Friday, July 9, 2010

Wonderful Hindu Temples in Malasia - 1

வினோத வெளிநாட்டு ஆலயங்கள் -1       சித்தி விநாயகர் ஆலயம்


முக்கிய அறிவிப்பு:-  நாம் அனைவரும் இதுவரை நம் நாட்டில்தான் பல மகிமைகள் வாய்ந்த ஆலயங்கள் உள்ளதாக நினைத்து இருப்போம் . ஆனால் பல அற்புதங்களை செய்துள்ள நம்முடைய ஆலயங்கள் மலேசிய நாட்டிலும் உள்ளன என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. ஆகவே அதைப் பற்றி நான் கேட்டறிந்தவுடன், அந்த ஆலயங்களைப் பற்றி இந்த தளத்தில் பிரசுரிக்க நண்பர் திரு குமரேஷ் பட்டுமலாயிடம் இருந்து ( kbatumalai@gmail.com ) அனுமதி பெற்று அவற்றை பிரசுரித்து உள்ளேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி . இவற்றை  அவருடைய அனுமதி என்றி எவரும் வெளியிடக் கூடாது -  சாந்திப்பிரியா 
 அற்புதம் புரிந்த  சித்தி விநாயகர் 
1960 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டு உள்ள இந்த ஆலயத்தின் பெயர் சித்தி விநாயகர் ஆலயம். மலேசியாவில் உள்ள சுங்கை பெதானி என்ற இடத்தில் உள்ள இந்த மகிமை வாய்ந்த ஆலயத்தின் ஒரு பக்தர் வியாபாரியான வில்லோ என்பவர். அவர் பல காலமாக அந்த ஆலயத்தில் சென்று விநாயகரை வணங்கி வந்தவர். முன்னால் அது மிகச் சிறிய ஆலயமாகவே இருந்தது. அவரை ஒரு முறை எதோ காரணத்தினால் காவல்துறை கைது செய்து விட்டது. ஜெயிலில் அடைக்கப்பட்டார். வெளியில் வர முடியவில்லை. ஆனாலும் மனம் தளராமல் ஜெயிலுக்குள்ளேயே வேதங்கள், படித்தார். பூஜை விதிகளைப் படித்தார். ஒரு நாள் அவர் கனவில் விநாயகர் தோன்றி அவரை ஒரு சிறு நிலம் வாங்குமாறும் அதை வழக்கு மன்றத்தில் காட்டுமாறும் கூறினார். நிலமா, ஜெயிலுக்குள் இருந்தவாரா? யோசனை செய்தவர் விநாயகரின் மீது இருந்த நம்பிக்கையினால் தன் மனைவியிடம் கனவைப் பற்றிக் கூறி ஒரு நிலத்தை தன் பேரில் மறுநாளே வாங்கச் சொல்லி அதை வழக்கு மன்றத்தில் காட்டி ஜாமீன் பெற்றார். ஜெயிலுக்குள் இருந்தவர் முதலில் சென்று நன்றி கூறியது அந்த விநாயகர் ஆலயத்துக்குதான். அடுத்த சில நாட்களில் அவர் விடுதலை பெற்றார். அடுத்து 1971 ஆம் ஆண்டு அவருக்கு மீண்டும் ஒரு கனவு. இந்த முறை அவர் முன்னால் பன்னிரண்டு பூத கணங்கள் அந்த ஆலயத்தை பாதுகாத்தபடி நிற்க லஷ்மி தேவி பொன் மழை பொழிந்தாள். ஆகவே அதை ஒரு சமிக்கையாக எடுத்துக் கொண்டவர் அந்த ஆலயத்திற்கு பதிலாக புதிய ஆலயத்தை கட்ட ஏற்பாடுகள் செய்து ஆலயத்தில் பதினாறு தோற்றங்களில் காட்சி தரும் விநாயகர் சிலைகளை நிறுவினார். 
 சில வருடங்களுக்குப் பிறகு ஒரு சீன தேசத்தவர் அவருக்கு மரத்தில் செதுக்கப்பட்ட பெரிய யானை சிலையை பரிசாகத் தந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்னர் வில்லோவினால் தூங்க முடியவில்லையாம். இரவெல்லாம் பெரிய யானை சத்தமிட்டபடி நடந்து வருவது போல உணர்வு இருந்ததாம். யானை பரிசாக வர இருந்ததின் சமிக்கையோ அது? இன்று அவர் காட்டி உள்ள அந்த ஆலயம்பெரும் புகழ் பெற்று மலேசியாவின் முக்கிய ஆலயமாகி விட்டது.   
ஆலய  விலாசம்  :- Jln Hospital, 08000 Sungai Petani, Kedah. Tel: 04-4216892       

No comments:

Post a Comment