Wednesday, July 7, 2010

Mayandi Swamigal

ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -13
மாயாண்டி ஸ்வாமிகள்
சாந்திப்பிரியா
மதுரையில் இருந்து  ராமேஸ்வரம் செல்லும் பாதையில் உள்ள குட்டிகுளம் என்ற ஊரில் பிறந்தவரே மாயாண்டி ஸ்வாமிகள். 1858 ஆம் ஆண்டு சூட்டுக்கோல் ராமலிங்கச்வாமிகளின் அருளினால் அவர் பிச்சை வேலர் மற்றும் கூத்தாயி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர். அவர் குழந்தையாக இருந்தபோதே அவருடைய தெய்வீக ஆற்றல் மற்றவர்களுக்குப் புரிந்தது. அந்த குழந்தை மீது பாம்புகள் ஏறிக்கொண்டு அவர் தலை மீது படம் எடுத்து ஆடுமாம். அதைக் கண்டு குழந்தை பயந்ததும் இல்லையாம். அவர் பள்ளிக்குச் சென்றாலும் வயதாக ஆக மெல்ல மெல்ல சித்தர்களின் வாழ்கையைப் பற்றியே நிறையப் படித்தாராம்.அவருக்கு  ஆன்மீக நாட்டம்  பெருகுவதைக்  கண்ட பெற்றோர் கவலை அடைந்து அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறக்க அதன் பின் குடும்ப வாழ்க்கையைத் துறந்து அந்த ஊருக்கு வந்திருந்த மகானான சூட்டுக்கோல் சுவாமிகளின் சிஷ்யரான செல்லப்பா சுவாமிகளின் பக்தராக மாறி சன்யாசத்தை மேற்கொண்டார்.
அவருக்கு பணிவிடைகளை செய்தது வந்தவர் அவர் சமாதி அடைந்ததும் திருப்பரங்குன்றம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்த திருக்கூடல்மலையில் தங்கினார்.
அவர் அங்கிருந்தபடி பக்தி மார்க்கத்தைப் பரப்பினார். பல மகிமைகளை செய்தார். அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக கருப்பண்ண கோனார் என்பவருக்கு பூர்வ ஜென்ம கர்ம வினையினால் வாழ்கை முடிய உள்ளது என்பதை தெரிந்து  கொண்டவர், கருப்பண்ண கோனார் வேண்டிக் கொண்டதினால் நாற்பத்தி எட்டு நாட்கள் தவம் இருந்து அவருடைய ஜென்ம கர்மாக்களை தன் மீது ஏற்றிக் கொண்டு அவருக்கு உயிர் பிச்சை தந்தாராம். கருப்பண்ண கோனாரே அந்த இடத்தில் சுவாமிகளின் உத்தரவின்படி ஆலயம் மற்றும் சமாதிகளைக் கட்டினாராம். அது போல வெகு காலம் ஆண் குழைந்தையே இல்லாமல் இருந்த ஒரு தம்பதியினருக்கு அவர்களுக்குப் பிறக்க உள்ள பத்தாவது குழைந்தையே ஆண் குழந்தையாக இருக்கும் எனக் கூற அப்படியே அது நடந்ததாம். 
அதன்பின் ஸ்வாமிகள் பல இடங்களுக்கும் விஜயம் செய்து பக்தி மார்க்கத்தைப் பரப்பியவண்ணம் பக்தர்களுக்கு அருளாசி தந்து அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளை தமது சக்தியினால் தீர்த்து வைத்தார் . பல இடங்களில் வழிபாட்டு மன்றங்களை நிறுவினார். அவருடைய சக்திக்கு எடுத்துக் கட்டாக ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒருமுறை ரயிலில் டிக்கட்  இன்றி பயணம் செய்து கொண்டு இருந்தபோது  பரிசோதனையில் அதை கண்டுபிடித்த பரிசோதகர் ரயிலை நிறுத்தி அவரை அத்வானமான இடத்தில் இறக்கி  விட்டார். அந்தோ பரிதாபம் விசித்திரமாக ரயில் பழுதடைந்து விட மீண்டும் அவரை ரயிலில் மீண்டும் சுவாமிகளை ஏற்றிக் கொள்ளாதவரை ரயிலை கிளப்ப முடியவில்லையாம்.
 மாயாண்டி  ஸ்வாமிகள் சன்னதி 
இப்படியாகப் பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் ஆன்மீகப் பயணத்தில் இருந்தவர் 1930 ஆம் ஆண்டு சமாதி அடைய அவருடைய சமாதி திருக்கூடல் மலையில் நிறுவப்பட்டது.
         (  ஸ்வாமிகள் படம்  மற்றும்  செய்திகள்  நன்றி :- 
htt://www.soottukkole.org   and    http://chennaiomsriskandasramam.wordpress.com/mayandi-swamigal   )

2 comments:

  1. Kuttikulam alla kattikulam.tharpoluthu avarin kollu peran anke ullar.

    ReplyDelete

  2. மேலே உள்ளத்தின் - Pandiraj.tamil July 8, 2013 at 11:10 AM -தமிழாக்கம் :-
    "குட்டிகுளம் அல்ல கட்டிகுளம். தற்பொழுது அவரின் கொள்ளு பேரன் அங்கே உள்ளார்".

    ReplyDelete