்
பஞ்ச பூத பேதமாய் பிரபஞ்சமாய் பிரசண்டமாய்
விஞ்சினாள் எனக்கு யோகா வீறளித்த தன்மையால்
தாழ்விலாத தன்மையும் தளர்ச்சியட்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிய வரங்களும்
பக்தியால் கசிந்து வந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மென்மையும்
என்றும் ஓங்க என் கரத்தில் இயற்கையான சித்தியை
தந்து ஞான மூர்த்தியாம் தனித்து வைத்த சக்தியாம்
நாமகீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெல்லாம் விளங்கவும்
ஞான தீபம் ஏற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்க என்று சந்ததம் கொண்டாடுவோம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்


சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோகராய சாஸ்வதாய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ஸ்ரீ வித்யாயை மங்களம் ஸ்ரீ துர்காயை மங்களம்
ரகுவராய மங்களம் வேணுகிஷ்ணாய மங்களம்
ஸீதா ராம மங்களம் ஆஞ்சனேயா மங்களம்
மங்களம் ஜய மங்களம் மங்களம் சுப மங்களம்
மங்களம் ஜய மங்களம் மங்களம் சுப மங்களம்


சத்குருஜய சத்குருஜய சத்குருஜய மங்களம்
சத்குரு ஸ்ரீ தத்தாத்ரேய ராஜனுக்கு மங்களம்
சத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்தருக்கு மங்களம்
சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாதனுக்கு மங்களம்
சத்குரு ஸ்ரீ ஓம்கார நந்தருக்கு மங்களம்


 மங்கள ஆரத்தி

நாதவிந்து கலாதி  மெட்டில்  பாடவும்

அஷ்ட மங்கள ஜோதி நமோ நாம
இஷ்ட வரம் தரும் சக்தி நமோ நாம
அஷ்ட ஐஸ்வர்ய லஷ்மி நமோ நமோ
- பலகோடி
பாவம் நீக்கும் பவானி நமோ நாம
பாட்டில் மகிழும் கல்யாணி நமோ நாம
பாசம் விளக்கும் பத்மாஷி நமோ நாம
-எழில்புரியாகும்
காஞ்சி நகர நிவாஸி நமோ நாம
ஜோதி கோடி ஸ்வரூபி நமோ நாம
கால பைரவி காளி நமோ நாம
-புண்யபுரியாகும்
வாரணாசி உறைவாமி நமோ நாம
நாரணி சிவகாமி நமோ நாம
ஆறுமுகன் அன்பு தாயே நமோ நாம
-நான்மாடக்கூடல்
கவலை தீர்க்கும் காமாஷி நமோ நாம
கருணை பொழி விசாலாஷி நமோ நாம
கைகொடுக்கும் மீனாஷி நமோ நாம
-ஆயிரம்பேர் கொண்டாய்
கன்யாகுமரியம்மா நமோ நாம
அசுர மகிஷ சம்ஹாரி நமோ நாம
ஐங்கரன் அன்னை சிருங்காரி நமோ நாம
- மங்கை மனம் தீர்க்க
சௌமங்கல்யம் தரும் சக்தி
சாந்தியளிக்கும் சாவித்ரி நமோ நாம
சம்பு ஹ்ருதய விகாரி நமோ நாம
- தேஜோமய ரூபி
சர்வ வியாபக தன்யே நமோ நாம
சகல பாப சமன்யே நமோ நாம
சர்வலோக சரண்யே நமோ நாம
- நறுமலரோடு
மஞ்சள் குங்குமம் தாராய் நமோ நாம
கன்று மாடு தனம் தாராய் நமோ நாம
மழலை செல்வமும் தாராய் நமோ நாம
- மனம் கனிந்தே
உன்னைப் போற்றும் துதி கேளாய் நமோ நாம
கண்திறந்தென்னை பாராய் நமோ நாம
கருணையோடு என்னை காவாய் நமோ நாம
- ஜகன்மாதா
சங்கர ஸ்தாபித பாரதி நமோ நாம
சிருங்க கிரி வாஸி அம்பா நமோ நாம
சாரதா பீடாதி பதயே நமோ நாம
-பாரதீ தீர்த்த குருவே


 மங்கள ஆரத்தி முடிந்தவுடன் பாட வேண்டிய பாடல்
பாக்யாத லஷ்மி பாரம்மா மெட்டில் பாடவும்

(பல்லவி)
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்

(சரணம்)
வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு
வாழையும் தோரணமும் கட்டி
ஆசனம் அமைத்து நெய் விளக்கேற்றி
அன்புடன் அழைத்தோம்
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்
மல்லிகை, ஜாதி மருவுடன் ரோஜா
மணம் மிகு தாழை மலர்களும் மற்றும்
எல்லை இல்லாத பக்தியும் சேர்த்து
ஈஸ்வரியே உனக்கர்ச்னை செய்வோம்
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்
பாயசம் வகையும் பஷண வகையும்
பலவித பழங்களும் கொழுக்கட்டை தினுசும்
ஆசையுடன் உனக்கர்ப்பணம் செய்வோம்
அம்பிகையே எங்கள் அன்னையே வருக
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்
மாணிக்க சிவப்பில் மூக்குத்தி மின்ன
மரகத குண்டலம் காதினில் ஆட
ஆனிப் பொன் முத்து மாலைகள் அசைய
அச்சுதன் நாராயணன் மார்பினில் வாழும்
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்
அழகிய கூந்தல் இடைவரை புரள
அருள்மிகு கண்கள் கருணையும் பொழிய
எழில் மிகு நெற்றியில் குங்குமம் இலங்க
எங்கள் மங்கள பாக்கியங்கள் பெருக
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்
ஜல் ஜல் ஜல் என சதங்கைகள் ஒலிக்க
கண கண கண என வளையல்கள் குலுங்க
கல கல கல என கால் சிலம்பொலிக்க
கருணையால் எங்கள் கஷ்டங்கள் பறக்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்
கல்வியில் குழந்தைகள் சிறந்திட வேணும்
கன்னியர் நல்ல கணவனைப் பெறவும்
செல்வங்கள் சேர்ந்து மங்களம் பெருகி
சீருடன் சிறப்புடன் வாழ் என வாழ்த்தி
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்
கற்பூரம் சுற்றி கண்களில் ஒற்றி
கரத்தினில் மங்கள கங்கணம் கட்டி
பொற்பதம் சேவித்து பூக்களும் தூவி
புண்ணியம் அடைவோம் அன்னையே வருக
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்கிய லஷ்மி நீ வருவாய்

No comments:

Post a Comment